என் காதலே..


உயிர் வாழ சுவாசம் அவசியமாம்..
எங்கிருந்தாலும் உடனே வா..
நான் சுவாசிக்க வேண்டும்!!உன் கோபத்தின் மௌனங்களும்
என் செல்லமான சமாதானங்களும்
அவ்வபோது உறுதி செய்கின்றன...
நம் காதலின் வலுவை.."அப்படியா?" என்ற உன் ஒற்றை வார்த்தை
நீட்டுகின்றன என் பேச்சுக்களின் அளவை..
சிறுபிள்ளையாய் நான் விவரிப்பதை
சொல்லாமல் ரசிக்கும் தருணங்களில்
எனக்கேன் தெரிவதில்லை?
ஏற்கனவே நீ அறிந்தவை தான் என்று????எனது தோள்கள் உன் காதுகளுடன்
ரகசியம் பேச வேண்டுமாம்..
சற்றே சாய்ந்துகொள்ளேன் ..உலகமே
என் கைக்குள் அடங்கியது..
என் உள்ளங்கையில் உனது ரேகைகள்...
.
.

Comments

நீங்க மதுரை இந்திராவா
கவிதை+காட்சி..அனைத்தும் அருமை...
கிறுக்கல் ப்ளாக் என்னாச்சு!?
//சங்கவி said...

நீங்க மதுரை இந்திராவா//


இந்த ட்யூப்லைட் கொஞ்சம் லேட்டா தான் எரியும் போல....
ஹிஹிஹி..
//குணசேகரன்... said...

கவிதை+காட்சி..அனைத்தும் அருமை...//


நன்றி நன்றி...
//வால்பையன் said...

கிறுக்கல் ப்ளாக் என்னாச்சு!?//


முந்தைய பதிவுலயே சொல்லிட்டேனே யாரோ சூன்யம் வச்சுட்டாங்கனு...

அதுனால என்ன நண்பரே... அசராம தொடர்ந்து எழுதி இம்சை குடுத்துகிட்டே இருப்போம்ல...
//"அப்படியா?" என்ற உன் ஒற்றை வார்த்தை
நீட்டுகின்றன என் பேச்சுக்களின் அளவை..
சிறுபிள்ளையாய் நான் விவரிப்பதை
சொல்லாமல் ரசிக்கும் தருணங்களில்
எனக்கேன் தெரிவதில்லை?
ஏற்கனவே நீ அறிந்தவை தான் என்று????//

அருமை..
மறுபடியும் ஏதோ பண்ணியிருக்கீங்க.. இந்த பிளாக் கூகுள் ரீடர்ல வரலை.. மற்ற பலொயர்களுக்கு வருதான்னு தெரியலை.. பதிவு அப்டேட் ஆக மாட்டேங்குது..
>>
உலகமே என் கைக்குள் அடங்கியது..
என் உள்ளங்கையில் உனது ரேகைகள்...

kalakkal
//வெட்டிப்பேச்சு said...

//"அப்படியா?" என்ற உன் ஒற்றை வார்த்தை
நீட்டுகின்றன என் பேச்சுக்களின் அளவை..
சிறுபிள்ளையாய் நான் விவரிப்பதை
சொல்லாமல் ரசிக்கும் தருணங்களில்
எனக்கேன் தெரிவதில்லை?
ஏற்கனவே நீ அறிந்தவை தான் என்று????//

அருமை..//


நன்றிங்க..
//வெட்டிப்பேச்சு said...

மறுபடியும் ஏதோ பண்ணியிருக்கீங்க.. இந்த பிளாக் கூகுள் ரீடர்ல வரலை.. மற்ற பலொயர்களுக்கு வருதான்னு தெரியலை.. பதிவு அப்டேட் ஆக மாட்டேங்குது..//

தகவலுக்கு நன்றி..
இதோ பாக்குறேங்க..
//சி.பி.செந்தில்குமார் said...

>>
உலகமே என் கைக்குள் அடங்கியது..
என் உள்ளங்கையில் உனது ரேகைகள்...

kalakkal//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
உயிர் வாழ சுவாசம் அவசியமாம்..
எங்கிருந்தாலும் உடனே வா..
நான் சுவாசிக்க வேண்டும்!!

ஆகா அருமையான யோசனை
உண்மையான காதலர்களுக்கு
ஒரு உருக்கமான வரி இது!....

நல்ல கவிதை வாழ்த்துக்கள்.
ஆஹா ஆஹா ஆஹா... மிதமான இதமான கவிதையின் வார்த்தைகள்.. புத்திசாலிக்கு வாழ்த்துக்கள்
//அம்பாளடியாள் said...

உயிர் வாழ சுவாசம் அவசியமாம்..
எங்கிருந்தாலும் உடனே வா..
நான் சுவாசிக்க வேண்டும்!!

ஆகா அருமையான யோசனை
உண்மையான காதலர்களுக்கு
ஒரு உருக்கமான வரி இது!....

நல்ல கவிதை வாழ்த்துக்கள்.//


கருத்துக்கு நன்றிங்க
//மாய உலகம் said...

ஆஹா ஆஹா ஆஹா... மிதமான இதமான கவிதையின் வார்த்தைகள்.. புத்திசாலிக்கு வாழ்த்துக்கள்//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
Tamilthotil said…
உயிர் வாழ சுவாசம் அவசியமாம்..
எங்கிருந்தாலும் உடனே வா..
நான் சுவாசிக்க வேண்டும்!!
அருமை இந்திரா...

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..