கீழ்த்தரவாதிகள்



பேருந்து வழக்கம்போல கூட்டமாய்த் தான் இருந்தது. நிற்க இடம் கிடைத்தாலே பெரிய விஷயம். அலுவலகப் பேருந்து, என்னைப்போன்ற தற்காலிகப் பணியாளர்களின் நிறுத்தத்திற்கெல்லாம் வராது என்ற விதிமுறையுள்ளதால், நிரந்தரப் பணியாளர்களின் வழக்கமான நிறுத்தத்தை நோக்கி தினமும் நான் பயணிக்க வேண்டிய கட்டாயம். அதை விடுத்தால் இரண்டு பேருந்து மாறிப்போவது மட்டுமல்லாது அலுவலகத்தின் வாசலிலிருந்து என் பிரிவிற்கு 20 நிமிடம் நடக்க வேண்டும்.
வேறுவழியில்லாமல் முந்தியடித்துக்கொண்டு ஏறி, மெதுமெதுவாய் நகர்ந்து கம்பியைப் பிடித்து வாகாக நின்றுகொண்டேன். 15 நிமிடத்தில் அலுவலகப் பேருந்தைப் பிடித்துவிடலாம் என நம்பிக்கை இருந்தது. ஐந்தாவது நிமிடத்தில் என் பின்னால் ஏதோ உரசுவது போல உணர்ந்தேன். கூட்டத்தில் இதெல்லாம் தவிர்க்கமுடியாதது தான். ஆனாலும் ஏதோ அசௌகரியமாய் தோன்றவே சிறிது நகர்ந்து நின்றேன். சில வினாடிக்குப் பின் மீண்டும் அதே அசௌகரியம். பெண்களுக்கே உரித்தான அறுவறுப்புடன் பின்னால் நிற்பவனைத் திரும்பி பார்த்தேன். எவனோ ஒருவன் தனது ஆணுறுப்பை, வேண்டுமென்றே என்பின்னால் உரசவிட்டுக்கொண்டு நின்றிருந்தான். கோபத்தில் நான் முறைத்தவாறு திட்ட எத்தணித்தேன், அவனோ எதுவுமே தெரியாதவன் போல் பாவனை செய்துகொண்டு நகர்ந்துகொண்டான். தினசரி பேருந்துகளில் நடக்கும் சம்பவங்களில் இதுவும் ஒன்று.
ஒருவழியாக அலுவலகப் பேருந்தைப் பிடித்து அலுவலகம் சேர்ந்தேன். வழக்கமான வேலைகளில் மூழ்கியிருந்த தருணம் அது. எனக்கொரு டாகுமெண்ட் மெயில் பண்ணனும் இந்திரானு குரல் கேட்க நிமிர்ந்து பார்த்தேன். அவர் என் சீனியர். சரி என்று சொல்லி அவர் சொல்வதை தட்டச்சு செய்து கொண்டிருந்தேன். அப்போது நேத்து சாயங்காலம் பக்கத்து செக்சன்ல பேசிட்டிருந்தேன். உங்களப் பத்தி பேச்சு வந்தப்ப எல்லாரும் ரொம்ப பாராட்னாங்க. வேலையெல்லாம் கரெக்டா பாக்குறீங்களாம், எந்த பெண்டிங்கும் வைக்கிறதில்லையாம். டெம்ப்ரவரிதானேனு அசால்ட்டா இல்லாம சின்சியரா வொர்க் பண்றீங்களாம். ரொம்பவே புகழ்ந்து பேசினாங்கனு சொன்னாரு. இயந்திரத்தனமான புன்னகையுடன் அப்படியா சார்னு சொல்லிட்டு மறுபடியும் டைப் பண்ண ஆரம்பித்தேன். அட ஆமாங்க.. நான் கூட கவனிச்சுகிட்டு தான் வறேன். யு ஆர் வெரி சின்சியர். உங்கள நிரந்தரப் பணியாளரா மாத்திட, நான் கண்டிப்பா ரெகமெண்ட் பண்றேன்னு சொல்லி என்னைப் பார்த்து ஒருமாதிரி சிரித்தார். எனக்குப் புரிந்துவிட்டது. பரவாயில்லை சார், எனக்கு முறைப்படி எப்ப பணி நிரந்தரமாகணுமோ அப்ப ஆகட்டும். நீங்க உங்க வேலையப் பாருங்க ப்ளீஸ்னு அவர் கண்களை நேராகப் பார்த்து சொல்லிவிட்டு எச்சலனமுமின்றி வேலையைத் தொடர்ந்தேன். முகத்திலறைந்தது போல அந்த பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்.. எழுந்து சென்றுவிட்டார்.
இது எனக்கொன்றும் புதிதல்ல. பணியில் சேர்ந்த இந்த நான்கு வருடங்களில் இதுபோல, இவர்போல எத்தனையோ சம்பவங்கள். இம்மாதிரியான ஆட்களின் அணுகுமுறைகள் வேறாக இருந்தாலும் நோக்கம் ஒரே விதமாகத் தான் இருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கே உரித்தான சாபக்கேடு இது. தமக்கு கீழாக ஒரு பெண் பணிபுரியும்பட்சத்தில், பெரும்பாலான ஆண்கள் நினைக்கும் ஒரே விஷயம் எதுக்கும் ட்ரைப் பண்ணிப்பார்ப்போம், மடிஞ்சாலும் மடியும் என்பது தான்.
இதில் திருமணம் ஆனவர் ஆகாதவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையவே கிடையாது. கொஞ்சம் நட்பாகப் பேசிவிட்டால் போதும், இவர்களது ஆர்வம் தலைகாட்டிவிடுகிறது. இரட்டை அர்த்தங்களில் ஏதாவது பேசுவது, தேவையில்லாமல் நாம் பார்க்கும்படி அங்குமிங்கும் நடப்பது, தற்செயலாகப் பட்டதுபோல நம்மைத் தொடுவது என இவர்களின் வக்கிரபுத்திகள் சகிக்கமுடியாதவை. இதனைத் தவிர்க்க, எப்போது பார்த்தாலும் இறுக்கமாகவே முகத்தை வைத்துக்கொண்டு சிடுசிடுவென இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனாலும் வேலை நிமித்தம், அதிகாரிகளிடம் அப்படியிருப்பதும் சாத்தியமில்லை. அன்றாடம் இவர்களுடைய அழுக்குப் பார்வையிலிருந்தும் ஜாடையான பேச்சுக்களிலிருந்தும் கழன்றுகொள்வது மலையாக உள்ளது.
ஆண்கள் தான் இப்படியென்றால் பெண் அதிகாரிகள் இவர்களுக்கு மேல்.
இன்னைக்கு அவ கட்டிருக்க சேலையப் பாத்தியா? வேலைக்கு சேந்து கொஞ்ச நாள் தான் ஆகுது.. என்னவோ பெரிய அதிகாரி மாதிரி பளிச் பளிச்சுனு புடவை கட்றா..
“நா நிக்கிறது கூட தெரியாம செல்போன் பேசிட்டிருக்கிறா.. ரொம்ப ஹெட்வெயிட் இருக்கும்போல
அட அது கூட பரவாயில்ல.. காலேல பஸ் ஸ்டாப்ல என்னைப் பாத்துட்டு விஷ் பண்ண கூட இல்ல. சாதாரணமா சிரிச்சிட்டு போறா தெரியுமா.. மனசுல பெரிய இவனு நெனப்பு. இவள எல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும். இப்பவே தட்டி வைக்கணும். பெர்மனென்ட் ஆய்ட்டானா ரொம்பதான் ஆடுவா போல
இது மாதிரி நிறைய பேச்சுக்கள், குறிப்பிட்ட பெண்ணைப் பற்றி வருவது சகஜமாகிவிட்டது.
இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் அவ கேரக்டர் சரியில்லையாமே.. அவ ஒரு மாதிரியான டைப்னு ஒரே போடாகப் போடுவார்கள்.
பெண்களைத் தாக்கும் கடைசி அஸ்த்திரமும் அதுதான்.
ஆதிக்க வர்க்கம், பொறாமை, வக்கிரபுத்தி என் மாறிப் மாறிப் பேர் சூட்டிக்கொண்டாலும் பொதுவாக மனிதர்களின் கீழ்த்தரமான புத்தியையே இது வெளிப்படுத்துகிறது.
பேருந்தில் உரசியவனும் சரி, அலுவலகத்தில் உலவுபவர்களும் சரி, உருவம் வேறாக இருந்தாலும், உள்ளம் ஒரே மாதிரியான அழுக்கு நிறைந்தது தான்.

.

Comments

//பேருந்தில் உரசியவனும் சரி, அலுவலகத்தில் உலவுபவர்களும் சரி, உருவம் வேறாக இருந்தாலும், உள்ளம் ஒரே மாதிரியான அழுக்கு நிறைந்தது தான். //

உண்மைதான்... இப்படி செய்பவர்கள் ஒரு கனம் யோசிக்க வேண்டும் நாளை அவன் மனைவியோ, தங்கையோ, அம்மாவோ செல்லும் போது இது நடந்தால்...
//அவனோ எதுவுமே தெரியாதவன் போல் பாவனை செய்துகொண்டு நகர்ந்துகொண்டான். தினசரி பேருந்துகளில் நடக்கும் சம்பவங்களில் இதுவும் ஒன்று.//

எத்தனை பெண்கள் வேலைக்கு சென்றால் தான் சாப்பாடு என்ற நிலையில் இருக்கிறார்கள் அவர்கள் தினமும் பேருந்தில் படும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல..
ஒரு வேலைக்கு போகும் பெண்ணின் கஷ்டநஷ்டங்களை அருமையா விளக்கி இருக்கீங்க.
//கோபத்தில் நான் முறைத்தவாறு திட்ட எத்தணித்தேன், அவனோ எதுவுமே தெரியாதவன் போல் பாவனை செய்துகொண்டு நகர்ந்துகொண்டான்.//

என்ன எத்தணித்தேன்....?
தெரிஞ்சே தான் பண்றான்னு புரியுதில்ல
ஏன் சும்மா இருந்தமா

ஆபிஸ்ல ஜொள்ளு விட்டவன்ட்ட "முகத்தில் அறைந்ததை போல்" பதில் கொடுக்க தெரிஞ்சுச்சுல்ல...
அந்த தைரியம் ஏன் பஸ்ல இல்ல??

நீ சும்மா இருந்தா, அவன் பஸ்ல திருட்டு சொகம் எதிர்பாக்குற பொம்பளங்க லிஸ்ட்ல உன்ன சேத்திருவான். அப்படி பட்ட பொம்பளைங்களும் இருக்காங்க தான?*

அடுத்த தடவ அந்த மாதிரி நடந்தா தைரியமா சத்தம் போட்டு,
செருப்பால அடி

also check
*(http://vranjana.wordpress.com/2009/11/05/real-inspiration/)
//வார்த்தை..

நீ சும்மா இருந்தா, அவன் பஸ்ல திருட்டு சொகம் எதிர்பாக்குற பொம்பளங்க லிஸ்ட்ல உன்ன சேத்திருவான். அப்படி பட்ட பொம்பளைங்களும் இருக்காங்க தான?*
அடுத்த தடவ அந்த மாதிரி நடந்தா தைரியமா சத்தம் போட்டு,
செருப்பால அடி//

அப்படி அடித்ததும் உண்டு நண்பரே..
அப்படி அடிக்க ஆரம்பித்தால் காலையும் மாலையும் என் செருப்பினை, கைகளில் தான் அணிந்து கொள்ள வேண்டும். அடித்தாலும் திருந்தாத ஜென்மங்களை என்ன செய்வதென்றுதான் தெரிவதில்லை.
இவ்வாறான சூழலில் பெரும்பாலான பெண்கள் சகித்துக்கொண்டு நகர்ந்துவிடுகின்றனர்.
ஹரிஸ் said…
கடுமையான தாக்கா இருக்கு..

சங்கவியின் கமாண்ட் தான் எனதும்..
//கிறுக்கியது: இந்திரா !
வகை: ஆதங்கம் //

உங்க ஆதங்கம் புரியுது.
இது ஒருவேளை உங்களோட உண்மையான அனுபவமா இருந்தா இப்போ உங்களுக்கு அமைதி தேவை சகோ.
Be cool!!
இந்நிலை என்றேனும் மாறக்கூடும்!
நம்பிக்கையுடன்...
இனி இது போல் யார் நடந்தாலும் அடித்து விடுங்கள்....
//இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் “அவ கேரக்டர் சரியில்லையாமே.. அவ ஒரு மாதிரியான டைப்“னு ஒரே போடாகப் போடுவார்கள்.

பெண்களைத் தாக்கும் கடைசி அஸ்த்திரமும் அதுதான்.

ஆதிக்க வர்க்கம், பொறாமை, வக்கிரபுத்தி என் மாறிப் மாறிப் பேர் சூட்டிக்கொண்டாலும் பொதுவாக மனிதர்களின் கீழ்த்தரமான புத்தியையே இது வெளிப்படுத்துகிறது.

பேருந்தில் உரசியவனும் சரி, அலுவலகத்தில் உலவுபவர்களும் சரி, உருவம் வேறாக இருந்தாலும், உள்ளம் ஒரே மாதிரியான அழுக்கு நிறைந்தது தான். //

மலையத்தனை சிரமம் உண்டு..

எதிர்கொண்டே ஆக வேண்டும். இன்னமும் நிறைய தூரம் கடக்க வேண்டி இருக்கிறது.. இதுதான் ஆரம்பம். வாழ்வின் புரிதல்.

சரியாகிவிடும். மனம் தளராதீர்.

God Bless YOU
நல்லா கிழிச்சி இருக்கிங்க... உங்க ஆபிஸ்ல இருக்க ஜன்மங்க படிக்காட்டியும் எவனாவது ஒரு பொறுக்கி கண்ணுல கூடவா படாம போய்டும்..... நாக்க புடுங்கிட்டு சாகட்டும்.
நல்லா சொல்லியிருக்கீ்ங்க!!
மிகவும் கோபத்திலிருக்கிற போது எழுதிய இடுகை என்பது நன்றாகத் தெரிகிறது. :-(
@ இந்திரா said...
//அப்படி அடித்ததும் உண்டு நண்பரே..
அப்படி அடிக்க ஆரம்பித்தால் காலையும் மாலையும் என் செருப்பினை, கைகளில் தான் அணிந்து கொள்ள வேண்டும். அடித்தாலும் திருந்தாத ஜென்மங்களை என்ன செய்வதென்றுதான் தெரிவதில்லை.
இவ்வாறான சூழலில் பெரும்பாலான பெண்கள் சகித்துக்கொண்டு நகர்ந்துவிடுகின்றனர்//

//அப்படி அடித்ததும் உண்டு நண்பரே.. //

உளமார‌ பாராட்டுகிறேன். இந்த செய்கையே பெரும் போற்றுதலுக்குரியது.


//பெரும்பாலான பெண்கள் சகித்துக்கொண்டு நகர்ந்துவிடுகின்றனர்//

உண்மை தான். ஆனால் இந்த விஷயத்தில் சகிப்புத்தன்மை தவறானது.

நான் ஒரு வாதத்திற்காக கேட்கிறேன் (உங்களை தனிப்பட்ட முறையில் அல்ல, சகித்துத்தான் போகவேண்டியுள்ளது எனும் அனைத்து பெண்களையும்),

அது என்ன காம வக்கிரத்தை சகித்துக்கொள்வது.

அந்த செயலுக்கு மறைமுகமாக ஒத்துச்செல்கிறீர்களா?

இதற்கு பதில் சூடான டிபன்பாக்ஸால் முதுகிலோ, இடுப்பிலோ சூடு வைத்தால் சகித்துக்கொண்டு சும்மா இருப்பீர்களா?

மானத்திற்காக வெட்கப்படுகிறேன் என்று சொல்ல முடியாது. அப்ப‌டியெனில் பொதுவெளியில் பேச்சே வராது, இதை பற்றி.

//அப்படி அடிக்க ஆரம்பித்தால் காலையும் மாலையும் என் செருப்பினை, கைகளில் தான் அணிந்து கொள்ள வேண்டும்.//

பரவாயில்லை. தினம் தினம் படிய வைக்க வேண்டும், தலை முடியை கூட; இல்லையென்றால் பரதேசியை விட கேவலமாகிவிடும்.

இந்த பிரச்சனை ஒரே நாளில் தீராதும் தான். ஆனால், நினைத்தால் அட்லீஸ்ட் நீங்கள் செல்லும் அந்த ஒரு டிரிப்பிலாவது மாற்றத்தை கொண்டு வரலாம். மூன்று பெண்கள் சேருங்கள், ஹாண்ட் பாக்கில் எக்ஸ்டிரா செருப்போடு. பஸ்ஸில் ஏறியவுடன் சற்று சத்தமானவே பேசுங்கள், "இன்னைக்கு எவன் செருப்படி வாங்கபோறானு பாப்போம்" என்று.

வெகு விரைவில் மாற்றத்தை காண்பீர்கள்.

வாழ்த்துக்கள்.
தங்களை தொடர்பதிவு எழுத அழைத்துள்ளேன் வந்து செல்லுங்கள்...
http://verumpaye.blogspot.com/2010/11/blog-post_26.html
அப்படி அடித்ததும் உண்டு நண்பரே..
அப்படி அடிக்க ஆரம்பித்தால் காலையும் மாலையும் என் செருப்பினை, கைகளில் தான் அணிந்து கொள்ள வேண்டும்.
//

அவ்வளவு மோசமாக ஆகிவிட்டதா அம்மிணி?..

விரைவில் பெண்கள் கத்தி எடுத்துக்கொண்டு, போக வெச்சுடுவாங்க போல இந்த மிருக ஜாதிகள்..

:-(
ரொம்ப மோசமா இருக்கே.. இப்படியெல்லாமா இருக்காங்க.. பேசாம போகும் பொது கையில கத்தி எடுத்திட்டு போங்க...
மிகவும் வருந்துகிறேன்!

தைரியமான எதிர்நோக்கலை பாராட்டுகிறேன்! இன்னும் கடுமை காட்டினாலும் தவறில்லை!
என்ன சொல்றதுன்னு தெரியலை.
Chitra said…
ஆதிக்க வர்க்கம், பொறாமை, வக்கிரபுத்தி என் மாறிப் மாறிப் பேர் சூட்டிக்கொண்டாலும் பொதுவாக மனிதர்களின் கீழ்த்தரமான புத்தியையே இது வெளிப்படுத்துகிறது.


..... rightly said, Indra.
விஜய் said…
வக்கிர புத்தி ஆண்களை துகிலுரித்து காட்டியிருக்கிறீர்கள்

தங்கள் துணிவுக்கு பாராட்டுகள் சகோ

விஜய்
//பேருந்தில் உரசியவனும் சரி, அலுவலகத்தில் உலவுபவர்களும் சரி, உருவம் வேறாக இருந்தாலும், உள்ளம் ஒரே மாதிரியான அழுக்கு நிறைந்தது தான்.//

செம்ம சாட்டையடி...

விழிப்புணர்வுடன் சிந்திக்கக்கூடிய உங்களது ஆதங்களை வேதனையோடு பதிவு செய்துள்ளீர்கள்
ஆண்கள் பண்ற டார்ச்சரை விட பெண்களே பெண்களுக்கு பண்ற டார்ச்சர் ஓவர் போல இருக்கே
S Maharajan said…
நல்லா சொல்லியிருக்கீ்ங்க!!
////ஆதிக்க வர்க்கம், பொறாமை, வக்கிரபுத்தி என் மாறிப் மாறிப் பேர் சூட்டிக்கொண்டாலும் பொதுவாக மனிதர்களின் கீழ்த்தரமான புத்தியையே இது வெளிப்படுத்துகிறது. பேருந்தில் உரசியவனும் சரி, அலுவலகத்தில் உலவுபவர்களும் சரி, உருவம் வேறாக இருந்தாலும், உள்ளம் ஒரே மாதிரியான அழுக்கு நிறைந்தது தான்.///

ச்சே... என்ன கோபம் நண்பி....!

இத... நா சொன்னா...
என்னையே திருப்பிபீங்க....!

அனுபவிக்கும்போதுதான் வலி தெரியும்...!

இன்னும் மனிதர்கள்...
"மிருக மூகமூடியணிந்த மனிதனாய்" உலவிக்கொண்டுதான் இருக்கிறான்...!

வெறுங்கையை வீசினால் குரங்கு முறைக்கும்...! நம்மை நோக்கி ஓடி வரும்...!
கோலெடுத்தால்தான் குரங்கு ஆடும்... நம்மைக் கண்டு ஓடும்...!
இது இயல்பு...!

எனவே...!
"ப்ளூ கிராஸ்" அமைப்பில் சேர்ந்து...

மிருகத்திடம் அன்பு காட்டாதீர்கள்...! அது கடிக்கும்...!
மிருகத்தை அடிக்க கற்றுக்கொள்ளுங்கள்...! அது மிரண்டு ஓடும்...!
மனித மிருகங்களை சேர்த்துதான் சொல்கிறேன்..! நண்பி...!
இதே போல் நெருப்பாகவே இருங்கள்..

பெண்களிடமும் தவறு உள்ளது என்பதையும் ஒத்துக் கொண்டு உள்ளீர்கள்.. அந்தப் பக்குவத்திற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..

ஆண்கள் ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள் என்று தெரிந்திருந்தும், பார்வையை உறுத்தும் ஆடைகளை ஏன் அணிகிறார்கள் என்று கேட்கப் பட்ட போது கிடைத்த பதில் கஷ்டப் படுத்தியது.. அது பெண்களுக்குள்ளேயே ஒரு ஆணைத் திரும்பிப் பார்த்து ஜொள் விடச் செய்யும் போட்டி முயற்சியாம்...

மற்றபடி அலுவலகத்தில் இதற்காகவே திரிந்து வரம்பு மீறும் ஆண்களுக்கு எனது கண்டனம்.

கேலி கிண்டல்கள் வேறு.. ஆனால் அவை விபரீதமாகதபடி அளவாக வைத்துக் கொள்ள வேண்டும்..
R.Gopi said…
நாட்டில் வக்கிர புத்திகளுக்கு ஒரு குறைவும் இல்லை...

இது போன்ற நிகழ்வுகளை புறம் தள்ளாமல், தைரியமாக எதிர்கொண்டு கடும் எதிர்ப்பை தெரிவித்தால், அவர்கள் திருந்த வாய்ப்புண்டு...

இது போன்று உங்களுக்கு நிகழ்ந்தமைக்கு வருந்துகிறேன்...

உங்கள் மன தைரியத்தை பாராட்டுகிறேன்...
ஹேமா said…
பெண்ணாகப் பிறந்த அன்றே எழுதிய தலைவிதி இது இந்திரா....
காதையோ கண்ணையோ அவங்க பக்கம் குடுக்காம போய்ய்க்கிட்டே இருந்தா சொல்ற வரைக்கும் சொல்லிட்டு அலுத்துப்போய் இருந்திடுவாங்க.

நெருங்கி வாறவங்களை அந்தந்த நேரம் முகத்துக்கு நேரா உங்களையும் தாக்காம அவரையும் வலிக்காம பதில் சொல்லிடணும்.என் பிழைப்பு இப்பிடித்தான் போய்க்கிட்டு இருக்கு.

ஆனால் ஒன்று... வெள்ளைக்காரனால்,வேற்று நாட்டவரால் எந்தத் தொல்லையுமே இல்லை இன்றுவரை !
//மிகவும் வருந்தப்படுகிறேன் இப்படிப்பட்ட மிருகம் முழுக்க பிறந்த மனங்களின்...மானங்கெட்ட செயலைக்கண்டு.பெண்ணுக்கு மட்டும் என்ன தலையெழுத்த பர்மனண்ட் மார்க்கர்லயா எழுதி இருக்காங்கனு களமாடும் உங்க தைரியமான எதிர்நோக்கலை பாராட்டுகிறேன் தோழி...சில இடங்களில் பெண்களே பெண்களுக்கு எதிரியாய் இருகின்றனர்.துரியோதனனின் துகிழுரிந்த்த பாஞ்சாலி கதைகள் படிக்க நேரும் போதும் மன வருத்தம் கொள்கிறேன் தோழி...எது எப்படி இருந்தாலும் பாதுகாப்பு உணர்வு அவசியம்...இரு மனங்களுக்கும் அழகிய குடும்பம் இருக்கே கொஞ்சம் எண்ணிப்பார்க்கனும் இல்லயா...உக்காருங்க இப்டி வாடிகாலாய் சில நல்ல நட்பு உங்களுக்கு துணையாய் இருக்கோம்...எனது இருதய நான்கு அறைகளும் அமைதிக்கான நோபிள் பரிசு வாங்கப் பிறந்த்துதான் ...இருந்தும் கொஞ்சம் கோவப் பட்டுத்தான் போய்டேன் என் வர்க்கத்தில் இப்படி களைமண்டி கிடக்கும் காட்சிகளைப் படித்ததும்.இப்போ உங்களுக்கும் எனக்கும் மன அமைதி தேவைன்னு நினைக்கிறேன்.மீண்டும் பார்ப்போம் ..
Niroo said…
attention everyone only women get hurt by this kind of abuse also men get hurt
Niroo said…
we live with that animal and saints so be safe take care
HariShankar said…
// ஆதிக்க வர்க்கம், பொறாமை, வக்கிரபுத்தி என் மாறிப் மாறிப் பேர் சூட்டிக்கொண்டாலும் பொதுவாக மனிதர்களின் கீழ்த்தரமான புத்தியையே இது வெளிப்படுத்துகிறது.

பேருந்தில் உரசியவனும் சரி, அலுவலகத்தில் உலவுபவர்களும் சரி, உருவம் வேறாக இருந்தாலும், உள்ளம் ஒரே மாதிரியான அழுக்கு நிறைந்தது தான். // 1000%.

ஒரே கோபமா வருது ... வருத்தமாவும் இருக்கு ... நீங்க சொன்ன சம்பவம் இது அன்றாடம் பயனிக்குற பெண்களின் நிலைமையும் இப்படி தானே இருக்கு. எத்தன நாளைக்கு தான் சகிச்சுட்டு இருக்குறது ???

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்