ஏதுமில்லா ஏதோவொன்று..!


அவனுக்காக இதை எழுதுவேனென
நிச்சயம் அவன் அறிந்திருக்க மாட்டான்..!
ஒருவேளை தெரிந்திருக்கக்கூடும்
இதை எழுதிச்சென்றவள் நானென்பது..!
ஒவ்வொரு வார்த்தைக்குமான இடைவெளிகள்
உணர்த்திப்போகிறது எனக்கும் அவனுக்குமான
ஏதோ ஒரு உணர்த்துதலை..!
எதுவெனப் புரியாதெனினும்
ஏதோவொன்று இருந்துதான் தொலைக்கிறது..!
எல்லாமும் நிறைந்திருக்கின்றன
ஏதுமில்லா வெற்றுக் காகிதங்களில்..!
ஒருவேளை அவனுக்குப் புரியக்கூடும்..
எழுதி நிரப்பவோ, எழுதாமல் நிரம்பவோ
ஏதோ ஒன்று இருக்கக்கூடுமென..!

.
.

Comments

Viya Pathy said…
"எல்லாமும் நிறைந்திருக்கின்றன
ஏதுமில்லா வெற்றுக் காகிதங்களில்..!" அருமையான வார்த்தைகளில் அழகிய சிந்தனை.
பொருத்தமான தலைப்பு ஏதுமில்லா ஏதோவொன்று'
நாம தான் அடுத்தவங்க பகிர்வை பார்கிறதே இல்லே... இருந்தாலும்....

அன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html
s suresh said…
சிறப்பான படைப்பு! நன்றி!
s suresh said…
சிறப்பான படைப்பு! நன்றி!
இளமதி said…
வணக்கம்!..

இன்றைய வலைச்சர அறிமுகத்தில் உங்களைக் கண்டு வந்தேன்.

அருமையான கவிதை. உணர்த்திய பொருளோ மிகச் சிறப்பு!

வாழ்த்துக்கள்!

தொடர்கிறேன்!..
Imran Khan said…
மிக அருமை..!!
சொல்லாமல்விட்ட வார்த்தைகளுக்கு வரையறை ஏதும் கிடையாது..
புரிந்தவர்களுக்கு அன்பின் உச்சம் அதுதான்..
Imran Khan said…
மிக அருமை..!!
சொல்லாமல்விட்ட வார்த்தைகளுக்கு வரையறை ஏதும் கிடையாது..
புரிந்தவர்களுக்கு அன்பின் உச்சம் அதுதான்..