மீசைக்காரன் வாங்குன பல்பு..எப்ப பாத்தாலும் நா தான் பல்பு வாங்குறேன்னு நெனச்சுகிட்டு இருந்தேன். ஆனா நேத்து மீசைக்காரன் செம பல்பு வாங்குனான்.. இப்ப தான் எனக்கு ஆறுதலா இருக்கு.
அவ, தனியார் கம்பெனில அக்கவுண்டன்ட்டா வேலை பாத்துகிட்டிருக்குறா. ஆனாலும் புது வேலைக்காக, ஒரு பெரிய கம்பெனில வேலைக்கு அப்ளிகேஷன் போட்டிருந்தா. நேத்து சாயந்திரம் அந்த கம்பெனில இருந்து அவளுக்கு போன் பண்ணாங்க. அவளப் பத்தின தகவலெல்லாம் கேட்டுகிட்டு இருந்தாங்க. அவளும் பொறுமையா பதில் சொல்லிகிட்டு இருந்தா.
நமக்கொரு பழக்கம் இருக்கும். என்ன தான் நாம வாய் பேசினாலும், ஒரு மதிக்கத்தக்க இடத்துலயோ இல்ல வெளி நபர்கிட்டயோ ரொம்ம்ம்பவே டீசன்டா பேசுவோம். அதாவது நா ஒரு எச்சக்கல.. ஸாரி எஜூகேட்டட்“னு அடுத்தவங்க நெனைக்கனும்னு சீன் போடுவோம். அது மாதிரி தான் அவளும், நேத்து அவங்ககிட்ட போன்ல பேசும்போது, எஸ் சார்.. ஓகே சார், ஸ்யூர் சார்“னு ரொம்ம்ம்பவே தன்மையா பேசினா.. (கொய்யாலே.. ஃபார்வர்ட் மெசேஜ்க்கு அர்த்தம் கேக்கும்போது வச்சுக்குறேன்டி..)
இவ போட்ட சீன், அவங்களுக்கு இவ மேல ஒரு மரியாதைய ஏற்படுத்திடுச்சு போல.. “நாளைக்கு நேர்ல வாங்க, சின்னதா ஒரு நேர்முக இன்டர்வியூ வச்சு செலக்ட் பண்ணிக்கிறோம்“னு சொன்னாங்க. அவளும் சரினு சொன்னா..
இப்ப தான் நீங்க நல்லா கவனிக்கணும்.. மீசைக்காரன், ஏற்கனவே தற்காலிகமா ஒரு கம்பெனில வேலை பார்க்குறதால, புது வேலைல எப்ப ஜாயிண்ட் பண்ண முடியும்னு அவங்க கேட்டாங்க. அதுக்கு அவ, “நோ ப்ராப்ளம் சார். நீங்க ஜாய்ண்ட் பண்ண சொல்ற டேட்ல நா கரெக்ட்டா சேர்ந்திட்றேன்“னு சொன்னா. அதுக்கு அவரு “ஆஃப்டர் (After) தீபாவளி?னு கேட்டாரு.. இவ காதுல “ஹேப்பி தீபாவளி“னு விழுந்திருக்கு. (ஹா ஹா ஹா.. அசிங்கப்பட்டான் டா ஆட்டோக்காரன்..)
உடனே பிள்ளைக்கு சந்தோசம் தாங்கல.. “ஓ தாங்க்யூ சார். சேம் டு யூ சார்.. உங்க ஃபேமிலிக்கும் சொல்லிடுங்க சார்“னு சொல்லி கெக்கே பெக்கேனு சிரிச்சுகிட்டேயிருந்தா.. கொஞ்ச நேரம் பேசாம இருந்த அவரு, “ஹேப்பி தீபாவளி இல்லம்மா.. After தீபாவளினு சொன்னேன், சரி சரி நாளைக்கு வாங்க பாத்துக்கலாம்“னு சொல்லிட்டு போன வச்சுட்டார்.
செம பல்பு இல்ல??? அதுக்கப்புறம் மீசைக்காரன் முகம் எப்டி இருந்துச்சுனு நீங்களே கற்பனை பண்ணிப் பாத்துக்கங்க..
.
.

Comments

தங்கச்சி பல்பு வாங்கினா அக்காவுக்கு இம்புட்டு சந்தோஷம்... :-)

என்ன ஒரு வில்லத்தனம்...
அடாடா... தன்னைப் போலவே இன்னொரு ஜீவனும் பல்பு வாங்கினதுல இவ்வளவு சந்தோஷமா? இன்டர்வியூ டென்ஷனா இருந்திருக்கும், சரியா கவனிக்காம விட்டிருக்காங்க...
மீசையும் பல்ப்பும் கதை ரொம்ப ஜோர்.
பேத்தியின் படத்தை இன்று மீண்டும் ஒரு முறை பார்க்க வாய்ப்புத் தந்ததற்கு நன்றி.
விடுங்க பல்பு வாங்குறதெல்லாம் ஒரு பெரிய விசயமா? :)

பல்பு கண்டுபுடிச்ச எடிசனே பலமுறை பல்பு வாங்கித்தான் கண்டுபுடிச்சாரு....

சோ நாம பல்பு வாங்குறதுல தப்பே இல்ல.... :))
நீங்களே கற்பனை பண்ணிப் பாத்துக்கங்க.நீங்களே கற்பனை பண்ணிப் பாத்துக்கங்க.
இந்திரா...மாம் உங்க முகம் தான் வருகிறது .
நீங்களே கற்பனை பண்ணிப் பாத்துக்கங்க.நீங்களே கற்பனை பண்ணிப் பாத்துக்கங்க.
இந்திரா...மாம் உங்க முகம் தான் வருகிறது .
சந்தோஷப்பட இப்படி எல்லாம் கூட வழி இருக்கா ?
இப்படி எல்லாம் சந்தோஷப்படணுமா என்ன ? பாவம் அவங்க .......
ஆக ரெண்டு பேருமே பல்பு வாங்கி இருக்காயிங்க ஹா ஹா ஹா ஹா...
ஹப்பி தீபாவளி -after தீபாவளி-
ஹா ஹா தொப்பி தொப்பி

ச்சே!பல்பு பல்பு!
ஆர்வா said…
பாவங்க.. மீசைக்காரன் மானத்தை வாங்கிட்டீங்க.. அடுத்தது ராசிப்பொண்ணா? எஸ்கேப் ஆயிடுங்க
செம பல்புங்கோ....
Unknown said…
romba paasakkara akka...
Unknown said…
சகோ தன்னைப்போல பிறரை என்னும் தன்மை உள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்!...ஆத்தாடி இது தான்யா அசல் வில்லத்தனம்!
ezhilan said…
பல்பு போட்டே பாசத்தை வெளிப்படுத்தும் பல்புகாரியே,சே, பன்பான கண்மனியே, உமது பல்புதனம் தொடரட்டும்.
நெஜமாலுமே காமெடிதான்..

சகோ பல்பு வாங்கும்போது ரொம்ப சந்தோசமோ..? இதுதான் சகோ சந்தோசம்பானுங்களோ..?

வாழ்த்துக்கள்..

ரொம்பவே சந்தோசப் படாதீங்க..புது வேலை கிடைச்சதுக்கப்புரம் மீசைக்காரன் ரொம்பவே பிரைட் ஆனாலும் ஆச்சரியப்படரதுக்கில்ல..
புதுவேல கெடச்சிருல்ல அப்புறம் என்ன இந்த பல்பெல்லாம் சும்மா ஜூஜுபி அவங்களுக்கு........
Unknown said…
"கருத்து சொல்றதுனாலும் காரி துப்புறதுனாலும் உங்க இஷ்டமுங்க.." எதையும் வித்தியாசமாகச் சொல்லலாம் என்பதைப் புரிந்து கொண்டேன்.
நான் உங்க பல்பு ஆட்டத்துக்கு வரலை
செம காமெடி ஹா... ஹா...
Anonymous said…
ரொம்ப வில்லத்தனம் தாங்க உங்களுக்கு...
கருத்துகூட பார்த்துதான் போடணும் போல
kobiraj said…
செம வல்புதான்
ஹா ஹா.. ரொம்ப நாளா காத்துட்டிருந்தீங்க போல... நிறைவேறிடுச்சு பல்பு ... வாழ்த்துக்கள்
Unknown said…
ஹா..........ஹா........ஹா
கருத்துக்களைப் பகிர்ந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..