கேட்டதில் ரசித்தது..


படம்: உன்னுடன்
இசை: தேவா

பாடல்: கோபமா என் மேல் கோபமா
குரல்: ஹரிஹரன்


கோபமா என் மேல் கோபமா
பேசம்மா ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன் பார்வை ஆறு வந்து பாய்ந்திடுமா
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
உள் உயிரே உருகுதம்மா...ஆ...

(கோபமா)

உன் பார்வை வடிக்கின்ற பாலொளியில் என் வானம் விடியுமடி
உன் பாதம் படிகின்ற சிறு துகளில் என் ஆவி துடிக்குதடி
கோபமா என் மேல் கோபமா
என் மார்பு கீரடி பெண்ணே
அதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே (2)
கண்கள் சாமரம் வீசிடுமா
இல்லை காயத்தில் கத்தி வீசிடுமா

(கோபமா)

நான் கண்களைத் தொலைத்துப் பிறந்திருந்தால்
இந்தக் காதல் துயரமில்லை
நீ இன்னொரு கிரகத்தில் பிறந்திருந்தால்
இந்த ஏக்கம் சிறிதுமில்லை
கோபமா என் மேல் கோபமா
என் கண்ணில் ஏனடி வந்தாய்
என் காற்றை நீ கொள்ளை கொண்டாய் (2)
மௌளனங்கள் மொழிகளின் வேஷமம்மா
மறுமொழி ஒன்று பேசிடம்மா

(கோபமா)
.
.


Comments

ஆர்வா said…
நல்ல பாட்டுதான்.. வீடியோ சேர்த்து இருந்தீங்கன்னா இன்னும் கலக்கலா இருந்திருக்கும்.. ஹி..ஹி.. ரொம்ப நாளா ஆளையே காணோம்? ராசிப்பொண்ணு எப்படி இருக்காங்க? பலியாடு எப்படி இருக்காரு?
இப்ப அப்டேட் ஆகுது. அப்புறம் அந்த பாப்பா படத்தை உங்க பிளாக் மெயின் விண்டோ (பேக்ரவுண்ட் இல்ல) மேட்டர் இருக்கற மெயின் விண்டோ சைசுக்கு பெருசு பண்ணுங்க..நல்லா இருக்கும்.
பெருசு பண்ண முடியலன்னா செண்டராவது பன்னுங்க..இப்ப அது ஒரு பக்கமா நிக்குது...
அருமை..

ரொம்ப நன்றிங்க..
//வெட்டிப்பேச்சு //

உங்கள் அக்கறைக்கும் அறிவுரைக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து இதுபோல வருகை தந்து, கருத்துக்களைத் தெரிவித்து ஊக்குவிக்க கேட்டுக்கொள்கிறேன்.

-- நட்புடன்.. இந்திரா.
எனக்கு உங்க பிளாக்ல மிகவும் பிடிச்சது. அந்த பாப்பா..சோ க்யூட்
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..