அழகாய் ஒரு “அ“..வெகுநேரம் ஆகியும் ஓயவில்லை
பக்கத்து வீட்டுச் சிறுவனின் அழுகைச் சத்தம்.
பொறுக்க முடியாமல் பெற்றவளிடம் வினவினேன்.
கோபத்தில் அடித்ததாக சிடுசிடுத்தாள்..

பதிலேதும் பேசாமல் திரும்பி வந்தேன்.
.
மறுநாளும் தொடரவே மறுபடியும் பதறினேன்..
அடுத்து வந்த நாளும் அப்படியே தொடரவே
பொறுக்கமுடியாமல்
துலாவினேன் காரணியை.
சிலேட்டில்
போடவில்லையாம்.
இதற்கா இப்படி என அங்கலாய்த்தேன்..
தொடர்கிறதே!! என சலித்துக்கொண்டாள்.
.
பொறுப்பேற்று அழைத்து வந்தேன் அழுபவனை.
விசும்பல் ஓய காத்திருந்து

விளையாட்டுச் சிறுவனிடம்
சிலேடெடுத்தேன்.
யூ டூ புரூட்டஸ்என்பது போல் பதுங்கினான்.
.
அடுத்த நாளும் கூட்டி வந்தேன்
முறைத்த தாயை
கவனியாதது போல..
ஒருவழியாய் கரம் பிடித்து
முயன்றேன்.
அழகாய்
வரவே அடுத்ததாய் அவன் முறையென
தனியே எழுதச் சொன்னேன்..
மழங்க மழங்க
விழித்தவன் மெதுவாய் கிறுக்கினான்..
முட்டை மட்டும்
போட்டுவிட்டு
முழுதாய் தப்பித்தான்.
.
மறுண்ட விழிகளுடன்
மறுநாளும் அதே பாடு தான்..

மயக்கமே வந்ததாய் மறுபடியும்
தொடர்ந்தேன்..
ம்ஹும்...

மாறவே இல்லை அவன் பிடிவாதம்.
.
நாட்கள் தொடரவே
நானும்
திகைத்தேன்..
இன்று மட்டுமென

இளிப்புடன் சலுகை
கேட்டேன்..
இனி முடியாது என அனுப்பி
வைத்தாள்.
.
செய்வதறியாது செயல் மறந்து
குழம்பியபடி
எழுதியதால்
கோணலானது என்
வும்..
பார்த்துக் கொண்டிருந்தவன்
பட்டென பிடுங்கி
அய்யே.. இப்டியா போடுவாங்க.. மக்கு..என்று
எழுதிக் காட்டினான்.. அழகாய் ஒரு
”.
.
.

Comments

அற்புதம்..

உண்மையிலேயே மிக அருமையான கவிதை..

பழைய பிளாக் முகப்பில் இருக்குமே அந்த குழந்தை.. அதன் முகத்தை மறக்க முடியலைங்க.. முடிஞ்சா அந்தப் படத்தையே இதிலயும் வைங்க..

GOD BLESS YOU.
சந்ரு said…
அருமை தொடர்ந்து எழுதுங்கள்
class! கடைசியில நீங்க குழந்தையாகிட்டீங்களே
ஹேமா said…
குருவுக்கே போதிச்சாச்சா.
இப்பிடித்தான் இருக்கணும் !