என் ஆன்மாவை ஆணிவேரோடு பிடுங்கி அழகு பார்த்திடும் உன் ஆணவத்தில் என் அனைத்து ஆரம்பங்களும் அடங்கித்தான் போயின.. . தனிமையெனும் தீவில் துன்புறுத்தியும் தொல்லைபடுத்தியும் தற்காலிகமான தற்கொலைக்குத் தூண்டும் உன் நினைவுகள்.. . நாட்கள் நிறைந்த நொடிகளும் வருடம் நிறைந்த நிமிடங்களுமாய் நகராது நோகடிக்கிறது நாசூக்காய்.. . உன்னை நினைத்தே நுரைத்துக் கிடக்கிறது என் நுரையீரல்.. . நினைவுகளை தானமாகத் தந்துவிட்டு நிதானமாய்க் கொன்று கொண்டிருக்கிறாய்.. . என் கட்டுக்கடங்காத பிரியங்களைக் கலைத்தும் தொலைத்தும் விளையாடும் உனக்கு கண்கள் மட்டுமா கருணையும் இல்லை. . மண்புழுவாய்த் துடிக்கும் என் மனதினுள் மயானம் அமைத்து மறவாமல் அடிக்கிறாய் உன் மௌனச் சவுக்கால்.. . பட்டும் படாமலுமான உன் பார்வை நகத்தினால் படுகாயப்படுத்துகிறாய் பாழாய்ப்போன என் இதயத்தை. . நிர்வாணமாய்த் திரியும் என் நிம்மதிகளுக்கும் நார் நாராய்க் கிழிந்த என் காதலுக்கும் நீண்ட துணை உன்னாலான என் ரணங்கள் தான். . பத்திரமாய் பத்திரப்படுத்துகிறேன் நீ தந்த வலிகளை. ஆறாத
என்னுடன் நீ பேச மாட்டாயாமே .. அதை உன் விழிகளிடம் சொல்லவில்லையா ? பிடித்ததை கண்சிமிட்டியும் பிடிக்காததை புருவம் உயர்த்தியும் எனக்குத் தெரிவிக்கிறதே .. சமாதானமாக நான் பேசும்போதெல்லாம் செவிகளை எனக்கும் விழிகளை சுவற்றுக்கும் கொடுக்கிறாய் .. அருகிருந்தும் கைபேசி தூதுப் பறவையாகிப் போகிறது .. என்னிடமிருந்து ' லவ் யூ ' வும் உன்னிடமிருந்து ' ஹேட் யூ ' வும் பரிமாறப்படுகிறது .. பேசும் நேரங்களை விட பேசாத நேரங்களில் காதல் வெகுவாகப் பிரதிபலிக்கிறது நமக்குள் .. ' சாப்பிடு ' என்று நான் கெஞ்சவேண்டும் என்பதற்காகவே .. பசியோடு காத்திருக்கிறாய் .. கோபம் எனும் சாயம் பூசிக்கொண்டு . பின்கூட்டி அணைக்கிறேன் .. பிடிக்காதது போல உதறுகிறாய் .. இறுக்காத பிடியிலும் கூட இறுகியதாய் தடுமாறுகிறாய் .. ஏனோ தெரிவதில்லை .. உன்னை செல்லமாக சீண்டும் தருணங்களில் நான் இருமடங்கு காதல் வயப்படுகிறேன் .. உனக்குப் பிடிக்காத சேனல் மாற்றி உன்னை வெறுப்பெற்றுகிறேன் .. பதிலுக்கு பழிவாங்குவதாக அணைக்கிறாய் .. தொலைக்காட்சியை .. எனது சேஷ்டைகளைப் போலியாக வெறுக்கும் உன் நடிப்பு ஆஸ்கரையும் மிஞ்சும் .. உன் குழந்தைத் தனம
Comments
வெடிக்கவும் தயங்காமல்..!//
வெடிச்சா யாருக்காக வெடிக்குதே அவுங்களோட மகிழ்ச்சிய வாழ முடியாது...
ஆனால் வெடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்...
Vara vara unga imsai thanga mudila ka
.
.
.
But very nice.
Keep rocking....