கிளையுதிர்காலம்..

சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்..
உன் பிரிவுக்கான எனது கண்ணீர்த் துளிகளை.

சிரிப்பெனும் முகமூடி அணிந்து
என்னை நானே தேற்றிக் கொண்டிருக்கிறேன் தெரிந்தே..
எந்தக் காதலும் திருமணத்தில் தான் முடியும்.
ஆம்!
என் காதலும்.. உன் மணத்தில்.

வசனங்களில் முலாம் பூசினாலும்
வார்த்தைகளில் வலி உணர்கிறேன்.
எனக்கான கிளையுதிர் காலம் எப்போதோ?

காட்டி கொடுத்து விடாதே என்று
கண்ணாடியில் கூட நினைவுறுத்திக் கொள்கிறேன் கண்களை.

பக்குவப்படாத உன் வார்த்தைகளில் தான்
எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள் ??
சிறு பிள்ளையாய் நீ உரையாடும் ஒவ்வொரு நிமிடங்களிலும்
கரைந்து தான் போகிறேன்..
உன் கேள்விகளைத் தள்ளிப்போடும் எனக்கு
உன் கனவுகளை களைக்கும் தைரியம் இல்லை.

எத்தனையோ எதிர்காலக் கனவுகள் ..
அமைதியாய் உறங்குகின்றன.
நிறைவேறாத ஏக்கங்கள் என்ற பெயரில்.

எதிர்பார்ப்புகள் எதுவுமே நிறைவேறாதெனில்
எதிர்பார்ப்பதை நிறுத்தி விடலாமே..
வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்
இது தான்.. இது மட்டும் தான்.

தயாராகிக் கொண்டிருக்கிறேன்
என்னவனின் முகம் அறியாத
அவளைப் பாராட்ட..
இல்லையா பின் ?
எவ்வளவு அதிஷ்டம் பெற்றவள்..

உன் விரல் கோர்த்து வழித்துணை வரவும்..
உன் காதோரம் ரகசியம் கொஞ்சவும்..
உன் செல்லச் சிணுங்கல்களை எதிர்கொள்ளவும்..
உன் சமாதானங்களில் சிக்கிக் கொள்ளவும்..
உன் கேசத்தை கோதி விடவும்..
உன் தோள்களில் சாய்ந்து கொள்ளவும்..
உன் மடியில் படுத்து அளவும்..
உன் கனவுகளில் பங்கேற்கவும்..
மொத்தத்தில் உன் காதலை முழுமையாகப் பெற்றுக் கொள்ள
கொடுத்து தான் வைத்திருக்க வேண்டும்.

காத்திருக்கிறேன் கைபிடிக்க..
உன்னை அல்ல.. அந்தப் பெண்ணை..
வாழ்த்துக்கள் சொல்வதற்கு.

முதலும் முடிவுமான உன் மீதான என் காதல்
எனக்குள்ளேயே புதைந்து போகட்டும்.
நினைவுகள் அசைபோட்டே வாழ்ந்துவிடுவேன்..
நிஜத்தில் வழக்கம்போல வெற்றுப் புன்னகை புரிந்தபடி.
.
.

Comments

Speed Master said…
ஐ வடை எனக்கா
Speed Master said…
பதிவுலகத்திற்கு என்ன ஆனது

எல்லாரும் வர வர நல்ல கவிதை எழுதறாங்க

சரி நானும் ரைப் பன்றேன்
உண்மையில் நல்லாயிருக்குதுங்க..
வாழ்த்துக்கள்..
Lakshmi said…
எதிர்பார்ப்புகள் எதுவுமே நிறைவேறாதெனில்
எதிர்பார்ப்பதை நிறுத்தி விடலாமே..
வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்
இது தான்.. இது மட்டும் தான்.

எனக்கு மிகவும் பிடித்தவரிகள்.
சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்..
உன் பிரிவுக்கான எனது கண்ணீர்த் துளிகளை.//

எந்த பேங்க்ல? வட்டி எவ்ளோ?
vinu said…
alakaTrukkondu irrukirean
Chitra said…
காத்திருக்கிறேன் கைபிடிக்க..
உன்னை அல்ல.. அந்தப் பெண்ணை..
வாழ்த்துக்கள் சொல்வதற்கு.


..... கவிதை, ரொம்ப நல்லா வந்து இருக்குது.
அத்தனையும்
ஆயிரமாயிரம்
அர்த்தம் பொதிந்த
காதல் பதிந்த
கனவு பகிர்ந்த
கண்ணீர் கலந்த
சோகம் மலர்ந்த
மனதை கவர்ந்த
இரத்தின வரிகள்
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்
கவிதை சூப்பர்......

"எதிர்பார்ப்புகள் எதுவுமே நிறைவேறாதெனில்
எதிர்பார்ப்பதை நிறுத்தி விடலாமே..
வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்
இது தான்.. இது மட்டும் தான்."

எதிர்பார்ப்பவை எல்லாம் எளிதில் கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது அக்கா.தோல்வியும் கொஞ்சம் வேணும்.
வரிகளில் வலியின் ஆழம் புரிகிறது.. அட்டகாசமான கவிதை.. வாழ்த்துக்கள் தோழி..
Suganyajeyaram said…
Aalamana unarvugalin velipadu, varthaigalil vali therigirathu.... kavithai super,...
logu.. said…
என்ன சொல்றதுனு தெரியல..

அருமை.
I read more blogs..lots of poem expressing sad feelings or failures.Why?whats the reason.
வார்த்தைகளின் வலி விளங்குகிறது..,
:)
:)
:)
:):):):):):):):):):):):):)...


எனக்கு எவ்ளோ அபராதம்...,
//Speed Master said...

ஐ வடை எனக்கா//


உங்களுக்கே தான்...
//Speed Master said...

பதிவுலகத்திற்கு என்ன ஆனது

எல்லாரும் வர வர நல்ல கவிதை எழுதறாங்க

சரி நானும் ரைப் பன்றேன்//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
//Lakshmi said...

எதிர்பார்ப்புகள் எதுவுமே நிறைவேறாதெனில்
எதிர்பார்ப்பதை நிறுத்தி விடலாமே..
வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்
இது தான்.. இது மட்டும் தான்.

எனக்கு மிகவும் பிடித்தவரிகள்.//


ரசித்தமைக்கு நன்றி..
//# கவிதை வீதி # சௌந்தர் said...

உண்மையில் நல்லாயிருக்குதுங்க..
வாழ்த்துக்கள்..//


நன்றி சௌந்தர்..
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்..
உன் பிரிவுக்கான எனது கண்ணீர்த் துளிகளை.//

எந்த பேங்க்ல? வட்டி எவ்ளோ?//


என்ன ரமேஷ்... இந்தப் பக்கம் ஆளையே காணோமே...
//A.R.ராஜகோபாலன் said...

அத்தனையும்
ஆயிரமாயிரம்
அர்த்தம் பொதிந்த
காதல் பதிந்த
கனவு பகிர்ந்த
கண்ணீர் கலந்த
சோகம் மலர்ந்த
மனதை கவர்ந்த
இரத்தின வரிகள்
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்//


வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரே..
//Chitra said...

காத்திருக்கிறேன் கைபிடிக்க..
உன்னை அல்ல.. அந்தப் பெண்ணை..
வாழ்த்துக்கள் சொல்வதற்கு.


..... கவிதை, ரொம்ப நல்லா வந்து இருக்குது.//


நன்றி தோழி..
//vinu said...

alakaTrukkondu irrukirean//


சரி சரி விடுங்க..
இதெல்லாம் வாழ்க்கைல ஜகஜம்..
//சரியில்ல....... said...

வரிகளில் வலியின் ஆழம் புரிகிறது.. அட்டகாசமான கவிதை.. வாழ்த்துக்கள் தோழி..//


நன்றிங்க..
அதென்னங்க பெயர்?? சரியில்ல..??
//சித்தாரா மகேஷ். said...

கவிதை சூப்பர்......

"எதிர்பார்ப்புகள் எதுவுமே நிறைவேறாதெனில்
எதிர்பார்ப்பதை நிறுத்தி விடலாமே..
வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்
இது தான்.. இது மட்டும் தான்."

எதிர்பார்ப்பவை எல்லாம் எளிதில் கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது அக்கா.தோல்வியும் கொஞ்சம் வேணும்.//


உண்மைதான்.
வருகைக்கு நன்றி தோழி..
//logu.. said...

என்ன சொல்றதுனு தெரியல..

அருமை.//


நன்றி லோகு..
//Suganyajeyaram said...

Aalamana unarvugalin velipadu, varthaigalil vali therigirathu.... kavithai super,...//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
//குணசேகரன்... said...

I read more blogs..lots of poem expressing sad feelings or failures.Why?whats the reason.//


காரணமெல்லாம் ஒண்ணுமில்லீங்க..
சந்தோசமான உணர்வுகளையும் எழுதியிருக்கேனே..
வருகைக்கு நன்றிங்க..
//...αηαη∂.... said...

வார்த்தைகளின் வலி விளங்குகிறது..,
:)
:)
:)
:):):):):):):):):):):):):)...


எனக்கு எவ்ளோ அபராதம்...,//


கருத்துக்கு நன்றிங்க..

ம்ம்ம் அப்புறம் அபராதம்..???
16000/- ரூபாய்ங்க..
சரிதானுங்களே..
என்னவனின் அவளை கரம் பற்றக் காத்திருக்கிறேன் என்கிற காதலின் ஆழம் புரிகிறது. வலியை மறைத்த புன்னகை மனதில் நிறைகிறது. உங்களுக்கு கவிதையும் அருமையாய் வடிக்க முடிகிறதே என்கிற பிரமிப்பும் மனதில் முளைக்கிறது. அருமை தோழி.
Unknown said…
எல்லா பெண்ணும் தனக்குள்ளே புதைத்துக்கொள்ளும் அன்பை வலி நிறைந்த வார்த்தைகளோடு கோர்த்திருக்கிறீர்கள்...

ஒரு வலி மட்டுமே நமக்கு வாழ்தலுக்கான சரியான வழியைச்சொல்லிக்கொடுக்கும்...

நல்ல கவிதை வலி உணர்த்தி போகிறே, ஆயினும் இது தங்களின் மீள்கவிதையென்றே அறிகிறேன் சரிதானே இந்திரா
HariShankar said…
// எதிர்பார்ப்புகள் எதுவுமே நிறைவேறாதெனில்
எதிர்பார்ப்பதை நிறுத்தி விடலாமே..
வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்
இது தான்.. இது மட்டும் தான்.

தயாராகிக் கொண்டிருக்கிறேன்
என்னவனின் முகம் அறியாத
அவளைப் பாராட்ட..
இல்லையா பின் ?
எவ்வளவு அதிஷ்டம் பெற்றவள்.. //

//முதலும் முடிவுமான உன் மீதான என் காதல்
எனக்குள்ளேயே புதைந்து போகட்டும்.
நினைவுகள் அசைபோட்டே வாழ்ந்துவிடுவேன்..
நிஜத்தில் வழக்கம்போல வெற்றுப் புன்னகை புரிந்தபடி.//

Miga Miga Miga arumai..

Ivalavu sogathaiyum maraithu adhuvum kadaisi pathi satru yedharthamagavum valiyodum iruku....

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..