சில வித்யாசங்கள்..

நட்பு – காதல்

(பாட்டி சுட்ட வடைய காக்கா தூக்கிட்டுப்போன கதையில வருமே..)

காதல் – பாட்டி சுட்ட வடை மாதிரி. யாராவது தூக்கிட்டுப் போய்டுவாங்க.

நட்பு – வடை சுட்ட பாட்டி மாதிரி. யாரும் தூக்கிட்டுப் போக மாட்டாங்க.

****

நண்பன் – உயிர் நண்பன்

(உங்களுக்கு உடம்புக்கு முடியாம மருத்துவமனையில் இருக்கும்போது)

நண்பன் – உடம்பு எப்டி டா இருக்கு? மருந்தெல்லாம் கரெக்டா சாப்டுறியா?

உயிர் நண்பன் – டேய் மச்சி.. நர்ஸ் எப்டிடா?

****

தோழி – மனைவி

தோழியிடம் – என் தோழிகளிலேயே நீ தான் என் பெஸ்ட்“னு சொல்ல்லாம்

மனைவியிடம் – என் மனைவிகளிலேயே...

(அடுத்த வார்த்தை பேசுறதுக்கு நீங்க உயிரோட இருக்கணுமே..)

****

லவ் மேரேஜ் – அரேஞ்டு மேரேஜ்

லவ் மேரேஜ் – உன்ன நம்பி வந்தேன் பாரு.. என்ன சொல்லனும்“னு புலம்பலாம்

அரேஞ்டு மேரேஜ் – உன்ன என் தலையில கட்டிவச்சிட்டாங்களே“னு புலம்பலாம்

(ஆக புலம்பல் நிச்சயம்)

****

பதிவர் – பிரபல பதிவர்

பதிவர் – பதிவு எழுதுறாரோ இல்லையோ.. அடுத்தவங்க பதிவுகள படிச்சிட்டு உண்மையா பின்னூட்டம் போட்றவர்

பிரபல பதிவர் – கண்டெதெல்லாம் பதிவுங்குற பேர்ல எழுதிட்டு, மறந்து கூட அடுத்தவங்க பதிவுகள பாராட்டக் கூடாதுங்குற கொள்கையோட இருக்குறவர். ஆனா பதிவர் சண்டையினா மட்டும் வரிஞ்சுகட்டிகிட்டு களமிறங்குபவர்.

(நீங்க பதிவரா இல்ல பிரபல பதிவரா – இப்ப என்ன பண்ணுவீங்க? இப்ப என்ன பண்ணுவீங்க?)

***

Comments

அனைத்து வித்தியாசங்களும் கலக்கல்...

தோழி, மனைவி, பதிவர், பிரபல பதிவர் ரொம்ப ரசித்தேன்...
பிரபலம் ஆகாத பிரபல பதிவர்
Balaji saravana said…
//பதிவர் – பிரபல பதிவர்//

ரைட்டு.. யார் யாரெல்லாம் பிரபல பதிவர்னு தெரிஞ்சுடும்.. ஹி ஹி.. :)
R.Gopi said…
பதிவர்....பிரபல பதிவர்....

ஓகே...ஓகே..டபுள் ஓகே. தெரிஞ்சுடுச்சி

இன்னும் நிறைய பேர் இருக்க்காங்க... வரட்டும்..

// தோழி – மனைவி

தோழியிடம் – என் தோழிகளிலேயே நீ தான் என் பெஸ்ட்“னு சொல்ல்லாம்

மனைவியிடம் – என் மனைவிகளிலேயே...

(அடுத்த வார்த்தை பேசுறதுக்கு நீங்க உயிரோட இருக்கணுமே..)

****

லவ் மேரேஜ் – அரேஞ்டு மேரேஜ்

லவ் மேரேஜ் – உன்ன நம்பி வந்தேன் பாரு.. என்ன சொல்லனும்“னு புலம்பலாம்

அரேஞ்டு மேரேஜ் – உன்ன என் தலையில கட்டிவச்சிட்டாங்களே“னு புலம்பலாம்

(ஆக புலம்பல் நிச்சயம்)//

ரசித்தேன்... கலக்கல்....
ஹேய்.. பர்த்துக்கோங்க.. பர்த்துக்கோங்கோ.. நான் பதிவர்தான்.. பதிவர்தான்... பதிவர்தான்..

பிரபல பதிவர் இல்லைங்கோ..............
:))) நான் மிகச்சாதாரண பதிவர்ன்றனால பின்னூட்டத்தோட ஒரு ஓட்டும் போட்டிருக்கேனே :)
:))) நான் மிகச்சாதாரண பதிவர்ன்றனால பின்னூட்டத்தோட ஒரு ஓட்டும் போட்டிருக்கேனே :)
//காதல் – பாட்டி சுட்ட வடை மாதிரி. யாராவது தூக்கிட்டுப் போய்டுவாங்க//

காதலை தூக்கிட்டு போவாங்களா, காதலியை தூக்கிட்டு போவாங்களா, பயமுறுத்தாமா ஒழுங்கா சொல்லுங்க!
//தோழி – மனைவி

தோழியிடம் – என் தோழிகளிலேயே நீ தான் என் பெஸ்ட்“னு சொல்ல்லாம்
மனைவியிடம் – என் மனைவிகளிலேயே..//

தசரதனுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு!

(பெருமூச்சு விட்டு கொள்கிறேன்)
//பிரபல பதிவர் – கண்டெதெல்லாம் பதிவுங்குற பேர்ல எழுதிட்டு, மறந்து கூட அடுத்தவங்க பதிவுகள பாராட்டக் கூடாதுங்குற கொள்கையோட இருக்குறவர். ஆனா பதிவர் சண்டையினா மட்டும் வரிஞ்சுகட்டிகிட்டு களமிறங்குபவர்//

சூப்பரா எழுதியிருக்கிங்க!
(அய்யயோ பாராட்டிட்டேன்னே, அப்ப நான் பிரபல பதிவர் இல்லையா)
//

நண்பன் – உயிர் நண்பன்

(உங்களுக்கு உடம்புக்கு முடியாம மருத்துவமனையில் இருக்கும்போது)

நண்பன் – உடம்பு எப்டி டா இருக்கு? மருந்தெல்லாம் கரெக்டா சாப்டுறியா?
உயிர் நண்பன் – டேய் மச்சி.. நர்ஸ் எப்டிடா?//

ஹாஸ்பிடல் வாடகை எவ்ளோன்னு கேட்டா பிரபல பதிவரா?
//

பதிவர் – பதிவு எழுதுறாரோ இல்லையோ.. அடுத்தவங்க பதிவுகள படிச்சிட்டு உண்மையா பின்னூட்டம் போட்றவர்

பிரபல பதிவர் – கண்டெதெல்லாம் பதிவுங்குற பேர்ல எழுதிட்டு, மறந்து கூட அடுத்தவங்க பதிவுகள பாராட்டக் கூடாதுங்குற கொள்கையோட இருக்குறவர். ஆனா பதிவர் சண்டையினா மட்டும் வரிஞ்சுகட்டிகிட்டு களமிறங்குபவர்.
(நீங்க பதிவரா இல்ல பிரபல பதிவரா – இப்ப என்ன பண்ணுவீங்க? இப்ப என்ன பண்ணுவீங்க?)//

நான் மொக்கை பதிவருங்க. இப்ப என்ன பண்ணுவீங்க? இப்ப என்ன பண்ணுவீங்க?
விஜய் said…
உயிர் நண்பன் டாப்புங்க

வாழ்த்துக்கள்

விஜய்
//பிரபல பதிவர் – கண்டெதெல்லாம் பதிவுங்குற பேர்ல எழுதிட்டு, மறந்து கூட அடுத்தவங்க பதிவுகள பாராட்டக் கூடாதுங்குற கொள்கையோட இருக்குறவர். ஆனா பதிவர் சண்டையினா மட்டும் வரிஞ்சுகட்டிகிட்டு களமிறங்குபவர்.//

இது சூப்பர்!! ஆனா நான் ஒரு பிரபலபதிவர்...
//

TERROR-PANDIYAN(VAS) said...

//பிரபல பதிவர் – கண்டெதெல்லாம் பதிவுங்குற பேர்ல எழுதிட்டு, மறந்து கூட அடுத்தவங்க பதிவுகள பாராட்டக் கூடாதுங்குற கொள்கையோட இருக்குறவர். ஆனா பதிவர் சண்டையினா மட்டும் வரிஞ்சுகட்டிகிட்டு களமிறங்குபவர்.//

இது சூப்பர்!! ஆனா நான் ஒரு பிரபலபதிவர்...///

எலேய் அதுக்கு முதல் பதிவு எழுதணும். நீ கடைசியா பதிவு எழுதின வருஷம் மாதம் என்ன யோசிச்சு சொல்லு?
ஆஆஆஆஆஆஆஆஆ

ஏதோ ஒரு முடிவோடத்தான் இருக்கீக

வர வர எல்லா பதிவும் தாறுமாறா போயிட்ருக்கு...சூப்பரு
Thanglish Payan said…
Superb ah irukku...
Chitra said…
நான் பதிவர் - அப்படின்னு நினைக்கிறேன்.... நீங்கதான் சொல்லணும்... ஹி,ஹி,ஹி,ஹி....

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
பினிஷிங் டச் சூப்பர்... நாங்களும் பதிவர்கள்தான் மேடம்...
logu.. said…
\\(நீங்க பதிவரா இல்ல பிரபல பதிவரா – இப்ப என்ன பண்ணுவீங்க? இப்ப என்ன பண்ணுவீங்க?)\\

Ngoyyala pottu thalliduven.
சாரி கொஞ்சம் லேட்டாயிடுச்சு ...(அசிரிரி - பிரபல பதிவர்கள் எல்லாம் லேட்டாதான் வருவார்கள் )
HariShankar said…
நல்ல நகைச்சுவையான பதிவு.. மிக அருமை ..

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..