போன் பண்ணி பல்பு குடுக்குறானுக...



பொங்கல் லீவெல்லாம் ஒருவழியா முடிஞ்சு அவசரமா அலுவலகத்துக்கு கிளம்பிகிட்டு இருந்தேன். டிஃபன் பாக்ஸ எடுத்து வச்சுகிட்டு இருக்கும்போது என் பெரியப்பா பையன்கிட்ட இருந்து போன் வந்துச்சு. அவன் கோயமுத்தூர்ல ஒரு தனியார் அலுவலகத்துல வேலை பாக்குறான். கிளம்புற வேலைய பாத்துகிட்டே போன அட்டெண்ட் பண்ணி..

“என்னடா இன்னைக்கு ஆபீஸ் போகலயா? இந்நேரம் போன் பண்றியே“னு கேட்டேன்.

“பொங்கல் லீவுக்கு ஊருக்குப் போயிருந்தேன்ல. இப்ப ட்ரெயின்ல திரும்ப கோயம்புத்தூர் போய்கிட்டிருக்கேன். நீ என்ன பண்ற?னு கேட்டான்.

“கிளம்பிகிட்டு இருக்கேன்டா, ஏன்டா? எதாவது முக்கியமான விசயமா?“னு கேட்டேன்.

“ஏன்? முக்கியமான விசயம்னா தான் போன் பண்ணனுமா? இல்லனா பண்ணக் கூடாதா“னு கிண்டலா கேட்டான்.

“இல்ல.. இந்நேரம் போன் பண்ண மாட்டியே அதான் கேட்டேன். சரி சீக்கிரம் சொல்லுடா.. நா கிளம்பணும். எனக்கு டைம் ஆகுது“னு சொன்னேன்.

“என்னமோ நீ மட்டும் தான் ஆபீஸ் போற மாதிரியும் நாங்கல்லாம் வெட்டியா இருக்க மாதிரியும் பேசுறியே.. ஒரு பத்து நிமிசம் பேசிட்டு கிளம்பு. ஒண்ணும் குடிமுழுகிடாது“னு கோவப்பட்டான்.

அட.. என்னடா இது வம்பா போச்சுனு ““அதுக்கில்லடா.. டைம் ஆச்சு. போன் பேசிகிட்டே கிளம்பினா லேட்டாய்டும், பஸ்ஸ விட்ருவேன். அதுக்கு தான் கேட்டேன். நா வேணும்னா லன்ச்ல கால் பண்ணவா?“னு கேட்டேன்.

அதெல்லாம் வேணாம். சரி சொல்லு.. இன்னைக்கு என்ன சமையல்?“னான்.

எனக்கு கடுப்பாய்டுச்சு. ஏண்டா டேய்.. இத கேக்கவா போன் பண்ணின.. காலங்காத்தால உயிர வாங்காதடா“ன்னேன்.

அப்புறம் பொங்கல்லாம் எப்படி போச்சு??? ஆபீசெல்லாம் எப்டி போகுது?? இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?“னு அவன் பாட்டுக்கு பேசிகிட்டே போனான்.

நாசமாப்போறவன்.. கிளம்புற நேரத்துல போன் பண்ணி கதை பேசுறானேனு எரிச்சலாய்டேன்.

அடேய்.. உனக்குப் பொழுது போகலனா அதுக்கு நான்தானா கெடச்சேன். என்ன தாண்டா சொல்ல வர்ற?“னு கத்தினேன்.

“சரி சரி கோவப்படாத.. என்னோட கேர்ள் ஃப்ரெண்ட், எதுத்த சீட்ல உக்காந்துருக்கா. எங்களுக்குள்ள சின்ன சண்டை. அதுனால பேசமாட்டேனு சொல்லிட்டா“னு சொன்னான்.

“அதுக்கு என்ன என்னடா பண்ண சொல்ற? சொல்றத சீக்கிரமா சொல்லுடா. நேரம் ஆகுது“னு வாட்ச்ச பாத்துகிட்டே டென்சனா பேசினேன்.

அவ கண்முன்னாடி ஒரு பொண்ணுகிட்ட போன்ல பேசி அவளோட பொசசிவ கிளறினேன்னு வச்சுக்க.. யார்கூட பேசினேனு தெரிஞ்சுக்கணும்குற ஆர்வத்துல என்னோட பேசிடுவா. அதுனால தான் அவளுக்கு கேக்குற மாதிரி உன்னோட ஒரு பத்து நிமிசம் பேசினேன். இப்ப போன வச்சதும் அவ என்கிட்ட வந்து பேசிடுவா. சரி சரி நீ கிளம்பு. நா அப்புறம் பேசுறேன். பை“னு சொல்லிட்டு போன கட் பண்ணிட்டான்.

கொய்யாலே.. காலங்காத்தால எனக்கு பல்பு குடுக்குறதுக்குன்னே போன் பண்ணுவீங்களாடா?????

அந்த நாயால பஸ்ஸ விட்டுட்டு ஆபீசுக்கு லேட்டா போய் திட்டு வாங்குனது தான் மிச்சம்.

அவ்வ்வ்வ்வ்...

.

.

Comments

Speed Master said…
தமிழ் அமுதன் 1000 ரூ அபராதம் கட்டுங்க
//கொய்யாலே.. காலங்காத்தால எனக்கு பல்பு குடுக்குறதுக்குன்னே போன் பண்ணுவீங்களாடா?????///



ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.............
வெட்டியா சீன் போட்டதுல நீங்க பலி; அது சரி அவுங்கவுங்க பிரச்சனை தீர்ந்தாபோதும்-னு நினைக்குறாங்க...
sulthanonline said…
நீங்க போட்ட பொசசிவ் என்ற போற்களம் பதிவ படிச்சிட்டு உங்க கிட்டயே phone பண்ணி உங்களுக்கே பல்ப் கொடுக்குறானுங்க என்ன கொடும மேடம் இது..! அவ்வ்வ்
S Maharajan said…
// ஆபீசுக்கு லேட்டா போய் திட்டு வாங்குனது தான் மிச்சம்//

விடுங்க நமக்கு இது வழக்கம் தானே!!!!!!!!!!!
பொங்கலுக்கு வாங்கின பல்பு ரொம்ப பிரகாசமா இருக்கு...
ஆமாம் நான் கூட ஏதோ மெர்குரி பல்பு தான் வாங்கி குடுத்தாங்கன்னு நினைச்சி வந்தேன் வந்தா எனக்கு தான் பல்பு.
என்னமா யோசிக்கிறாங்க பாருங்க.
vinu said…
என்ன பொங்கலு விருந்து ஓவரோ; இம்புட்டு லேட்டா போஸ்ட் வருது


post nalla irrukupaaa; ada superungaaa; ada nijamaalumea superooooooooooooooooooooooo superungaaaa;

ungal eluthunadaiyum kavithayin ethugai monayum migachchirappaaga amainthu ulllathu;


ithepolla addikkadi kavithaigalai pagirungal;

nandri
காதலர்களுக்காக ஆபீஸ் க்கு லேட்டா போன காதல் தெய்வம் இந்திரா வாழ்க
பல்ப் வாங்கியதற்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் நிறய பல்ப் வாங்கி ஷோ கேசில் வைத்து அழகு பார்க்கும் அந்த பொன்னான காலம் வரட்டும். :)
வாழ்த்துக்கள் இன்னும் மென்மேலும் பல பல்புகள் வாங்கி பெருமை சேர்க்க வேண்டும்...ஹிஹி
:)))) உங்க ராசி அப்படி
logu.. said…
\\பொங்கல் லீவெல்லாம் ஒருவழியா முடிஞ்சு அவசரமா அலுவலகத்துக்கு கிளம்பிகிட்டு இருந்தேன். டிஃபன் பாக்ஸ எடுத்து வச்சுகிட்டு இருக்கும்போது\\

Athuku..
Kottitu vetti pechu pesathane officenu kelambi poreenga?
logu.. said…
\\அட.. என்னடா இது வம்பா போச்சுனு ““அதுக்கில்லடா.. டைம் ஆச்சு. போன் பேசிகிட்டே கிளம்பினா லேட்டாய்டும், பஸ்ஸ விட்ருவேன்\\

unmaiya sollunga..

oru nalavathu correct timeku busuku poneengala?
பல்பு வாங்குற சுகமே தனி தான்...
logu.. said…
\\“என்னமோ நீ மட்டும் தான் ஆபீஸ் போற மாதிரியும் நாங்கல்லாம் வெட்டியா இருக்க மாதிரியும் பேசுறியே.. ஒரு பத்து நிமிசம் பேசிட்டு கிளம்பு. ஒண்ணும் குடிமுழுகிடாது“னு கோவப்பட்டான்\\

Correct.. good boy..
பரவாயில்ல... இந்திரா...!
நீங்க...
"ரொம்ப நல்லவங்க"....!

பல்பு வாங்குறீங்கப் பாருங்க... அதுக்கு சொன்னே...!
அந்த போன்ல உங்க கூட பேசிக்கிட்டு இருந்தவர் வினு இல்லையே... ஹி..ஹி..
R.Gopi said…
ஆஃபீஸ் போய், திட்டு வாங்கலேன்னா தானே ஆச்சரியம்... விடுங்க இந்திரா..

//கொய்யாலே.. காலங்காத்தால எனக்கு பல்பு குடுக்குறதுக்குன்னே போன் பண்ணுவீங்களாடா?????

அந்த நாயால பஸ்ஸ விட்டுட்டு ஆபீசுக்கு லேட்டா போய் திட்டு வாங்குனது தான் மிச்சம்//

யப்பா.... நெம்ப சூடுபா....
நீங்க ஆபீஸ்க்கு போனா என்ன..?
போயி திட்டு வாங்கினா எங்களுக்கு என்ன..?

அந்த பொண்ணு அவர்கிட்ட
பேசிச்சா..? இல்லையா..? அதை சொல்லுங்க..
நீங்க எழுத சொன்னா தொடர்பதிவு

http://koomaali.blogspot.com/2011/01/blog-post_19.html
//தமிழ் அமுதன் said...

;)//


எடுங்க 1000 ரூபாய்
//ராம்ஜி_யாஹூ said...

ok//


எதுக்கு ஓகே??? நா பல்பு வாங்கினதுக்கா?
//Speed Master said...

தமிழ் அமுதன் 1000 ரூ அபராதம் கட்டுங்க//


உங்க கடமையுணர்ச்சிய நா பாராட்ரேங்க..
//பாரத்... பாரதி... said...

வெட்டியா சீன் போட்டதுல நீங்க பலி; அது சரி அவுங்கவுங்க பிரச்சனை தீர்ந்தாபோதும்-னு நினைக்குறாங்க...//


சரியா சொன்னீங்க..
//MANO நாஞ்சில் மனோ said...

//கொய்யாலே.. காலங்காத்தால எனக்கு பல்பு குடுக்குறதுக்குன்னே போன் பண்ணுவீங்களாடா?????///



ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.............//


சிரிங்க சிரிங்க.. நல்லா சிரிங்க..
//S Maharajan said...

// ஆபீசுக்கு லேட்டா போய் திட்டு வாங்குனது தான் மிச்சம்//

விடுங்க நமக்கு இது வழக்கம் தானே!!!!!!!!!!!//


உங்களையும் சேர்த்து தானே சொல்றீங்க..?? அப்ப சரி.
//sulthanonline said...

நீங்க போட்ட பொசசிவ் என்ற போற்களம் பதிவ படிச்சிட்டு உங்க கிட்டயே phone பண்ணி உங்களுக்கே பல்ப் கொடுக்குறானுங்க என்ன கொடும மேடம் இது..! அவ்வ்வ்//


அவ்வ்வ்வ்வ்வ்..
//சே.குமார் said...

என்னமா யோசிக்கிறாங்க பாருங்க.//


ஆமாங்க.. பயபுள்ளைங்க இப்டிதான் பண்றாய்ங்க.
//தஞ்சை.வாசன் said...

பொங்கலுக்கு வாங்கின பல்பு ரொம்ப பிரகாசமா இருக்கு...//


அப்படினா இது “விசேஷ“ பல்பா???
//அமுதா கிருஷ்ணா said...

சரிதான்.//


நீங்க சொன்னா சரிதாங்க.
//vinu said...

என்ன பொங்கலு விருந்து ஓவரோ; இம்புட்டு லேட்டா போஸ்ட் வருது


post nalla irrukupaaa; ada superungaaa; ada nijamaalumea superooooooooooooooooooooooo superungaaaa;

ungal eluthunadaiyum kavithayin ethugai monayum migachchirappaaga amainthu ulllathu;


ithepolla addikkadi kavithaigalai pagirungal;

nandri//


நீங்க மறுபடியும் பஸ் நம்பர் மாறி ஏறிட்டீங்க. முதல்ல ஒரு நல்ல கண் டாக்டர் கிட்ட செக் பண்ணுங்க.
//கக்கு - மாணிக்கம் said...

பல்ப் வாங்கியதற்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் நிறய பல்ப் வாங்கி ஷோ கேசில் வைத்து அழகு பார்க்கும் அந்த பொன்னான காலம் வரட்டும். :)//


இது வேறயா???? நாங்க பல்பு வாங்கினாலும் பளிச்சுனு வாங்குவோம்ல.. வாழ்த்துனதுக்கு நன்றிங்க.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

காதலர்களுக்காக ஆபீஸ் க்கு லேட்டா போன காதல் தெய்வம் இந்திரா வாழ்க//


ரொம்ப புகழாதீங்க ரமேஷ்.. அநேகமா அடுத்த பல்பு உங்களுக்குதான்னு நெனைக்கிறேன்.
//☀நான் ஆதவன்☀ said...

:)))) உங்க ராசி அப்படி//


என்னோட ராசி நல்ல ராசி..
அது எப்போதும் பல்பு வாங்கும் ராசி..
//மாணவன் said...

வாழ்த்துக்கள் இன்னும் மென்மேலும் பல பல்புகள் வாங்கி பெருமை சேர்க்க வேண்டும்...ஹிஹி//


ஹிஹி.. நன்றிங்க.
//சங்கவி said...

பல்பு வாங்குற சுகமே தனி தான்...//


அனுபவம் பேசுதோ????
//logu.. said...

Athuku..
Kottitu vetti pechu pesathane officenu kelambi poreenga?

Correct.. good boy..

unmaiya sollunga..

oru nalavathu correct timeku busuku poneengala?//


ஷ்ஷ்ஷ்.. கம்பெனி சீக்ரெட்ட எல்லாம் வெளிய சொல்லக் கூடாது லோகு.
//காஞ்சி முரளி said...

பரவாயில்ல... இந்திரா...!
நீங்க...
"ரொம்ப நல்லவங்க"....!

பல்பு வாங்குறீங்கப் பாருங்க... அதுக்கு சொன்னே...!//


நன்றி முரளி.. ரொம்ப பாராட்டாதீங்க.
//கவிதை காதலன் said...

அந்த போன்ல உங்க கூட பேசிக்கிட்டு இருந்தவர் வினு இல்லையே... ஹி..ஹி..//


இல்லனு வினு சொல்ல சொன்னாருங்க.
அதுனால அவர் இல்லனு நா சொல்லிக்கிறேங்க.
//R.Gopi said...

ஆஃபீஸ் போய், திட்டு வாங்கலேன்னா தானே ஆச்சரியம்... விடுங்க இந்திரா..//


அதானே.. நமக்கு இதெல்லாம் சகஜம் இல்லையா???


//கொய்யாலே.. காலங்காத்தால எனக்கு பல்பு குடுக்குறதுக்குன்னே போன் பண்ணுவீங்களாடா?????

அந்த நாயால பஸ்ஸ விட்டுட்டு ஆபீசுக்கு லேட்டா போய் திட்டு வாங்குனது தான் மிச்சம்//

யப்பா.... நெம்ப சூடுபா....//


ஹிஹிஹி
//கோமாளி செல்வா said...

நீங்க எழுத சொன்னா தொடர்பதிவு

http://koomaali.blogspot.com/2011/01/blog-post_19.html//


இதோ வரேன் செல்வா..
//வெங்கட் said...

நீங்க ஆபீஸ்க்கு போனா என்ன..?
போயி திட்டு வாங்கினா எங்களுக்கு என்ன..?

அந்த பொண்ணு அவர்கிட்ட
பேசிச்சா..? இல்லையா..? அதை சொல்லுங்க..//


உங்க கவலை உங்களுக்கு.. என்ன ஒரு நல்லெண்ணம்..
vinu said…
me 50thiuuuuuuuuuuuuuu
vinu said…
உங்க கவலை உங்களுக்கு.. என்ன ஒரு நல்லெண்ணம்..


inht aescapu velaiyellam venaam olungaa namma venkat kelvikku bathil
Madurai pandi said…
அடடா!! நல்ல இருக்கே!!!

--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
அட விடுங்க காதலுக்கு உதவிய புண்ணியம் ... உங்களுக்கு தானே கிடைக்க போவுது....
Chitra said…
என்ன கொடுமை, இது? ha,ha,ha...
அட என்னமோ புதுசா லேட்டாப் போற மாதிரியும் , புதுசா பல்ப் வாங்கற மாதிரியும் ... என்னப் பழக்கம் இது ? சின்னப் புள்ளத் தனமா ??
///இந்திரா said...

//தமிழ் அமுதன் said...

;)//


எடுங்க 1000 ரூபாய்///

இந்த ரூல்ஸ் எனக்கு புரியல..! ;;))
Lakshmi said…
பல்ப் எல்லாம் பிரகாசமா எறியுதா?
தங்களுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு நான் மிகவும் வருத்தபடுகிறேன்.. உங்களுக்கு பல்ப் கொடுத்த அவருக்கு எனது கண்டனங்களை தெரிவித்துவிடுங்கள்..

இருந்தாலும் நம்மாள முடியாதத இன்னொருத்தர் பண்ணும்போது மனசுக்கு கொஞ்சம் சந்தோசமாதான் இருக்கு.. கண்டனங்களை அடுத்து எனது வாழ்த்துகளையும் இப்பணி தொடரவேண்டும் என வேண்டியதாக சொல்லிடுங்கள்..
ஹ.ஹ..ஹ...

குழப்புறாங்களே..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.
பாவம் அங்க ஒரு பய கேர்ள் பிரண்டோட சண்டை போட்டு சோகமா இருக்கான் ....உங்களுக்கு ஆபீசு முக்கியமா போச்சா ???? (எச்சூச்மி ......உங்க போன் நம்பர் பிளீஸ் .......... ரெண்டு நாலா என் கேர்ள் பிரண்டும் கொஞ்சம் மக்கர் பண்ணிக்கிட்டு இருக்கா )
//தமிழ் அமுதன் said...
///இந்திரா said...

//தமிழ் அமுதன் said...

;)//


எடுங்க 1000 ரூபாய்///

இந்த ரூல்ஸ் எனக்கு புரியல..! ;;))

//


சிரிச்சா ஆயிரம் ரூபாய் அபராதம் போடரது இந்திரா மட்டுமாத்தான் இருக்கும். ஆனா பிளாக்க படிச்சுட்டு சிரிக்காம பொறதும் கஷ்டம் தான். என்ன பண்றது .. இது கலைஞர் கொடுக்கற இலவச டிவியில கலைஞர் சேனல் பாக்க கேபிளுக்கு மாசாமாசம் 100 ரூபாய் அபராதமா கட்டற சனங்க மாதிரித்தான்...
//vinu said...

உங்க கவலை உங்களுக்கு.. என்ன ஒரு நல்லெண்ணம்..


inht aescapu velaiyellam venaam olungaa namma venkat kelvikku bathil//

எப்டியும் மறுபடியும் எனக்கு பல்பு குடுக்க போன் பண்ணுவான்ல.. அப்ப கேட்டு சொல்றேங்க.


//me 50thiuuuuuuuuuuuuuu//

அப்டியே 100 வரைக்கும் தேத்திக் கொண்டுபோங்க வினு..
//சி. கருணாகரசு said...

அட விடுங்க காதலுக்கு உதவிய புண்ணியம் ... உங்களுக்கு தானே கிடைக்க போவுது....//


அதுனால தாங்க அவன மன்னிச்சு விட்டுட்டேன்.
//Madurai pandi said...

அடடா!! நல்ல இருக்கே!!!
//


எது??? நா பல்பு வாங்குனாதா???
//எல் கே said...

அட என்னமோ புதுசா லேட்டாப் போற மாதிரியும் , புதுசா பல்ப் வாங்கற மாதிரியும் ... என்னப் பழக்கம் இது ? சின்னப் புள்ளத் தனமா ??//


ஹிஹிஹி
//Chitra said...

என்ன கொடுமை, இது? ha,ha,ha...//


அடுத்தவங்க பல்பு வாங்குனா என்னா சந்தோசம்.. ம்ம்
//Lakshmi said...

பல்ப் எல்லாம் பிரகாசமா எறியுதா?//


அதெல்லாம் ஜோரா எறியுதுங்க..
//ம.தி.சுதா said...

ஹ.ஹ..ஹ...

குழப்புறாங்களே..
//


நா பல்பு வாங்குனதுல எந்தக் குழப்பமும் இல்லங்கோ...
//தம்பி கூர்மதியன் said...

தங்களுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு நான் மிகவும் வருத்தபடுகிறேன்.. உங்களுக்கு பல்ப் கொடுத்த அவருக்கு எனது கண்டனங்களை தெரிவித்துவிடுங்கள்..

இருந்தாலும் நம்மாள முடியாதத இன்னொருத்தர் பண்ணும்போது மனசுக்கு கொஞ்சம் சந்தோசமாதான் இருக்கு.. கண்டனங்களை அடுத்து எனது வாழ்த்துகளையும் இப்பணி தொடரவேண்டும் என வேண்டியதாக சொல்லிடுங்கள்..//


என்னா ஒரு வில்லத்தனம்...
//மங்குனி அமைச்சர் said...

பாவம் அங்க ஒரு பய கேர்ள் பிரண்டோட சண்டை போட்டு சோகமா இருக்கான் ....உங்களுக்கு ஆபீசு முக்கியமா போச்சா ????//
(எச்சூச்மி ......உங்க போன் நம்பர் பிளீஸ் .......... ரெண்டு நாலா என் கேர்ள் பிரண்டும் கொஞ்சம் மக்கர் பண்ணிக்கிட்டு இருக்கா )//


அமைச்சரே.. நீங்களுமா????
என்ன கொடும சார் இது???
//வெட்டிப்பேச்சு said...

//தமிழ் அமுதன் said...


எடுங்க 1000 ரூபாய்///

இந்த ரூல்ஸ் எனக்கு புரியல..! ;;))

//


சிரிச்சா ஆயிரம் ரூபாய் அபராதம் போடரது இந்திரா மட்டுமாத்தான் இருக்கும். ஆனா பிளாக்க படிச்சுட்டு சிரிக்காம பொறதும் கஷ்டம் தான். என்ன பண்றது .. இது கலைஞர் கொடுக்கற இலவச டிவியில கலைஞர் சேனல் பாக்க கேபிளுக்கு மாசாமாசம் 100 ரூபாய் அபராதமா கட்டற சனங்க மாதிரித்தான்...//


அட.. உங்கள யாரு சிரிக்க வேணாம்னு சொன்னது???
வெறுமனே சிரிச்சிட்டு கமெண்ட் போடாம ஸ்மைலி மட்டும் போட்டா தான் 1000 ரூபாய் அபராதம்னு சொல்லிருக்கேன்.
நீங்க நல்லா சிரிங்க சார்..
சிரிங்க.. சிரிங்க.. சிரிச்சுகிட்டே இருங்க சார்..
Balaji saravana said…
நீங்க ரொம்ப நல்ல்ல்லவுங்கன்னு அவருக்கு தெரிஞ்சுருக்கு! ;)

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்