நீ அழையாத என் கைபேசி..


வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்

காதலில்லாத என் கைபேசியை..

.

எழுத்துப் பலகைகள்

தேயப்பெற்ற காலம்போய்

எப்போதும் உறங்குகிறது..

நீ அழையாத என் பேசி.

.

எடுத்தெடுத்துப் பார்க்கிறேன்

நம் பழைய குறுஞ்செய்திகளை..

.

கவிதைகள் இல்லையெனினும்

காதலின் அடையாளங்கள் அழகாய்..

.

வினாடிகளையும் தோற்கடிக்கும்

நம் அடுத்தடுத்த பதில் பறிமாற்றங்கள்..

ஒவ்வொரு நாளின்

தொடக்கமும் முடிவும்

முடிவில்லாமல்..

.

நினைத்துப் பார்க்கிறேன்..

நேரமறியாத நள்ளிரவுகளில்

காதுமடல் சுட்டதையும்

கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும்

பொருட்படுத்தாது நீண்டுபோன

நமக்கான உரையாடல்களை..

.

சொல்ல மறந்துவிட்டேனென..

சொன்னது கேட்கவில்லையென..

இப்போதுதான் நடந்ததென..

யாரோ சொன்னதென..

எத்தனை எத்தனையோ சாக்குகள்.

நம் குரல் கேட்க ப்ரயோகித்தோம்..

.

காத்திருப்பு ஒலியிருப்பின்..

ஒருவருக்கொருவர்

செல்லமாய்க் கோபித்து

சிரிக்காமல் சீண்டுவோம்..

சிணுங்கியபின் சிக்கிடுவோம்..

சமாதானம் எனும் சிறையில்..

.

பேசிக்கொண்டே ஓர்முறை

நானுறங்கிப்போக..

துண்டிக்க மனமில்லையென

தொடர்ந்து கொஞ்சினாய்

என் மௌனத்தை..

.

உனக்குத் தெரியுமா..

உறங்கும் நடிப்பில் நீயறியாது

உன் கொஞ்சல்களை

இன்றும் சேமித்து வைத்திருக்கிறேன்

என் அலைபேசியின் பதிவுகளில்..

.

புரட்டிப்போட்டதோ..

புரண்டுவிட்டதோ..

காரணம் அறியாத

கேள்விக் குறியாய்..

.

ஆயுள் முழுவதுக்குமான

ஒட்டுமொத்தக் காதலையும்

ஒருசேரத் தீர்த்துவிட்டோமோ???

அவசரமாய் முடிந்துவிட்டது

அணுவணுவாய் ரசித்த அனைத்தும்.

.

செல்லக் கொஞ்சல் வேண்டாம்

சின்னச் சிணுங்கலாவது போதும்.

வாசல் திறக்க வேண்டாம்

ஜன்னல் மட்டுமாவது போதும்.

காதல் பார்வை வேண்டாம்..

ஓரப்பார்வையாவது போதும்..

பார்த்துப் பழக வேண்டாம்..

பாதிப் பேச்சுக்களாவது போதும்..

.

முணுமுணுத்தபடி மூழ்கிப்போகிறேன்

உன்மீதான நினைவுகளில்..

மூச்சுத்திணறுகிறது..

ஆனாலும் மீள மனமில்லை..

.

விழிநீர் துடைத்து

வெறுமையை சுமந்து

வெற்றிடமாய் நான்..

விரும்பிய நாட்கள்

திரும்பாதா எனும் ஏக்கத்தில்..

.

காத்திருப்பு சுகம் தான் காதலில்..

காயமில்லாதிருப்பின்.

கனப்பதில்லை எப்போதும் மனது..

வலியில்லாதிருப்பின்.

.

இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

உன் அழைப்பிற்கு ஏங்கும்

நீ அழையா என் பேசியை..

.

.


Comments

மீள் பதிவு..

ஏற்கனவே ரொம்ப ரசிச்சதாலே மறுபடியும் அந்த அனுபவம் வரலை..

முடிந்த வரை எழுதுங்கள், புதுசு புதுசா..
rajamelaiyur said…
அருமை அருமை கவிதை அருமை



வலைசரத்தில் இன்று ...
கண்ணை நம்பாதே
ஆர்வா said…
ஹாய் இந்திரா.. நீங்க எழுதினதுல எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை.... ரொம்ப நாளா நான் ரசிச்ச கவிதை. மீண்டும் மீள்பதிவா வந்தாலும் மனசுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. தொடர்ந்து எழுதுங்கள்...
அழகான கவிதையில் உண்மைகள்
அழகான கவிதை..! ரொம்ப ரசிச்சேன்.!
Moortthi JK said…
வெறும் வார்த்தைகள் சொல்ல முடியாது இந்த அனுபவங்களை, அனைவரும் ஒரு கால கட்டத்தில் அனுபவித்திருப்போம். கண்டிப்பாக மனதின் ஒரு மூலையில் மறைந்திருக்கும். எனக்கும் உண்டு

Moortthi JK
Moortthi JK said…
வெறும் வார்த்தைகள் சொல்ல முடியாது இந்த அனுபவங்களை, அனைவரும் ஒரு கால கட்டத்தில் அனுபவித்திருப்போம். கண்டிப்பாக மனதின் ஒரு மூலையில் மறைந்திருக்கும். எனக்கும் உண்டு
நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றி..
ravi said…
நினைத்துப் பார்க்கிறேன்..

நேரமறியாத நள்ளிரவுகளில்

காதுமடல் சுட்டதையும்

கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும்

பொருட்படுத்தாது நீண்டுபோன

நமக்கான உரையாடல்களை..

.

சொல்ல மறந்துவிட்டேனென..

சொன்னது கேட்கவில்லையென..

இப்போதுதான் நடந்ததென..

யாரோ சொன்னதென..

எத்தனை எத்தனையோ சாக்குகள்.

நம் குரல் கேட்க ப்ரயோகித்தோம்//

மிக அருமையான வரிகள் , எளிமையான வார்த்தைகள் ..அருமையான கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி (ஸ்ஸ்ஸ்சப்பா சுத்த தமிழ்ல கமெண்ட் போடறது ரொம்ப கஷ்டமப்ப்ப்பா)
Unknown said…
ரொம்ப அழகான காதலின், எதார்த்தமான கவிதை இந்திரா, காதலிக்கும் பலரும் கைபேசி வழியே இதை கடந்து வந்து தான் இருப்பர்...

காத்திருப்பு சுகம் தான் காதலில்..

காயமில்லாதிருப்பின்.

கனப்பதில்லை எப்போதும் மனது..

வலியில்லாதிருப்பின்.

இந்த இடம் மிகவும் ரசித்தேன்...எத்தனை அனுபவமான எழுத்து... அசத்தல் தோழி :)
பேசிக்கொண்டே ஓர்முறை

நானுறங்கிப்போக..

துண்டிக்க மனமில்லையென

தொடர்ந்து கொஞ்சினாய்

என் மௌனத்தை..

இந்த வரிகள் நெறைய பேர் மனதை சுரண்‌டியிருக்கும் ....

Popular posts from this blog

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..