பெண் மனசு - தொடர்பதிவு
"பெண் மனசு" என்ற தலைப்பில் பெண் மனதை பெண்ணின் குரலில் வெளிப்டுத்தும் பாடல் பற்றி எழுத அழைத்த வெறும்பயலுக்கு நன்றி.
தமிழில் பல்வேறு பாடல்கள் இந்த வகையைச் சார்ந்திருப்பினும் யோசித்த மறுநொடியே மனதில் எழுந்த இரண்டு பாடல்களை இங்கு கொணர்ந்துள்ளேன்.
முதல் பாடல் பிடித்ததற்கான காரணம்: காதலின் வலியையும் அதன் இழப்பையும் அழகாய்ச் சொல்லும் பாடல்.
படம்: ஆயிரத்தில் ஒருவன்
பாடல்:
மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே மிதக்கிறேன்
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே
இது தான் வாழ்க்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே
ஓஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்ததே - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..
உன் கரம் கோற்கையில்
நினைவு ஓர் ஆயிரம்
பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது
ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்ன இழந்தேனென..
இரண்டாவது பாடல் பிடித்ததற்கான காரணம்: தொடர் தோல்விகளைச் சந்திக்கும் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை அழகாய்ச் சித்தரிக்கும் பாடல்.
படம்: அவள் அப்படித்தான்
பாடல்:
வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை..
யாரும் தேரில் செல்ல..
ஊரில் தேரும் இல்லை..
எங்கோ.. ஏதோ.. யாரோ..
அழகான மேடை சுகமான ராகம்
இடையினில் வேலிகள் உண்டு
ஆறாத புண்ணும் நூறான முள்ளும்
ஆடிடும் கால்களில் உண்டு
எதிலேயும் பெண்மை சுகம் காணவில்லை..
எரியாத தீபங்கள் பெண்ணா..
ஊரெங்கும் மேடை ராஜாக்கள் வேஷம்
உண்மையில் ராஜாக்கள் இல்லை
ஊரெங்கும் சோலை ரோஜாக்கள் வாசம்
உண்மையில் ரோஜாக்கள் இல்லை
உலகத்தில் பெண்மை உயர்வாகவில்லை
உதவாத புஷ்பங்கள் பெண்கள்..
இந்தப் பாடலை தரவிறக்கம் செய்ய
.
Comments
மழை தூறும் காலம்///
எனக்கு பிடித்த பாடல் என் பிரென்ட் இந்த பாடலை தான் எப்போதும் பாடி கொண்டு இருப்பார்'
இப்படியெல்லாம் போஸ்ட் போட்டா எப்படி கலாய்க்கிறது?//
ஹா ஹா ஹா
இப்ப என்ன பண்ணுவீங்க..
இப்ப என்ன பண்ணுவீங்க..
இந்த 2 பாடல்களையுமே நான் கேட்டதில்லை....
நல்ல பாடல்கள் சகோதரி.. அழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி ...
ஆனாலும் கூட ரசிக்க முடிந்தது.
நல்ல தெரிவுகள்
இரண்டாவது கேட்டதில்ல,கேக்குறேன்.
ஏன் இந்திரா இரண்டு பாடலோட முடிச்சிட்டீங்க?!..
:)
சோக கீதங்கள் என்றும் மனதை விட்டு அகலாமல் மனதை மயக்கும் என்பதனை நிருபீத்து காட்டியுள்ளீர்கள்....
பகிர்விறகு நன்றி....
good selection...
athaane