இன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்வேலைநிமித்தமா ஏதாவது இன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட Resume கொண்டு போவோம். அதை மட்டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விகள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக்கு நாம எப்படி பதில் சொல்றோம்குறத பொறுத்து, நம்மளோட திறமை, மனஉறுதி“னு பல விசயங்கள தீர்மானிப்பாங்க. வழவழ“னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்மளோட பதில் இருக்கணும்னு அவங்க எதிர்பார்ப்பாங்க.
அப்படி இன்டர்வியூ போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவா கேட்கப்படும்னு அலசலாம் வாங்க..
1. உங்களைப் பற்றிய விபரம் கூறுங்கள்?
இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப்பட்டதா இருக்கும். அதாவது உங்களோட பேரு, இடம், கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி பற்றி நீங்களே தொகுத்து சொல்லணும். (அதுக்காக உங்க வரலாறு முழுக்க சொல்லி போர் அடிச்சிடாதீங்க..)
2. உங்களைப் பற்றி சிறு விளக்கம் கூறுங்கள்?
இதுவும் முதல் கேள்வியும் ஒரே மாதிரியா தோணலாம். ஆனா இது உங்க சுய விபரம் பற்றி அல்ல, உங்கள் குணநலன் பற்றியது. அதாவது நீங்க எப்படிப்பட்டவர்னு சுருக்கமா சொல்லணும். (எதுக்கும், போறதுக்கு முன்னாடி உங்க நண்பர்கள்கிட்ட கேட்டுத் தெரிஞ்சு வச்சுக்கங்க..)
3. இதற்கு முன் பணிபுரிந்த அனுபவம் பற்றி கூறுங்கள்?
அனுபவம்ங்குறது பெரும்பாலான நிறுவனங்கள்ல அவசியமானதா மாறிடுச்சு. இதைப் பொறுத்து வேலை வாய்ப்புகள் அமையும் சூழலும் உருவாகிடுச்சு. (இஷ்டத்துக்கு அள்ளி விடக்கூடாது.. அதுக்கான சான்றிதழும் இருக்கணும்..)
4. பொழுதுபோக்கு அம்சங்கள் என்ன?
தூங்குவேன், டிவி பாப்பேன்“னு கேனத்தனமா பதில் சொல்லாம, அவங்களை கவர்ற மாதிரியான, உறுப்படியான பொழுதுபோக்கு அம்சங்கள சொல்லனும். அதுக்காக நமக்குத் தெரியாத விசயங்களப் பத்தி பந்தாவா சொல்லிட்டு முழிக்க்க்கூடாது. ஏன்னா கேள்விகள் அதப்பத்தியும் வரக்கூடும்.
5. ஏற்கனவே பணி செய்த நிறுவனத்திலிருந்து விலகக் காரணம்?
“அதிகமா லீவு போட்டேன், அதுனால அவங்களே தொரத்திட்டாங்க“னு ரொம்ம்ம்ம்ப நேர்மையா பதில் சொல்லக்கூடாது. உங்கள ரொம்ம்ம்ப நல்ல்ல்ல்லவர்னு நெனைக்கிற மாதிரியான காரணத்தை சொல்லணும்.
6. இந்த நிறுவனத்தில் உங்களது பங்களிப்பு என்னவாக இருக்கும்?
இது உங்களோட உழைப்பு பற்றிய கேள்வி. நீங்க இதுக்குக் கொடுக்கும் பதில் அவங்களுக்கு உங்க மேல நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தணும். (அதுக்காக ஓவர் ஆக்டிங் குடுக்கக்கூடாது.. அடக்கிவாசிங்க..)
7. என்ன சம்பளம் எதிர்பார்க்குறீர்கள்?
இது ரொம்பவே முக்கியமான கேள்வி. கூடுமானவரை நாம வாய திறக்காம இருக்குறதே நல்லது. ஏன்னா நாம குறிப்பிடும் தொகை, ஒருவேளை அவங்க நிர்ணயிச்சு வச்சிருக்குறத விட குறைவானதா இருக்கலாம். (பெர்ஃபார்மன்ஸப் பொறுத்து சம்பளம் குடுங்க“னு சொல்லிட்டு பம்மிடலாம்..)
8. உங்கள் பலம், பலவீனமாக எதனைக் கருதுகிறீர்கள்?
இது உங்கள நீங்க எந்த அளவுக்குப் புரிஞ்சு வச்சிருக்கீங்கங்குறத காட்ட உதவும். அதுமட்டுமில்லாம, உங்களோட நடத்தையை எடைபோட உதவும்.. ஜாஆஆஆஆக்கிரதை. (அதுக்காக தம் அடிக்கிற பழக்கம் பத்தியெல்லாம் ஓப்பனா சொல்லப்படாது..)
9. இந்த நிறுவனம் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் என்ன?
இது ரொம்பவே முக்கியமான கேள்வி. குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, அந்த நிறுவனம் பத்தியும், அந்த வேலை பத்தியும் தெளிவா தெரிஞ்சுவச்சுக்குறது அவசியமானது. (ஜஸ்ட்.. விளம்பரம் பாத்தேன், அப்ளை பண்ணேன், தட்ஸ் ஆல்“னு தெனாவெட்டா பதில் சொல்லி ஆப்பு வாங்காதீங்க..)
10. பணிநிமித்தம் பயணம் செய்ய சம்மதிப்பீர்களா?
வேலை காரணமா, சில நாள் வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதுக்கு நீங்க தயாரா இருக்கிங்களானு முன்னாடியே தீர்மானிச்சு வச்சுக்குறது அவசியம். (கூட வேலைபாக்குற பொண்ணை துணைக்கு அனுப்புவீங்களானு கேட்றாதீங்க...)
11. முந்தைய நிறுவனத்தில் ஏதேனும் இக்கட்டான சூழ்நலையை கையாண்ட அனுபவம் உண்டா?
வேற நிறுவனத்துல வேலைபார்த்த அனுபவம் இருந்துச்சுனா, இந்தக் கேள்விக்கான பதில், நம்மளோட திறமையை யூகிக்கச் செய்யும். (ஆபீசுக்கு லீவு போட்டுட்டு, பாட்டி செத்துப்போய்ட்டாங்கனு சமாளிச்ச அனுபவத்த சொல்லி வச்சுடாதீங்க..)
12. தனித்து செயல்பட விருப்பமா? அல்லது குழுவாக செயல்பட விருப்பமா?
இது அவங்கவங்க, தன்மேல வச்சிருக்குற நம்பிக்கையப் பொறுத்து பதிலளிக்கணும். (நா தனியா தான் வருவேன்.. ஆனா தனியாள் இல்லேனு பன்ச் அடிச்சுடாதீங்க..)
13. இங்கு வேலை கிடைக்காதபட்சத்தில் உங்களுடைய பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்?
மனசுக்குள்ள கெட்ட வார்த்தைல திட்டுவேன்“னு சொல்லத் தோணும். ஆனா சொல்லிடாதீங்க.. இது உங்க விடா முயற்சி, நம்பிக்கை பத்தின கேள்வியா இருக்கும். இந்த பதிலை வச்சுக்கூட வேலை கிடைக்கலாம்.
14. எவ்வளவு காலம் இங்கே பணி செய்யத் தயாராக இருக்கிறீர்கள்?
“ஃப்ரெண்ட் கம்பெனில அப்ளை பண்ணிருக்கேன். கிடைச்சதும் ஓடிடுவேன்“னு அதிமேதாவித்தனமா பதில் சொல்லக் கூடாது. இதுக்கு குறிப்பிட்ட காலவரையறை எதுவும் சொல்லாம, கடைசிவரைக்கும் இருப்பேன்னு சொல்லணும். தொடர்ந்து வேலைசெய்ய முன்வரும்பட்சத்துல வாய்ப்புகள் தரப்படலாம்.
15. உங்களுக்கு, எங்களிடத்தில் கேட்கவேண்டிய கேள்விகள் ஏதாவது இருக்கின்றனவா?
இது, நிறுவனம் அல்லது பணி பற்றி, நமக்கு ஏதாவது சந்தேகங்கள் இருக்காங்குற நோக்கத்துல கேட்கப்படுது. திறம்பட கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இந்தக் கேள்வியில இருந்தும் நம்மளோட, தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஆராயப்படும். (இங்க எத்தன பொண்ணுங்க வேலை பாக்குறாங்க“னு கேட்டுறாதீங்க...)
**********************************************
நிறுவனங்களப் பொறுத்து, இன்னும் பல கேள்விகள் கேட்கப்படலாம். கேள்விகள் எதுவாகயிருந்தாலும் தைரியமா, தடுமாற்றமில்லாமல நாம கூறும் பதில்கள் ரொம்பவே அவசியம். நம்மகிட்டயிருந்து வெளிப்படும் பதில்கள், சம்பந்தப்பட்டவர்க்கு திருப்தியளிக்கும் பட்சத்துல, அதற்கான பலன் நிச்சயம் பாசிடிவ்வாக அமையும்.
வாழ்த்துக்கள்.
.
.

Comments

>>(பெர்ஃபார்மன்ஸப் பொறுத்து சம்பளம் குடுங்க“னு சொல்லிட்டு பம்மிடலாம்..)

haa haa ஹா ஹா அப்டி சொல்லிட்டா ரொம்ப கம்மியான சம்பளம் தானே கிடைக்கும்?
Unknown said…
2nd candidate
அப்படியென்றால் இவ்வளவு அலார்ட்டாக சென்றால் வேலை நிச்சயம்...

சூப்பர்...
Unknown said…
//ஃப்ரெண்ட் கம்பெனில அப்ளை பண்ணிருக்கேன். கிடைச்சதும் ஓடிடுவேன்“னு அதிமேதாவித்தனமா பதில் சொல்லக் கூடாது//
நீங்க ஒழுங்கா நடந்துக்கிறவரைக்கும்னு சொல்லலாம்! :-)
SURYAJEEVA said…
உங்களை பற்றி நீங்கள் தற்பொழுது வேலை பார்க்கும் நிறுவனத்தின் மேலதிகாரியிடம் கேட்டால் உங்களை பற்றி நல்லா விதமாக கூறுவாரா அல்லது மோசமாக கூறுவாரா?
இந்த கேள்விக்கு பதிலாக நீங்கள் இரண்டில் எது தேர்ந்தெடுத்தாலும் டேஞ்சர் தான்...
நல்லா விதமாக கூறுவார் என்று கூறினால், ஏன் தற்பொழுது வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து உங்களை துரத்தி விட பார்க்கிறார்களா என்றும்..
மோசமாக தான் கூறுவார் என்றால் அவ்வளவு மோசமானவரா என்றும் பதில் வர வாய்ப்புண்டு..
இந்த கேள்வி எங்காவது இக்கட்டான நேர்முக தேர்வில் மட்டுமே கேட்கப் படும் என்பது சின்ன ஆறுதல்..
நல்ல பயனுள்ள பதிவு.
பகிர்வுக்கு நன்றிகள்.
பாராட்டுக்கள்.
பயன் படுத்திக்கொள்பவர்களுக்கு வாழ்த்துக்கள். vgk
அன்பின் இந்திரா

பயனுள்ள தகவல்கள் - வேலை வாய்ப்பு நேர்முகத் தேர்வு பற்றிய தகவல்கள் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
(நா தனியா தான் வருவேன்.. ஆனா தனியாள் இல்லேனு பன்ச் அடிச்சுடாதீங்க..)

பயனுள்ள தகவல்கள் -
Anonymous said…
நல்ல பதிவு..நாம அவங்கள என்ன கேட்கலாம்னு அடுத்த பதிவு போட்டீங்கன்னா இன்னும் சிறப்பு...
மிகவும் பயனுள்ள ஒரு நல்ல பதிவு.வாழ்துக்கள் அக்கா,தொடர்ந்து எழுதுங்கள்...
Unknown said…
ஓகே வாசிச்சாச்சு
நோடேத் வித் தேங்க்ஸ்
ஓகே அங்க அங்க பஞ்சு வச்சு பதிவு போடு இருகீங்களே
நீங்க பேரரசு பக்கத்து வீடா
Unknown said…
ஆக மொத்தம் அப்பாடக்கரா(!) பதில் சொல்லணும் அப்படிங்கறீங்க...அதாவது முதல்ல பம்மி அப்புறம் பாயனுங்கறீங்க...பகிர்வுக்கு நன்றிங்க சகோ!
புதியதாக வேலைக்கான நேர்முக தேர்வுக்கு போகிறவர்களுக்கு நல்ல பயனுள்ள தகவலாக இருக்கிறது..
Anonymous said…
பயனுள்ள பதிவு....
அடைப்பு குறியில் தங்கள் சொல்லிருக்கும் பதிலில்
பிறை நிலா தோன்றியது ....
பயனுள்ள தகவல்கள்.
நல்ல பயனுள்ள தகவல். நன்றி
ஆர்வா said…
அதென்ன கடைசி கேள்வி மட்டும் ஆண்களுக்கு? வன்மையாக கண்டிக்கிறேன்....
//என்ன சம்பளம் எதிர்பார்க்குறீர்கள்?
இது ரொம்பவே முக்கியமான கேள்வி. கூடுமானவரை நாம வாய திறக்காம இருக்குறதே நல்லது. ஏன்னா நாம குறிப்பிடும் தொகை, ஒருவேளை அவங்க நிர்ணயிச்சு வச்சிருக்குறத விட குறைவானதா இருக்கலாம். (பெர்ஃபார்மன்ஸப் பொறுத்து சம்பளம் குடுங்க“னு சொல்லிட்டு பம்மிடலாம்..)
//

இது உங்க confidence level ஐ reflect பண்ணாதோ..?
uDanz said…
http://udanz.com

ப்திவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் திரட்டி.
//சி.பி.செந்தில்குமார் said...

1st candidate//


வாங்க செந்தில் சார்..
//சி.பி.செந்தில்குமார்//

// ஜீ... //

//# கவிதை வீதி # சௌந்தர் //

//suryajeeva //

//வை.கோபாலகிருஷ்ணன் //

//cheena (சீனா) //


கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
//இராஜராஜேஸ்வரி //

//koodal bala //

//ரெவெரி //

//ஸ்வீட் ராஸ்கல் //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//siva //

//விக்கியுலகம் //

//RAMVI //

//சின்னதூரல் //

//முனைவர்.இரா.குணசீலன் //

//காந்தி பனங்கூர் //கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க..
//கவிதை காதலன் said...

அதென்ன கடைசி கேள்வி மட்டும் ஆண்களுக்கு? வன்மையாக கண்டிக்கிறேன்....//


சரி சரி விடுங்க...
கவிதை என்னாச்சு மணி சார்???
//வெட்டிப்பேச்சு said...

//என்ன சம்பளம் எதிர்பார்க்குறீர்கள்?
இது ரொம்பவே முக்கியமான கேள்வி. கூடுமானவரை நாம வாய திறக்காம இருக்குறதே நல்லது. ஏன்னா நாம குறிப்பிடும் தொகை, ஒருவேளை அவங்க நிர்ணயிச்சு வச்சிருக்குறத விட குறைவானதா இருக்கலாம். (பெர்ஃபார்மன்ஸப் பொறுத்து சம்பளம் குடுங்க“னு சொல்லிட்டு பம்மிடலாம்..)
//

இது உங்க confidence level ஐ reflect பண்ணாதோ..?//


அப்படியும் வைத்துக்கொள்ளலாம். பதில்கள் அவரவர் தன்னம்பிக்கையைப் பொறுத்தது.
கருத்துக்கு நன்றி நண்பரே..
வருகை தொடரட்டும்.
//சங்கர் நாராயண் @ Cable Sankar //

//uDanz //


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Jaleela Kamal said…
மிக அருமையாக பாயிண்ட் பாயிண்டா கொடுத்து இருக்கீங்க
அருமை
பத்து வருடம் முன் இதை எனக்கு யாரவ்து சொல்லி இருந்தா ந்ல்ல இருந்திருக்கும்
CS. Mohan Kumar said…
Very useful article. I will share and give link to this post in my blog.
baleno said…
இன்டர்வியூ
நிலைமை வர வர மோசமாகி கொண்டு வருகிறது. வேலையில் தொடர்ந்து இருப்பதுவே ஒரு பெரிய சாதனையாக உள்ள உலக நடைமுறையில் நகைச்சுவையுடன் கலந்து கூறிய உங்கள் ஆலோசனைக்கு நன்றி.
stalin wesley said…
அசத்துறீங்க போங்க ....
ஹா ஹா ஹா ஹா ஆஹா அசத்திட்டீங்க போங்க...!
//TallyKarthick said...

நன்றி//


நன்றிங்க..
கருத்துக்களைப் பகிர்ந்த, பகிரப்போகும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்..
இந்திரா, தங்களின் பதிவு பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்