பதிவர்களுக்குப் பரிசு குடுக்குறேன்.. சம்பந்தப்பட்டவங்க வாங்கிக்கங்க..


பதிவர்களுக்குள்ள ஆளாளுக்கு விருதுகள் குடுத்துக்குறாங்க. நானும் ஜிந்திச்சுப் பார்த்தேன்.
ஏதோ என்னால முடிஞ்ச பரிச, சக பதிவர்களுக்கு குடுக்கலாம்னு முடிவு பண்ணேன்.
இதுல யாருக்கு எந்தப் பரிசு பொருத்தமா இருக்கோ.. அவங்கவங்க எடுத்துக்கங்க.
1. சண்டை போடும் பதிவர்களுக்கு..
மற்ற பதிவர்களுடன் அடிக்கடி சண்டை போட்டுகிட்டே இருக்கும் பதிவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. சம்மந்தப்பட்ட பதிவர்கள் எடுத்துக்கலாம்.

2. குறை சொல்லும் பதிவர்களுக்கு..
பதிவு எழுதுறாங்களோ இல்லையோ.. அடுத்த பதிவர்கள் பற்றி குறை சொல்லியே காலம் தள்ளும் பதிவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. என்னானு பாக்குறீங்களா??? கண்ல விட்டுகிட்டு பாக்கணும்ல.. அட.. இது தாங்க விளக்கெண்ணெய்.

3. கவிதை எழுதும் பதிவர்களுக்கு..
கவிதைகள் எழுதி பிரபலமான பதிவர்களுக்கு இந்தப் பரிசு வழங்குறேன். இதுல உக்கார்ந்துகிட்டு இன்னும் நல்லா ஜிந்திக்கலாம்ல.. அதுக்குத் தான்.. எப்பூடிஈஈஈஈ...
4. சமுதாயம் பற்றி எழுதும் பதிவர்களுக்கு..
சமுதாயத்த திருத்துறேங்குற பேர்ல பதிவெழுதும் பதிவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
தண்ணியக் குடிங்க.. தண்ணியக் குடிங்க..
5. மொக்கை போடும் பதிவர்களுக்கு..
பதிவுங்குற பேர்ல மொக்கை போட்ற பதிவர்களுக்கு இது அவசியம் தேவைப்படும். வச்சுக்கங்க.. வச்சுக்கங்க.. (உடனே இந்திராவுக்குனு சொல்லுவீங்களே...)

6. அரசியல் பதிவுகள் எழுதும் பதிவர்களுக்கு..
அரசியல் சம்பவங்கள் பற்றியே எழுதும் பதிவர்களுக்கு இந்தப் பரிசு.. சம்மந்தப்பட்டவங்க தாராளமா வாங்கிக்கங்க.. தலைவா வாழ்க..


7. சோகப் பதிவுகளா எழுதித் தள்ளும் பதிவர்களுக்கு..
எப்ப பாத்தாலும் சோகமாவே பதிவுகள எழுதிக் குவிக்கும் பதிவர்களுக்கு இந்தப் பரிசு..
அழுவாதீங்க.. இந்தாங்க கர்ச்சீப்பு.. கண்ணீர துடச்சுக்கங்க..

8. பரிசுகள் வழங்கும் பெருந்தன்மையான பதிவர்களுக்கு..
மற்ற பதிவர்களுக்குப் பரிசுகளை அள்ளி வழங்கும் பெருந்தன்மை குணமுள்ள பதிவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. (ஹிஹிஹி.. சும்மா ஒரு விளம்பரம்ம்ம்ம்..)

9. மற்றவர்களோட பதிவுகளுக்குப் போகாத பதிவர்களுக்கு..
இது ரொம்ப முக்கியமான பரிசாக்கும். தங்களோட ப்ளாக்குல பதிவுகள் எழுதிட்டு மத்தவங்க ப்ளாக் பக்கமே போகாம தேமேனு உக்காந்திருக்குற பதிவர்களுக்கு இந்தப் பரிசு.. இனியாவது அடுத்தவங்க பதிவுகளையும் படிங்கப்பா..

பரிசுகள் போதும்ல... அவங்கவங்களுக்குப் பொருத்தமான பரிசுகள எடுத்துக்கங்க.
.
.
.

Comments

9 vadhu parisuthaan daap haa ha

9வது பரிசு தான் டாப் ஹா ஹா
ரொம்பச் சரி..

அப்புறம் பதிவை தொலைக்கிற பதிவர்களுக்கு பரிசு என்னன்னு சொல்லலையே..

(ஹி..ஹி.. என் பதிவும் தொலைஞ்சிபோய் பிறகுதான் மீட்டெடுத்தேன்.. அப்பாடி.. இப்ப நெனச்சாலும் நெஞ்சடைக்குது.
Super...


அப்புறம் உங்களுக்கு என்ன விருதுன்னு சொல்லவே இல்ல...
நம்மள பத்தி எதுவும் இல்லையே ...ஹி..ஹி..ஹி
ஆர்வா said…
ஐயையோ.. எவ்ளோ பரந்தமனப்பான்மை உங்களுக்கு? எவ்ளோ விருதை கொடுத்த உங்களுக்கு ”விடாமல் விருது கொடுத்த
வீரத்திருமகள்” விருது கொடுத்து கெளரவிக்கலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க?
hmmm nalla virudhugal..
விருதம்மாவுக்கு ஒரு விருதேய்! வருதேய்.. விருதகிரி படம் பத்துதரம் பாருங்க்கள்.
ஜூப்பரு விருதுகள்..
9 வது பரிசுதான் சூப்பர்
காதல் கவிதைகள் மட்டும்
எழுதுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்
அவர்களுக்கு மனசுவச்சு
ஏதாவது கொடுத்திருக்கலாம்
கலக்கல் பதிவு தொடர வாழ்த்துக்கள்
//சி.பி.செந்தில்குமார் said...

9 vadhu parisuthaan daap haa ha

9வது பரிசு தான் டாப் ஹா ஹா//


வருகைக்கு நன்றி செந்தில் சார்
//வெட்டிப்பேச்சு said...

ரொம்பச் சரி..

அப்புறம் பதிவை தொலைக்கிற பதிவர்களுக்கு பரிசு என்னன்னு சொல்லலையே..

(ஹி..ஹி.. என் பதிவும் தொலைஞ்சிபோய் பிறகுதான் மீட்டெடுத்தேன்.. அப்பாடி.. இப்ப நெனச்சாலும் நெஞ்சடைக்குது.//


ஐயயோ திரும்ப அத ஞாபகப்படுத்தாதீங்க.. பதிவுகள திரும்ப மீட்குறதுக்குள்ள பாதி உயிர் போய்டுச்சு போங்க..
//சங்கவி said...

Super...


அப்புறம் உங்களுக்கு என்ன விருதுன்னு சொல்லவே இல்ல...//


ஹிஹி.. அதான் எட்டாவது பரிசா சொல்லிருக்கேனே..
//கோவை நேரம் said...

நம்மள பத்தி எதுவும் இல்லையே ...ஹி..ஹி..ஹி//


அட.. இத்தன பரிசு குடுத்திருக்கேன்ல.. எதையாவது எடுத்துக்க வேண்டியது தான...
//குடந்தை அன்புமணி said...

ஹி..ஹி..ஹி//


சிரிச்சது போதும்.. கருத்து சொல்லுங்க பாஸு
//கவிதை காதலன் said...

ஐயையோ.. எவ்ளோ பரந்தமனப்பான்மை உங்களுக்கு? எவ்ளோ விருதை கொடுத்த உங்களுக்கு ”விடாமல் விருது கொடுத்த
வீரத்திருமகள்” விருது கொடுத்து கெளரவிக்கலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க?//


ஹிஹிஹி..
ரொம்ப டாங்க்ஸ்ங்க..
நா பரிசா குடுத்த அந்த நாற்காலில உக்காந்து ஜிந்திச்சீங்களோ???
//சமுத்ரா said...

hmmm nalla virudhugal..//


டாங்க்ஸ்ங்க..
//இராஜராஜேஸ்வரி said...

விருதம்மாவுக்கு ஒரு விருதேய்! வருதேய்.. விருதகிரி படம் பத்துதரம் பாருங்க்கள்.//


ஐய்யயோ... காப்பாத்துங்க.. தெரியாம பரிசு குடுத்துட்டேன்.. அதுக்குப் போய் இவ்ளோ பெரிய்ய்ய்ய தண்டனையா??? மீ பாவமுங்க..
//அமைதிச்சாரல் said...

ஜூப்பரு விருதுகள்..//


நன்றிங்க..
//Ramani said...

9 வது பரிசுதான் சூப்பர்
காதல் கவிதைகள் மட்டும்
எழுதுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்
அவர்களுக்கு மனசுவச்சு
ஏதாவது கொடுத்திருக்கலாம்
கலக்கல் பதிவு தொடர வாழ்த்துக்கள்//


கருத்துக்கு நன்றிங்க..
அடுத்து பரிசு குடுக்கும்போது இன்னும் அதிகமா குடுத்துடலாமுங்க.
//வால்பையன் said...

i can't see the photos//


அப்படியா??? இருங்க பாக்குறேன்.
//வால்பையன் said...

this is for follow up//


தொரை இங்கிலீசெல்லாம் பேசுதே...
ம்ம்ம்..
வால்பையனோட பின்னூட்டம் மாதிரியே தெரியலையே..???
i was in cafe, and there is not possible to comment in tamil through my iphone
//வால்பையன் said...

i was in cafe, and there is not possible to comment in tamil through my iphone//


ஓ அப்படியா??? சந்தோசமுங்க.

வருகைக்கும் (இங்கீலீஷ்ல) கருத்து சொன்னதுக்கும் நன்றி நண்பரே..
அவார்ட் படங்களை என்னால் பார்க்க முடியவில்லை. அவார்டை பார்க்கமுடியாமல் செய்த உங்களுக்கு கடும் கண்டனம்
//Avargal Unmaigal said...

அவார்ட் படங்களை என்னால் பார்க்க முடியவில்லை. அவார்டை பார்க்கமுடியாமல் செய்த உங்களுக்கு கடும் கண்டனம்
//


சரி பண்ணிட்டேங்க.
கண்டனம் எல்லாம் வேணாமுங்க.
Amudhavan said…
சினிமா பற்றி எழுதுபவர்களுக்கு,இலக்கியம் நகைச்சுவை என்றெல்லாம் கலந்துகட்டி எழுதுபவர்களுக்கெல்லாம் ஒரு பரிசும் இல்லையா அநியாயமாய் இருக்கே.
//Amudhavan said...

சினிமா பற்றி எழுதுபவர்களுக்கு,இலக்கியம் நகைச்சுவை என்றெல்லாம் கலந்துகட்டி எழுதுபவர்களுக்கெல்லாம் ஒரு பரிசும் இல்லையா அநியாயமாய் இருக்கே.//


சரி விடுங்க. அடுத்து ஏதாவது விருது கொடுக்கும்போது கவனிச்சுடலாம்.
வருகைக்கு நன்றிங்க.

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..