நீங்களே சொல்லுங்க.. நா பல்பு வாங்கினேனா??
காலேல நா ஆபீஸ்க்கு கிளம்பிகிட்டு இருந்தேன். பொதுவா நா வீட்ல இருந்தேனா எப்பவுமே டிவிலயோ போன்லயோ பாட்டு ஓடிகிட்டிருக்கணும். அப்ப தான் எனக்கு வேலை ஓடும். ஆனா இன்னைக்கு தற்செயலா கே.டிவில “அழகன்“ படம் போட்டிருந்தத கவனிச்சேன். எனக்கு அந்தப் படம் பிடிக்கும், அதுனால காதுல வசனத்த கேட்டுகிட்டே அடுப்படில வேலை பாத்துகிட்டு இருந்தேன்.
அந்த சமயம், என் அப்பாவோட நண்பர் ஒருத்தர், தன்னோட பையனுக்கு கல்யாணம்னு பத்திரிக்கை குடுக்க வந்திருந்தார். அவர்கிட்ட சகஜமா விசாரிச்சிட்டு, காபி போட்றதுக்காக உள்ள போனேன்.
அவரும் டிவில ஓடிகிட்டிருந்த படத்த பாத்துகிட்டிருந்தார். நான் காபி போட்டு எடுத்துட்டு வந்து அவர்கிட்ட குடுத்தேன்.
அத வாங்கிகிட்டே ”கலைஞர் டிவியா?“னு கேட்டார்.
நான் ”இல்ல இது கே.டிவி“னு சொன்னேன்.
அவர் ”அதான் கலைஞர் டிவியா?“னு திரும்பவும் கேட்டார்.
நானும் திரும்ப ”கலைஞர் டிவில இந்நேரம் படம் போட மாட்டாங்க, கே.டிவில தான் படம் போடுவாங்க“னு சொன்னேன்.
அவர் என்ன நெனச்சாரோ தெரியல, பேசாம காபிய குடுச்சிட்டு கிளம்பிட்டாரு.
போகும்போது வாசல்ல நின்னு என்ன முறச்சிட்டு, உங்க வீட்ல ட்யூப்-லைட் வேலை செய்யலனு சொல்லிட்டுப் போனாரு.
நீங்களே சொல்லுங்க.. கலைஞர் டிவில காலேல படம் போட மாட்டாங்க தானே???
.
.
Comments
:))
"உண்மையாக சிரிக்க வேண்டுமென்றால் உங்கள் வலியை வைத்துக்கொண்டு நீங்கள் விளையாட வேண்டும், வலிக்கு உண்மையான நிவாரணமும் சரியான ஊட்ட மருந்தும் சிரிப்புதான்"
:)
சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர் (வாழ்க்கை வரலாறு) http://urssimbu.blogspot.com/2011/06/blog-post_27.html
நீங்க அதுக்கு அது கொலைஞர் டிவி இது கே டிவின்னு சொல்லி இருக்கணும் சகோ! ......அதுவாவது டியுப் லைட்தானான்னு பாத்தீங்களா..!//
ஹி ஹி ஹி..
ஒரு வேளை கலைஞர் கொடுத்த டிவி யான்னு கேட்டிருப்பாரோ...?//
இந்த ட்யூப்-லைட் சீக்கிரம் எரிஞ்சிடுச்சு போலயே..
பிளாக்கர்ல ஃபால்ட்.. எல்லோருக்கும் உள்ள பிரச்சனை தான்.. கடந்த ஒரு வாரமா இருக்கு.. டோண்ட் ஒர்ரி.. சரி ஆகிடும் மேடம்//
நன்றி செந்தில் சார்.
:))//
அபராதம் அறிவிக்க மறந்துட்டேனே..
I get updates of your blog in google reader. E mail of the blog is important . If you need any help, go to bloggers forum help. You may get a solution for your problem.//
ஆலோசனைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
ரைட்டு..//
சரிதாங்க..
//To truly laugh, you must be able to take your pain, and play with it! - Charlie Chaplin///
"உண்மையாக சிரிக்க வேண்டுமென்றால் உங்கள் வலியை வைத்துக்கொண்டு நீங்கள் விளையாட வேண்டும், வலிக்கு உண்மையான நிவாரணமும் சரியான ஊட்ட மருந்தும் சிரிப்புதான்"
:)
சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்) - வரலாற்று நாயகர் (வாழ்க்கை வரலாறு) http://urssimbu.blogspot.com/2011/06/blog-post_27.html//
எனக்கு மிகவும் பிடித்த நபர் சார்லின் சாப்ளின். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகள் என்னை மிகவும் பாதித்த ஒன்று. கட்டாயம் தாங்கள் குறிப்பிட்டுள்ள பதிவைப் படிக்கிறேன்.
வருகைக்கு நன்றி நண்பரே.
தப்பு அவர் மேல தாங்க... கலைஞர் கொடுத்த டீவியானு இல்ல கேட்டு இருக்கனும்.... பாவம் புதுசு போல... உங்களை பத்தி தெரிஞ்சி இருக்காது...... #வஞ்சப்புகழ்ச்சி அணி//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
(நா கோவமா இருக்கேனாக்கும்..)
அவர் சொன்னது சரிதான்???:)//
அட.. நீங்களுமா?????
நாங்க எல்லாம் பெட்றோமாஃஸ் லைட்
பத்தவைக்கறதுக்குள்ளே விடிஞ்சே போயிரும்
எங்க அட்ரெசை அவர்கிட்ட குடுங்க
உலகம் எப்பிடின்னு தெரிஞ்சுக்கட்டும்
மனம் கவர்ந்த பதிவு தொடரட்டும்
கலைஞர் டி.வி அவர் வீட்ல இருக்கும்..
இது என் டி.வின்னு சொல்ல வேண்டியது தானே..!
// ஒரு வேளை கலைஞர் கொடுத்த
டிவி யான்னு கேட்டிருப்பாரோ...? //
அப்படி கேட்டாலும்.. " இந்த டி.வியை
கலைஞர் கொடுக்கலைங்க.. எங்க
வார்டு கவுன்சிலர் தான் கொடுத்தாருன்னு "
சொல்லி இருப்பாங்க..
சரிதானே இந்திரா..!?
epppo blog maathuneeenga solllavey illleyyy!!!!//
என்னது??? சொல்லவே இல்லையா??? இதுக்காக தனியா ஒரு பதிவே போட்டேனே.. படிக்கலையா??? (செய்வினை வச்சவங்க லிஸ்ட்ல முதல் பேர் வினுனு இருந்ததா ஒரு வதந்தி நிலவுதே..??)
இதுக்கு தான் சொல்றது.. அப்பப்ப அடுத்தவங்க பதிவுக்கு வரணும்னு.. இனியாவது வாங்க வினு.
அவரு ட்யுப் லைட்டுக்கேசங்கடபடறாரே
நாங்க எல்லாம் பெட்றோமாஃஸ் லைட்
பத்தவைக்கறதுக்குள்ளே விடிஞ்சே போயிரும்
எங்க அட்ரெசை அவர்கிட்ட குடுங்க
உலகம் எப்பிடின்னு தெரிஞ்சுக்கட்டும்
மனம் கவர்ந்த பதிவு தொடரட்டும்//
ஆறுதல் சொன்னதுக்கு நன்றிங்க..
பாராட்டுக்கும் தான் ரமணி சார்.
தொடர்ந்து வாங்க.
கலைஞர் டி.வி அவர் வீட்ல இருக்கும்..
இது என் டி.வின்னு சொல்ல வேண்டியது தானே..!//
அப்புறம் என்ன அவர் மானக்கேடா திட்னாருனா என்ன பண்றது???
மீ பாவம்ல..
@ வெட்டிப்பேச்சு.,
// ஒரு வேளை கலைஞர் கொடுத்த
டிவி யான்னு கேட்டிருப்பாரோ...? //
அப்படி கேட்டாலும்.. " இந்த டி.வியை
கலைஞர் கொடுக்கலைங்க.. எங்க
வார்டு கவுன்சிலர் தான் கொடுத்தாருன்னு "
சொல்லி இருப்பாங்க..
சரிதானே இந்திரா..!?//
வார்டு கவுன்சிலர் எல்லாம் குடுக்கலங்க. என் அம்மா வீட்ல இருந்து சுட்டுட்டு வந்துட்டேன். இத அவர் கிட்ட சொன்னா மனுஷர் டென்சன் ஆய்டுவாரேன்னு தான் பேசாம விட்டுட்டேன். நமக்கும் கொஞ்சம் மனிதாபிமானம் இருக்குதுங்க.. (ஹிஹிஹி)
ஹா ஹா ஹா...சூப்பர் பல்பு... நீங்க என்னை விடவும் பெரிய அப்பாவி போலே இருக்கே... விடுங்க விடுங்க... பல்பு வாங்கறதெல்லாம் சகஜமப்பா...:))//
சரியா சொன்னீங்க.
நான் இதுவரைக்கும் வாங்குன பல்புகளையெல்லாம் வச்சுப் பாக்கும்போது இதெல்லாம் சாதாரணம் தாங்க.
avarukku thaan vallpu paththavaikkanum..nanpi...
ithellaam sinna valpu..
don't worry...
http://sempakam.blogspot.com/
கலைஞர் கொடுத்த டிவி? :-)))))//
வாங்க சித்ரா..
ரொம்ம்ம்ப நாளைக்குப் பிறகு நம்ம பக்கம் வந்துருக்கீங்க..
வருகைக்கு நன்றி தோழி.
aakaa !ninka sonnthu sari,
avarukku thaan vallpu paththavaikkanum..nanpi...
ithellaam sinna valpu..
don't worry...
http://sempakam.blogspot.com///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
me the firstu...//
அதானே பார்த்தேன்..
என்னடா சிவா இன்னும் இந்தப் பக்கம் வரலையேனு..
வாங்க சிவா.. ஏன் இவ்ளோ லேட்டு?
ஹா ஹா எப்படிங்க இப்படியெல்லாம்... ஆமா அது கலைஞர் டிவி தான.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
அட.. எத்தன தடவைங்க சொல்றது??
அது கே.டிவி.
(நாங்கல்லாம் யாரு...)
just a joke!
Nice