நின்னைச் சரணடைந்தேன் (1)





எழுந்ததிலிருந்தே உள்ளுக்குள் பதற்றமாகவே இருந்தான் சித்தார்த். அன்று தான் ரமேஷிற்குத் திருமணம். முதல் நாளே வரச்சொல்லி நண்பனிடமிருந்து அழைப்பு.. ஆனாலும் போக மனமில்லாது தங்கிவிட்டான். காரணம் சாஹித்யா. ரமேஷின் தங்கை. ஒரு காலத்தில் சித்தார்த்தின் காதலி. என்னதான் சித்தார்த்தின் காதலை ஏற்க மறுத்திருந்தாலும் மானசீகமாக மனைவியாக நினைக்கப்பட்டவள்.
கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகி விட்டது. சாஹித்யாவின் திருமணத்திற்கு கூட ரமேஷ் அழைத்திருந்தான். தன் காதலியின் திருமணத்தைப் பார்க்கும் தைரியம் யாருக்கு தான் இருக்கும்?? ஏதோ சாக்குகள் சொல்லி வரமறுத்துவிட்டான். காலத்தைக் கட்டுப்படுத்தும் வலிமை சித்தார்த்தின் கரங்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. ஆரம்ப நாட்களில் சாஹித்யாவின் நினைவலைகளில் மூழ்கி மீளமுடியாமல் தவித்து, சுயநினைவின்றி அலைந்து, வேறு வழியின்றி சூழ்நிலையின் பிடியில் சிக்கிக்கொண்டான். இதோ காயத்ரியின் கழுத்தில் புதிதாய் இவனது மாங்கல்யம், அம்மாவின் கடைசி ஆசை என்பதால் மறுக்க முடியவில்லை.
“என்னங்க..“ ஏதோ யோசனையில் இருந்தவனை காயத்ரியின் குரல் கலைத்தது. என்ன, என்பதுபோல அவளைப் பார்த்தான். திருமணமான இந்த 15 நாட்களில், ஏறிட்டு மனைவியின் முகத்தைப் பார்ப்பது சொர்ப்பமாகவே இருந்தது சித்தார்த்துக்கு. சாஹித்யாவின் இடத்தில் வேறொரு பெண்ணை அவனால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. திருமணமான நாள் முதலாய் இவனது பட்டும்படாமலுமான பேச்சுக்களும் ஒதுங்கிப்போன நடவடிக்கையும், காயத்ரிக்கு ஒன்றும் புரியாமலில்லை. காரணம் தெரியாதெனினும் அவனுடைய இனிமையான குணங்கள், காயத்ரியை கணவனின் மனமாற்றத்திற்குக் காத்திருக்கச் செய்தது.
“இதுல எந்தப் புடவையங்க கட்ட கையில் சில புடவைகளை வைத்துக்கொண்டு ஆவலாய் கேட்ட காயத்ரியை எந்தச் சலனமுமில்லாமல் பார்த்தான். காயத்ரி, ரமேஷுக்கு தூரத்து உறவினரின் மகள் என்பதால் இந்தத் திருமணத்திற்கு செல்வதிலான ஆர்வம் அவள் முகத்தில் தெரிந்தது. அதைப் பொருட்படுத்தாது புடவைகளைப் பார்த்தான். பளிச்செனத் தென்பட்டது அந்த சிவப்பு நிற பட்டுப்புடவை.
சிவப்பு நிற உடைகள் சாஹித்யாவிற்கு எப்போதும் எடுப்பாக இருக்கும். அவனே பலமுறை இதை சாஹித்யாவிடம் சொல்லியிருக்கிறான். பதிலுக்கு லேசான புன்னகையை உதிர்த்துச் செல்வாள். அந்தச் சிரிப்பு...
சட்டென மனதினுள் லேசான வலி தோன்றி மறைந்தது. கணவனின் பதிலுக்காக நின்றிருந்தவளிடம் “உன் இஷ்டம், எதையாவது கட்டிகிட்டு கிளம்பு“ என எங்கோ பார்த்தபடி சொல்லிவிட்டு குளியளறைக்குள் புகுந்தான். சாத்திய பாத்ரூம் கதவை சில நொடிகள் பார்த்துவிட்டு ஏமாற்றமாய்ப் பெருமூச்சொன்றை உதிர்த்தாள் காயத்ரி. பின் சகஜநிலைக்கு வந்தவளாய் கிளம்ப ஆயத்தமானாள். உள்ளே ஷவரைத் திறந்து, கண்மூடி நின்ற சித்தார்த்தினுள் பழைய நினைவுகள் ஓடத் துவங்கின.
ஒரு தலையாய் சாஹித்யாவைக் வருடக்கணக்காய் காதலித்து, கற்பனைகளை வளர்த்த நாட்களும், காதலை சொல்ல முடியாமல் தவித்துக்கிடந்த நாட்களும் மட்டுமல்ல.. காதலை வெளிப்படையாக அவளிடம் தெரிவித்த அந்த நிமிடத்தில் புழுவை விடக் கேவலமாகப் பார்த்த அவளுடைய பார்வையையும் அவனால் மறக்க முடிவதில்லை.
“ஸாரி சித்தார்த், அண்ணாவோட ப்ரெண்டுங்குற முறைல தான் உங்ககிட்ட பேசினேன். மத்தபடி என் மனசுல எதுவுமில்ல. அதுமட்டுமில்லாம எனக்கு கணவரா வரப்போகிறவர்க்கு சில தகுதிகள் இருக்கணும்னு கற்பனை பண்ணிருக்கேன். அழகு, படிப்பு, உத்தியோகம், அந்தஸ்துனு நிறைய விஷயம் எதிர்பாக்குறேன். நா எதிர்பாக்குற தகுதி உங்ககிட்ட இல்ல. உங்கள காயப்படுத்துறதுக்கு என்ன மன்னிச்சிடுங்க. இனிமே நமக்குள்ள எந்தப் பேச்சும் வேணாம். இன்னொரு தடவை காதல் அப்படி இப்படினு பேசி வீணா உங்க மரியாதைய கெடுத்துக்காதீங்க“ என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டுச் சென்றவளை, நிமிர்ந்து பார்க்க திராணியின்றி திரும்பி வந்தான்.
சாஹித்யாவின் திருமணத்தன்று, கண்ணாடி முன் நின்று, தான் கதறிய அழுகையிலிருந்து இன்றுவரை அவனால் மீள முடியவில்லை. ஒரு முறை தற்கொலைக்கு முயன்றும் கூட, விதி துரதிருஷ்டவசமாக அவனைக் காப்பாற்றி விட்டது. அந்தளவிற்கு அவளைக் காதலித்ததாலோ என்னவோ காயத்ரியை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது.
காயத்ரியிடமும் குறை என்று எதுவுமேயில்லை.. லட்சணமானவள், நல்ல குணம்.. வந்ததிலிருந்து அவனுடைய மனப்போக்கை அணுமானித்து தன்னைத் தானே சமாதானித்துக் கொண்டவள். அம்மாவின் பிடிவாத்ததினால் திருமணத்திற்கு சம்மதித்தாலும், முழு மனதோடு ஏற்றுக்கொள்ள முடியாமல், தன் பழைய காதலின் உறுத்தல் சித்தார்த்தை தடுத்தது. நினைவு திரும்பியவனாய், குளித்துவிட்டுக் கிளம்ப ஆரம்பித்தான். உள்ளூர சாஹித்யாவைப் பார்க்கப் போகும் படபடப்பு இருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாது, காயத்ரியுடன் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான் சித்தார்த்.
“சாஹித்யாவைப் பார்த்தால் என்ன பேசுவது?? எப்படி அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்ப்பது?? என்னிடம் அவள் சகஜமாகப் பேசுவாளா? கடவுளே.. கூடுமானவரை அவள் என் கண்ணில் படாமல் இருக்க வேண்டும். அவளுடனான சந்திப்பை ஏற்படுத்தி என்னைக் கூனிக்குறுக வைத்துவிடாதே..“ மனதுக்குள் முணுமுணுத்தபடி தயக்கமாய் மண்டபத்தினுள் நுழைந்தான் சித்தார்த்.

(தொடரும்...)
.
.

Comments

R.Gopi said…
ஆஹா...

கதையின் தொடக்கமும், செல்லும் விதமும் நன்றாகவே இருக்கிறது...

அடுத்தது என்ன?
ஆஹா...

தொடர்கதையா கலக்குங்க.. கலக்குங்க...
>>>அன்று தான் ரமேஷிற்குத் திருமணம்.

அப்பாடா.. கதைலயாவது நம்ம ரமேஷ்க்கு கல்யாணம் ஆனா சரிதான்
தொடர் கதை...? ரைட்டு
>>என்னதான் சித்தார்த்தின் காதலை ஏற்க மறுத்திருந்தாலும் மானசீகமாக மனைவியாக நினைக்கப்பட்டவள்.

mkkum ம்க்கும்.. பந்திலயே உக்கார வேணாம்னு சொல்லீட்டாங்க.. இலை சரி இல்லைன்னானாம்
Balaji saravana said…
நல்ல ஆரம்பம் இந்திரா! ஒவரா பில்ட் அப் ஏத்தாம எங்க தேவையோ அங்க தொடரும்ன்னு போட்டிருக்கீங்க! :) நைஸ்!
:) வெள்ளிக்கிழமை மெகா சீரியல் மாதிரி இப்படி முடிச்சுட்டா எப்படி? சீக்கிரம் அடுத்த பகுதியை போடுங்க. கதை நல்லா போகுது.
S Maharajan said…
கதை நல்லா போகுது.
சி.பி.செந்தில்குமார் said...

>>>அன்று தான் ரமேஷிற்குத் திருமணம்.

அப்பாடா.. கதைலயாவது நம்ம ரமேஷ்க்கு கல்யாணம் ஆனா சரிதான்//

என்னா வில்லத்தனம்
என்னாது தொடர்கதையா.???

கதைய பாத்தா கதை முயற்சி மாதிரி தெரியலையே.!!

ஏதோ முக்குல உக்காந்து ஆயிரம் கதைக்கு மேல எழுதிட்டு இங்க வந்து பில்டப் கொடுக்குறாப்புல இருக்கு.!!

கதையின் ஆரம்பம் ஒரு மாதிரி இருந்துச்சு.. போக போக சூப்பராயிடுச்சு.!!


//நல்ல ஆரம்பம் இந்திரா! ஒவரா பில்ட் அப் ஏத்தாம எங்க தேவையோ அங்க தொடரும்ன்னு போட்டிருக்கீங்க! :) நைஸ்!//

@Balaji:என்னய சொல்லலயே.!!



//அப்பாடா.. கதைலயாவது நம்ம ரமேஷ்க்கு கல்யாணம் ஆனா சரிதான்//

@சிபி: இதை நானும் வழிமொழிகிறேன்.!!
Ramani said…
கதை முயற்சி என்கிற வார்த்தையை
பயன்படுத்தியிருக்கவேண்டியதில்லை
மிகச் சிறப்பான துவக்கம்
மிக இயல்பாக கதை சொல்லிப்போகும் நேர்த்தி
தங்களுக்குள் ஒரு சிறு கதை மன்னன்
ஆட்சி பொறுப்பேற்க்காது பம்மாத்து
செய்து கொண்டுள்ளார்
அவரை அரியணையில் ஏற்றி
அழகு பாருங்கள்.
நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்
Chitra said…
தொடர்கதை நல்லா இருக்குது. வாழ்த்துக்கள்!
logu.. said…
கொலகாரிஙக... முழுசா போடாம டென்சன் பண்றாய்ங்க.
karthik said…
தொடர் கதை நு சொல்லுரது நல்லா தான் இருக்கு ஆனா அதுக்காக இப்படி கதைய படிக்கிரவங்கல tension ஆக்க கூடாது
தொடர்கதையா..!
கலக்குங்க...
eppa indira next episode..waiting with tension..magaley bulpu kodutha pechiduven pechi..
vinu said…
mmmmmmmmmmmmmmmmm

mkum mukummmm

chhummaa throught problem rendu naallaa

vera onnum illaynga ....


neeenga onnum thappu thappaa eduththukkaatheeenga......


"kodumai kodumainnu kovilukkup ponnaa angea rendu kodummai jingu jingunnu aadichchaaam"
அன்னு said…
//http://padikkaadhinga.blogspot.com/2011/02/1.html//

naan padikkalai :))

hi hi hi
//சி.பி.செந்தில்குமார் said...

>>>அன்று தான் ரமேஷிற்குத் திருமணம்.

அப்பாடா.. கதைலயாவது நம்ம ரமேஷ்க்கு கல்யாணம் ஆனா சரிதான்//


ஹிஹிஹி
ஏதோ என்னால முடிஞ்ச உதவி...
//சங்கவி said...

ஆஹா...

தொடர்கதையா கலக்குங்க.. கலக்குங்க...//



நன்றி சங்கவி
//R.Gopi said...

ஆஹா...

கதையின் தொடக்கமும், செல்லும் விதமும் நன்றாகவே இருக்கிறது...

அடுத்தது என்ன?//


நன்றி கோபி..
சீக்கிரமே அடுத்த அத்தியாயம் வரும்.
//Balaji saravana said...

நல்ல ஆரம்பம் இந்திரா! ஒவரா பில்ட் அப் ஏத்தாம எங்க தேவையோ அங்க தொடரும்ன்னு போட்டிருக்கீங்க! :) நைஸ்!//


தங்கள் கருத்துக்களுக்கு நன்றி பாலாஜி
//சி.பி.செந்தில்குமார் said...

தொடர் கதை...? ரைட்டு//


ஓகேங்க..
//S Maharajan said...

கதை நல்லா போகுது.//


நன்றி நண்பரே..
//☀நான் ஆதவன்☀ said...

:) வெள்ளிக்கிழமை மெகா சீரியல் மாதிரி இப்படி முடிச்சுட்டா எப்படி? சீக்கிரம் அடுத்த பகுதியை போடுங்க. கதை நல்லா போகுது.//


கொஞ்சம் காத்திருங்கள்..
சீக்கிரம் போட்டுட்றேன் ஆதவன்.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

>>>அன்று தான் ரமேஷிற்குத் திருமணம்.

அப்பாடா.. கதைலயாவது நம்ம ரமேஷ்க்கு கல்யாணம் ஆனா சரிதான்//

என்னா வில்லத்தனம்//


செந்தில் சார தான சொல்றீங்க???
//தம்பி கூர்மதியன் said...

என்னாது தொடர்கதையா.???

கதைய பாத்தா கதை முயற்சி மாதிரி தெரியலையே.!!

ஏதோ முக்குல உக்காந்து ஆயிரம் கதைக்கு மேல எழுதிட்டு இங்க வந்து பில்டப் கொடுக்குறாப்புல இருக்கு.!!

கதையின் ஆரம்பம் ஒரு மாதிரி இருந்துச்சு.. போக போக சூப்பராயிடுச்சு.!! //


அப்படியா தெரியுது???
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
அடுத்த அத்தியாயத்தையும் தொடர்ந்து படிங்க..
//Chitra said...

தொடர்கதை நல்லா இருக்குது. வாழ்த்துக்கள்!//


மிக்க நன்றி சித்ரா..
தொடர்ந்து வாங்க..
//Ramani said...

கதை முயற்சி என்கிற வார்த்தையை
பயன்படுத்தியிருக்கவேண்டியதில்லை
மிகச் சிறப்பான துவக்கம்
மிக இயல்பாக கதை சொல்லிப்போகும் நேர்த்தி
தங்களுக்குள் ஒரு சிறு கதை மன்னன்
ஆட்சி பொறுப்பேற்க்காது பம்மாத்து
செய்து கொண்டுள்ளார்
அவரை அரியணையில் ஏற்றி
அழகு பாருங்கள்.
நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்//


தங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்..
வருகைக்கும் தான்.
//வெட்டிப்பேச்சு said...

ம்.. ம் ....//


என்ன “ம்“???
//logu.. said...

கொலகாரிஙக... முழுசா போடாம டென்சன் பண்றாய்ங்க.//


டென்சனாகாதீங்க..
சீக்கிரம் அடுத்த அத்தியாயம் போட்டுட்றேங்க..
//சே.குமார் said...

தொடர்கதையா..!
கலக்குங்க...//


நன்றி குமார்
//karthik said...

தொடர் கதை நு சொல்லுரது நல்லா தான் இருக்கு ஆனா அதுக்காக இப்படி கதைய படிக்கிரவங்கல tension ஆக்க கூடாது//


லோகுக்கு சொன்ன பதில் தான் கார்த்திக்குக்கும்..
டென்சன் ஆகாதீங்க..
//தமிழரசி said...

eppa indira next episode..waiting with tension..magaley bulpu kodutha pechiduven pechi..//


ஐயயோ.. இப்படியெல்லாம் பயமுறுத்தலாமா தமிழ்????
//அன்னு said...

//http://padikkaadhinga.blogspot.com/2011/02/1.html//

naan padikkalai :))

hi hi hi//


ஹிஹிஹி
//vinu said...

mmmmmmmmmmmmmmmmm

mkum mukummmm

chhummaa throught problem rendu naallaa

vera onnum illaynga ....


neeenga onnum thappu thappaa eduththukkaatheeenga......


"kodumai kodumainnu kovilukkup ponnaa angea rendu kodummai jingu jingunnu aadichchaaam"//


ஏதோ சொல்ல வறீங்க.. என்னனு தான் புரியல.. ம்ம்ம்
siva said…
me the firstu,....

nice storry

rocking indira
vinu said…
indira said
ஏதோ சொல்ல வறீங்க.. என்னனு
தான் புரியல.. ம்ம்ம்


athu ennannaaa; naanea ingea oru aalu koooda kidaikkalyeannu kavalyla irrukean......

ithula intha storyla ennanna...

oruththarukku rendu perum aalu kidaichchum athai ignore pannittaangalaaam....

appuram avanga rendu perukkum kalyaanam panna vera thaniyaa oru aalu kidaichchuthaaam....

orea vayatherichchalaaa irruku....

ithu thaan anth rendu kodumai jingu chaanu guthichchaa mater
Kavibharathi said…
super ah irukku... thodarndhu ezhuthunga..padikka kaathuttu irukom....

vaazhthukkal...
சுவாரசியமாய் ஆரம்பித்திருக்கிறது..

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்