பண்டிகை நாட்களில் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் தேவையா..??



இந்த தலைப்புல தான் இன்னும் டிவில பட்டிமன்றம் வரலைனு நெனைக்கிறேன். அதை தவிர மற்ற எல்லா தலைப்புலயும் ஒரு பட்டிமன்றம் வச்சிட்றாங்க. “நடுவர் அவர்களே“.....னு ஆரம்பிச்சு ஒரு மணிநேரம் மாறி மாறிப் பேசுவாங்க.. ஆனா என்ன பேசுறாங்க? எதுக்கு பேசுறாங்கனு தான் தெரில.
சன் டிவி“னா சாலமன் பாப்பையா டீம், கலைஞர் டிவினா (இப்ப) லியோனி டீம், ஜெயா டிவினா திருஞானசம்பந்தம் அப்புறம் சுகிசிவம்.. இப்டி கான்ட்ராக்ட் போட்டு நிகழ்ச்சி நடத்துறாங்க.. இதுல என்ன வேடிக்கைனா, பட்டிமன்றங்களோ விவாதங்களோ காரசாரமான வாக்குவாதங்கள் நடக்குறதே இல்ல. நகைச்சுவைங்குற பேர்ல ஏதேதோ மொக்கை போட்றது ஃபேஷனாப் போய்டுச்சு. விஜய் டிவி“ல கொஞ்ச நாள் “நீயா நானா“ நல்லா போய்கிட்டு இருந்துச்சு. இப்ப அதுலயும் மொக்கை டாபிக் பேச ஆரம்பிச்சுட்டாங்க.
(ஒரு தடவை கல்யாண மாலை நிகழ்ச்சில கவனிச்சேன்.. நடிகர் பாண்டியராஜன் நடுவரா வந்து பட்டிமன்றம் நடத்தினார்.... கொடுமைடா..)
எங்க வீட்ல சாலமன் பாப்பையா பட்டிமன்றம்னா மிஸ் பண்ணாம பாப்பாங்க. (அவரு ஏய்.. ஏய்“னு மாடு விரட்டுற ஸ்டைலே தனி தான்..). அதுலயும் ராஜாவோட பேச்சு டாப்“புனு பேசிக்குவாங்க. சன் டிவி, சன் பிக்சர்ஸ் புகழ் பாடியே ராஜா வளர்றது இவங்களுக்கு புரியலையோ என்னவோ!!
பெரும்பாலும் இந்த மாதிரி பட்டிமன்றங்கள், பெண்கள மையப் படுத்தியே இருக்கும். “குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு காரணம் ஆண்களா பெண்களா?”, “வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டிலிருக்கும் பெண்கள்”,  குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவது அப்பாவா அம்மாவா?”, “அதிகம் சண்டை போடுவது மாமியாரா? மருமகளா?”, ”பெண்கள், சமூகத்தில் மதிக்கப்படுகிறார்களா? மிதிக்கப்படுகிறார்களா?”..
இந்த மாதிரி தலைப்புகள் தான் திரும்பத் திரும்ப வரும். ஆனா தீர்ப்பு என்னவோ பெண்களுக்கு சாதகமா தான் வரும்.. தாய்க்குலங்கள மையப்படுத்தி நிகழ்ச்சி பண்ணினால் தான் ஹிட் ஆகும்குற நம்பிக்கை.
இந்த நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பா நடக்காது, அதுமட்டுமில்லாம ஏற்கனவே அவங்களுக்குள்ள என்னென்ன பேசப்போறாங்க.. அதுக்கு பதிலடியா என்ன சொல்லப் போறாங்க“னு திரைக்கதை, வசனம் எல்லாமே தயார் பண்ணி ஒத்திகை பாத்துட்டு, தீர்ப்பு சொல்றது உட்பட முன்கூட்டியே முடிவெடுத்து வருவது போல தான் இந்த நிகழ்ச்சிகள் இருக்கும். வாக்குவாதம் பண்றேங்குற பேர்ல ஒருத்தர ஒருத்தர் கலாய்ச்சிட்டு, ரெண்டு பாட்டு பாடிட்டு, இப்டித்தான் ஒருநாள்“னு கொசுவத்தி சுத்திட்டு “வாய்ப்புக்குடுத்தமைக்கு வணங்கி விடைபெறுகிறேன்“னு முடிச்சிடுவாங்க.
நிகழ்ச்சி முடிவுல நாட்டாமையா உக்காந்துருக்குறவரு ஒரு Esaay அளவுக்கு வளச்சு வளச்சு பேசிட்டு “எனவே பெண்களே பெண்களேனு தீர்ப்பு சொல்றேன்“னு முடிப்பாரு. (இந்த நாடகத்துக்கு கைதட்டு வேற..)
இதுலயும் லியோனி நடுவரா வந்தா அவ்ளோ தான்.. மனுஷன் பாட்டுப் பாடியே கொன்னெடுத்துடுவாரு. பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்த ஜோக்க வச்சே பயபுள்ள இன்னமும் காலந்தள்ளிகிட்டு இருக்குது.
கேமராவுல, நிகழ்ச்சில பேசுறவங்கள காட்றாங்களோ இல்லையோ.. பார்வையாளர்கள் கூட்டத்தை சுத்தி சுத்தி காட்டுவாங்க. அவங்களும், நிகழ்ச்சி நடத்துறவங்க ஏற்கனவே அவங்ககிட்ட குடுத்து வச்சிருந்த டிவி லோகோ ஒட்டின அட்டையை ஆட்டி ஆட்டி டாடா காட்டுவாங்க. (பெரும்பான்மைய நீரூபிக்கிறாங்களாமாம்...).
இந்த நிகழ்ச்சிய விட, நிகழ்ச்சியோட எடிட்டர ரொம்பவே பாராட்டணும். பின்ன?? அப்பப்ப மேடைல அவங்க போட்ற (சிரிப்பே வராத) கடஞ்செடுத்த மொக்கைக்கு, மக்கள் ஆரவாரமா கைதட்டி விசிலடிக்கிற மாதிரி கணகச்சிதமா கட் அண்ட் பேஸ்ட் பண்ணிருப்பாரு.. அதுக்காக அவருக்கு ஒரு அவார்டே குடுக்கலாம்.
டிவி நிகழ்ச்சிகள்ல எவ்வளவோ மாற்றங்கள் வந்துடுச்சு.. இன்னும் இந்தப் பட்டிமன்றங்களுக்கு ஒரு விடிவு காலம் வரவேயில்ல.
டிஸ்கி :  தீபாவளி முடிஞ்சு இத்தனை நாள் கழிச்சு இந்தப் பதிவா?னு கேக்கலாம்.. அலுவலகம் சார்புல நேத்து ஒரு விழா.. டான்ஸ் நிகழ்ச்சி நடத்துவாங்கனு நம்ம்ம்ம்பி போயிருந்தேன். பட்டிமன்றம் வச்சு கொன்னுட்டாய்ங்க.. எவ்ளோ நேரம் தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது??? அவ்வ்வ்வ்...
.
.

Comments

SURYAJEEVA said…
மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிக்கு இது எவ்வளவோ தேவலாம் என்பது என் எண்ணம்... தொலைக்காட்சி பெட்டிக்கு மறுபெயர் idiot box என்று தெரியாதா உங்களுக்கு
ஆனா ராஜாவுக்கு கொஞ்சம் நகைச்சுவை உணர்வு இருக்கு..

ஆமா, பண்டிகை விடுமுறை ன்ன பட்டிமன்றம் தேவை இல்லைதான், ஆனால் ஒரு சில/பல நல்ல விவாதங்கள் நமக்கு நன்மை பயக்கும்.

பகிர்வுக்கு நன்றி..
kandipaaga thavai,, athil mattom than kudombathil ulla anaivarum saarnthu pakurathu,, unkaluku thanithu nirpathu migavum pidikum pola,,matrum nadovar galai patri vimar sanam pothuvaga vandam avergal tamil anubavam mikkavargal,,
//suryajeeva said...

மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிக்கு இது எவ்வளவோ தேவலாம் என்பது என் எண்ணம்... தொலைக்காட்சி பெட்டிக்கு மறுபெயர் idiot box என்று தெரியாதா உங்களுக்கு//


தெரியும்.. பெரும்பாலானவர்களின் ஒரே பொழுதுபோக்கே இதுதானெனும்போது குறைகளை சுட்டிக்காட்டுவதில் தவறில்லையே.

கருத்துக்கு நன்றி நண்பரே.
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஆனா ராஜாவுக்கு கொஞ்சம் நகைச்சுவை உணர்வு இருக்கு..

ஆமா, பண்டிகை விடுமுறை ன்ன பட்டிமன்றம் தேவை இல்லைதான், ஆனால் ஒரு சில/பல நல்ல விவாதங்கள் நமக்கு நன்மை பயக்கும்.

பகிர்வுக்கு நன்றி..//


அவை உண்மையான விவாதங்களாக இருக்கும்பட்சத்தில் நன்மை தான். ஆனால் வெறும் மொக்கை பேச்சுக்களாக மட்டுமே இருக்கிறது என்பது தான் என் ஆதங்கம்.

கருத்துக்கு நன்றிங்க.
////மழலைப் பேச்சு said...

kandipaaga thavai,, athil mattom than kudombathil ulla anaivarum saarnthu pakurathu,, unkaluku thanithu nirpathu migavum pidikum pola,,matrum nadovar galai patri vimar sanam pothuvaga vandam avergal tamil anubavam mikkavargal,,//


சூழ்நிலையைப் பொருத்து மாறுபடுமே தவிர தனிமை என்பது அனைவருக்குமே பிடிக்கும். (உங்களையும் சேர்த்து தான் சொல்கிறேன் நண்பரே..).
குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி, ப்ரயோஜனமாக இல்லாமல் மொக்கையாக மாறிக்கொண்டு வருகிறது என்று தான் சொல்கிறேன்.

பதிவில் சொல்லியிருப்பது போல “பட்டிமன்றங்களோ விவாதங்களோ காரசாரமான வாக்குவாதங்கள் நடக்குறதே இல்ல. நகைச்சுவைங்குற பேர்ல ஏதேதோ மொக்கை போட்றது ஃபேஷனாப் போய்டுச்சு“..
இது மாறணும்குறது தான் என்னோட வாதம்.

அப்புறம் அவங்களுக்கு தமிழ் ஆர்வம் அதிகம் இருக்குனு சொல்றீங்க. ஆனால் இன்னைக்கு வரும் நடுவர்களில் பலர், பாட்டுப் பாடியே நிகழ்ச்சிய முடிச்சிட்றாங்க. இதுல தமிழ் ஆர்வம் எங்க வருதுனு தெரில.
Robin said…
சினிமாகாரர்கள் வந்து உளறும் நிகழ்ச்சிகளைவிட பட்டிமனற்றங்கள் எவ்வளவோ தேவலை.
அன்பின் இந்திரா = ஆதங்கம் புரிகிறது - என்ன செய்வது .. இப்பட்டி மன்றங்களுக்குத் தான் இப்பொழுது இரசிகர் பட்டாளம் நிறைய இருக்கிறது. ஒன்றும் செய்ய இயலாது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பட்டிமன்றங்கள் பெலும்பாலும் ஒத்திகை பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகள்தான்னு நீங்க சொல்லியிருக்கறது ரொம்பச் சரி இந்திரா. ஒரு ஒத்திகைய நேர்ல பாத்த அனுபவம் உண்டு எனக்கு. லியோனி பத்து வருஷத்துக்கு முந்தின ஜோக்ஸை வெச்சே காலம் தள்றார்னு உண்மையச் சொன்னதுக்கும் உங்களுக்கு கை குலுக்கல்! கடைசி இரண்டு வரிகள் என்னோட கமெண்ட்டும்கூட...
பட்டிமன்றத்தில் பிரச்சனைக்கு உரிய பல விசங்கள் பேசப்படுவதில்லை.! அணு உலை தேவையா? மாற்று எரிசக்தி வழிகள் என்ன? இந்தியாவில் நடப்பது மத சார்பற்ற ஆட்சியா? அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை நடத்தலாம? பூமி பூஜை போடுவது சரியா? அரசு செலவில், மக்களின் வரிபணத்தை பாழடித்து, மதவாதிகளை பார்க்க போகலாமா? இப்படி பட்டிமன்ற தலைப்பு குடுத்து பாருங்கள் போட்டியை தூக்கிட்டு ஓடுவாங்க!
பட்டிமன்றங்கள் உருவான நோக்கமே வேறு...

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவே பட்டிமன்றங்கள் என்ற விவாத மேடைகள் உருவாயின.
-ஆனால் பட்டிமன்றங்கள் வேறுதிசையில் சென்று பல காலங்கள் ஆகிவிட்டது... சகோ...
வாய்ப்புக்குடுத்தமைக்கு வணங்கி விடைபெறுகிறேன்

நல்வாழ்த்துகள்
மக்கள் ஆரவாரமா கைதட்டி விசிலடிக்கிற மாதிரி கணகச்சிதமா கட் அண்ட் பேஸ்ட் பண்ணிருப்பாரு.. அதுக்காக அவருக்கு ஒரு அவார்டே குடுக்கலாம்.//

ஆஸ்கார் அவார்டே குடுக்கலாம் தப்பில்லை ஹி ஹி....
செமையா கடுப்பு எத்திருக்காங்க போல தெரியுதே ஹா ஹா ஹா ஹா...
K.s.s.Rajh said…
பட்டிமன்றத்தை செமயாக போட்டுத்தாகியிருகீங்க.......
//நகைச்சுவைங்குற பேர்ல ஏதேதோ மொக்கை போட்றது ஃபேஷனாப் போய்டுச்சு.//

அதை நாம சொல்லக்கூடாது!
//தமிழ்வாசி - Prakash //

//Robin //

//cheena (சீனா) //

//கணேஷ் //


கருத்துக்கு நன்றிங்க.
//siva said...

:)//


வாங்க சிவா..
//ஓசூர் ராஜன் //

//ராஜா MVS //

//☀நான் ஆதவன்☀ //

//இராஜராஜேஸ்வரி //

//MANO நாஞ்சில் மனோ //

//K.s.s.Rajh //


கருத்துக்கு நன்றிங்க..
//வால்பையன் said...

//நகைச்சுவைங்குற பேர்ல ஏதேதோ மொக்கை போட்றது ஃபேஷனாப் போய்டுச்சு.//

அதை நாம சொல்லக்கூடாது!//


நா மொக்கை போட்றேங்குறத தாராளமா ஒத்துக்குறேனே..
ஆனா அவங்க ஒத்துக்க மாட்டீங்குறாங்களே அருண் சார்..
அதுனால நா அப்படித் தான் சொல்வேன்.
இப்பதிவின் தலைப்பே பட்டி மன்றத்திற்கு ஏற்றாற்போல் உள்ளது.

யாராவது தீர்ப்பு சொல்லுவாங்க பார்த்தேன். பாரவாயில்லை நீங்களே சொல்லிடுங்க

Popular posts from this blog

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..