ஷ்ஷ்ஷ்ப்பா..


வாழ்நாள் சாதனையாக
வித்தையேதும் செய்யத்தேவையில்லை.
குறைந்தபட்சம்..
அவசரமாய் லிப்ட் கேட்பவர்களை வண்டியில் ஏற்றுங்கள்.
வாசல் நின்று தாகமாய் இருக்கிறதென்பவர்களுக்கு தண்ணீர் கொடுங்கள்.
வங்கியில் பேனா இல்லையென முழிப்பவர்களை முறைக்காது கொடுத்துதவுங்கள்.
நிறுத்தத்திலிருக்கும் படிப்பறிவில்லாதவர்களை அவர்களுக்கான பேருந்தில் ஏற்றிவிடுங்கள்.
புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
மழையில் ஒருமுறையேனும் நனையுங்கள்.
பொருள் தானமில்லையெனினும் உறுப்புதானமாவது உணருங்கள்.
(இவைபோன்ற) அறிவுரை வழங்க மாட்டேனென உறுதிகொள்ளுங்கள்.
அதுவே போதும்.
.

.

Comments

ஹா... ஹா... இவையெல்லாம் செய்யாவிட்டால் அவர்கள் மனிதர்களா...?
தமிழ்மணம் (+1) இணைத்து விட்டேன்... நன்றி...
பறக்க வாருங்கள் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html
ஷ்ஷ்ஷ்ப்பா.... முடியலே...
Viya Pathy said…
"அறிவுரை வழங்க மாட்டேனென உறுதிகொள்ளுங்கள்.
அதுவே போதும்."
இதுதான் டாப் சூப்பர் அறிவுரை
s suresh said…
சின்ன சின்ன உதவிகள் செய்யாவிட்டால் அவன் மனிதனே இல்லை! அருமையான அறிவுரைகள்!
மச்சி இத எங்கியோ படிச்ச மச்சி....