Monday, 29 November 2010

பெண் மனசு - தொடர்பதிவு"பெண் மனசு" என்ற தலைப்பில் பெண் மனதை பெண்ணின் குரலில் வெளிப்டுத்தும் பாடல் பற்றி எழுத அழைத்த வெறும்பயலுக்கு நன்றி.தமிழில் பல்வேறு பாடல்கள் இந்த வகையைச் சார்ந்திருப்பினும் யோசித்த மறுநொடியே மனதில் எழுந்த இரண்டு பாடல்களை இங்கு கொணர்ந்துள்ளேன்.


முதல் பாடல் பிடித்ததற்கான காரணம்
: காதலின் வலியையும் அதன் இழப்பையும் அழகாய்ச் சொல்லும் பாடல்.

படம்: ஆயிரத்தில் ஒருவன்

பாடல்:

மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே மிதக்கிறேன்
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே
இது தான் வாழ்க்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே


ஓஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்ததே - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..


உன் கரம் கோற்கையில்
நினைவு ஓர் ஆயிரம்
பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது
ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்ன இழந்தேனென..


இந்தப் பாடலை தரவிறக்கம் செய்யஇரண்டாவது பாடல் பிடித்ததற்கான காரணம்: தொடர் தோல்விகளைச் சந்திக்கும் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை அழகாய்ச் சித்தரிக்கும் பாடல்.

படம்: அவள் அப்படித்தான்

பாடல்:

வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை..
யாரும் தேரில் செல்ல..
ஊரில் தேரும் இல்லை..
எங்கோ.. ஏதோ.. யாரோ..


அழகான மேடை சுகமான ராகம்
இடையினில் வேலிகள் உண்டு
ஆறாத புண்ணும் நூறான முள்ளும்
ஆடிடும் கால்களில் உண்டு
எதிலேயும் பெண்மை சுகம் காணவில்லை..
எரியாத தீபங்கள் பெண்ணா..


ஊரெங்கும் மேடை ராஜாக்கள் வேஷம்
உண்மையில் ராஜாக்கள் இல்லை
ஊரெங்கும் சோலை ரோஜாக்கள் வாசம்
உண்மையில் ரோஜாக்கள் இல்லை
உலகத்தில் பெண்மை உயர்வாகவில்லை
உதவாத புஷ்பங்கள் பெண்கள்..

இந்தப் பாடலை தரவிறக்கம் செய்ய

.

26 comments:

எல் கே said...

good choice

சௌந்தர் said...

மாலை நேரம்
மழை தூறும் காலம்///

எனக்கு பிடித்த பாடல் என் பிரென்ட் இந்த பாடலை தான் எப்போதும் பாடி கொண்டு இருப்பார்'

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்படியெல்லாம் போஸ்ட் போட்டா எப்படி கலாய்க்கிறது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எல்லாமே தமிழ் பாட்டுதான அப்ப சரி

இந்திரா said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்படியெல்லாம் போஸ்ட் போட்டா எப்படி கலாய்க்கிறது?//

ஹா ஹா ஹா
இப்ப என்ன பண்ணுவீங்க..
இப்ப என்ன பண்ணுவீங்க..

R.Gopi said...

அது என்ன தான் சோகமோ?? அந்த சோகம் எப்படி தான் சுகமாகிறதோ?

இந்த 2 பாடல்களையுமே நான் கேட்டதில்லை....

அருண் பிரசாத் said...

நான் இப்போதான் இந்த பாடல்களை கேட்கிறேன்... நல்ல தேர்வு

எஸ்.கே said...

மிக நல்ல பாடல்கள்!

☀நான் ஆதவன்☀ said...

முதல் பாடல் எனக்கு ரொம்பவும் பிடிச்ச பாடல் :)

S Maharajan said...

நல்ல பாடல்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆத்தீ...........!

வெறும்பய said...

இவ்வளவு சீக்கிரமாவா.. ஓகே ஓகே

நல்ல பாடல்கள் சகோதரி.. அழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி ...

Chitra said...

I like the first song too. Good choice. I am yet to hear the second one.

பாரத்... பாரதி... said...

நான் இப்போதான் இந்த பாடல்களை கேட்கிறேன்.
ஆனாலும் கூட ரசிக்க முடிந்தது.
நல்ல தெரிவுகள்

பாரத்... பாரதி... said...

பதிவிலுள்ள படங்கள் அருமை.

பாரத்... பாரதி... said...

//எல்லாமே தமிழ் பாட்டுதான அப்ப சரி//

Arun Prasath said...

அட.... சூப்பர் பா, நானும் கேட்டதில்லை.....

சிவா என்கிற சிவராம்குமார் said...

முதல் பாடல் ஆண்ட்ரியாவின் இழையும் குரலில் ரசித்திருக்கிறேன்! ரெண்டாவது பாட்டு கேட்டதில்லை.... கேட்டுட்டு சொல்றேன்!

Balaji saravana said...

முதல் பாடல் இனிமை.. சில சமயம் ஹம்மிங் .
இரண்டாவது கேட்டதில்ல,கேக்குறேன்.
ஏன் இந்திரா இரண்டு பாடலோட முடிச்சிட்டீங்க?!..
:)

சே.குமார் said...

நல்ல பாடல்களின் பகிர்வு.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

பாடல்கள் அருமை...இன்னும் நிறைய பாடல்களை எல்லா ருசிகளிலும் கலந்து உங்கள் ரசனைகளை ரசிக்க விரும்புகிறேன்... ஏனெனில் பெண் மனதை சொல்லும் பாடல்கள் எத்தனையோ அல்லவா அவற்றை எல்லாம் கேட்கலாம் அல்லவா அதற்குதான்....

சோக கீதங்கள் என்றும் மனதை விட்டு அகலாமல் மனதை மயக்கும் என்பதனை நிருபீத்து காட்டியுள்ளீர்கள்....

பகிர்விறகு நன்றி....

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

ஜீ... said...

nice! :-)

siva said...

present...

காஞ்சி முரளி said...

ஏங்க... கேட்டது... குறைந்தபட்சம் ஐந்து பாடல்னு போட்டிருந்தா சரியாயிருக்கும்...

good selection...

வார்த்தை said...

//இப்படியெல்லாம் போஸ்ட் போட்டா எப்படி கலாய்க்கிறது?//

athaane

Related Posts Plugin for WordPress, Blogger...