மறுபடியும் மொக்கை போட வந்துட்டோம்ல...
கொஞ்ச நாளா இந்தப் பக்கம் வர முடியல..
ஆபீஸ்ல நிறைய வேலை.. ஆடிட்டிங் வேற....
அப்புறம் கொஞ்சம் உடம்பு சரியில்லாம போய்டுச்சுங்க…
பத்து நாள் ஆபீஸ்க்கு லீவு போட்டுட்டு, மறுபடியும் இன்னைக்கு தான் வந்தேன். வந்ததும் வராததுமா நம்மால முடிஞ்ச மொக்கைய போடணும்ல...
கிறுக்கல்களோட இம்சை இல்லாம ரொம்ப சந்தோசமா இருந்ததா கேள்விப்பட்டேனே..
விடமாட்டேன்.. அதான் மறுபடியும் மொக்கை போட வந்துட்டோம்ல...
சரி சரி அழுகாதீங்க.. தலையெழுத்த மாத்த யாரால முடியும்.
ம்ம்ம்ம்ம்ம்...
ஒரு வாரமா வீட்ல வெட்டியா இருந்து ஜிந்திச்சதுல, எனக்கு சில கேள்விகளுக்கு பதில் தெரியல..
உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்களேன்.
பதில் தெரியாத கேள்விகள்..
1. சொந்தக்காரங்க யாருக்கு போன் பண்ணினாலும் சொல்லி வச்சது மாதிரி “இப்ப தான் உனக்கு போன் பண்ணனும் நெனச்சுகிட்டிருந்தேன். அதுக்குள்ள நீயே பண்ணிட்ட“னு சொல்வாங்க.. அது ஏங்க?
2. நாம ஆபீசுக்கு லேட்டா போகும்போதெல்லாம் நம்ம பாஸ் சீக்கிரம் வந்து திட்றதுக்காக காத்துகிட்டிருப்பாரு. சரி இன்னைக்காவது சீக்கிரம் போய் நல்ல பேர் வாங்கலாம்னு நெனச்சு, அடிச்சுப் பிடிச்சு பத்து நிமிசம் முன்னாடியே போய் நின்னா, அன்னைக்குனு பாத்து அவரு லீவே போட்ருப்பாரு.. அது ஏங்க??
3. கரெக்டா நாம தேடுற டிரெஸ் மட்டும் எப்பவுமே அலமாறில டக்குனு கெடைக்கவே கெடைக்காது. எல்லாத்தையும் வெளில எடுத்து தாறு மாறா உதறுனுதுக்கப்புறம் ஈஈஈனு பல்லைக் காட்டிகிட்டு நிக்கும். அது ஏங்க?
4. டிவி-ல ஏதாவது முக்கியமான ப்ரோக்ராம் பாக்கணும்னு நெனைக்கும்போதுதான் சொல்லிவச்சது மாதிரி கரண்ட் போகும் இல்ல கேபிள் கட் ஆகும். அது ஏங்க?
5. கல்யாணப் பந்தியில கரெக்டா நம்ம இலைக்கு வரும்போது மட்டும் வடை பாயாசம் காலியாயிடும். அது ஏங்க?
6. நாம ஓசி கேக்குற போன்ல மட்டும் எப்பவுமே பேலன்ஸ் இருக்குறதில்லையே.. அது ஏங்க?
7. ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஹோட்டல்ல சாப்பிட்டுகிட்டு இருக்கும்போது, கரெக்டா வெய்ட்டர் எல்லாரையும் விட்டுட்டு நம்ம கிட்ட வந்து பில்ல நீட்டுவார். அது ஏங்க?
8. எப்பவுமே கரெக்டா நாம எந்த பஸ்ஸுக்கு நிக்குறோமோ, அந்த பஸ்ஸ தவிர மத்த பஸ் எல்லாம் கரெக்டா வருது.. அது ஏங்க?
இதெல்லாம் எனக்கு மட்டும் தான் நடக்குதா.. இல்ல உங்களுக்குமா???
ஆமா“னு சொன்னா நானும் கொஞ்சம் சந்தோசப்பட்டுக்குவேன்ல..
பின்ன??? யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் இல்லையா???...
அடுத்த பதிவுல சந்திக்கலாமுங்க...
.
Comments
இதுக்குத்தான் பெரியவங்க "வடை போச்சே"ன்னு சொல்லுவாங்க :)
வெல்கம் பேக் :)
...Sometimes, even few friends.... :-)))
Welcome back! Hope you are feeling better now. :-)
naanga welcome backku solla maatomulleyyyy
odungaaa...........
indiraa marubadiyum vanthuttaaaaaaangaaa
ஓ அப்டியா சரி நான் போன் கட் பண்றேன்.. நீங்களே கூபிடுங்கன்னு சொல்லி வெச்சிடுங்க... SIMPLE ..:))
///அடிச்சுப் பிடிச்சு பத்து நிமிசம் முன்னாடியே போய் நின்னா, அன்னைக்குனு பாத்து அவரு லீவே போட்ருப்பாரு.///
அப்போ நீங்க உங்க பாஸுக்கு போன் பண்ணி திட்டுங்க..ஏன் இன்னைக்கு வரலைன்னு..
நாம தேடுற டிரெஸ் மட்டும் எப்பவுமே அலமாறில டக்குனு கெடைக்கவே கெடைக்காது. எல்லாத்தையும் வெளில எடுத்து தாறு மாறா உதறுனுதுக்கப்புறம் ஈஈஈனு பல்லைக் காட்டிகிட்டு நிக்கும்.///
திரும்ப எடுத்து அடுக்கி வைங்க... இதெல்லாம் சொல்லனுமா.
///கல்யாணப் பந்தியில கரெக்டா நம்ம இலைக்கு வரும்போது மட்டும் வடை பாயாசம் காலியாயிடும். ///
அதுக்குதான் சாப்பிட போறதுக்கு பதில் பரிமாற்ற போகணும் அப்போதான் சைடுல நைசா உங்களுக்குன்னு எடுத்து வெச்சிக்கலாம்.
மத்ததுக்கெல்லாம் நீங்களே கண்டுபிடிச்சுக்குங்க....:))
அச்சச்சோ.. நீங்களே உங்க மொக்கைய படிச்சீங்களா..
விடமாட்டேன்.. அதான் மறுபடியும் மொக்கை போட வந்துட்டோம்ல...
சரி சரி அழுகாதீங்க.. தலையெழுத்த மாத்த யாரால முடியும்.//
நிம்மதிய கெடுக்கனும்னே அலையுராங்கய்யா...
இப்பிடி பட்டவங்க கிட்டே ஜாக்குரதையா இருக்கணும் மக்கா....
இந்த டெலிபதி டெலிபதி'ன்னு சொல்லுவாங்களே அது உங்க முதலாளிக்கு நிறைய இருக்கும் போல....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
இதுதான் டாப்பு ஹே ஹே ஹே ஹே நம்ம முகராசி அப்பிடி மக்கா....
நீங்க ஏன் சொல்றீங்களோ அதனாலதாங்க..
நீங்க ஏங்க சீக்கிரமா கிடைக்காத டிரஸ்ச தேடுறீங்க.?
நீங்க ஏங்க அவரு லீவு போடுற நாள்ல சீக்கிரமா போறீங்க
நானும் பாதிக்கப்பட்டிருக்கேன்..
ஏங்க கரண்ட் போகும்போது முக்கியமான ப்ரோக்ராம் பாக்குறீங்க..
பேலன்ஸ் இல்லாதவன்ட ஏங்க ஓசி கேக்குறீங்க
verum 10 naalaykkuthaan seyvinai vachchu irrukkaaanaaa?
irruku avanukku....
machi mani ingey konjam vaayaa neeeye!
nee recomend pannuna manthiravaathy ippudi emaaththip puttaaneyyaaaaa?
ithu unakkey adukkumaaaa?
to handle the regular activities
all the best
முக்கியமா செய்வினை வச்ச வினுவுக்கு ரொம்ம்ம்ப நன்றி..
(உனக்கு இருக்குடி ஆப்பு..)