ச்சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள் - ஒரு அலசல்..இன்னைக்கு இணைய நட்புங்குற விஷயம் நடைமுறைல சகஜமாய்டுச்சு. ஆண் பெண் பேதமில்லாம, இணையம் மூலமாவே, (முகம் பார்க்காம கூட) மாசக் கணக்கா பேசி ஒருத்தருக்கொருத்தர் நட்ப வளத்துகிட்டு வறாங்க. இதுல நல்ல விஷயங்கள விட, எதிர்மறையான விஷயங்கள் நிறையவே இருக்குனு சொல்லலாம். இன்னைக்கு சூழ்நிலைல, இணைய நட்புங்குறத தாண்டி, காதல், காமம்னு அடுத்தடுத்த பரிணாமத்துக்கு கொண்டுவந்துடுச்சு. இதுல பகுத்தறிவோட, பிரிச்சுப்பாக்குற பக்குவம் இருக்குறவங்க தப்பிச்சுக்குறாங்க. பல ஆர்வக்கோளாறுகள் இதுலயே மூழ்கி வாழ்க்கைய கெடுத்துக்குறாங்க.
பேஸ்புக், ஆர்குட், ட்விட்டர்னு நெறைய நெறைய இணையதளங்கள் மூலமா நமக்குப் புதுப் புது நட்புகள் கிடைக்குது. தற்செயலா, எந்த உள்நோக்கமும் இல்லாம, நட்பின் அடிப்படைல மட்டும் பழகுறவங்க சிலர் இருந்தாலும், தங்களுடைய வக்கிர புத்திக்காக, ஆண்கள் / பெண்கள் யாராவது சிக்க மாட்டாங்களானு வலை விரிக்கிறவங்களும் இருக்காங்க.
அப்படி புதுசா அறிமுகமாகுற ஆண் பெண் மத்தியில நடக்குற ச்சாட்டிங்குல, சம்மந்தப்பட்ட ஆண் எப்படியெல்லாம் சாமர்த்தியமா பேசுவான்னு அலசலாம் வாங்க..
(சுய அறிமுகத்துக்குப் பின், பேச ஆரம்பித்த கொஞ்ச நாள்ல..)
1. உன்ன நா எப்டி கூப்பிட்றது??
அதாவது முழுப்பேர் சொல்லியா? இல்ல சுருக்கமாவா? இல்ல வேற ஏதாவது செல்லப் பேர் சொல்லிக் கூப்பிட்றதா?“னு அர்த்தம். உரிமையா பேச ஆரம்பிக்கிறதுக்கான முதல் படி இது தான். “உங்க இஷ்டம்“னு பதில் வந்தா, செல்லம்.. புஜ்ஜி.. குட்டி“னு ஏதாவது பேர் வச்சு கூப்பிட ஆரம்பிப்பாங்க.  (எங்க வீட்ல ஒரு குட்டிப்பாப்பா இருக்கு, இல்ல பூனைக்குட்டி இருக்கு.. அத இப்டி தான் கூப்டுவேன்.. சோ க்யூட்..“னு உளறுவாங்க)
2. டி“போட்டு பேச ஆரம்பிப்பாங்க..
ஏதாவது பேசிகிட்டு இருக்கும்போது மறந்த மாதிரி “போடி“னு சொல்வாங்க. உடனே “ஸாரி ஸாரி தெரியாம சொல்லிட்டேன்பா..னு பதறிகிட்டு மன்னிப்பு கேப்பாங்க. நாளுக்கு நாள், வேணும்னே சீண்டுறதுக்காக சொல்ல ஆரம்பிச்சு பின் அதுவே பழக்கமாய்டும்.
3. உனக்கு நா யாரு?
இது அடிப்படை உள்நோக்கத்துல கேக்கப்படுது.. சாதாரணமா பேசிகிட்டு இருக்கும்போது திடீருனு “ஏம்பா, உனக்கு நா என்ன வேணும்? ஜஸ்ட் ப்ரெண்டா? க்ளோஸ் ப்ரெண்டா?“ங்குற மாதிரி போட்டு வாங்குவானுக.
4. உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்றேன்..
சாயந்திரம் ஆறு மணிக்கு ஆன்லைன் வரலாம்னு பேசிருப்பாங்க. ஆனா 5 மணிக்கே வந்து வெயிட் பண்ணேன்னு சீன் போடுவாங்க. ரெண்டு நிமிசம் லேட்டா வந்தாலும் ஓவரா கோவிச்சு, “உன்ன ரொம்ம்ம்ப மிஸ் பண்ணேன்“னு சொல்வாங்க.
5. உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்..
கொஞ்ச நாள் பேசுனதுக்கப்புறம் இந்த வசனத்த அடிக்கடி சொல்வாங்க. ஆனா என்னானு சொல்ல மாட்டாங்க. இப்ப வேணாம்.. ஆனா கண்டிப்பா சொல்றேன்னு சொல்வாங்க. எதிர்பார்ப்ப தூண்ட்றாங்களாம்.
6. பசிக்கவே மாட்டீங்குது.. உன்கூட பேசினா போதும்..
ஏற்கனவே வயிறுமுட்ட திண்ணுட்டு தான் வந்திருப்பாங்க. ஆனா இப்படி சொல்றதுனால, எதிர்தரப்புல இருக்குறவங்க ப்ளீஸ் சாப்பிட்டு வா, உடம்ப கெடுத்துக்காத“னு அக்கறையா பேசுவாங்க.
7. நா ரொம்ம்ம்ம்ப பொறுப்பான பருப்பு..
படிக்குற காலத்துல எந்நூறு அரியர்ஸ் வச்சிருப்பான், ஊர் சுத்திகிட்டு வெட்டியா இருப்பான். ஆனா ச்சாட்டிங்னு வந்துட்டா போதும்... அக்கறையும் அட்வைசும் பொங்கிட்டு வரும். “நல்லா படி, அப்பா அம்மாவுக்கு மரியாதை குடு, மத்தவங்க பெருமைப்பட்ற மாதிரி நட, எதையாவது சாதிக்கணும், தன்னம்பிக்கைய வளத்துக்க“ .. அப்படி இப்படினு வீராவேசமா பேசுவாங்க. அப்பதான் இவங்கள பொறுப்பானவன்“னு அந்தப் பொண்ணு மெச்சிக்குமாம்.
8. நா பெரிய அப்பாடக்கராக்கும்..
இவுனுகளுக்கு வேலை வெட்டியே இருக்காது.. ஆனா நா பெரிய அப்பாடக்கர், சமூக சேவை பண்றேன், கண் தானம் பண்ணிருக்கேன், இரத்தம் குடுத்தேன், ஏழைக் குழந்தைகளுக்கு உதவி பண்றேன்“னு ஓவரா அளந்து விடுவானுங்க.
9. கொசுவத்தி சுத்துவானுக..
நா ஒரு பொண்ண உயிருக்கு உயிரா காதலிச்சேன்.. ஆனா அவ என்ன வேணாம்னு உதறிட்டுப் போய்ட்டா“னு ஒப்பாறி வைக்காத குறையா கொசுவத்தி சுத்துவானுக. How unlucky she is?’னு ஃபீல் பண்ணி ஆறுதல் சொல்லணுமாம்... சென்டிமென்டா டச் பண்றாய்ங்கப்பா..
10. இந்த அளவுக்கு நா யார்கிட்டயும் பேசினதில்ல..
எந்தப் பொண்ணுகிட்ட ச்சாட் பண்ணினாலும் இந்த டைலாக் மறக்காம வந்திடும். ஒரே நேரத்துல நாலு பொண்ணுகூட ச்சாட் பண்ணுவான்.. இதே டைலாக்க நாலுபேர்கிட்டயும் சொல்லுவான். தனக்கு முக்கியத்துவம் குடுக்குறான்னு அந்தப் பொண்ணு நெனைக்கணுமாம்.
11. அப்புறம்.. சொல்லு..
இந்த ரெண்டு வார்த்தைகள் இல்லாம ச்சாட்டிங்கே இருக்காது. நடு ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் ச்சாட் பண்ணிட்டு குட் நைட் சொல்லுவாங்க.. ஸ்வீட் ட்ரீம்ஸ்“னு சொல்லிட்டு “அப்புறம்.. சொல்லு“னு திரும்ப ஆரம்பிப்பாங்க. உன் கூட பேசினா டைம் போறதே தெரில“னு வேற அப்பப்ப சொல்லிக்குவாங்க.
12. உன் ப்ரெண்ட்ஷிப் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும்.
சாதாரண விஷயத்தப் பத்தி பேசினாகூட, பொண்ணுங்கள புகழ்ந்து தள்ளிடுவாங்க. உதாரணத்துக்கு, பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபா பிச்சை போட்டேன்“னு அந்தப் பொண்ணு சொன்னாகூட, “ச்சே.. எவ்ளோ பரந்த மனசு உனக்கு? உன்ன மாதிரி இரக்க குணம் உள்ள பொண்ண நா பாத்த்தேயில்ல.. இந்தக் காலத்துல இதெல்லாம் ரொம்ப பெரிய்ய்ய விஷயம்.. உன்ன என் ஃப்ரெண்ட்னு சொல்றதுக்கே பெருமையா இருக்கு, உனக்கு வரப்போற புருஷன் ரொம்ம்ம்ப குடுத்து வச்சவன்“னு புகழ்ந்து தள்ளிடுவாய்ங்க.
13. கல்யாணப் பேச்சு..
என் வீட்ல பொண்ணு பாக்க ஆரம்பிக்கிறாங்க“னு பேச்ச ஆரம்பிப்பாங்க. பொண்ணு எப்படியிருக்கனும்னு எதிர்பார்க்குறீங்க“னு கேட்டுட்டா போதும். “உன்ன மாதிரி அமைதியா, உன்ன மாதிரி அழகா, உன்ன மாதிரி அக்கறையா இருக்கணும்“னு வரிசையா அடுக்கிகிட்டே போவாங்க. அந்தப் பொண்ணுக்கு கோவம் வந்துடுச்சுனா உடனே “ஐயோ.. நா உன்ன மாதிரினு தான் சொன்னேன். உன்னைனு சொல்லல“னு சமாளிப்பானுக.
14. என்னையெல்லாம் யாருக்குப் பிடிக்கப்போகுது??
எனக்கு யாருமே இல்லாத மாதிரி தோணுது, என்னைய எந்தப் பொண்ணு கல்யாணம் பண்ணிக்குவா? என்னைய யாருக்குப் பிடிக்கப்போகுது, வாழ்க்கைல ஒரு பிடிப்பே இல்ல“னு ஓவரா விரக்தியா பேசுவாங்க. அப்ப தானே பதிலுக்கு நா இருக்கேன்லனு அந்தப் பொண்ணு சொல்லும்..
15. உனக்குப் பிடிக்கலேனா யூரின் கூட போக மாட்டேன்..
பேச்சுவாக்குல அந்தப் பொண்ணு எதையாவது தனக்குப் பிடிக்கலேனு சொல்லிட்டாப் போதும்.. உடனே “இனிமே நா அத பண்ணி மாட்டேன், உன்ன விட எனக்கு எதுவும் முக்கியமில்ல“னு பிலிம் போடுவாங்க. உதாரணத்துக்கு ஃப்ரெண்ட்ஸ் கூட சினிமாவுக்குப் போறேன்“னு சும்மா போட்டு வாங்குவானுக. என் கூட ச்சாட் பண்ண மாட்டியா?“னு அவ கேட்டுட்டா போதும். உடனே, சரி நா கேன்சல் பண்ணிட்றேன். எனக்கு ப்ரெண்ட்ச விட, எனக்கு உன் கூட பேசுறதுதான் முக்கியம்னு சொல்வாங்க.
16. நா ரொம்ப நல்லவனாக்கும்..
உன் கூட பேச ஆரம்பிச்சதுக்கப்புறம் வேற எந்த பொண்ணையும் பாக்க தோணல. அம்மாகிட்ட கூட கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டேன் தெரியுமா??? உன் ப்ரெண்ட்ஷிப் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, உன் கூட பேசிகிட்டே இப்படியே இருந்திட்றேன்“னு சொல்வாங்க.
17. எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு..
இது கொஞ்சம் பழைய டெக்னிக் தான். இருந்தாலும் விட மாட்டிங்குறாய்ங்க. “உன் போட்டோவ பாத்தேன், எங்கயோ பாத்த மாதிரியிருக்குப்பா, ரொம்ப நெருங்குன சொந்தமா தெரியுற, அந்நியமாவே பாக்கத் தோணல தெரியுமா..“னு ரீல் விடுவாங்க. அதே மாதிரி தங்களோட போட்டேவ அனுப்பும்போது, உடற்கட்டு, கை, மார்பு தெரியுற மாதிரியான போட்டோவ பெரும்பாலும் அனுப்புவாங்க. ஆண்மையா இருக்கேன்னு காட்றாங்களாம்.
18. உன்கிட்ட உண்மைய மட்டும் தான் பேசுவேன்..
வெளிப்படையா இருக்காங்களாம்.. எட்டு முறை லூஸ் மோசன் போனதைக் கூட சொல்லுவாங்க.. அந்த அளவுக்கு தன்கிட்ட எல்லாத்தையும் ஓபனா சொல்றாங்களேனு பொண்ணுங்க ஆச்சர்யப்படணுமாம்.
19. பொசசிவ்வை கிளறுவாங்க..
கஸ்டமர்கேர்“ல இருந்து ஒரு பொண்ணு பேசுச்சு.. வாய்ஸ் நல்லாயிருந்துச்சுப்பா..னு சொல்லி பொண்ணுங்களோட அடிப்படை பொசசிவ் குணத்தை கிளறுவாங்க. திட்டு வாங்கினதுக்கப்புறம், “ஏய் சும்மா சொன்னேன்பா.. உன்குரலுக்கு ஈடு எதுவுமில்ல“னு வழிவானுக.
20. என் மேல நம்பிக்கை இல்லேனா....
“எனக்கு நெட் ப்ராப்ளம், நா ஊருக்கு போறேன்.. அதுனால ச்சாட்டிங் வர முடியாது, உன் நம்பர்ல இருந்து SMS பண்றியா??? என் மேல நம்பிக்கை இல்லேனா காய்ன் போன்ல இருந்து கூட பேசுப்பா..“ இது அவர்களின் உச்சகட்ட ஆயுதம். நம்பிக்கை இல்லையா?னு கேக்குறதுல தான் பல பொண்ணுங்களோட போன் நம்பர்கள் வாங்கப்படுது.. அப்புறம் என்ன??? ச்சாட்டிங் குறைந்து எஸ்எம்எஸ் ஆரம்பிச்சுடுவாங்க. அப்புறம்... வேறென்ன?? அப்படியே போக வேண்டியதுதான்.
நா இங்க சொல்லிருக்குற யுத்திகள் பாதிதான். சொல்லிகிட்டேபோனா ஒரு பதிவு பத்தாது. இது மாதிரியான ச்சாட்டிங் மன்மதர்கள், பொண்ணுங்ககிட்ட எப்படி பேசினா, என்ன பதில் வரும்னு தெளிவா தெரிஞ்சு வச்சுக்குறாங்க. அதுக்கேத்தாப்புல தான் வலை விரிக்குறாங்க. உஷாரா இருக்குற பொண்ணுங்க சாமர்த்தியமா தப்பிச்சுக்குவாங்க. பக்குவமில்லாதவர்கள் சிக்கிக்குறாங்க.
இதையெல்லாம் படிச்சுட்டு ஆண்கள் மட்டும் தான் இப்படி ச்சாட் பண்றாங்களா?? பொண்ணுங்க மேல தப்பே இல்லையா“னு சண்டை போடலாம். நா இல்லேனு சொல்லல. அதப்பத்தின சர்வே இன்னும் முடியல.. அதுனால இன்னொரு பதிவுல அவங்களப் பத்தி பாக்கலாம்.
.
.

Comments

Darren said…
PhD in flirting. haha
ஐடியாக்கள்எல்லாம் செமயா இருக்கு, என் நண்பன் விக்கி தக்காளீக்கும், ஆருயுர்த்டம்பி லேப் டாப் மனோவுக்கும் யூஸ் ஆகும் ஹே ஹே ஹே
SURYAJEEVA said…
பல ரகசியங்கள் வெளியே வருகிறது... நண்பர்களே உஷார்.. ரூட்ட மாத்துங்கப்பா
நல்ல எச்சரிக்கை பகிர்வு..
Ganesan said…
அருமையான பதிவு...
யப்பா... கண்ணை கட்டுதே....

ரொம்ப அனுபவ பட்டு இருக்கீங்க...
சரிதான்... இப்படி விரிவா எழுதி (என்ன மாதிரி) அப்பாவிப் பசங்களுக்குக் கூட கத்தக் குடுத்துடுவீங்க போலருக்கேங்க...
கேள்விகளும் பதிலும் நேரடியாக நடந்தது போலவே உள்ளது....

ஒரு வேளை இது அனுபவ பகிர்வா???
நன்றி ஃப்யூச்சர்ல யூஸ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்
நடு ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் ச்சாட் பண்ணிட்டு குட் நைட் சொல்லுவாங்க.. //
ராத்திரி இரண்டு மணி வரைக்கும் சாட் செய்தா எந்த ஆணுக்கும் தவறாகத்தானே தோணும்? என்னை கன்வின்ஸ் செய்யும் பதில் வந்தாள் கேள்வியை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.
K.s.s.Rajh said…
நல்லதொரு பதிவை தந்திருக்கீங்க மேடம்

பெரும்பாலும் வலைவிரிப்பது ஆண்கள் என்றாலும் பெண்களும் இப்படி சீன் போடுபவர்கள் இருக்கின்றார்கள்......

ஒரு விழிப்புனர்வு பதிவு பெண்களே உஷார்....
நல்ல விழிப்புணர்வுப் பதிவாகவும் தெரியுது
விவரங்கள் சொல்லித் தருகிற பதிவாகவும் இருக்கு
மொத்தத்தில் தெளிவான பதிவு.வாழ்த்துக்கள்
இது சத்தியமா மொக்கை இடுகையல்ல.... பெண்களுக்கு எச்சரிக்கை பதிவு...
Unknown said…
Ithu warninga Tipsaa? Rendu categorylayum sethukalaam. (:
என்ன? சாருவின் "சாட்" வாசித்து விட்டு எழுதியது போல் உள்ளது.
இப்படியுமா? வழிவாங்க!
பெண்களும் ஏன்? இந்த அளவு வளரவிடுகிறார்கள்.
சில பெண்களின் பதிவுகளுக்கு ஆண்கள் போடும் பின்னூட்டமே! எனக்குச் சிரிப்பை
வரவைக்கும்.
அந்த வழிஞ்சோடும், முகமறியா மனிதனின் "வரட்சியை" நினக்கப் பரிதாபமாக
இருக்கும்.
இந்த யுகத்தில் இவர்கள் திருந்தார்கள்.
நல்ல பதிவு. ஆனா இந்த டெக்னிக் எல்லாம் ரொம்ப ஒல்டு. இந்த டெக்னிக் எல்லாம் இன்னும் பெண்கள் விழுகிறாங்கனா அந்த பொண்ணுக எல்லாம் சரியான மொக்கை பொண்ணாதன் இருக்கனும். இப்ப ஆண்கள் எல்லாம் புது டெக்னிக்தான் யூஸ் பண்ணுகிறார்கள் அதை நீங்க ரிசர்ஸ் பண்ணி போடுரதுக்குள்ள அவங்க அடுத்த லெலவல் போயிடுவாங்க.

எந்த ஆண்கள்கிட்ட பழகினாலும் பெண்கள் தன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டு நெருப்பு போல இருந்தால் எந்த வித கொம்பனாலும் ஒன்றும் பண்ண முடியாது. பெண்கள் கொஞ்சம் சபலத்திற்கு இடம் கொடுத்தாலும் அதற்கான விலை கொடுக்க ரெடியாக இருக்க வேண்டும்.

உங்களின் இந்த பதிவு அப்பிராணியாக இருக்கும் சில பெண்களுக்கு மிக உதவியாக இருக்கும். இதனால் சில பெண்களாவது ஏமாறாமல் இருந்தால் உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். கவிதையாக எழுதி வெளியிடுவதற்கு பதிலாக தொடர்ந்து இது மாதியான பயனுள்ள செய்தியை பெண்கள் வெளியிட வேண்டும்

வாழ்த்துக்கள்
COOL said…
கரைக்ட்டா சொல்லிருக்கிங்க...
சர்த்தான்... இப்டி ஓப்பனா போட்டு ஒடச்சா எப்புடி வண்டிய ஓட்றது...
நல்ல பதிவு.
எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
Unknown said…
அட இப்படியெல்லாம் கூட இருக்கா???(நீ
இன்னும் வளரணும் தம்பி!!!!!!!!!)
நவன் said…
ரொம்ப தாங்க்ஸ! நீங்க கூட ரொம்ப அழகா பதிவு எழுதுறீங்க. உங்களை மாதிரி சமூக அக்கறையோட ஒரு பொண்ணை பார்த்ததே இல்லை. அப்புறம் ப்ரீயா இருக்கும்போது சாட் ஐடி கொடுங்க!
நல்ல பகிர்வு!
Unknown said…
This comment has been removed by the author.
நீங்க என்ன படிச்சிருக்கீங்க? நிச்சயம் post graduate னு நினைக்கிறேன். அருமையான பதிவு. பாராட்டுகிறவங்க கிட்டயும் நீங்க ஜாக்கிரதையா இருக்கிறது நல்லதுங்க. உங்க நன்மைக்காகத்தான் சொல்றேன். சிலர் அட்வைஸ் பண்ற சாக்கிலும் வருவாங்க. உஷாரா இருக்கணும். மத்தவங்களைக் குறை சொல்லிகிட்டே உங்க நம்பிக்கையைப் பெறுவதற்கும் சிலர் முயற்சிப்பாங்க.ஜாக்கிரதை! சாயங்காலம் 5 மணி வாக்கில ஃப்ரீயா இருந்தா ச்சாட்டுக்கு வாங்க. அந்த மாதிரி ஆட்களைப் பத்தி இன்னும் சொல்றேன். சரிங்களா?
Unknown said…
இதைத்தானா பயபுள்ளைங்க யூஸ் பண்றாங்களா? எவனும் சொன்னதில்ல! நீங்க சொல்லிட்டீங்க! :-)

ஆனா, இதை வாசிக்கும்போதே எல்லாருக்கும் புரியுதே..இது நிச்சயமா ஒரு பெண்ணை விழவைப்பதற்கான தூண்டில்னு! ஆனா இதையெல்லாம் ஒரு பெண்கள் நம்புறாங்கன்னா ரெண்டே ரெண்டு முடிவுதான்!
1) அவ்வளவு முட்டாள்களா யோசிக்கத் தெரியாதவர்களா இருக்கணும்!
2) அதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள்! - அப்புறம் ஏதாவது பிரச்சனைன்னு ஐயோ எனக்கு ஒண்ணுமே தெரியாது, அப்பாவி, என்னை ஏமாத்திட்டான்னு புலம்ப வேண்டியது! - அதுக்கு ஆறுதல் சொல்ற போர்வைல இன்னொரு குரூப் கிளம்பிடும் தூண்டில் போட!

என்னமோ போங்கப்பா!

ஆனா ஒண்ணு! உலகம் தெரியாத தமிழ்ப் பொண்ணுங்களுக்காக இதை நீங்க பகிர்ந்திருக்கீங்க வாழ்த்துக்கள்!
சூப்பரான பதிவு! :)

சான்ஸே இல்ல (உடனே இதை 21 பாயிண்டா சேர்க்கப்டாது சொல்லிட்டேன்)
உனக்குப் பிடிக்கலேனா யூரின் கூட போக மாட்டேன்..//


lol

is it true?
லதானந்த் said...
நீங்க என்ன படிச்சிருக்கீங்க? நிச்சயம் post graduate னு நினைக்கிறேன். அருமையான பதிவு. பாராட்டுகிறவங்க கிட்டயும் நீங்க ஜாக்கிரதையா இருக்கிறது நல்லதுங்க. உங்க நன்மைக்காகத்தான் சொல்றேன். சிலர் அட்வைஸ் பண்ற சாக்கிலும் வருவாங்க. உஷாரா இருக்கணும். மத்தவங்களைக் குறை சொல்லிகிட்டே உங்க நம்பிக்கையைப் பெறுவதற்கும் சிலர் முயற்சிப்பாங்க.ஜாக்கிரதை! சாயங்காலம் 5 மணி வாக்கில ஃப்ரீயா இருந்தா ச்சாட்டுக்கு வாங்க. அந்த மாதிரி ஆட்களைப் பத்தி இன்னும் சொல்றேன். சரிங்களா?//


haahaahaahaa

sontha selavil sooiyamaa?
i am in cafe, no tamil font, sorry
Tamilthotil said…
பதிவு ரசிக்கும்படியாக இருந்தது. நிறைய இடங்களில் என்னால சிரிக்க முடிந்தது.இருப்பினும் நீங்கள் இறுதியாக விட்ட இடம் நிறைய கசப்பான சம்பவங்களின் தொடக்கமாகவே பெண்களுக்கு இருக்கிறது.
பெண்கள் இப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள். ஆண்கள் இப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை வெட்டவெளிச்சமாக ஒரு பதிவில் விளக்கிவிட்டீர்கள். இருப்பினும் ஆதி காலத்தில் இருந்து ஆண்கள் பெண்களை கவரத் தான் ஒவ்வொரு ராஜதந்திரத்தையும் கையாளுகிறார்கள். ஆனால் காலத்திற்கேற்ப அந்த தந்திரம் மாறிக் கொண்டுத் தான் வருகிறது.
வடிவேலு சொல்வது போல் இன்னும் பயிற்சித் தேவையோ ? என்று இதைப் படிக்கும் ஆண்களை எண்ண வைத்துவிட்டீர்கள்.
வாழ்க்கையில் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி நமக்கு நண்பன் யார்? எதிரி யார் என்பதில் கவனமாக இருந்தால், ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம். நல்ல பதிவு இந்திரா...
எதிரி! நண்பன்! இருவரையும் சமாளித்து வெற்றி பெறுவது எப்படி?
இந்த பதிவை நேரமிருப்பின் படிக்கவும்
http://tamilraja-thotil.blogspot.com/2011/11/blog-post_18.html
// உன் ப்ரெண்ட்ஷிப் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும்.//

yaarkitta kotukkanum?
/நீங்க என்ன படிச்சிருக்கீங்க? நிச்சயம் post graduate னு நினைக்கிறேன். அருமையான பதிவு. பாராட்டுகிறவங்க கிட்டயும் நீங்க ஜாக்கிரதையா இருக்கிறது நல்லதுங்க. உங்க நன்மைக்காகத்தான் சொல்றேன். சிலர் அட்வைஸ் பண்ற சாக்கிலும் வருவாங்க. உஷாரா இருக்கணும். மத்தவங்களைக் குறை சொல்லிகிட்டே உங்க நம்பிக்கையைப் பெறுவதற்கும் சிலர் முயற்சிப்பாங்க.ஜாக்கிரதை! சாயங்காலம் 5 மணி வாக்கில ஃப்ரீயா இருந்தா ச்சாட்டுக்கு வாங்க. அந்த மாதிரி ஆட்களைப் பத்தி இன்னும் சொல்றேன். சரிங்களா?/

நல்லா அட்வைஸ் பண்ணுறீங்க லதானந்த் சார்!
rajamelaiyur said…
அத்தனையும் சத்தியமான உண்மை
Unknown said…
நாட்டில் ஒவ்வொரு பெண்ணும் படிக்கவேண்டிய பதிவு. நல்ல சமூக சேவை. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.
baleno said…
இதுவும் சில பெண்களுக்கான நல்ல அறிவுரை.
உங்கள் பதிவு ச்சாட் செய்ய தூண்டுகிறது...:)))
//சி.பி.செந்தில்குமார் //

//Dharan //

//suryajeeva //

//இராஜராஜேஸ்வரி //

//Ganesan //


கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க..
//Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

யப்பா... கண்ணை கட்டுதே....

ரொம்ப அனுபவ பட்டு இருக்கீங்க...//அட நீங்கவேற... சும்மா கேள்விஞானமுங்க..
//கணேஷ் said...

சரிதான்... இப்படி விரிவா எழுதி (என்ன மாதிரி) அப்பாவிப் பசங்களுக்குக் கூட கத்தக் குடுத்துடுவீங்க போலருக்கேங்க...//


அப்ப்ப்ப்பாவியா???? யாருப்பா அது???
ஓ நீங்களா கணேஷ்.. வாங்க வாங்க..
//சங்கவி said...

கேள்விகளும் பதிலும் நேரடியாக நடந்தது போலவே உள்ளது....

ஒரு வேளை இது அனுபவ பகிர்வா???//


ஹிஹிஹி அந்த வம்புல இன்னும் சிக்கலங்க...
//தர்ஷன் said...

நன்றி ஃப்யூச்சர்ல யூஸ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்//


அப்ப அடி நிச்சயம் உண்டுனு சொல்லுங்க..
//rufina rajkumar said...

நடு ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் ச்சாட் பண்ணிட்டு குட் நைட் சொல்லுவாங்க.. //
ராத்திரி இரண்டு மணி வரைக்கும் சாட் செய்தா எந்த ஆணுக்கும் தவறாகத்தானே தோணும்? என்னை கன்வின்ஸ் செய்யும் பதில் வந்தாள் கேள்வியை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.//


இதே ஒரு ஆண் ஆணுடன் 2 மணி வரை ச்சாட் செய்தால் தவறாகத்தான் தோன்றுமா??
இருந்தாலும் உங்கள் வாதம் சரிதான். பெண்களின் ச்சாட் பற்றி இன்னொரு பதிவில் சொல்கிறேன் என்று பதிவில் கூறியிருந்தேனே..
//K.s.s.Rajh //

//Ramani //

//குடந்தை அன்புமணி //

//Moorthy //


கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க..
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்ன? சாருவின் "சாட்" வாசித்து விட்டு எழுதியது போல் உள்ளது.
இப்படியுமா? வழிவாங்க!
பெண்களும் ஏன்? இந்த அளவு வளரவிடுகிறார்கள்.
சில பெண்களின் பதிவுகளுக்கு ஆண்கள் போடும் பின்னூட்டமே! எனக்குச் சிரிப்பை
வரவைக்கும்.
அந்த வழிஞ்சோடும், முகமறியா மனிதனின் "வரட்சியை" நினக்கப் பரிதாபமாக
இருக்கும்.
இந்த யுகத்தில் இவர்கள் திருந்தார்கள்.//
நியாயம் தான்.
கருத்துக்கு நன்றிங்க..
//Avargal Unmaigal said...

நல்ல பதிவு. ஆனா இந்த டெக்னிக் எல்லாம் ரொம்ப ஒல்டு. இந்த டெக்னிக் எல்லாம் இன்னும் பெண்கள் விழுகிறாங்கனா அந்த பொண்ணுக எல்லாம் சரியான மொக்கை பொண்ணாதன் இருக்கனும். இப்ப ஆண்கள் எல்லாம் புது டெக்னிக்தான் யூஸ் பண்ணுகிறார்கள் அதை நீங்க ரிசர்ஸ் பண்ணி போடுரதுக்குள்ள அவங்க அடுத்த லெலவல் போயிடுவாங்க.

எந்த ஆண்கள்கிட்ட பழகினாலும் பெண்கள் தன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டு நெருப்பு போல இருந்தால் எந்த வித கொம்பனாலும் ஒன்றும் பண்ண முடியாது. பெண்கள் கொஞ்சம் சபலத்திற்கு இடம் கொடுத்தாலும் அதற்கான விலை கொடுக்க ரெடியாக இருக்க வேண்டும்.

உங்களின் இந்த பதிவு அப்பிராணியாக இருக்கும் சில பெண்களுக்கு மிக உதவியாக இருக்கும். இதனால் சில பெண்களாவது ஏமாறாமல் இருந்தால் உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். கவிதையாக எழுதி வெளியிடுவதற்கு பதிலாக தொடர்ந்து இது மாதியான பயனுள்ள செய்தியை பெண்கள் வெளியிட வேண்டும்//


பழைய டெக்னிக்கா??? ஆனாலும் அதை பெரும்பாலும் இன்னும் பயன்படுத்துகிறார்களே.. மேலும் இருதரப்பினரிடத்திலும் தவறுள்ளதை ஏற்றுக்கொள்ளலாம்.

கருத்துக்கு நன்றிங்க.
//cool //

//ராஜா MVS //

//Rathnavel //

//துரைடேனியல் //

//ஷர்புதீன் //

//கே. ஆர்.விஜயன் //


கருத்துக்கம் வருகைக்கும் நன்றிங்க..
//நவன் said...

ரொம்ப தாங்க்ஸ! நீங்க கூட ரொம்ப அழகா பதிவு எழுதுறீங்க. உங்களை மாதிரி சமூக அக்கறையோட ஒரு பொண்ணை பார்த்ததே இல்லை. அப்புறம் ப்ரீயா இருக்கும்போது சாட் ஐடி கொடுங்க!//


அட... என்கிட்டயேவா??? பிச்சுப்புடுவேன் பிச்சு...
//sakthi //

//J.P Josephine Baba //


நன்றிங்க..
//லதானந்த் said...

நீங்க என்ன படிச்சிருக்கீங்க? நிச்சயம் post graduate னு நினைக்கிறேன். அருமையான பதிவு. பாராட்டுகிறவங்க கிட்டயும் நீங்க ஜாக்கிரதையா இருக்கிறது நல்லதுங்க. உங்க நன்மைக்காகத்தான் சொல்றேன். சிலர் அட்வைஸ் பண்ற சாக்கிலும் வருவாங்க. உஷாரா இருக்கணும். மத்தவங்களைக் குறை சொல்லிகிட்டே உங்க நம்பிக்கையைப் பெறுவதற்கும் சிலர் முயற்சிப்பாங்க.ஜாக்கிரதை! சாயங்காலம் 5 மணி வாக்கில ஃப்ரீயா இருந்தா ச்சாட்டுக்கு வாங்க. அந்த மாதிரி ஆட்களைப் பத்தி இன்னும் சொல்றேன். சரிங்களா?//


ஹிஹிஹி...
சார்.. போங்க சார்...
சொந்த காசுல சூன்யம் வச்சுக்காதீங்க..
(வால்பையன் சொன்னது தான்..)
//ஜீ... said...

இதைத்தானா பயபுள்ளைங்க யூஸ் பண்றாங்களா? எவனும் சொன்னதில்ல! நீங்க சொல்லிட்டீங்க! :-)

ஆனா, இதை வாசிக்கும்போதே எல்லாருக்கும் புரியுதே..இது நிச்சயமா ஒரு பெண்ணை விழவைப்பதற்கான தூண்டில்னு! ஆனா இதையெல்லாம் ஒரு பெண்கள் நம்புறாங்கன்னா ரெண்டே ரெண்டு முடிவுதான்!
1) அவ்வளவு முட்டாள்களா யோசிக்கத் தெரியாதவர்களா இருக்கணும்!
2) அதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள்! - அப்புறம் ஏதாவது பிரச்சனைன்னு ஐயோ எனக்கு ஒண்ணுமே தெரியாது, அப்பாவி, என்னை ஏமாத்திட்டான்னு புலம்ப வேண்டியது! - அதுக்கு ஆறுதல் சொல்ற போர்வைல இன்னொரு குரூப் கிளம்பிடும் தூண்டில் போட!

என்னமோ போங்கப்பா!

ஆனா ஒண்ணு! உலகம் தெரியாத தமிழ்ப் பொண்ணுங்களுக்காக இதை நீங்க பகிர்ந்திருக்கீங்க வாழ்த்துக்கள்!//


அறிவுரைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க..

இதெல்லாம் பழைய டெக்னிக்காம்ல.. புது டெக்னிக் கிடைச்சதும் இன்னொரு பதிவு போடணும்போல... ம்ம்ம்ம்.
//☀நான் ஆதவன்☀ said...

சூப்பரான பதிவு! :)

சான்ஸே இல்ல (உடனே இதை 21 பாயிண்டா சேர்க்கப்டாது சொல்லிட்டேன்)//


ச்சே.. ச்சே...
நீங்க ரொம்ம்ம்ப நல்லவராம்ல..
//வால்பையன் said...

உனக்குப் பிடிக்கலேனா யூரின் கூட போக மாட்டேன்..//


lol.. is it true?//

அட... அந்த அளவுக்கு உண்மையா இருக்காங்களாம்...


//i am in cafe, no tamil font, sorry//

ஓகே.. ஓகே..


//உன் ப்ரெண்ட்ஷிப் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும்.//

yaarkitta kotukkanum?//


அத அவங்களத்தான் கேக்கணும்..
//Tamilraja k //


கருத்துக்கு நன்றிங்க..

//இன்னும் பயிற்சித் தேவையோ ? //

அப்படித்தான் போல...
//அருணையடி //

//"என் ராஜபாட்டை"- ராஜா //

//வெண் புரவி //

//baleno //


கருத்துக்கு நன்றிங்க..
//நாஞ்சில் பிரதாப் said...

உங்கள் பதிவு ச்சாட் செய்ய தூண்டுகிறது...:)))//


யார்கூட“னு சொல்லவேயில்லையே??? எப்படியோ நல்லாயிருந்தா சரி...
ஹா.. ஹா.. உங்கள் பதிவு ரசிக்கும் படி இருந்தது.
Anonymous said…
paravaliye idea ellam tharinga... Edhu eppadiyo.... Ungalala enakku oru girl friend kedachutta...... Aana romba nalla post... Appurom ennoda puthandu vaalthukkal...
ஆமினா said…
எப்பவும் கொஞ்சூண்டு சந்தேகக்கண்ணோட இருந்தா பல பிரச்சனை நடக்காம இருக்கும்னு நெனைக்கிறேன். முட்டாள்தனமா நம்புறது தான் பல பிரச்சனைகளுக்கு முதல்படி இல்லையா :-)


சிலரின் பேச்சிலேயே இவர்கள் கடலை போடுறாங்களா? இல்லை உண்மையிலேயே நட்பு பாராட்டுறாங்களான்னு கண்டுபிடிக்கலாம்.

பெண்கள் ஜாக்ரதையா இருக்க இது போன்ற பதிவுகள் அடிக்கடி எழுதப்பட்டு விழிப்புணர்வும் எச்சரிக்கையும் ஏற்படுத்த வேண்டும்.

நகைச்சுவையா சொல்லியிருக்குறது சூப்பர்
FunScribbler said…
hahahah i love no 15!! awesome post!! :)))
தவமணி said…
//https://www.facebook.com/thavamani.ramasamy/posts/252180851553434?ref=notif&notif_t=like//
இதையும் கொஞ்சம் பாருங்க...
Actually ithu ponnungala ushaar paduthavaa illa ushaar panra pasangala Ushaar paduthava?

Anyhow nalla pathivu.
Hello Val. Romba naal aachu epdi irukkeenga

Navas (Manavilaasam)
நவாஸுதீன் நான் நலம். நீங்க நலமா?
நவாஸுதீன் நான் நலம். நீங்க நலமா?
Praveen said…
Social Networking'la Imbuttu thooram develop pannalaama? Ithula onnu kooda yenakku theriyalaye..

Yenna pandrathu, soothu vaathu theriyamaley valanthuputten...
ம்ம்ம்..எப்படியோ...ஒரு பதிவ தேத்திட்டீங்க...ஆனா ஒண்னு..நீங்க ரொம்ப பாதிக்கபட்டு இருக்கீங்க அப்படின்னு மட்டும் நல்லா தெரியுது...
கடைசியில் ஒரு வார்த்தை சொல்லி எஸ்கேப் ஆகிட்டீங்க..பெண்கள் பத்தி அடுத்த பதிவு அப்ப்டின்னு...
அந்த பதிவு போட்டீங்களா இல்லையா..?
தணா said…
ரொம்ப அனுபவப்(அடி) பட்டிருப்பிங்க என்பது பதிவிலே தெரியுது.

இந்த பதிவு போட்டு என்னை போண்ற நல்லவர்களின் சாபத்துக்கு உள்ளாகிட்டிங்க. இந்த பாவம் உங்களை சும்மா விடாது. :P

குறிப்பு :- இந்த பதிவை நான் சுட்டுவன் இந்திரா....

இப்படிக்கு
NewThana@FaceBook.com

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..