சில கறுப்பு வெள்ளை புகைப்படங்கள்..




 






Comments

உயிர்த் துடிப்புடன் இருந்த கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. தேடிப் பிடித்துத் தந்த இந்திராவுக்கு நன்றி!
ஒவ்வொன்றும் கவிதை பேசுகிறது...

காலப்பொக்கிஷங்கள்...
SURYAJEEVA said…
wonderful collections
ஐந்தாவது படம் என் சிறு வயதை நினைவு படுத்தியது ஒற்றை விரலில் படம் வரிந்து தாவணியின் முனையால் முக்காடிட்டு அசைத்து அசைத்து ஜாடை பேசி விளையாடும் பருவம். ம்ம்ம் !! திரும்பி வராத பருவ நிலை
Tamilthotil said…
படங்கள் எல்லாம் அருமை.
ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறது.
சில நேரங்களில் கவிதை எழுதிவிட்டு அதற்கு பொருத்தமான படத்தை இணையத்தில் தேடுவேன். அவ்வளவு எளிதில் கிடைக்காது. எனவே இப்பொழுதே உங்களிடம் அனுமதி கேட்கிறேன்.
தொலைந்துபோனவன்
தொடர்கிறேன்....!
தங்கள்
துவக்க கால பதிவுகளில்
பின்னூட்டமிட்டவர்களில்...
கருத்திட்ட
இந்த "காஞ்சி முரளி"யை நினைவிருக்கும் என நினைக்கிறேன்...!

(தொலைந்துபோனவன் நான் இல்லை...! இடையில் சில மாதங்கள் தாங்கள் பதிவிடவில்லை என்றாலும் பரவாயில்லை.. "இந்திராவின் கிறுக்கல்கள்" பதிவுக்கு வந்தால் "மன்னிக்கவும்... இந்த பதிவை மூடிவிட்டார்... வலைபதிவு நிர்வாகி" அப்படீன்னு வந்தது...! இப்ப ஓர் பதிவில் படித்துகொண்டிருந்தபோது எதேச்சையாய் பார்க்கிறேன்... என் நண்பியின் "இந்திராவின் கிறுக்கல்கள்"... உடன் பிப்ரவரி மாதத்திலிருந்து பார்த்துக்கொண்டே... படித்துக்கொண்டே வந்தேன்...! என் நினைவில் கடைசியாய்... அந்த பதிவின் தலைப்பு மறந்துபோனேன்... ஓர் பின்னூட்டாருக்கும் உங்களுக்கும் நடந்த நீண்ட உரையாடலில் நான் பின்னூட்டமிட்டது நினைவிருக்கு... அதன்பின் எந்த பதிவு என்பது நினைவுக்கு தென்படமட்டேனுகிறது...!)

Thursday, 4 August 2011அன்று தாங்கள் இட்ட "பின்னூட்டம் போடும் புண்ணியவான்களே..."எனும் பதிவைப்பற்றி என் கருத்துரை

சரி...
"பின்னூட்டம் போடும் புண்ணியவான்களே..."எனும் இந்த பதிவுக்கு வருகிறேன்....!

/////பின்னூட்டங்கள்ங்குறது பதிவெழுதுறவங்கள ஊக்கப்படுத்தி, அடுத்தடுத்து எழுதத் தூண்டுற விதமா அமையணும். ஆனா இப்ப வலையுலகத்துல அந்த நிலைமை இல்லவேயில்லைனு சத்தியம் கூட பண்ணலாம்.////

இப்பதிவில் தாங்கள் குற்றச்சாட்டை இப்படி பொத்தம் பொதுவாய் சொல்வது தவறு நண்பி...!

காரணம்...
நான் தங்கள் துவக்க காலத்திலிருந்தே..
தங்கள் பல கவிதைகளையும்.... சில கட்டுரைகளையும்... வாழ்த்தி... அடுத்து எழுத தூண்டுமளவுக்கு ஊக்கப்படுத்தி வந்திருக்கிறேன்...(அப்படீன்னு நினைக்கிறேன்) அதோடு தங்கள் பதிவில் தவறு என்றால் சுட்டிக்காட்டி இருக்கிறேன்... இதனை தங்கள் நன்கு அறிவீர்கள்... "கும்மி" பதிவுகளுக்கு என் கருத்து அநேகமாய் இருக்காது இதயும் தங்கள் அறிவீர்கள் நண்பி...!

இப்படியிருக்க தங்கள் பொத்தம்போதுவாய் இப்படி ஓர் குற்றச்சாட்டை சுமத்துவது தவறு...
அதைப்போலவே....!

////நமக்கு யார் தொடர்ந்து பின்னூட்டம் போட்றாங்களோ அவங்களோட ப்ளாக்குக்கு மட்டும் தான் போகணும்னு சில பதிவர்கள் சபதம் எடுத்துக்குறாங்க. அப்டி போட்ற பின்னூட்டம் உருப்படியா இருந்தா கூட பரவாயில்ல.. ஏதோ கடமைக்கு நானும் பின்னூட்டம் போட்றேன்னு போடுவாங்க. பதிவ படிச்சாங்களா இல்லையானு அந்த கமெண்ட பாத்தாலே தெரியும்.////

எனக்கு தனிப்பட்ட பதிவு (ப்ளாக்கர்) ஏதுமில்லை...!

நான் எல்லோர் பதிவுக்கும் செல்வதுமில்லை... எனக்கு பிடித்த... சில பதிவர்களின் (குறிப்பாய்... "நீரோடை". "ஜெய்லானி", "இந்திராவின் கிறுக்கல்கள்") பதிவுக்கு மட்டுமே நான் சென்று பின்னூட்டம் போடுவது வழக்கம்...

அதோடு...

தங்கள் பதிவை முழுதும் படித்துவிட்டுத்தான்.. பின்னூட்டம் போடுவேன்...! இந்த ஏனோதானோ கதையெல்லாம் என்னிடம் கிடையாது....!

இப்படி இருக்கும்போது...

பொத்தம்போதுவாய் தங்கள் குற்றம் சாட்டுவது... என்னையும் சேர்த்துதான் என்பதால்தான் இந்த நீண்ண்ண்ண்ண்ட விளக்கம்...!

வேறொன்றுமில்லை...
இந்திரா...!

நட்புடன்...
காஞ்சி முரளி...
நினைவிருக்கிறதா...! நண்பியே....!

முதன்முதலாய்
தங்கள் "கூட்டாஞ்சோறு"
பதிவினை 13 May 2010 11:15 அன்று
பகிர்ந்துகொண்ட
பழையவன்தான்...!
இந்த தொலைந்துபோனவன்....!


////இந்திரா said...

//காஞ்சி முரளி...
இதுதான்
"வசந்த கால பருவம்"
என்பது
என் எண்ணம்...
தங்களின் இப்பதிவு
என்னை மீண்டும்
என் 'வசந்த' காலத்திற்கு
அழைத்துச் சென்றதேன்னவோ உண்மை...
பதிவும்... அதன்
படங்களும்...
பாராட்டுக்குரியவை...//

நீங்க சொல்வது போல வசந்த காலப் பருவம் என்பது நினைவை விட்டு நீங்காத ஒன்று..
உங்கள் கருத்துக்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது முரளி..
நன்றி. 13 May 2010 11:15/////
படங்கள் கருப்பு-வெள்ளையாக இருந்தாலும் மனதில் பல வண்ண(நினைவுகளை)ங்களை உதிர்த்துவிட தவருவதில்லை... சகோ...

பகிர்வுக்கு நன்றி...
K.s.s.Rajh said…
அருமையான தொகுப்புக்கள் மேடம் கருப்புவெள்ளை படங்களிலும் ஒரு அழகு இருக்கு
கருப்பு வெள்ளைப் படங்கள் அததனையும் அழகு - அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
கவிதை படிக்கும் படங்கள் ..

அருமை.

வாழ்த்துக்கள்.
//கணேஷ் //

//சண்முகம் //

//கவிதை வீதி... // சௌந்தர் //

//suryajeeva //

//rufina rajkumar //



வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
//காஞ்சி முரளி //


நண்பருக்கு வணக்கம். தாங்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் வந்தது மிக்க மகிழ்ச்சி.
இடையில் நான் பலமுறை உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் தங்கள் மெயில் ஐடி எனக்குத் தென்படிவில்லை. நிறைய முறை, தாங்கள் ப்ளாக் ஏதும் ஆரம்பித்துள்ளீர்களா என்று அவ்வப்போது சோதித்துக்கொள்வதுண்டு.
இப்போது உங்கள் பின்னூட்டம் கண்டு நிம்மதியடைந்தேன்.
என்ன நண்பரே.. நலமா???

என் பழைய ப்ளாக்குக்கு ஏதோ பிரச்சனை வந்துவிட்டது..
பின் பழைய பதிவுகளையெல்லாம் மீட்டுக்கொண்டுவந்து (சில நட்பின் இழப்புகளுக்குப்பின்) இந்த வலைதளத்தை ஆரம்பித்தேன். முரளி சார்.

சரி விஷயத்துக்கு வரேன்..

பதிவில் நான் குறிப்பிட்டது, டெம்ப்ளேட் கமெண்ட் போடுபவர்களைத் தான்.
“எழுதப்படும் பதிவுகள் பற்றிய சரமாரியான விமர்சனங்கள், சண்டைகள் ஏற்படுத்துற உற்சாகமும் ஊக்கமும், இந்த மாதிரியான டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்ல அடிபட்டுப்போகுது“
என்று பதிவில் நான் ஆதங்கப்பட்டிருக்கிறேன்..
தாங்கள் எப்போதும் எனக்கு அந்த வகையில் பின்னூட்டமிட்டதில்லை. இதை நான் வெளிப்படையாக உங்களிடமே மகிழ்வாக தெரிவித்திருக்கிறேன்.
எனவோ தங்களை என் பதிவின் மூலம் வருத்தப்பட வைத்திருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.
நன்றி..
தொடரட்டும் உங்கள் ஊக்கப்படுத்தும் பின்னூட்டங்கள்..
//Tamilraja k said...

படங்கள் எல்லாம் அருமை.
ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறது.
சில நேரங்களில் கவிதை எழுதிவிட்டு அதற்கு பொருத்தமான படத்தை இணையத்தில் தேடுவேன். அவ்வளவு எளிதில் கிடைக்காது. எனவே இப்பொழுதே உங்களிடம் அனுமதி கேட்கிறேன்.//


தாராளமாக...

(ஹிஹி.. நானே கூகுள்ள சுட்டது தானே..)
//ராஜா MVS //

//K.s.s.Rajh //

//cheena (சீனா)//

//வெட்டிப்பேச்சு//


கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க..
///எனவோ தங்களை என் பதிவின் மூலம் வருத்தப்பட வைத்திருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.////

நண்பியே...!
மன்னிப்பெல்லாம் தேவையில்லை..!
மாபெரும் தவறையா செய்தீர்கள்... மன்னிப்பு கோருவதற்கு...!
அப்படியே இருந்தாலும்
நட்புக்குள் "மன்னிப்பு கேட்பது மரபாகாது"...!
நான் கருத்துவடிவில் சண்டை போட்டதற்கு காரணம்..
என்னையும் அந்த லிஸ்டில் சேர்த்திட்டீங்களோ அப்படீன்னு ஓர் ஆதங்கம்..! ஓர் வருத்தம்...! அவ்வளவே...!

இதோ... எமை தொடர்பு கொள்ள....
என்னோட facebook address
http://www.facebook.com/#!/profile.php?id=100001134731718&sk=wall
(இதில் என்னோட சில கவிதைகள்... ச்சே... கிறுக்கல்கள்... சில கருத்துக்கள்... சில ஆதங்கம் பதிவாய்...)

இனி தொடர்வேன்...!

அதோடு...! தங்களிடம் 2010ல் பதிவிட்ட "மனதினை பிராண்டும்.... தூக்கத்திலும் விரட்டும்.... கவிதைகள்" போல.. இப்போதும் எதிர்பார்கிறேன்...!

நன்றி...! நண்பியே...!

நட்புடன்...
காஞ்சி முரளி....!
இப்போதுகூட..

எனது profileலிருந்து தங்கள் பதிவினை கிளிக் செய்தால்...

இதுதான் வருகிறது....


Blog has been removed
Sorry, the blog at padikkaadhinga.blogspot.com has been removed. This address is not available for new blogs.

Did you expect to see your blog here? See: 'I can't find my blog on the web, where is it?'
//காஞ்சி முரளி//


தகவலுக்கு நன்றி முரளி சார்..
முடிந்த அளவு சிறப்பாக எழுத முற்படுகிறேன்.

என் பழைய வலைதளம் அழிந்துவிட்டதால், இந்த தளத்தில் தாங்கள் மறுபடி இணைய வேண்டும்.
பின்தொடர்வோர் பட்டியலில் தாங்கள் மீண்டும் இணைய கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
அருமையான கலக்கல் படங்கள் வாழ்த்துக்கள்...!!!
ரொம்ப நல்லா இருக்கே...!!!
வணக்கம் நண்பரே! நல்ல பதிவு. விரும்பிப் படித்தேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.
விளக்கங்கள் தேவைப் படாத அழகிய படங்கள். நம்பர் ஏழு ரொம்ப டாப். ஆறு அப்புறம். நமது அலசிபெசியிலோ, கேமிராவிலோ இப்பவும் கருப்பு-வெள்ளைக்கு மாற்றி சில படங்களை எடுத்தால் வித்தியாசமாய், சிலசமயம் அருமையாய் அமையும்.
அருமையான தொகுப்பு.
வாழ்த்துகள்.
vimalanperali said…
மனம் கொள்ளை கொண்ட படங்கள்.
படங்களைப் பார்த்துட்டு கண்ணை மூடினா மனசில கவிதை அருவி மாதிரி கொட்டுது... ஆனா அதெ எழுதனும்னு நினைச்சா அந்த வார்த்தை.. அது வரமாட்டேங்குது.
அற்புதமான படங்கள். நன்றி...
கறுப்பு வெள்ளை படங்களின் ரசிகன் என்கிற முறையில் உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி.

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்