அஜீத் ஆன்ட்டி..

பக்கத்து வீட்டு குட்டீஸ்கள் எல்லாம் எங்க வீட்ல விளையாடிகிட்டு இருந்தாங்க. எல்லாருக்குமே அஞ்சுலருந்து ஏழு வயசுக்குள்ள தான் இருக்கும். நான் டிவில “அஞ்சலி“ படம் பாத்துகிட்டு இருந்தேன். அதுல “அஞ்சலி அஞ்சலி“ பாட்டு வந்ததும் விளையாடிகிட்டு இருந்தவங்க எல்லாரும் வந்து பக்கத்துல உக்காந்துகிட்டு என்னோட சேர்ந்து டிவி பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.

பாத்துகிட்டிருந்த குழந்தைகள்ள ஒரு குட்டிப் பையன் (வயசு 6 இருக்கும்), படத்துல அஞ்சலியா நடிச்ச குழந்தைய கைகாட்டி “அது யாரு“னு கேட்டான். “அந்த பொண்ணு பேரு ஷாமிலிடா“னு பதில் சொன்னேன். “ஷாமிலியா? அது யாரு“னு கேட்டான். இப்ப அந்த பொண்ணு நடிக்கிறதில்லங்குறதுனால என்ன பதில் சொல்றதுனு தெரியாம “ஷாலினினு ஒரு ஆன்ட்டி இருக்காங்களே.. அவங்களோட தங்கச்சி பாப்பா“னு சொன்னேன்.“ஷாலினியா? அது யாரு? எந்தப் படத்துல வருவாங்க“னு பதிலுக்கு ஒரு கேள்விய கேட்டான். அவனுக்கு எந்தப் படத்தோட பேர் சொன்னா தெரியும்னு யோசிச்சேன். சின்ன பையனுக்கு படம் பேர் சொன்னா புரிஞ்சுக்கமாட்டான்னு நெனச்சு, “விஜய் அங்கிள் கூட ஒரு படத்துல நடிச்சிருக்காங்கடா.. ஞாபகமிருக்கா?“னு கேட்டு காதலுக்கு மரியாதை படத்துல வற ஒரு பாட்ட பாடிக் காட்டினேன். ம்ஹூம். அவனுக்கு புரிஞ்சமாதிரி தெரியல. “சரி விடு. யாரா இருந்தா என்ன? பேசாம படத்தப் பாரு“னு சொன்னேன். அவன் விட்றதாயில்ல. இப்ப அவனோட சேந்து எல்லா குட்டீசும் கேக்க ஆரம்பிச்சிடுச்சுக.

அதுகளுக்கு ஷாலினினா யாருனு எப்டி சொல்றதுனு தெரில. நானும் என்னென்வோ படம் பேர்லாம் சொன்னேன். அவங்க நடிச்ச பாட்டெல்லாம் பாடிக் காட்டுனேன். “தலைய விரிச்சுப் போட்டுகிட்டு சுடிதார் துப்பட்டாவ கழுத்த ஒட்டிப் போட்டுகிட்டு வருவாங்க“னு எல்லாம் அடையாளம் சொன்னேன். யாருக்குமே தெரியல. விட்டுத் தொலைங்கடான்னாலும் கேக்கல.

வேற வழியில்லாம ஒவ்வொன்னா சேனல் மாத்தி ஷாலினி நடிச்ச பாட்டு வருதான்னு பாத்தேன். 15 நிமிசம் தேடினதுக்கப்புறம் ஒரு பாட்டு சிக்கிச்சு. ஒரு வழியா அத கைகாட்டி “இவங்க தான் ஷாலினி ஆன்ட்டி. இவங்க தங்கச்சிப் பாப்பா தான் ஷாமிலி, போதுமா?“னு அவங்களப் பாத்துக் கேட்டேன்.

நான் காட்டிய பாட்டுல வற ஷாலினிய பாத்துட்டு “ஐயோ.. இது அஜீத் ஆன்ட்டி... இத மொதல்லயே சொல்லலாம்ல?? இது கூட தெரிலயா? மக்கு“னு சொல்லி எல்லா பயலுகளும் என் தலையில நங்னு கொட்டிட்டு ஓடிருச்சுக. (அஜீத் அங்கிளாம், அஜீத்தோட மனைவி ஷாலினி ஆன்ட்டியாம். அதுனால அவங்க பேர் அஜீத் ஆன்ட்டியாம்)

ரொம்பத் தெளிவாதான் இருக்காய்ங்க.. ஹூம்.. எல்லாம் என் நேரம்.

.

Comments

ஹி ஹி ஹி தொப்பி தொப்பி
Balaji saravana said…
//ஐயோ.. இது அஜீத் ஆன்ட்டி... இத மொதல்லயே சொல்லலாம்ல?? இது கூட தெரிலயா? ////
அதே தான்.. இது கூட தெரியலியா? ;)

//ரொம்பத் தெளிவாதான் இருக்காய்ங்க. //
இது கரெக்ட் :)
குட்டிஸ் கூட போட்டி போடதீங்க
//யாருக்குமே தெரியல. விட்டுத் தொலைங்கடான்னாலும் கேக்கல//.

சரியான வாலுங்க...
ரொம்ப தெளிவு....
ஹரிஸ் said…
தலைவி வாழ்க..
(அஜித் தல..ஷாலினி?)
ஒ இந்த பதிவு போடத்தான் நேத்து அசல் போலி அப்டின்னு பதிவு போட்டீங்களா? அசல் அஜித் படம்தான.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒ இந்த பதிவு போடத்தான் நேத்து அசல் போலி அப்டின்னு பதிவு போட்டீங்களா? அசல் அஜித் படம்தான்.//

ஆரம்பிச்சிட்டீங்களா???
//இந்திரா said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒ இந்த பதிவு போடத்தான் நேத்து அசல் போலி அப்டின்னு பதிவு போட்டீங்களா? அசல் அஜித் படம்தான்.//

ஆரம்பிச்சிட்டீங்களா???///

இல்லைங்க. நானே இந்த பதிவுல கும்முறதுக்கு வாய்ப்பில்லைன்னு ரொம்ப கவலையா இருக்கேன்.
logu.. said…
thala..thalathan...

Nobody can't replace him..
குட்டீஸ்ங்க எல்லாம் தெளிவா இருக்காங்க நாம தெளிவா இல்லைனை பன்னு வாங்க வேண்டியது தான்...
// “விஜய் அங்கிள் கூட ஒரு படத்துல நடிச்சிருக்காங்கடா.. ஞாபகமிருக்கா?“//

இப்படி கேட்டதுனால தான் தெரியல! அஜித் அங்கிளோட நடிச்ச படம்னு சொல்லிருந்தா அவங்களுக்கு தெரிச்சிருக்கும்.
Thala' Pathivu Nice..

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_19.html
அன்னு said…
//ரொம்பத் தெளிவாதான் இருக்காய்ங்க.. ஹூம்.. எல்லாம் என் நேரம்.//

ஹெ ஹெ...இந்திராக்கா,
இதுக்குத்தான் ஆழம் தெரியாம காலை விடக்கூடாதுன்றது. ஹ...அவிங்கள்லாம் விக்கிபீடியாவை கதி கலங்க வெக்குறவிங்க!! பாத்து சூதானமா இருங்க :)
:))))))))) குழந்தைங்க பொய் சொல்லாது. அது அஜீத் ஆண்ட்டி தான் :)
//"ஐயோ.. இது அஜீத் ஆன்ட்டி... இத மொதல்லயே சொல்லலாம்ல?? இது கூட தெரிலயா? மக்கு"//

கொழந்தைங்க கிட்டவே பல்பா???
அப்ப அஜித்தோட ஆண்ட்டி!?
நாங்க கூட தல மீது கொண்ட பாசத்தின் காரணமாக ஷாலினியை அண்ணின்னு தான் சொல்லுவோம்...
ஹேமா said…
இப்பல்லாம் பாத்துக் கவனமாத்தான் பேசணும் சின்னக் குட்டிங்ககிட்ட !
VELU.G said…
ஹ ஹ ஹ ஹா

carefull ஆ இருக்கலைன்னா மண்டை வீங்கிடும்ங்கோ
எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சபடம்ன்னு ஒன்னு இருக்கும். என்னோட ஃபேவரைட் மூவி அலைபாயுதே. நான் இதுவரைக்கும் அந்தப்படத்தை 200 தடவைக்கு மேல பார்த்திருக்கேன். தியேட்டர்ல மட்டும் சரியா சொல்லணும்ன்னா 68 தடவை. அந்த அளவுக்கு ஷாலினியோட வெறிபிடிச்ச ரசிகன். என் ரூம்ல மொபைல்ல, புக்ஸ்ல ஷாலினி ஸ்டில் இல்லாம இருக்கவே இருக்காது. 4 வருஷம் என்னோட ரிங்டோனா எவனோ ஒருவன் பாட்டுத்தான் இருந்தது. ஷாலினிக்கு கல்யாணம் ஆன அன்னைக்கு ஃபுல்லா நான் சாப்பிடவே இல்லை. அன்னைல இருந்து நான் அஜீத்படமே பார்க்கிறது இல்லை.. முதல் முதலா நான் எழுதின பதிவே.. "ஷாலினி என்றொரு தேவதை". அப்படிப்பட்ட என்னை ஷாலினியை ஆண்ட்டின்னு சொல்லி அழவெச்சிட்டீங்க.. கண்ணு கலங்குது போங்க. இனிமே நான் உங்க பேச்சு கா.. என்னோட கனவு தேவதையை இப்படி மொக்கை பண்ணிட்டீங்களே..

எங்கே செல்லும் இந்த பாதை...??
R.Gopi said…
அஜீத் ஆண்ட்டியா?

யப்பா... இந்த குட்டீஸோட டெர்ரருக்கு அளவே இல்லையா?

ஹா...ஹா...ஹா... இருந்தாலும், அந்த மழலைகளின் குறும்பை ரசித்தேன்...
R.Gopi said…
அஜீத் ஆண்ட்டியா?

யப்பா... இந்த குட்டீஸோட டெர்ரருக்கு அளவே இல்லையா?

ஹா...ஹா...ஹா... இருந்தாலும், அந்த மழலைகளின் குறும்பை ரசித்தேன்...
guru said…
kutti paiyanuku bright future erukunu sollunga
///“விஜய் அங்கிள் கூட ஒரு படத்துல நடிச்சிருக்காங்கடா.. ஞாபகமிருக்கா?“///

இங்கதான் தப்பு பண்ணியிருக்கீங்க, டாக்டர் விஜய்னு சொல்லியிருக்கனும்!
நம்ப அவங்க பாஷை கத்துக்க வேண்டியது தான். வேற வழியில்லை.

அஜித்துக்கு தெரிஞ்சா எவ்வளவு கோபப்படுவாரோ! ஒரு ஆண்டியை கட்டிக்கிட்டேனேன்னு வருத்தப்படுவாரோ ஒரு வேலை!
vinu said…
santhosamaa sarkkadinga;

school padikkumbothu no kaathal kathirikkaa;

asalaa poliyaa?[ vijaykkum ajithukkum neenga eeanga sandai mooti vudureenga]


pondra miga miga mokkai pathivugalukkuppiragu;


namathu pthivulagaththitkku migavum athyaavachiya thevaiyaana arum perum kandupidippaana "ajith aunty" pathivai pottu pathivulagaiyeaa oru kallakku kalakki irrukkum engal singi[mmmmmmmmm singammukku oppositeuu] indiraaaa vaaazga vaazgaa vaazgaveaaaaaaaaaaa
vinu said…
santhosamaa sarkkadinga;

school padikkumbothu no kaathal kathirikkaa;

asalaa poliyaa?[ vijaykkum ajithukkum neenga eeanga sandai mooti vudureenga]


pondra miga miga mokkai pathivugalukkuppiragu;


namathu pthivulagaththitkku migavum athyaavachiya thevaiyaana arum perum kandupidippaana "ajith aunty" pathivai pottu pathivulagaiyeaa oru kallakku kalakki irrukkum engal singi[mmmmmmmmm singammukku oppositeuu] indiraaaa vaaazga vaazgaa vaazgaveaaaaaaaaaaa
நகைச்சுவை நல்லா வருதுங்க உங்களுக்கு.

தொடருங்கள்.வாழ்த்துக்கள்
//நான் காட்டிய பாட்டுல வற ஷாலினிய பாத்துட்டு “ஐயோ.. இது அஜீத் ஆன்ட்டி... இத மொதல்லயே சொல்லலாம்ல??//

ஹி..ஹி...செம காமெடி
//vinu said...

santhosamaa sarkkadinga;
school padikkumbothu no kaathal kathirikkaa;
asalaa poliyaa?[ vijaykkum ajithukkum neenga eeanga sandai mooti vudureenga]
pondra miga miga mokkai pathivugalukkuppiragu;

namathu pthivulagaththitkku migavum athyaavachiya thevaiyaana arum perum kandupidippaana "ajith aunty" pathivai pottu pathivulagaiyeaa oru kallakku kalakki irrukkum engal singi[mmmmmmmmm singammukku oppositeuu] indiraaaa vaaazga vaazgaa vaazgaveaaaaaaaaaaa//

இது வாழ்த்துற மாதிரி தெரியலயே.. முந்தின பதிவுகளெல்லாம் மொக்கைனு சொல்றீங்க.. அவ்ளோ தான?? ரைட்டு விடுங்க.
//கவிதை காதலன் said...

ஷாலினியை ஆண்ட்டின்னு சொல்லி அழவெச்சிட்டீங்க.. கண்ணு கலங்குது போங்க. இனிமே நான் உங்க பேச்சு கா.. என்னோட கனவு தேவதையை இப்படி மொக்கை பண்ணிட்டீங்களே..
எங்கே செல்லும் இந்த பாதை...??//

அட.. பதிவ நல்லா படிங்க சார். நானா அவங்கள ஆண்டினு சொன்னேன்?? அந்த குட்டீஸ் தான் சொன்னாங்க..
HariShankar said…
குட்டீஸ் குறும்புகள் வால்தனம் அழகோ அழகு

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..