திக்.. திக்.. (இதயம் பலவீனமாயிருப்பவர்கள் இந்தக் கதையை படிக்க வேண்டாம்..)


சிவா காயத்ரியை உயிருக்கு உயிராக நேசித்தான். அவளும் அப்படிதான். ஒருவர் இல்லாமல் ஒருவர் வாழவே முடியாது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழமாக உருவானது. அவர்கள் காதல் நாளுக்கு நாள் வலுவாக, ஆழமாக, சுவாசமாக வளர்ந்துகொண்டே போனது..
சிவாவின் குடும்ப நிலை.. காயத்ரியின் படிப்பு..  இது தான் அவர்களுக்கு தடையாக இருந்தது. எவ்வளவு நாட்களானாலும் காத்திருக்க தயாராக இருந்தனர்,  மாறாத காதலுடன்.
திடீரென்று அவளுடைய அப்பாவுக்கு அவர்கள் காதல் தெரிய வந்தது. வழக்கமான அப்பா தான். அடி உதை மிரட்டல்.. வீட்டில் சிறை வைக்கப்பட்டாள். அவர்களால் சந்திக்கவே முடியவில்லை. வேறு வழியில்லாமல் அவள் அப்பாவிடம் அவளை பெண் கேட்டு சிவா வீட்டிற்கே போனான். சொந்த பந்தங்கள் சேர்ந்து அவனை விரட்டி விட்டது..
அன்று இரவு தொலைபேசியில் இருவரும் அழுதனர்.  மறுநாள் காலை வீட்டை விட்டு வெளியேறுவது என்று முடிவு செய்தனர்.
யாருக்கும் தெரியாமல் சிவா ரயில் நிலையம் வந்து அவளுக்காக காத்திருந்தான். நேரம் கடந்தது.. காயத்ரி வரவில்லை. காத்திருந்தான்.. வரவே இல்லை.
குழம்பிய அவன் அவளுடைய வீட்டிற்கு சென்று பார்க்க முடிவு செய்து புறபட்டான். வழியில் அவன் நண்பர்கள் வழிமறுத்து, அந்த அதிர்ச்சியான தகவலை அவனிடம் கூறினர்.
காயத்ரி தற்கொலை செய்துகொண்டாள்
ஆம்.. காயத்ரி கிளம்பும்போது அவளுடைய தந்தை பார்த்துவிட்டதாகவும் அவளை அடித்ததாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார்.
அவன் அவனாக இல்லை.. வெறி பிடித்தவனாய் ஓடினான். அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.  காயத்ரியை புதைத்து விட்டார்கள்.
அழுதான்.. அழுதான்.. அவனால் அதை மட்டும் தான் செய்ய முடிந்தது..
பல நேர தேற்றளுக்குப் பிறகு வீடு வந்தான்..
வெகுநேரம் பித்துப் பிடித்தவன் போல இருந்தவன், திடீரென கத்தியால் தனது மணிக்கட்டை அறுத்துக்கொண்டான். ஆனால் விதி வலியது. காப்பாற்றப்பட்டுவிட்டான்.
வேறு வழி? காலம் போன போக்கில் நடைபிணமாய் நடமாடினான்.
ஒரு நாள் மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தான். காயத்ரியின் நினைவில் இருந்து அவனால் மீள முடியவில்லை..
 "ஏன் என்னை தனியா விட்டுட்டுப் போன காயத்ரி?  நான் என்ன தப்பு பணினேன்?"  கதறி அழுதான்.
அப்போது திடீரென்று தொலைபேசி சிணுங்கவே எடுத்து பார்த்தான். Display-ல் காயத்ரி என்று வந்தது.. குழப்பத்தில் நெற்றியைச் சுருக்கினான் சிவா.
ஒருவேளை அவள் வீட்டிலிருந்து வேறு யாரவது அழைக்கலாம் என்று காதில் வைத்து..
"ஹலோ" என்றான்.
"சிவா..  சிவா... " என்று அழுகுரல் கேட்டது.
ஒரு நிமிடம் நடுங்கித்தான் போனான்.. உடல் சட்டென வியர்த்தது..
"இது.. இது... என் காயத்ரியின் குரல்.. ஆனால்.. ஆனால்.. எப்படி?" பதறினான்.. பயந்தான்..
என்ன செய்வதென அறியாமல் அழைப்பை துண்டித்து விட்டான்..
தனக்கு ஏற்பட்டது கனவாக, பிரமையாக கூட இருக்கலாம். சதா காயத்ரியையே நினைத்துக்கொண்டிருப்பதால் ஏற்பட்ட உளைச்சலாக இருக்கலாமென ஆறுதல் படுத்தினான்.
மீண்டும் அங்கு மௌனம் நிலவியது. நிமிடங்கள் கரைந்தன..
ஒன்று.. இரண்டு.. மூன்று..
முழுதாக பதினைந்து நிமிடத்திற்குப் பின் மீண்டும் மணி ஒலித்தது.
அதே காயத்ரி..
உள்ளூர பயம் இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினான் சிவா.
சிவா: "ஹலோ.."
காயத்ரி: "சிவா.. சிவா..  எப்படி இருக்கீங்க?"
மீண்டும் அதே குரல்.. யாராவது தன்னை காயத்ரி குரல் மாதிரி பேசி ஏமாற்றுகிறார்களோ???
இல்லை சத்தியமாக இல்லை. காயத்ரியின் குரல் அவனுக்கு அத்துப்படி. எத்தனையோ நாட்கள் காதலாகக் கேட்டு மயங்கிய அதே குரல்.. நிச்சயம் இது காயத்ரி தான். ஆனால்.... ஆனால்...
ஆயிரம் கேள்விக் கணைகள் அவனுள் எழ ஆரம்பித்த நொடி.. மீண்டும் அந்தக் குரல்..
காயத்ரி: “ப்ளீஸ் சிவா.. பேசுங்க.. ஏன் எங்கிட்ட பேச மாட்டீங்கிறீங்க??
தொண்டைக்குழியில் ஏற்பட்ட நடுக்கத்தை அடக்கிக்கொண்டு பேசினான் சிவா.
சிவா: "நீ........ நீ இறந்துட்டனு சொன்னங்க.. ஆனா ...." குரலில் பயம் தெரிந்தது..
"புதைச்ச இடத்துக்கு கூட நான் வந்து பாத்தேனே... பின்ன எப்படி..." புரியாத புதிராய் கேட்டான்.
காயத்ரி: "ஹா ஹா ஹா ”..
பேரொளியாய், இடியென ஒரு சிரிப்பொலி எழுந்து அடங்கியது..
மீண்டும் பேச ஆரம்பித்தாள்.. புதைச்சா என்ன? நான் எங்க இருந்தாலும் உங்க காயத்ரி தான். என்னால உங்க கூட பேசாம இருக்கவே முடியாது.. செத்தாலும் கூட.."
முகத்தில் வியர்வை வழிய, துடைக்க மறந்தவனாய் பயத்தில் உறைந்தவனாய் சிவா..
சிவா: “எ... எ... என்ன சொல்ற?? அதெப்படி முடியும்???
அப்போது... அப்போது.. திடீரென ஒரு குரல் கேட்கிறது...
அது....
அது...

எங்களுடைய டவர் எங்கும் இருக்கும்...
ஏர்டெல்.. ஒரு அற்புதமான நெட்வொர்க்..
டின் டி டி டின் டின்….
----------------------
இன்னும் என்ன பாக்குறீங்க??? கதை அவ்ளோ தான்.
(பின்ன தலைப்பு ஏன் அப்படி வச்சிருக்கனு கேக்குறீங்களா??? பதிவு தான் டெரரா இல்ல.. தலைப்பாவது டெரரா இருக்கட்டுமேனு தான்... எப்பூடிஈஈஈஈ...)
போய் வேலையப் பாருங்க.
(மறக்காம பின்னூட்டம் போடுங்க.. இல்லேனா இந்த மாதிரி நெறைய கதை சொல்ல ஆரம்பிச்சிடுவேன்.. ஜாஆஆஆஆக்கிரதை..)
.
.

Comments

ok,..ok..

இது மீள்பதிவுன்னாலும்.. ஆபத்திலிருந்து மீண்ட பதிவுதான். இப்ப update ஆகுது..

பதிவு நல்லாயிருக்கு.

நீங்க ad filmkku script எழுதலாம் போலயே..

இதையே air tel ad ஆ வெச்சுக்கலாம்.


வாழ்த்துக்கள்.
//இன்னும் என்ன பாக்குறீங்க??? கதை அவ்ளோ தான். //

என்னது கதை அவ்வளவு தானா....? ஆமா நீங்க இவ்வளவு நேரம் கதையா சொன்னீங்க...

மக்களே நல்லா கேளுங்க மேடம் கதை சொன்னாங்களாம்.....
பதிவு அடிக்கடி காணாம போறதுதாங்க ரொம்ப டெரர் ஆ இருக்கு.

நெனெச்சாலே திக்..திக்..திக்குங்குது.
Unknown said…
கத கதைன்னு வந்தா கொலை வெறியோட விளபரத்தாக்குதல் ஹிஹி!
Unknown said…
ஸ்ஸ்ஸ்...ஸப்பா!! :-)
ஆர்வா said…
நான் டெரர் விமர்சனமா போடுறேன்னு நீங்களும் என்னை பயங்காட்ட ஆரம்பிச்சிட்டீங்களா? எங்க அப்பாவும் மேலோகத்துலதான் இருக்காரு.. அவருக்கு ஒரு லைன் போட்டுக்கொடுக்க முடியுமா?
என்னங்க சீரியஸா கொண்டு பொய் சிரிக்க வச்சுபுட்டிங்க.. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்
Anonymous said…
பதிவு நல்லாயிருக்கு....என் முதல் வருகை..சுற்றிப்பார்த்து வருகிறேன்...
//வணக்கம் இந்திரா. உங்க பதிவுகளை சில நாட்களாக் படித்து வருகிறேன்.அருமையாக இருக்கு.
இந்த கதையின் தலைப்பை பார்த்ததும் திக் திக் கதை என்று நினைத்தேன் ஆனால் முடிவை பார்த்ததும் சிரித்து விட்டேன். நன்றாக இருக்கு. //
என்ன அக்கா இப்படி பண்ணிடீங்ளே,நான் என்னென்னமோ யோசிச்சிட்டேன்.பல்ஸ் எகிறிடுச்சி கொஞ்ச நேரத்துல.பட் சூப்பர்.சொன்னாமாரி நீங்க படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதலாமே.ரொம்ப நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்,தொடர்ந்து எழுதுங்கள்.
இது AIRTEL விளம்பரம் இல்லை... HUTCH விளம்பரம்.
vinu said…
thirumbavum unga mokkayai meeels pottu aarambichchaachaaaaa?????
vinu said…
he he he me just now 12th finishedddddddddduuuuuu
//வெட்டிப்பேச்சு said...

ok,..ok..

இது மீள்பதிவுன்னாலும்.. ஆபத்திலிருந்து மீண்ட பதிவுதான். இப்ப update ஆகுது..

பதிவு நல்லாயிருக்கு.

நீங்க ad filmkku script எழுதலாம் போலயே..

இதையே air tel ad ஆ வெச்சுக்கலாம்.


வாழ்த்துக்கள்.//



நன்றிங்க..
//சங்கவி said...

//இன்னும் என்ன பாக்குறீங்க??? கதை அவ்ளோ தான். //

என்னது கதை அவ்வளவு தானா....? ஆமா நீங்க இவ்வளவு நேரம் கதையா சொன்னீங்க...

மக்களே நல்லா கேளுங்க மேடம் கதை சொன்னாங்களாம்.....//


உங்களுக்காகவே இன்னும் இந்த மாதிரி பத்து கதைகள் சொல்றேன் இருங்க...
//வெட்டிப்பேச்சு said...

பதிவு அடிக்கடி காணாம போறதுதாங்க ரொம்ப டெரர் ஆ இருக்கு.

நெனெச்சாலே திக்..திக்..திக்குங்குது.//


அட ஆமாங்க.. என்ன பண்றதுனே தெரில.. இத்தனைக்கும் செட்டிங்ஸ் எல்லாம் சரியா தான் இருக்கு. என்ன பிரச்சனைனு புரிய மாட்டிங்குது.
//விக்கியுலகம் said...

கத கதைன்னு வந்தா கொலை வெறியோட விளபரத்தாக்குதல் ஹிஹி!//


எப்பூடீ...
//ஜீ... said...

ஸ்ஸ்ஸ்...ஸப்பா!! :-)//


பயந்துட்டீங்களா???? இல்ல மொக்கை ஓவரா???
//கவிதை காதலன் said...

நான் டெரர் விமர்சனமா போடுறேன்னு நீங்களும் என்னை பயங்காட்ட ஆரம்பிச்சிட்டீங்களா? எங்க அப்பாவும் மேலோகத்துலதான் இருக்காரு.. அவருக்கு ஒரு லைன் போட்டுக்கொடுக்க முடியுமா?//


பழையபடி கவிதைப் போடுங்க.. இல்லேனா இப்படிதான் செய்வேன்.
//மாய உலகம் said...

என்னங்க சீரியஸா கொண்டு பொய் சிரிக்க வச்சுபுட்டிங்க.. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்//


ஷாக் ஆனதுக்கு தாங்க்ஸ்ங்க...
//ரெவெரி said...

பதிவு நல்லாயிருக்கு....என் முதல் வருகை..சுற்றிப்பார்த்து வருகிறேன்...//


தாராளமா சத்திப்பாருங்க..
ஆனா கண்டிப்பா திரும்ப வரணும்.. சொல்லிட்டேன்.
//RAMVI said...

//வணக்கம் இந்திரா. உங்க பதிவுகளை சில நாட்களாக் படித்து வருகிறேன்.அருமையாக இருக்கு.
இந்த கதையின் தலைப்பை பார்த்ததும் திக் திக் கதை என்று நினைத்தேன் ஆனால் முடிவை பார்த்ததும் சிரித்து விட்டேன். நன்றாக இருக்கு. //


கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க..
//ஸ்வீட் ராஸ்கல் said...

என்ன அக்கா இப்படி பண்ணிடீங்ளே,நான் என்னென்னமோ யோசிச்சிட்டேன்.பல்ஸ் எகிறிடுச்சி கொஞ்ச நேரத்துல.பட் சூப்பர்.சொன்னாமாரி நீங்க படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதலாமே.ரொம்ப நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்,தொடர்ந்து எழுதுங்கள்.//


பதிவுல மொக்கை போட்றதுக்கே எல்லாரும் பயந்து ஓடுறாங்க.. இதுல ஸ்கிரிப்ட் வேறயா???
//Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

இது AIRTEL விளம்பரம் இல்லை... HUTCH விளம்பரம்.//


அப்படினா ரெண்டுபேர் கிட்டயும் கமிஷன் வாங்கிடலாம்னு சொல்லுங்க..
//vinu said...

thirumbavum unga mokkayai meeels pottu aarambichchaachaaaaa?????//


என்ன பண்றது??? உங்களை எல்லாம் பழிவாங்கணுமே..
//vinu said...

he he he me just now 12th finishedddddddddduuuuuu//


ட்ரீட் எங்கப்பா???
pichaikaaran said…
Creative writting . Nice
vinu said…
இந்திரா said...
///vinu said...
he he he me just now 12th finishedddddddddduuuuuu//
ட்ரீட் எங்கப்பா???
///


namma vootukup poi paarunga ungalukku treat angey irruku.....
Anonymous said…
மறக்காம பின்னூட்டம் போடுங்க.. இல்லேனா இந்த மாதிரி நெறைய கதை சொல்ல ஆரம்பிச்சிடுவேன்.. ஜாஆஆஆஆக்கிரதை
நான் ஜாக்கிரதையா இருப்பேன்
CS. Mohan Kumar said…
தங்கள் இன்டர்வியூ குறித்த பதிவை எனது ப்ளாகில் பகிர்ந்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்

http://veeduthirumbal.blogspot.com
//மோகன் குமார் said...

தங்கள் இன்டர்வியூ குறித்த பதிவை எனது ப்ளாகில் பகிர்ந்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்

http://veeduthirumbal.blogspot.com//


நன்றிங்க..
ravi said…
என்ன கொடுமை ...ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு ?????
Anonymous said…
//பின்ன தலைப்பு ஏன் அப்படி வச்சிருக்கனு கேக்குறீங்களா??? பதிவு தான் டெரரா இல்ல.. தலைப்பாவது டெரரா இருக்கட்டுமேனு தான்... எப்பூடிஈஈஈஈ.//

எப்பூடிஈஈஈஈ ஈ யா படிச்சு முடிகிற வரைக்கும் முகத்துல ஈ ஆடல, ஆனா அப்புறம் தெரியுது சீனுக்குக் குடுத்துட்டாங்க பெரிய பல்பு னு.

சுவாரசியமான எழுத்துக்கள் அருமை
நைஸ் ஸ்டோரி ..கதை முடிஞ்சப்புறம் சொன்ன இரண்டு லைன் திக் ...திக்.....
:)))))))))))))))))))))))))))))))))))))))))))))

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்