விண்வெளி - பொதுஅறிவுத் தகவல்கள்
நமது அறிவிற்கு அப்பாற்பட்ட பல ஆச்சர்யங்கள் நிறைந்தது தான் விண்வெளி. என்னதான் விஞ்ஞானம் மூலம் ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டாலும் இன்னும் புதிய புதிய தகவல்கள் கிடைத்துக்கொண்டே தான் இருக்கின்றன. சூரியன், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் எனப் பல புதுமைகள் இந்தப் பால்வீதியில் நிறைந்துள்ளன. அவற்றைப் பற்றிய எனக்குத் தெரிந்த சில தகவல்கள் இங்கே..
1. சூரியனில் ஆண்டுக்கு ஏழு முறை கிரகணம் தோன்றுகிறது.
2. ஒருவரின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சூரியனில் அவரது எடை 2000 கிலோ.
3. அண்டார்டிகாவில் செப்டம்பர் 21-ஆம் தேதி மட்டும் சூரியன் உதயமாகும்.
4. விண்வெளியில் பயணம் செய்த முதல் மிருகம் லைக்கா (Laika) என்ற நாய்.
5. விண்வெளி வீர்ர்களுக்கு உணவாகப் பயன்படுவது பாசி குளோரெல்லா.
6. சூரியனின் வெப்பக்கதிர்கள் 930 இலட்சம் மைல்கள் பயணித்து, பூமிக்கு வர சுமார் எட்டு நிமிடங்கள் ஆகின்றன. நாம் பார்க்கும் ஒளி, எட்டு நிமிடங்களுக்கு முந்தையது. மிக வேகமான ஒரு ஜெட் விமானம் இந்த தூரத்தைக் கடக்க 18 ஆண்டுகள் ஆகும்.
7. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 23 மணிநேரமும் 56 நிமிடங்களும் ஆகின்றன.
8. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் பெயர் நாசா.
9. இரவு வானில் கிட்டத்தட்ட 3000 நட்சத்திரங்களை, வெறும் கண்களாலேயே நம்மால் பார்க்க முடியும்.
10. பூமி விண்வெளியில் சுமார் 1,07,343 கி.மீ வேகத்தில் சுற்றுகிறது.
11. சூரிய கிரகணம் சுமார் 8 நிமிடங்கள் மட்டுமே நிகழும். ஆனால் சந்திர கிரகணம் 10 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கலாம்.
12. நட்சத்திரங்கள் என்பது சொந்த ஒளியைக் கொண்டு மிளிரும். கிரகம் என்பது சூரிய ஒளியை வாங்கிப் பிரதிபலிக்கும்.
13. சூரிய வெளிச்சத்தில் பூமியின் நிழல் சுமார் 8,59,000 மைல்கள் தூரம் விழும்.
14. ஒரு விண்மீன் வெடித்துச் சிதறும் ஒளி, நம் கண்ணுக்குத் தெரிய ஆகும் காலம் 1,70,000 ஆண்டுகள்.
15. 1866-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பவுர்ணமியே தோன்றவில்லை. அதே ஆண்டு ஜனவரி மற்றும் மர்ர்ச் மாதங்களில் இரண்டு பவுர்ணமிகள் தோன்றின. இது போன்று அதிசயம் 25 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு தான் தோன்றுமாம்.
16. ஒவ்வொரு வருடமும் பூமியிலிருந்து 3.82 செ.மீ தூரம் நிலா விலகிச் செல்கிறது.
17. சூரிய மண்டலத்தைப் பற்றிய படிப்பு ஆஸ்டீரியோலஜி எனப்படும்.
18. உலக அளவில் ஆண்டுதோறும் 800 கோடி டன் கார்பன்-டை-ஆக்ஸைடு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களால் நாம் இயற்கையை மாசுபடுத்துவதால் வளி மண்டலத்திற்குள் திணிக்கப்படுகிறது.
19. சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 3,64,000 கி.மீ
20. உலகிலேயே முதல் வான்வெளிப் புகைப்படம், அமெரிக்க உள்நாட்டுச் சண்டையின்போது பாராசூட்டிலிருந்து எடுக்கப்பட்டது.
21. யுரேனஸ் கிரகத்தில் கோடைகாலம் 21 ஆண்டுகளும், குளிர்காலம் அதையடுத்த 21 ஆண்டுகளும் நீடிக்கின்றன.
22. மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய 14வது நாடு இந்தியா.
23. 1970ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி பூமியிலிருந்து இயக்கப்பட்ட லூனா கோடி என்ற ஆளற்ற ஓடமே சந்திரனில் இறங்கிய முதல் ஓடமாகும்.
24. ஒரு மின்னல் 250 கோடி வோல்ட்ஸ் மின்சக்தி கொண்டது.
25. நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி.
26. நிலவை முதலில் டெலஸ்கோப் வழியாகப் பார்த்தவர் கலிலியோ.
27. பூமி சந்திரனுக்கு மிக அருகில் வருவது டிசம்பர் மாதத்தில். பூமி சூரியனுக்கு மிக தொலைவில் போவது ஜூலை மாதத்தில்.
பூமியிலிருந்து சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நிலைநிறுத்தப்பட்ட செயற்கை கோள் மூலம் பூமியின் நடவடிக்கைகளை கண்காணிக்கலாம். அதாவது பூமியின் ஏதாவதொரு இடத்தில் நடக்கும் சம்பவங்களை, சிக்னல்கள் அனுப்பியும் பெற்றும் கண்காணிக்க முடியும். சாதாரணமாக ஒரு தெருவில் கீழே கிடக்கும் ஒரு தபால் தலையின் அச்சிடப்பட்ட முகத்தைக் கூட பார்க்க முடியும் என்பதே இதன் சிறப்பு. இந்த தொழில்நுட்ப உதவியைக் கொண்டு சீற்றங்களை முன் கூட்டியே அறியலாம். இந்தப் புவி ஆய்வு முறையை ஆங்கிலத்தில் Global Positioning System (GPS) என்று அழைக்கிறார்கள்.
பூமி சூரியனைச் சுற்றுவது நமக்குத் தெரியும். அதேபோல் விண்வெளியின் மையத்தைச் சூரியன் சுற்றும். வட்டப் பதையில் இது நொடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றும். ஒரு முறை மையத்தைச் சுற்றி முடிக்க 250 மில்லியன் வருடங்களாகும். இது ஒரு காஸ்மிக் வருடம் (Cosmic year) எனப்படுகிறது.
இன்னும் நம் கண்களுக்குப் புலப்படாத பல அதிசயங்கள் வான்வெளியில் உள்ளன. எத்தனை எத்தனையோ புதுமைகள் கிடைக்கப்பெறலாம். வளர்ந்து வரும் விஞ்ஞானமே இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
.
.
Comments
இது பூமியில் இருப்பவர்களூக்கு மட்டுமே!
வியாழன் மற்றும் சனி கோளுக்கு சந்திரன்கள் அதிகம் என்பதால் கிரகணமும் அதிகம்!
அவ்வளவு அதிகமாக அவர் தம்மை உணர்வார், அந்த அளவு ஈர்ப்பு இருக்கும்!
இதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது, பூமி 23.5 டிகிரி சாய்ந்த நிலையில் சுற்றும் பொழுது இது சாத்தியம் ஆனால் அந்த சூரியன் பல நாட்கள் மறையாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு!
சந்திரனின் நிழல் சூரியனில் விழுவதை விட, பூமியில் நிழல் சந்திரனில் விழுவது அதிக பரப்பளவு!
இம்மாதிரி நிறைய புரளிகள் உள்ளன, முக்கியமாக 25 லட்சம் ஆண்டுகள்!
கோள்களும், மோதல்களும் பதிவில் சொல்லியிருப்பேன், சந்திரன், செவ்வாயுடன் மோத வாய்ப்புகள் அதிகம்
நன்றி
தொடர்ந்து பதிவிடுங்கள்
நன்றி...
டீச்சரம்மாவுக்கு வணக்கங்கோ..//
வாங்க செந்தில் சார்..
கவிதை, ஜோக், காமெடின்னு பிளாக் நல்லாத்தானேபோய்ட்டிருந்தது, என்ன திடீர்னு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
என்னங்க பண்றது??? மொக்கை போட்டுகிட்டே இருந்தாலும் போர் அடிக்குதே..
சரி விடுங்க... அடுத்த பதிவுல தொடர்ந்துடலாம்..
என்ன திடீர்ன்னு இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில இறங்கிட்டீங்க.. எல்லாமே அருமையான தகவல்கள். உபயோகமான தகவல்கள்..//
நன்றி மணி சார்..
ஏதோ கேள்விப்பட்ட தகவல்களப் பகிர்ந்துக்கலாம்னு ஒரு நல்லெண்ணம்..
(நா ரொம்ப நல்லவளாக்கும்...)
நன்றி...
அனைத்துமே கேள்விப்பட்ட தகவல்கள் தான் அருண் சார்.
இருந்தாலும் உங்கள் தகவல்களுக்கும் நன்றி.
(மழை கொட்டோ கொட்டுனு கொட்டப் போகுது.. ரொம்ப நாளைக்கப்புறம் வால்பையனிடமிருந்து இத்தனைப் பின்னூட்டமா????)
பயனுள்ள தகவல் தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
விண்வெளி பற்றி தாங்கள் சென்ன தகவல் அருமை
தொடர்ந்து பதிவிடுங்கள்
நன்றி...//
நன்றிங்க..
மன்னிக்கவும் ஒரு முறை சொன்னது இரு முறை பதிவாகிவிட்டது அதனால் தான் அதனை எடுத்து விட்டேன்.
நன்றி...//
ஓகேங்க..
வாழ்த்துக்கள்
:)))
தொகுப்பு அருமை...
தகவலுக்கு வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்.
மழை ஆல்ரெடி இங்க கொட்டிகிட்டு தான் இருக்கு!
:)))//
பாருடா... உடனுக்குடன் பதிலெல்லாம் வருது...
ஆச்சர்யம் தான்.
பயனுள்ள தகவல் பதிவா இருக்கு...
வாழ்த்துக்கள்....
நிறைய பயன் உள்ள பதிவா எழுதுங்க...
(இது டேம்ப்ளேட் கமெண்ட் இல்ல)
ஆனா இது காபி பேஸ்ட்டு தான் ஹி ஹி ஹி ஹி
நிறைய புதிய தகவல்கள் சொல்லி இருக்கீங்க சூப்பர்....!!!//
நன்றி மனோ சார்..
பல புதிய தகவல்கள் !//
நன்றிங்க..
பல புதிய தகவல்கள்
தகவலுக்கு நன்றி
தமிழ்மணம் 5//
நன்றி நன்றி நன்றி
venus
earth
mars
jupiter
saturn
uranus
neptune
pluto
எங்களுக்கும் விண்வெளி பத்தி தெரியும்ல
அறிவியல் அறிவுகள் அருமை ...
வாழ்த்துக்கள்//
நன்றிங்க..
படித்து மனப்பாடம் செய்ய வேண்டிய தகவல்கள்....
தொகுப்பு அருமை...
தகவலுக்கு வாழ்த்துக்கள்...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சௌந்தர்..
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.//
நன்றிங்க..
நல்ல பதிவு....வாழ்த்துக்கள்!//
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..
என்னங்க பல்ப் போய்...
பயனுள்ள தகவல் பதிவா இருக்கு...
வாழ்த்துக்கள்....
நிறைய பயன் உள்ள பதிவா எழுதுங்க...
(இது டேம்ப்ளேட் கமெண்ட் இல்ல)//
ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்..
(இது டேம்ப்ளேட் கமெண்ட் இல்ல)
ஆனா இது காபி பேஸ்ட்டு தான் ஹி ஹி ஹி ஹி//
என்ன வினு.. இந்தப் பக்கம் ஆளையே காணோம்????
mercury
venus
earth
mars
jupiter
saturn
uranus
neptune
pluto
எங்களுக்கும் விண்வெளி பத்தி தெரியும்ல//
வெரி குட்.. வெரி குட்..
ரெண்டுநாளைக்கு ஒருவாட்டி வந்து பார்த்திட்டுதான் போறேன் .... போன பதிவிலையும் கமேன்ன்டு பண்ணி இருன்தனே??
பகிர்வுக்கு நன்றி
நல்ல பயனுள்ள தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி. vgk
பட் ப்ரெசென்ட்
அனைத்தும் புதிய தகவல்கள்
மறுபடியும் சமுக அறிவியல் படிப்பது போல உள்ளது
வாழ்த்த வயதில்லை
வாழ்க வளமுடன்
பரவாயில்லை..'வெளி'த்தகவல்கள் நன்று.
///என்ன வினு.. இந்தப் பக்கம் ஆளையே காணோம்???////
ரெண்டுநாளைக்கு ஒருவாட்டி வந்து பார்த்திட்டுதான் போறேன் .... போன பதிவிலையும் கமேன்ன்டு பண்ணி இருன்தனே??//
உங்க வழக்கமான 1, 2, 3.. கமெண்ட காணோம்னதும் நீங்க வரலையோனு சந்தேகமாய்டுச்சு..
இதை போய் கிறுக்கல்கள் பக்கத்தில் எழுதிட்டீங்களே, தனி பூ ஒன்றை ஆரம்பிங்கம்மா..//
தனி வலைப்பூவா? இருக்குற ஒரு வலையவே காப்பாத்துறதுக்கு பெரும்பாடு பட வேண்டியதாயிருக்கு...
அட நீங்க வேற..
காப்பி பண்ணி வைச்சிக்க வேண்டிய இடுகை.//
நன்றிங்க..
நிறைய புதிய தகவல்கள்... அடிக்கடி இதுபோல பயனுள்ள தகவல்களையும் பதிவிடுங்கள் என்னைபோன்ற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் :)
பகிர்வுக்கு நன்றி
தொடரட்டும் தங்களின் மகத்தான பணி.... :)//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
Voted in Indli & Tamilmanam
நல்ல பயனுள்ள தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி. vgk//
நன்றிங்க..
விண்வெளி பொது அறிவு தகவல்கள் தங்கள் பதிவில் நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது... நன்றி
தமிழ் மணம் 11//
நன்றி நண்பரே..
manusangalaiya purinjuka mudila,, itha eapdi mam purinjuka mudium,,//
மனுஷங்களத்தான் புரிஞ்சுக்க முடியல.. இதையாவது புரிஞ்சுக்கலாமேனு தான்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
நிறைய புதிய தகவல்கள் சொல்லி இருக்கீங்க...NASA மூடுமுன்...//
கருத்துக்கு நன்றிங்க..
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்//
நன்றிங்க..
சாரி டீச்சர் கொஞ்சம் LATE.
பட் ப்ரெசென்ட்
அனைத்தும் புதிய தகவல்கள்
மறுபடியும் சமுக அறிவியல் படிப்பது போல உள்ளது
வாழ்த்த வயதில்லை
வாழ்க வளமுடன்//
சரி சரி அட்டெண்டன்ஸ் போட்டுட்டேன்..
போய்ட்டு வாங்க.. அடுத்த தடவை லேட்டா வரக்கூடாது சொல்லிட்டேன்..
நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றி//
வருகைக்கு நன்றிங்க..
இது என்னங்க.. திடீர்னு சீரியசா பேச ஆரம்பிச்சிட்டீங்க.. ஏதோ வழி மாறி வந்துட்டமோன்னு கொஞ்ச நேரம் திகைச்சுட்டேன்..
பரவாயில்லை..'வெளி'த்தகவல்கள் நன்று.//
மொக்கை போட்டுகிட்டே இருந்தாலும் போர் அடிக்கும்ல.. அதுக்கு தான்.
ஆனாலும் மொக்கையும் தொடருமுங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
ஹிக்ஸ் போஸான்: கடவுளுக்கும் கடவுள் துகளுக்கும் என்ன சம்பந்தம்?
http://jayadevdas.blogspot.in/2012/08/blog-post_1900
\\சந்திரனின் நிழல் சூரியனில் விழுவதை விட, பூமியில் நிழல் சந்திரனில் விழுவது அதிக பரப்பளவு!\\ சந்திரனின் நிழல் சூரியன்ல போயி விழுதா............ கடவுளே.....கடவுளே.........
வாங்க ஜெயதேவ் சார்.. நலமா?
பதிவு எழுதியிருக்கீங்களா? சந்தோசமுங்க. கட்டாயம் வந்து படிச்சு, என் கருத்துக்களை சொல்றேன்..
வருகைக்கு நன்றிங்க.
நன்றிங்க.
(வால்பையன் பின்னூட்டத்தை நீங்க குறிப்பிட்டத, தவறா புரிஞ்சுக்கிட்டேன்.அதுனால முந்தைய என் ரிப்ளைய எடுத்துட்டேன்.:-))