பின்னூட்டம் போடும் புண்ணியவான்களே...வலையுலகத்துல என்ன பிரபலமாயிருக்கோ இல்லையோ.. டெம்ப்ளேட் கமெண்ட் குடுக்குறது ரொம்ப பிரபலமாயிட்டு வருது. பதிவுகள படிக்கிறாங்களோ இல்லையோ, நல்லாயிருக்கு, அருமை, அப்டி இப்டினு ஏதாவதொரு டெம்ப்ளேட் பின்னூட்டம் மூலமா அட்டெண்டன்ஸ் போட்டுட்டு “எஸ்“ஸாயிட்றாங்க.
நாம என்னதான் மாங்கு மாங்குனு பதிவுகள எழுதினாலும், படுபாவிங்க ஒரே ஒரு ஸ்மைலி போட்டுட்டு ஓடிட்றாங்க.. ஏதாவதொரு மொக்கை ஜோக் எழுதினாலும் அதே பின்னூட்டம் தான், அறிவியல், கவிதை, கதை முயற்சி, தகவல் களஞ்சியம்னு வேற பதிவுகள் எழுதினாலும் அதே ஒற்றை ஸ்மைலி பின்னூட்டம் தான். என்ன ஒண்ணு.. சந்தோசமான பதிவுனா சிரிக்கிற ஸ்மைலி, சோகமான பதிவுனா அழுகுற ஸ்மைலி.. அவ்ளோ தான்.
பின்னூட்டங்கள்ங்குறது பதிவெழுதுறவங்கள ஊக்கப்படுத்தி, அடுத்தடுத்து எழுதத் தூண்டுற விதமா அமையணும். ஆனா இப்ப வலையுலகத்துல அந்த நிலைமை இல்லவேயில்லைனு சத்தியம் கூட பண்ணலாம்.
நமக்கு யார் தொடர்ந்து பின்னூட்டம் போட்றாங்களோ அவங்களோட ப்ளாக்குக்கு மட்டும் தான் போகணும்னு சில பதிவர்கள் சபதம் எடுத்துக்குறாங்க. அப்டி போட்ற பின்னூட்டம் உருப்படியா இருந்தா கூட பரவாயில்ல.. ஏதோ கடமைக்கு நானும் பின்னூட்டம் போட்றேன்னு போடுவாங்க. பதிவ படிச்சாங்களா இல்லையானு அந்த கமெண்ட பாத்தாலே தெரியும்.
சிலர், மீ த பர்ஸ்ட், வடை, சுடுசோறு அப்டினு போட்டுட்டு காணாம போய்டுவாங்க. இது எதுக்காக போட்றாங்கனே தெரிய மாட்டீங்கிது. இந்த கமெண்ட் போட்றதுல இருக்குற வேகம், பதிவ முழுசா படிச்சிட்டு கருத்து தெரிவிக்கிறதுல இருக்குறதில்ல. இதையெல்லாம் விட “இருங்க படிச்சிட்டு வரேன்“னு ஒரு கமெண்ட் வரும் பாருங்க.. பதிவெழுதி, பப்ளிஷ் பண்ணின அடுத்த நொடி இந்த கமெண்ட் வந்திடும். ஆனா பாவம் அவங்களுக்கு என்ன வேலையோ என்னவோ, திரும்பி வரவே மாட்டாங்க. (அந்த அளவுக்கு உங்க பதிவுகள் இருக்குனு சொல்றீங்களா??? இது என் பதிவுகள மட்டும் சொல்லலங்க.. பொதுவா சொல்றேன்.)
அருமை, அற்புதம், சூப்பர்“னு சிலர் கமெண்ட் போடுவாங்க.. நாலு பக்கம் மாய்ந்து மாய்ந்து எழுதுனாலும் ஒரே வார்த்தைல “சப்“னு சொல்லிடுவாங்க. பதிவ படிக்கலனாலும், இல்ல அறைகுறையா படிச்சாலும் இந்த கமெண்ட் வந்துடும். எந்த ரயிலப் புடிக்க இப்டி அவசர கமெண்ட் போட்றாங்களோ தெரில.
அதுலயும் சிலர், ஏற்கனவே வந்த, முந்தின கமெண்ட காப்பியடிச்சு “ரிப்பீட்டு“னு போட்ருவாங்க. அதுல கூட அவசரம் தான். இதுல சில நல்லவங்களும் இருக்காங்க. டெம்ப்ளேட் கமெண்ட் போட்டுட்டு ப்ராக்கெடெல டெம்ப்ளேட் கமெண்ட்னு ஒத்துக்குவாங்க..
சிலர் பகிர்வுக்கு நன்றி, கலக்கல் பதிவு, வாழ்த்துக்கள்“னு வெறுமனே சொல்லிட்டுப் போவாங்க. எந்த மாதிரியான பதிவு போட்டாலும் சரி (18+னாலும் கூட) இந்தப் பின்னூட்டம் வந்திடும். அதுலயும் சிலர், பதிவுகளுக்கு பின்னூட்டம் போடாம தங்களோட ப்ளாக்குக்கு விளம்பரம் குடுத்துட்டுப் போவாங்க. இன்னும் சிலர், முந்தைய பின்னூட்டம் போட்ட தங்களோட நண்பர்கள் கிட்ட, மாமா மச்சினு அரட்டைய போட்டுட்டு போவாங்க. சரி பேசுறது தான் பேசுறாங்க.. பதிவு பத்தின கருத்த சொல்லிட்டு பேசலாமே.. ம்ஹூம்.
இந்த மாதிரி பின்னூட்டங்கள் மொக்கைப் பதிவுகளுக்கு வந்தா கூட பரவாயில்லை. பல நல்ல, சிறப்பான பதிவுகளுக்கும் வரும்போது நொந்துக்க வேண்டியதாயிருக்கு. எழுதப்படும் பதிவுகள் பற்றிய சரமாரியான விமர்சனங்கள், சண்டைகள் ஏற்படுத்துற உற்சாகமும் ஊக்கமும், இந்த மாதிரியான டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்ல அடிபட்டுப்போகுது.
இந்தப் பின்னூட்டங்கள் பிரதிபலிக்கும் கருத்தான “பதிவுகளுக்கு சரியான புரிதல்களோ, மதிப்புகளோ கிடைக்கப்படவில்லை“ என்பதை விட, பதிவுகள் படிக்கப்படாமல் இருக்கின்றன என்ற நிலை எவ்வளவோ பரவாயில்லையே.
இப்ப கூட பதிவ முழுசாப் படிக்காம, கடைசி பாராவ மட்டும் Copy and Paste பண்ணி
// இந்தப் பின்னூட்டங்கள் ப்ரதிபலிக்கும் கருத்தான “பதிவுகளுக்கு சரியான புரிதல்களோ, மதிப்புகளோ கிடைக்கப்படவில்லை“ என்பதை விட, பதிவுகள் படிக்கப்படாமல் இருக்கின்றன என்ற நிலை எவ்வளவோ பரவாயில்லையே.//
அருமை“ ---------- அப்டினு ஒரே வரில கமெண்ட் போடுவாங்க..
ஹூம்ம்.. என்னத்த சொல்ல..
.
.

Comments

\\அதுலயும் சிலர், பதிவுகளுக்கு பின்னூட்டம் போடாம தங்களோட ப்ளாக்குக்கு விளம்பரம் குடுத்துட்டுப் போவாங்க.\\

இது தினத்தந்தி, தினமணி பத்திரிகையில பிட்நோட்டீஸ் வைச்சிக் கொடுக்கிறாங்கள்ல... அதுமாதிரிதான். இதுக்கு நீங்க பிரபலமாயிட்டீங்கன்னு அர்த்தம்... உங்க வலைத்தளத்தை அதிகம்பேர் பார்க்க வர்றாங்கன்னு அர்த்தம். அட உண்மைதாங்க....
டெம்ப்ளட் கமெண்டுன்னா என்னங்க?
பின்னூட்டத்துக்கு பின்னால இத்தன பிண்ணனி இருக்கா?
kobiraj said…
// இந்தப் பின்னூட்டங்கள் ப்ரதிபலிக்கும் கருத்தான “பதிவுகளுக்கு சரியான புரிதல்களோ, மதிப்புகளோ கிடைக்கப்படவில்லை“ என்பதை விட, பதிவுகள் படிக்கப்படாமல் இருக்கின்றன என்ற நிலை எவ்வளவோ பரவாயில்லையே.//
அருமை“ ---------- அப்டினு ஒரே வரில கமெண்ட் போடுவாங்க..அண்ணா நான் அப்பிடியே போடலன்கன்னா .நீங்க ரொம்ப பிரபலமா ,அப்பிடியே வலையுலக்குக்கு புதியவனான என்னையும் கவனிங்க
சார்லி சாப்ளினா!நான் யாரோ புது ஜேம்ஸ்பாண்ட்ன்னு நினைச்சேன்:)

அதென்ன பழைய நண்பர்களுக்கு மட்டும் செய்வினை?புதிய நண்பர்கள் தப்பித்தார்கள்:)
//குடந்தை அன்புமணி said...

\\அதுலயும் சிலர், பதிவுகளுக்கு பின்னூட்டம் போடாம தங்களோட ப்ளாக்குக்கு விளம்பரம் குடுத்துட்டுப் போவாங்க.\\

இது தினத்தந்தி, தினமணி பத்திரிகையில பிட்நோட்டீஸ் வைச்சிக் கொடுக்கிறாங்கள்ல... அதுமாதிரிதான். இதுக்கு நீங்க பிரபலமாயிட்டீங்கன்னு அர்த்தம்... உங்க வலைத்தளத்தை அதிகம்பேர் பார்க்க வர்றாங்கன்னு அர்த்தம். அட உண்மைதாங்க....//


இது வஞ்சப் புகழ்ச்சி இல்லையே...
//சங்கவி said...

:))))//


அதானே பார்த்தேன்..
முதல்ல டெம்ப்ளேட் கமெண்ட் போட்றவங்களுக்கு அபராதம் அறிவிக்கனும்பா..
//ராஜ நடராஜன் said...

டெம்ப்ளட் கமெண்டுன்னா என்னங்க?//


ரெண்டு பக்கத்துக்கு டைப் பண்ணி பதிவா போட்டா, அத படிக்காம, கேள்வியா கேக்குறீங்க???
முதல்ல பதிவ படிங்க நடராஜன் சார்.
//சேக்காளி said...

பின்னூட்டத்துக்கு பின்னால இத்தன பிண்ணனி இருக்கா?//


இதுக்கே அசந்துட்டா எப்டி? நா பாதி தான் சொல்லிருக்கேன்..
//kobiraj said...

// இந்தப் பின்னூட்டங்கள் ப்ரதிபலிக்கும் கருத்தான “பதிவுகளுக்கு சரியான புரிதல்களோ, மதிப்புகளோ கிடைக்கப்படவில்லை“ என்பதை விட, பதிவுகள் படிக்கப்படாமல் இருக்கின்றன என்ற நிலை எவ்வளவோ பரவாயில்லையே.//
அருமை“ ---------- அப்டினு ஒரே வரில கமெண்ட் போடுவாங்க..//

அண்ணா நான் அப்பிடியே போடலன்கன்னா .நீங்க ரொம்ப பிரபலமா ,அப்பிடியே வலையுலக்குக்கு புதியவனான என்னையும் கவனிங்க//


முதல் முறையா வறீங்களா??
வாங்க வாங்க..

அப்புறம் நா அண்ணா இல்ல.. அக்கா இல்லனா தோழினு சொல்லுங்க.

பிரபலம் எல்லாம் இல்லீங்க.. எதையாவது பத்த வச்சுடாதீங்கப்பா.
”// இந்தப் பின்னூட்டங்கள் ப்ரதிபலிக்கும் கருத்தான “பதிவுகளுக்கு சரியான புரிதல்களோ, மதிப்புகளோ கிடைக்கப்படவில்லை“ என்பதை விட, பதிவுகள் படிக்கப்படாமல் இருக்கின்றன என்ற நிலை எவ்வளவோ பரவாயில்லையே.//
அருமை“
நீங்க சொல்லி யாராவது அதை செய்யாமல் இருந்தால் உங்க மனசு வருத்தப்படுமே அதான் ............
இங்க பலபேரு பதிவு போட்டு பின்னூட்டம் வரமாட்டுதுன்னு கஷ்டபடுறாங்க நீங்க என்னடானா இதுக்கெல்லாம் வருத்தப்ட்டுக்கிட்டு ...
//ராஜ நடராஜன் said...

சார்லி சாப்ளினா!நான் யாரோ புது ஜேம்ஸ்பாண்ட்ன்னு நினைச்சேன்:)

அதென்ன பழைய நண்பர்களுக்கு மட்டும் செய்வினை?புதிய நண்பர்கள் தப்பித்தார்கள்:)//


பழைய நண்பர்களுக்கு என் மொக்கையைப் பற்றித் தெரியும். அதுனால பயப்படுவாங்க..
புதிய நண்பர்களுக்கு தெரியாதனால அவங்களே பிரியாணியாயிடுவாங்க.
ஹிஹிஹி.
//அஞ்சா சிங்கம் said...

”// இந்தப் பின்னூட்டங்கள் ப்ரதிபலிக்கும் கருத்தான “பதிவுகளுக்கு சரியான புரிதல்களோ, மதிப்புகளோ கிடைக்கப்படவில்லை“ என்பதை விட, பதிவுகள் படிக்கப்படாமல் இருக்கின்றன என்ற நிலை எவ்வளவோ பரவாயில்லையே.//
அருமை“
நீங்க சொல்லி யாராவது அதை செய்யாமல் இருந்தால் உங்க மனசு வருத்தப்படுமே அதான் ............
இங்க பலபேரு பதிவு போட்டு பின்னூட்டம் வரமாட்டுதுன்னு கஷ்டபடுறாங்க நீங்க என்னடானா இதுக்கெல்லாம் வருத்தப்ட்டுக்கிட்டு ...//


அப்படியில்லங்க.
பின்னூட்டம் வந்தா சந்தோசம் தான். அது கடமைக்கேனு, பதிவ படிக்காம கூட பெயரளவில் போட்றது தான் வருத்தப்பட வேண்டிய விசயம்.
Moortthi JK said…
எவ்வளவு அழகாக எழுதுறிங்க ..... நம்ப மக்கள் பாஸ்ட் புட் காலத்துல இருகாங்க .....அதனால தான் எல்லா பின்னுட்டமும் ரெடி மேட் ஆ இருக்கு... நீங்க இதுக்கு எல்லாம் பீல் பண்ணாதிங்க ..... என்ன மாதிரி யாராது ஒரு 4 பக்கத்துக்கு பின்னுட்டம் எழுதி உங்க தலைல பெரிய ஐஸ் கட்டி வெக்க மாட்டங்களா.... வேணா பாருங்க கொஞ்ச நேரத்துல உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்க போகுது.... (இது வரைக்கும் எழுதினது உங்கள மாதிரி மொக்க போட, ஆனா உங்க அளவுக்கு முடியல ) ட்ரை பண்றேன்.... இனி நிஜம்..... நல்ல இருக்கு நீங்க எழுதுறது படிக்கச்.... டெய்லி ஒரு 4 முறை உங்க வலை தளம் செக் பண்ணுவேன்.... எதாவது புதுசா வந்திருக்க..... ஆபீஸ் ல எல்லாத்துக்கும் ஆப்பு வெச்சிட்டாங்க... இந்த போஸ்ட் கூட தெரியாம தான் டைப் பண்ணறேன் ...... உங்கள் எழுத்துக்கள் தொடர வேண்டும் தோழியே ....... என்றும் நட்புடன்
Moortthi JK--- idu matum epodum enlish la than.... :)......
மாலதி said…
பின்னூட்டங்கள்ங்குறது பதிவெழுதுறவங்கள ஊக்கப்படுத்தி, அடுத்தடுத்து எழுதத் தூண்டுற விதமா அமையணும். ஆனா இப்ப வலையுலகத்துல அந்த நிலைமை இல்லவேயில்லைனு சத்தியம் கூட பண்ணலாம்.//உண்மைதாங்க....
ரொம்ப கோபமா இருப்பீங்க போல..
Anonymous said…
Long feedback comments being put in 2-3 mgs.

பின்னூட்டங்கள் ஆபாசமான சொற்களில் இருக்கக்கூடா. பழகுதமிழில் அல்லது நல்லதமிழில் இருக்கவேண்டும். இவையிரண்டையும் மையமாக வைத்து எழுதப்படும் பின்னூட்டங்கள் பதிவர்கள் போடுவார்க‌ளாயென்றால் இல்லை ! அவர்கள் எதிர்பார்ப்பது தங்கள் கருத்துக்கள் பாராட்டப்பட வேண்டுமென்பதே. மாற்றுக்கருத்தென்றாலே அவர்களுக்குக் கலக்கமேற்படுகிறது. இது பெருங்கலக்காமாவது எப்போதென்றால், ஒரு பதிவை தொடச்சியாக 10-20 பேர் பாராட்டிவிட்டால், அப்பதிவாளருக்கு ஒரு போதை வந்துவிடுகிறது. அவர்கள் மனம் மாற்றுக்கருத்தை எதிர்னோக்கவியலாபடி மரத்துவிடுகிறது. எழுத்தாளர்களுக்கு இப் போதை வெகு. அவர்கள் எதிர்க்கருத்தாளரை அசிங்கமாகத்திட்டிப் பதில் போட்டுவிடுவார்கள். ஆனால் பதிவாளர்கள் செய்வதென்னவென்றால், அவ்வெதிர்க் கருத்தாளரை அப்படியே புறக்கணித்து விடுவார்கள். அஃதாவது, வெளியிடமாட்டார்கள். வெளியிடுபவர்களும், மாற்றுக்கருத்து எங்கே தன் கருத்தைத் தவறு என்று நினைக்க வைத்துவிடுவோமென்று உடனே அடுத்த பதிவைப்போட்டு முந்தைய பதிவை மறக்கடிக்க முயல்வார்கள்.

இவர்களில் சிலர் என்ன நினைக்கிறார்கள் என்றால் மாற்றுகருத்தாளன் தன்னை பெரிய அறிவாளியென்று நினைத்துக்கொள்கிறான். அவனுக்கு நாம் ஒரு வாய்ப்பை நல்கிவிடக்கூடாதென்று. சுப்பையா அவர்களின் பதிவுகளில் மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை. ஒருதடவை நான் மாட்டிக்கொண்டேன். அவர் அசிங்கமாகத் திட்டாமல், தன் அடுத்தபதிவில் ஒரு கதை போட்டுவிட்டார். அக்கதை ஒருவன் தன்னை அறிவாளியென்று காட்டமுயன்று இறுதியில் முட்டாளாகிவிடுகிறான். இன்னொரு பதிவாளர் என் கருத்துக்களையும் அருள் (பசுமைப்பக்கங்கள்) கருத்துக்களையும் ஏற்க முடியாமல், கெட் அவுட் என்று விட்டார். தற்போது ஆங்கு நாங்கள் எழுதுவதில்லை.

to continue
Anonymous said…
சில பதிவுகளில் அப்பதிவாளர் மட்டுமல்ல, அவரின் வழமையான பின்னூட்டக்காரர்களும் மாற்றுக்கருத்தாளனை விமர்சிப்பார்கள். இங்கே (in ur blog that person has commented also !) அப்படிப்பட்டவர் ஒருவர் பின்னூட்டமிட்டிருக்கிறார். அவரால் நான் விமர்சிக்கப்பட்டேன். ஏனென்றால், அவர் பதிவாளரின் நணபர். பதிவாளரின் கருத்தை ஆதரிக்கிறார். நான் மாறுகருத்தை வைத்துவிட்டேன். அது மகா பாவமாம். He even advised me which stand to take in that issue. He commented in another blog, where I put an assenting view, thust ‘Now, u have improved!’ I responded, but my response was blocked by the blogger because both he and the commenter are friends.

இவர்கள் அனைவரும் இன்னொன்றும் நினைக்கிறார்கள்.

மாற்றுக்கருத்தாளன் வேண்டுமென்றே மாற்றுக்கருத்தை வைக்கிறான். தன்னை பெரிய அறிவாளியென காட்டிக்கொள்ள விழைகிறான்; பதிவாளரைச் சிறுமைப்படுத்தவே எழுதுகிறான் எனபது போன்று.

வினவு தளத்தில் மாற்றுக்கருத்தாளனின் ஜாதி ஆராயப்படும். ஒரு மருத்துவ மாணவியின் காதலன் கொல்லப்பட்ட பதிவில் my caste was alleged.

இந்து. காமின் அவனின் மதம் தேடப்படும். என் பின்னூட்டங்கள் ஆங்கு தற்போது ஓடிக்கொண்டிருக்கின்றன காரசாரமாக‌. பத்மநாப சுவாமி நகைகளைப்பற்றிய பதிவில். They imagined my religion because I hava Christian name. But except this aberration which I have pointed out them already, they are very liberal in releasing diametrically dissenting views against their religion. Muslims and Christians are liberally allowed to write there.

Contrary to the popular notion that with the name Hindu.com, they wd be fanatical, they r very flexible to allow contrarian views.
Anonymous said…
பதிவாளர்கள் சர்ச்சைக்குறிய தலைப்புக்களில் பதிவுகள் போடும்போது அதற்கு ஆராவது ஓரிருவராவது எதிர்கருத்து வைக்கலாமென காத்திருக்க வேண்டும். அக்கருத்துக்கள் தங்களை அவமானப்படுத்தவே என்று நினக்காமல் அக்கருத்துக்கள் சரியா இல்லையா என்று மட்டுமே ஆராய்ந்து ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுக்கும்படி செய்ய வேண்டும்.
Anonymous said…
http://veeluthukal.blogspot.com/2011/07/blog-post_31.html

மேலே நீங்கள் காண்பது மதுரை சரவணனின் 'கற்பனைத்திறன் வளர்ப்பது எப்படி?' என்ற பதிவும் ஆங்கு நானிட்ட பின்னூட்டமும். என் பின்னூட்டம் பலரின் பின்னூட்டத்துக்குப்பின்னே போடப்பட்டது என்னால், ஏனெனில் நான் போட்டால் என்ன நினைப்பாரோ என்ற தயக்கம்தான்.

போட்டுவிட்டார்; இப்போது நீங்கள் அதைப்படித்துவிட்டு இக்கேள்விகளுக்குப் பதில்கள் சொல்லலாம்

இப்பின்னூட்டம் என்னை அவரை விட அறிவாளியென்று காட்டப்போடப்பட்டதா ?
அல்லது, அவரைச் சிறுமைப்படுத்தப்போடப்பட்டதா ?
எப்படியோ கஷ்டபட்டு உங்க பதிவ படிச்சாசு, ஆனால் இந்த பின்னூட்டங்களை படிக்க தான் நெரம் இல்லை. அவ்வளவு பெரிய பெரிய பாரா(Paragraph-ஐ தான் பாரான்னு சொல்லுவோம்)-வாக எழுதி இருக்காங்க. இப்போ உங்களுக்கு சந்தோசமா?
சகோ.. நாங்கெல்லாம் டெம்ப்ளேட் கமெண்ட் ஆவது வருமான்னு நினைக்கிரோம் நீங்க என்னடான்னா?

.
.
.
ஆம் உங்கள் உணர்வுகள் புரிகிறது .. நல்ல கருத்துல்ல படைப்புகள், நிறைய மெனக்கெட்டு போடும் பதிவுகளுக்கு அது மாதிரி கமென்ட் வந்தாள் கடுப்பாகத்தான் இருக்கும்..
தோழி இந்திரா அவர்களுக்கு..

தங்களுடை ஆதங்கம் புரிகிறது. இது எல்லா பதிவர்களுக்கும் பொதுவாக இருக்கிற ஆதங்கம்தான் இன்னும் என்போன்ற கவிஞர்களுக்கு தன்னுடைய கவிதை கட்டுரைப்பற்றிய விமர்சனங்கள் தரமானதாகவும், கொஞ்சம் விரிவானதானவும் இருக்க வேண்டும் என்று ஏங்கியிருக்கிறேன்.

டெம்லெட் கமாண்ட் என்பத்ற்க்காக பதிவை படிக்க வில்லை என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. பெரிதாக இருக்கும் பதிவுகள் தாங்கள் சொல்லும் வட்டத்திற்க்குள் வரலாம் ஆனால் பதிவு சிரியதாக இருந்தாலும் கவிதை போன்றவற்றை வாசித்தபின் அருமை என்று சொல்லிவிட்டு போகிறார்கள்.... அதற்க்காக நாம் யாரையும் குறைச்சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை....
நான் படிக்கும் பதிவுகள் கண்டிப்பாக விரிவான பின்னூட்டம் அளிக்கத்தான் ஆசை ஆனால் நேரம் மிகக் குறைவு ..

நண்பகர் வட்டத்திற்க்குள் ஒரு விசிட் அடிக்கவே பின்னுட்டத்தின் அளவை குறைத்துக் கொண்டிள்ளேன்.

ஆனால் தேவையான இடத்தில் என்னுடைய விரிவான கமாண்ட் இருக்கும்...
இன்னும் சொல்லப்போனால் தேவையற்ற கமாண்ட் போடும் முறை தற்ப்போது குறைந்துக் கொண்டு வருகிறது...

நல்ல பதிவுக்கு ஒரு சிலர் நல்ல விமர்சனம் செய்தால் போதும்...

அதற்க்காக படிக்காமல் ஒரு பின்னுடடம் தருவது என்பது மிகவும் தவறான செயல்தான் அதற்க்கு அவர் வராமலே இருக்கலாம்...

சகஜமாக எடுத்துக் கொள்ளுங்கள்...

நன்றி


அன்புடன்
கவிதைவீதி செளந்தர்...
ஒரு வேளை நீங்க படிக்காதீங்க என்று பிளாக் பெயர் வைத்திருப்பதினால் இருக்குமோ...

எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியுள்ளது பாருங்க...
Rathnavel said…
மனந்தளராது எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
சந்தோசமான பதிவுனா சிரிக்கிற ஸ்மைலி, சோகமான பதிவுனா அழுகுற ஸ்மைலி.. அவ்ளோ தான்.//
Fast world. cooooool!!
டெம்பிளேட் கமெண்ட் எனக்கு போதும்.

ஆர்வமிருப்பவர்கள் படிக்கட்டும்.

கொடுத்துவைத்திருந்தால் ரசிக்கட்டும்.
பதிவினை படித்து சிந்தித்து கமெண்ட் போடுகிறேன். சில பதிவுகளை மட்டுமே பார்வையிட முடிகிறது. நண்பர்கள் பட்டியலும் குறுகிவிடுகிறது. அதேபோல் என் பதிவிற்கும் டெம்ப்ளெட் கமெண்ட் வருவதில்லை. கமெண்ட் எண்ணிக்கை குறைவு. இது பரவாயில்லைதானே. We'll get what we need.
R.Elan. said…
இந்த பதிவை முழுமையாக படித்து பார்த்தேன்.எந்த பதிவையும் முழுமையாக வாசித்து பின்னூட்டம் இடுவேன்,இல்லையெனில் நோ கமெண்ட்.அதுதான் பதிவாளருக்கு மரியாதை. பெயருக்கு வாசகர் கடிதம் எழுதும் பாட்சா பெரும்பாலான பத்திரிகைகளில் பலிக்காது.விசயம் இருந்தால் மட்டுமே அங்கே,சரியோ தவறோ பிரசுரமாகும்.பாதிதான் இப்பதிவிலா? மீதி அடுத்த பதிவில்?எதிர்பார்க்கிறோம்.
போன பதிவுல ஸ்மைலி போட்ட என்னைத்தான் திட்டுறீங்களோ....

அவ்வ்வ்வ்வ்...
Rathi said…
பதிவுலக பின்னூட்ட களேபரங்களை ஆதங்கத்தோடு சொல்லியிருக்கிறீர்கள். என்னை கவர்ந்தது, நீங்க சொன்ன "இருங்க பதிவை படிச்சிட்டு வரன்" தான். சிரித்து விட்டு நகர்ந்து விடுவேன். வடை, சுடு சோறு இதெல்லாம் ரெண்டாம் பட்சம் தான்.
பதிவுலகம் இப்படித்தான் என்று இதையும் கடந்து போக பழகிக்கொள்ள வேண்டியது தான்.
Chitra said…
யாரை குறிப்பிட்டு சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு நாளில், பல பதிவுகளை வாசித்து விட்டு, பின்னூட்டங்கள் போடும் போது விலாவரியாக சொல்லி கொண்டு இருந்தால்.... அதற்கே ஒரு நாள் போதாதே. template பின்னூட்டங்கள் கூட ஒரு பதிவரை உற்சாகப்படுத்தும் என்ற எண்ணத்தில் தான் கொடுக்கப்படுகிறது. அவர்களை வேதனைப்படுத்த என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன். அப்படிப்பட்ட பின்னூட்டங்கள் பிடிக்காத பதிவர்கள் , தங்கள் பின்னூட்ட பெட்டியின் மேலேயே ஒரு சின்ன குறிப்பு போட்டு விட்டால், பின்னூட்டம் போடாமல் சென்று விடுவோமே. :-)
ரொம்ப நேரம் யோசிச்சு இந்த பதிவு போட்டிங்களா?
ஆஹா, அருமை... தொடரவும்....!
Yoga.s.FR said…
இது வஞ்சப் புகழ்ச்சி இல்லையே? இல்லை!ஆஹா, அருமை... தொடரவும்....!நன்றி!!!!(டெம்ப்ளேட் கமெண்ட்)
baleno said…
சரியாக தான் சொல்லியிருக்கிறீர்கள்.

சிலர் மீ த பர்ஸ்ட் வடை சுடுசோறு அப்டினு போட்டுட்டு காணாம போய்டுவாங்க. இது எதுக்காக போட்றாங்கனே தெரிய மாட்டீங்கிது.

இது பற்றி நானும் பல தடவைகள் யோசித்ததுண்டு.
இந்த பதிவின் ஆதங்கத்தை ஏற்கனவே நான் ஒருவரின் பதிவில் கருத்தாக வெளியிட்டிருந்தேன்...ஆனால் நீங்கள் பதிவாகவே வெளியிட்டு சந்தோசபடுத்தியுள்ளீர்கள்... பல பதிவர்களின் ஆதங்கத்தின் வெளிபாடாய் உங்கள் பதிவு இன்று அமைந்திருக்கிறது... சமைப்பதே பசி தீர உண்பதற்காக தான்...சும்மா கொரிப்பதற்காக அல்ல என்பதை ஆணித்தரமாக நச்சென்று நெத்தியடி அடித்துவிட்டீர்கள்.... 100 பேர் வந்து வெரும் அருமை என்று சொல்லிவிட்டு செல்வதற்கு பதிலாக பத்துபேர் வந்து படித்துணர்ந்து பாராட்டினாலே போதும்..என்பதை உணர்த்திவிட்டீர்கள் நன்றி
siva said…
me the firstu...
siva said…
அப்படிப்பட்ட பின்னூட்டங்கள் பிடிக்காத பதிவர்கள் , தங்கள் பின்னூட்ட பெட்டியின் மேலேயே ஒரு சின்ன குறிப்பு போட்டு விட்டால், பின்னூட்டம் போடாமல் சென்று விடுவோமே. :-)
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
siva said…
ஆஹா, அருமை... தொடரவும்....
repeatu..
siva said…
இது பற்றி நானும் பல தடவைகள் யோசித்ததுண்டு//

romba yosikathenga boss..apram neengalum eppdi oru post potruveenga..just cool.
நீங்க சொல்வது சரிதான். சும்மா பேருக்கு பின்னோட்டம் இடுறது வேஸ்ட். உண்மைலேயே பதிவை படிச்சிட்டு தங்கள் கருத்துகளை சொல்வது தான் பல பதிவர்கள் எதிர்பார்கிறார்கள்.
// இந்தப் பின்னூட்டங்கள் ப்ரதிபலிக்கும் கருத்தான “பதிவுகளுக்கு சரியான புரிதல்களோ, மதிப்புகளோ கிடைக்கப்படவில்லை“ என்பதை விட, பதிவுகள் படிக்கப்படாமல் இருக்கின்றன என்ற நிலை எவ்வளவோ பரவாயில்லையே.//

அருமை...
பின்னூட்டம் இல்லைன்னு வருத்தப்படப்போய் இப்போ ஒவ்வொரு பின்னூட்டமும் ஒரு பதிவாப்போச்சு..
//கருத்து சொல்றதுனாலும் காரி துப்புறதுனாலும் உங்க இஷ்டமுங்க..
//

இப்படிச் சொல்லிட்டு பின்னூட்டமே இல்லைன்னு வருத்தப்படரீங்களே..

கொஞ்சம் சாக்கிரதையா இருங்க ..
ஸலாம் சகோ.இந்திரா...

உங்கள் வலைப்பூவிற்கு ஏற்கனவே நான் ஒரு முறை வந்துட்டு எதுவுமே படிக்காமே திரும்பிட்டேன்.

இன்னிக்கு மட்டும் முழுதாக படித்ததற்கு காரணம் ஏற்கனவே ஐம்பது பேர் படிச்சு இருக்காங்களே என்ற தைரியத்தில் படிக்க ஆரம்பித்தேன்.


//படிக்காதீங்க....//

---இப்படி ஒரு வலைப்பூ தலைப்பு வச்சிட்டு அப்புறம் மாங்கு மாங்குன்னு எழுதி யாரும் படிக்கலைன்னு அங்கலாய்க்கிறது பொருத்தமா இல்லையே சகோ..!


//நான் இந்திரா இம்சிக்கிறேன்..//
---இதுக்கு மேலையும் யாரும் நீங்க எழுதினதை படிப்பாங்க என்று எப்படி நினைக்கிறீர்கள்..?


முதலில் அவற்றை மாற்றுங்கள் சகோ...!
எழுதுகிறவர்களை உற்சாகப்படுத்துகிற எண்ணத்தோடு பின்னூட்டம் இட்டால், அது டெம்பிளேட் பின்னூட்டமாக இருந்தாலும் பெரிய தவறில்லை – இது எனது கருத்து!

மற்றபடி ‘வடை,சுடுசோறு,’ என்பதெல்லாம் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள்ளேயே உபயோகிக்கப்படுகின்றது. இவற்றைப் பெரிது படுத்த வேண்டியதில்லை!

இறுக்கமான வரைமுறைகளை வைத்துக் கொள்வதோ, இது சரியில்லை, அது சரியில்லை என்று ஆதங்கப்படுவதோ, வந்து வாசிக்கிறவர்களை இன்னும் தயங்க வைக்கலாம்.
//சமுத்ரா said...

good//


நன்றிங்க..
//Moortthi JK said...

எவ்வளவு அழகாக எழுதுறிங்க ..... நம்ப மக்கள் பாஸ்ட் புட் காலத்துல இருகாங்க .....அதனால தான் எல்லா பின்னுட்டமும் ரெடி மேட் ஆ இருக்கு... நீங்க இதுக்கு எல்லாம் பீல் பண்ணாதிங்க ..... என்ன மாதிரி யாராது ஒரு 4 பக்கத்துக்கு பின்னுட்டம் எழுதி உங்க தலைல பெரிய ஐஸ் கட்டி வெக்க மாட்டங்களா.... வேணா பாருங்க கொஞ்ச நேரத்துல உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்க போகுது.... (இது வரைக்கும் எழுதினது உங்கள மாதிரி மொக்க போட, ஆனா உங்க அளவுக்கு முடியல ) ட்ரை பண்றேன்.... இனி நிஜம்..... நல்ல இருக்கு நீங்க எழுதுறது படிக்கச்.... டெய்லி ஒரு 4 முறை உங்க வலை தளம் செக் பண்ணுவேன்.... எதாவது புதுசா வந்திருக்க..... ஆபீஸ் ல எல்லாத்துக்கும் ஆப்பு வெச்சிட்டாங்க... இந்த போஸ்ட் கூட தெரியாம தான் டைப் பண்ணறேன் ...... உங்கள் எழுத்துக்கள் தொடர வேண்டும் தோழியே ....... என்றும் நட்புடன்
Moortthi JK--- idu matum epodum enlish la than.... :)......//


உங்கள் கருத்துக்களுக்கு மகிழ்ச்சி மூர்த்தி.
அடிக்கடி வருகை தர கேட்டுக்குறேன்.
(அலுவலகத்துல திருட்டுத்தனமா டைப் பண்ணினதுக்கு நன்றி)
//மாலதி said...

பின்னூட்டங்கள்ங்குறது பதிவெழுதுறவங்கள ஊக்கப்படுத்தி, அடுத்தடுத்து எழுதத் தூண்டுற விதமா அமையணும். ஆனா இப்ப வலையுலகத்துல அந்த நிலைமை இல்லவேயில்லைனு சத்தியம் கூட பண்ணலாம்.//உண்மைதாங்க....//


நன்றிங்க மாலதி.
//சி.பி.செந்தில்குமார் said...

ரொம்ப கோபமா இருப்பீங்க போல..//


ஆதங்கமுங்க.. பெரும்பாலான பதிவர்களுக்கு இந்த ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது.
மற்றபடி எல்லோருமே நண்பர்கள் தானே செந்தில் சார். கோவமெல்லாம் இல்லீங்க.. சின்ன வருத்தம். சொல்லனும் தோணுச்சு அவ்ளோ தான்.
//simmakkal said...//


தங்களுடைய வெளிப்படையா நீஈஈஈஈளமான பின்னூட்டத்திற்கு என் நன்றிகள் நண்பரே.
நான் பதிவிலேயே குறிப்பிட்டிருப்பது போல, பதிவு பற்றிய விமர்சனங்களும் மாற்றுக் கருத்துக்களும் தரும் உற்சாகம், டெம்பிளேட் கமெண்டில் மறைந்துவிடுகிறது.
மாற்றுக்கருத்துக்கள் நாகரிகமான முறையில் இருப்பின், அதை பப்ளிஷ் பண்ணுவதில் எந்தவித தயக்கமும் தேவையில்லை என்பது என் கருத்து.
எல்லாமே தெரிந்தவர்கள் யாருமே இருப்பதில்லை. அப்படியெனும்போது ஒருவருக்கொருவர் தெரிந்த தகவல்களையோ மாற்றுக்கருத்துக்களையோ பரிமாறிக்கொள்ள இது ஒரு நல்ல ஊடகம் தான்.
//simmakkal said...

பதிவாளர்கள் சர்ச்சைக்குறிய தலைப்புக்களில் பதிவுகள் போடும்போது அதற்கு ஆராவது ஓரிருவராவது எதிர்கருத்து வைக்கலாமென காத்திருக்க வேண்டும். அக்கருத்துக்கள் தங்களை அவமானப்படுத்தவே என்று நினக்காமல் அக்கருத்துக்கள் சரியா இல்லையா என்று மட்டுமே ஆராய்ந்து ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுக்கும்படி செய்ய வேண்டும்.//


உண்மை தான். ஆனால் ஒரு சிலர், தமக்குப் பிடிக்காத பதிவர் என்ன பதிவு போட்டாலும் அதை மறுத்து, அநாகரிகமாக விமர்சிப்பதிலேயே குறியாக இருக்கும்பட்சத்தில் நாம் ஒன்றும் பண்ண முடியாதே..
நியாயமான, தரமான வாக்குவாதங்கள் எப்போதுமே வரவேற்கப்பட வேண்டியவை தான்.
//simmakkal said...

http://veeluthukal.blogspot.com/2011/07/blog-post_31.html

மேலே நீங்கள் காண்பது மதுரை சரவணனின் 'கற்பனைத்திறன் வளர்ப்பது எப்படி?' என்ற பதிவும் ஆங்கு நானிட்ட பின்னூட்டமும். என் பின்னூட்டம் பலரின் பின்னூட்டத்துக்குப்பின்னே போடப்பட்டது என்னால், ஏனெனில் நான் போட்டால் என்ன நினைப்பாரோ என்ற தயக்கம்தான்.

போட்டுவிட்டார்; இப்போது நீங்கள் அதைப்படித்துவிட்டு இக்கேள்விகளுக்குப் பதில்கள் சொல்லலாம்

இப்பின்னூட்டம் என்னை அவரை விட அறிவாளியென்று காட்டப்போடப்பட்டதா ?
அல்லது, அவரைச் சிறுமைப்படுத்தப்போடப்பட்டதா ?//


படித்தேன். இதில் அறிவாளி முட்டாள் என்று யாருமேயில்லை. அவரவர் கருத்துக்களை அவரவர் தெரிவிக்கலாம். பதிவர் பற்றி அல்லாமல், பதிவு பற்றிய விமர்சனம் மட்டுமே நோக்கமாக இருக்கும்பட்சத்தில் இது ஆரோக்யமான விசயம் தான்.

ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது..
"No one is perfect... that's why pencils have erasers."


கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்.
//காந்தி பனங்கூர் said...

எப்படியோ கஷ்டபட்டு உங்க பதிவ படிச்சாசு, ஆனால் இந்த பின்னூட்டங்களை படிக்க தான் நெரம் இல்லை. அவ்வளவு பெரிய பெரிய பாரா(Paragraph-ஐ தான் பாரான்னு சொல்லுவோம்)-வாக எழுதி இருக்காங்க. இப்போ உங்களுக்கு சந்தோசமா?//


சந்தோசம் தாங்க..
நேரம் கிடைக்கும் போது பின்னூட்டங்களையும் படித்து கருத்துக்களை கூறுங்கள்.. இன்னும் சந்தோசப்படுவேன்.
//# கவிதை வீதி # சௌந்தர் said...

ரைட்டு...//


நனறி சௌந்தர்
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சகோ.. நாங்கெல்லாம் டெம்ப்ளேட் கமெண்ட் ஆவது வருமான்னு நினைக்கிரோம் நீங்க என்னடான்னா?

ஆம் உங்கள் உணர்வுகள் புரிகிறது .. நல்ல கருத்துல்ல படைப்புகள், நிறைய மெனக்கெட்டு போடும் பதிவுகளுக்கு அது மாதிரி கமென்ட் வந்தாள் கடுப்பாகத்தான் இருக்கும்..//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருன்.
//# கவிதை வீதி # சௌந்தர் said...

தோழி இந்திரா அவர்களுக்கு..

தங்களுடை ஆதங்கம் புரிகிறது. இது எல்லா பதிவர்களுக்கும் பொதுவாக இருக்கிற ஆதங்கம்தான் இன்னும் என்போன்ற கவிஞர்களுக்கு தன்னுடைய கவிதை கட்டுரைப்பற்றிய விமர்சனங்கள் தரமானதாகவும், கொஞ்சம் விரிவானதானவும் இருக்க வேண்டும் என்று ஏங்கியிருக்கிறேன்.

டெம்லெட் கமாண்ட் என்பத்ற்க்காக பதிவை படிக்க வில்லை என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. பெரிதாக இருக்கும் பதிவுகள் தாங்கள் சொல்லும் வட்டத்திற்க்குள் வரலாம் ஆனால் பதிவு சிரியதாக இருந்தாலும் கவிதை போன்றவற்றை வாசித்தபின் அருமை என்று சொல்லிவிட்டு போகிறார்கள்.... அதற்க்காக நாம் யாரையும் குறைச்சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை....//


இது குறை என்றில்லை சௌந்தர். பொதுவாக பல பதிவர்களின் ஆதங்கம். மற்றபடி அனைவருமே நண்பர்களே..
//# கவிதை வீதி # சௌந்தர் said...

நான் படிக்கும் பதிவுகள் கண்டிப்பாக விரிவான பின்னூட்டம் அளிக்கத்தான் ஆசை ஆனால் நேரம் மிகக் குறைவு ..

நண்பகர் வட்டத்திற்க்குள் ஒரு விசிட் அடிக்கவே பின்னுட்டத்தின் அளவை குறைத்துக் கொண்டிள்ளேன்.

ஆனால் தேவையான இடத்தில் என்னுடைய விரிவான கமாண்ட் இருக்கும்..//


நேரமின்மை நியாயமான காரணம் தான். ஆனாலும் பதிவு போடுபவர்களுக்கு, பின்னூட்டங்கள் தானே சிறந்த டானிக்??? அது சரியாக அமைய வேண்டுமல்லவா???
//# கவிதை வீதி # சௌந்தர் said...

இன்னும் சொல்லப்போனால் தேவையற்ற கமாண்ட் போடும் முறை தற்ப்போது குறைந்துக் கொண்டு வருகிறது...
நல்ல பதிவுக்கு ஒரு சிலர் நல்ல விமர்சனம் செய்தால் போதும்...
அதற்க்காக படிக்காமல் ஒரு பின்னுடடம் தருவது என்பது மிகவும் தவறான செயல்தான் அதற்க்கு அவர் வராமலே இருக்கலாம்...
சகஜமாக எடுத்துக் கொள்ளுங்கள்...
//


பின்னூட்டங்கள் பற்றிய ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். மற்றபடி அனைவரும் நண்பர்களே.. வருகைக்கும் கருத்துக்களுக்கு நன்றி சௌந்தர்
//# கவிதை வீதி # சௌந்தர் said...

ஒரு வேளை நீங்க படிக்காதீங்க என்று பிளாக் பெயர் வைத்திருப்பதினால் இருக்குமோ...

எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியுள்ளது பாருங்க...//


ஹிஹிஹி இது ஒரு நல்ல்ல்ல்ல்ல கேள்வி..
//Rathnavel said...

மனந்தளராது எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.//


மனம் தளர்வதற்கு இடமேயில்லை.
கவலைப்படாதீர்கள்.. என் மொக்கைகள் வழக்கம்போல தொடரும்
கருத்துக்கு நன்றி நண்பரே.
//நாய்க்குட்டி மனசு said...

சந்தோசமான பதிவுனா சிரிக்கிற ஸ்மைலி, சோகமான பதிவுனா அழுகுற ஸ்மைலி.. அவ்ளோ தான்.//
Fast world. cooooool!!//


தாங்க்ஸ்ங்க..
//இராஜராஜேஸ்வரி said...

டெம்பிளேட் கமெண்ட் எனக்கு போதும்.

ஆர்வமிருப்பவர்கள் படிக்கட்டும்.

கொடுத்துவைத்திருந்தால் ரசிக்கட்டும்.//


சரியா சொன்னீங்க.. அவரவர் எடுத்துக்கொள்ளும் விதம் வேறல்லவா? ஆனாலும் தொடர்ந்து அதே மாதிரி வரும்போது ஆதங்கம் வரத்தானே செய்யும்.
கருத்துக்கு நன்றிங்க.
koodal bala said…
ஒண்ணு வேணும்ன்னா பண்ணலாம் ....சில குறிப்பிட்ட வார்த்தைகள் கமெண்ட்ல பப்ளிஷ் பண்ண முடியாதபடி பிளாக்ல ஏதாவது செட்டிங்க்ஸ் பண்ண முடியுமான்னு நம்ம பிரபல தொழில் நுட்ப பதிவர்கள்கிட்ட ஆலோசனை கேட்டு பாக்கலாம் ........
//சாகம்பரி said...

பதிவினை படித்து சிந்தித்து கமெண்ட் போடுகிறேன். சில பதிவுகளை மட்டுமே பார்வையிட முடிகிறது. நண்பர்கள் பட்டியலும் குறுகிவிடுகிறது. அதேபோல் என் பதிவிற்கும் டெம்ப்ளெட் கமெண்ட் வருவதில்லை. கமெண்ட் எண்ணிக்கை குறைவு. இது பரவாயில்லைதானே. We'll get what we need.//


நியாயம் தான். மொக்கைப் பதிவு, 18+, தரமான பதிவுகள்“னு எல்லாப் பதிவுகளுக்கும் ஒரே மாதிரி வரும்போது தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது.
வருகைக்கு நன்றிங்க.
//R.Elan. said...

இந்த பதிவை முழுமையாக படித்து பார்த்தேன்.எந்த பதிவையும் முழுமையாக வாசித்து பின்னூட்டம் இடுவேன்,இல்லையெனில் நோ கமெண்ட்.அதுதான் பதிவாளருக்கு மரியாதை. பெயருக்கு வாசகர் கடிதம் எழுதும் பாட்சா பெரும்பாலான பத்திரிகைகளில் பலிக்காது.விசயம் இருந்தால் மட்டுமே அங்கே,சரியோ தவறோ பிரசுரமாகும்.பாதிதான் இப்பதிவிலா? மீதி அடுத்த பதிவில்?எதிர்பார்க்கிறோம்.//


கருத்துக்கு நன்றி நண்பரே.. அடுத்த பதிவில் சொல்றேன்னு சொல்லலங்க.. நா சொன்னது பாதி தான், சொல்றதுக்கு நிறைய இருக்குனு சொன்னேன். ஆனாலும் பின்வரும் பதிவுகளிலும் வலையுலகம் பற்றி எழுதாமலா போய்விடுவோம்??? பார்க்கலாம்.
//அருண் பிரசாத் said...

போன பதிவுல ஸ்மைலி போட்ட என்னைத்தான் திட்டுறீங்களோ....

அவ்வ்வ்வ்வ்...//


ஓ.. நல்லவேளை நினைவுபடுத்துனீங்க.. அடுத்த பதிவு அருண் பிரசாத் பத்தி போட்றலாமா???
//Rathi said...

பதிவுலக பின்னூட்ட களேபரங்களை ஆதங்கத்தோடு சொல்லியிருக்கிறீர்கள். என்னை கவர்ந்தது, நீங்க சொன்ன "இருங்க பதிவை படிச்சிட்டு வரன்" தான். சிரித்து விட்டு நகர்ந்து விடுவேன். வடை, சுடு சோறு இதெல்லாம் ரெண்டாம் பட்சம் தான்.
பதிவுலகம் இப்படித்தான் என்று இதையும் கடந்து போக பழகிக்கொள்ள வேண்டியது தான்.//


பதிவுலகம் இப்படித்தான் என்று முடிவு செய்வதை விட.. அந்த நிலையை மாற்றிக் கொள்ள முயற்சிக்கலாமே..

கருத்துக்கு நன்றிங்க.
//Chitra said...

யாரை குறிப்பிட்டு சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு நாளில், பல பதிவுகளை வாசித்து விட்டு, பின்னூட்டங்கள் போடும் போது விலாவரியாக சொல்லி கொண்டு இருந்தால்.... அதற்கே ஒரு நாள் போதாதே. template பின்னூட்டங்கள் கூட ஒரு பதிவரை உற்சாகப்படுத்தும் என்ற எண்ணத்தில் தான் கொடுக்கப்படுகிறது. அவர்களை வேதனைப்படுத்த என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்.//

நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை தோழி. பொதுவாக பதிவர்கள் மத்தியில் இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். நேரமின்மை நியாயமான காரணம், எனினும் தொடர்ந்து அதே போன்று பின்னூட்டங்கள் வரும்போது ஒருவித சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லையே..//அப்படிப்பட்ட பின்னூட்டங்கள் பிடிக்காத பதிவர்கள் , தங்கள் பின்னூட்ட பெட்டியின் மேலேயே ஒரு சின்ன குறிப்பு போட்டு விட்டால், பின்னூட்டம் போடாமல் சென்று விடுவோமே. :-)////


என்ன கருத்துக்கள் கூற வேண்டுமென்பது அவரவர் சுதந்திரம் என்பதை நான் மறுக்கவில்லை. என் போன்ற பதிவர்கள் மனதிலுள்ள ஆதங்கத்தின் வெளிப்பாடே இநதப் பதிவே தவிர யாரையும் குறிப்பிட்டு குறை சொல்லி காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.
மற்றபடி அனைவரும் நண்பர்களே..

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சித்ரா.
தொடர்ந்து வாருங்கள்.
//தமிழ்வாசி - Prakash said...

ரொம்ப நேரம் யோசிச்சு இந்த பதிவு போட்டிங்களா?//


ஆமாங்க.. ரொம்ப நாளாவே இந்த வருத்தம் இருக்கு.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா, அருமை... தொடரவும்....!//


நன்றி பன்னி சார்.
வருகைக்கும் கருத்துக்கும்.
//Yoga.s.FR said...

இது வஞ்சப் புகழ்ச்சி இல்லையே? இல்லை!ஆஹா, அருமை... தொடரவும்....!நன்றி!!!!(டெம்ப்ளேட் கமெண்ட்)//


டெம்ப்ளேட் கமெண்ட் போட்டதுக்கு நன்றிங்க..
(வேறென்னத்த சொல்ல??)
//baleno said...

சரியாக தான் சொல்லியிருக்கிறீர்கள்.

சிலர் மீ த பர்ஸ்ட் வடை சுடுசோறு அப்டினு போட்டுட்டு காணாம போய்டுவாங்க. இது எதுக்காக போட்றாங்கனே தெரிய மாட்டீங்கிது.

இது பற்றி நானும் பல தடவைகள் யோசித்ததுண்டு.//


யோசிங்க.. யோசிங்க..
கருத்துக்கு நன்றிங்க.
//மாய உலகம் said...

இந்த பதிவின் ஆதங்கத்தை ஏற்கனவே நான் ஒருவரின் பதிவில் கருத்தாக வெளியிட்டிருந்தேன்...ஆனால் நீங்கள் பதிவாகவே வெளியிட்டு சந்தோசபடுத்தியுள்ளீர்கள்... பல பதிவர்களின் ஆதங்கத்தின் வெளிபாடாய் உங்கள் பதிவு இன்று அமைந்திருக்கிறது... சமைப்பதே பசி தீர உண்பதற்காக தான்...சும்மா கொரிப்பதற்காக அல்ல என்பதை ஆணித்தரமாக நச்சென்று நெத்தியடி அடித்துவிட்டீர்கள்.... 100 பேர் வந்து வெரும் அருமை என்று சொல்லிவிட்டு செல்வதற்கு பதிலாக பத்துபேர் வந்து படித்துணர்ந்து பாராட்டினாலே போதும்..என்பதை உணர்த்திவிட்டீர்கள் நன்றி//


உதாரணம் பொருத்தமாக இருந்தது. கருத்துக்கு நன்றி நண்பரே..
//siva said...

me the firstu...

அப்படிப்பட்ட பின்னூட்டங்கள் பிடிக்காத பதிவர்கள் , தங்கள் பின்னூட்ட பெட்டியின் மேலேயே ஒரு சின்ன குறிப்பு போட்டு விட்டால், பின்னூட்டம் போடாமல் சென்று விடுவோமே. :-)//


தோழி சித்ராவிற்கு சொன்ன பதில் தான் சிவாவிற்கும்..
என்ன கருத்துக்கள் கூற வேண்டுமென்பது அவரவர் சுதந்திரம் என்பதை நான் மறுக்கவில்லை. என் போன்ற பதிவர்கள் மனதிலுள்ள ஆதங்கத்தின் வெளிப்பாடே இநதப் பதிவே தவிர யாரையும் குறிப்பிட்டு குறை சொல்லி காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.
மற்றபடி அனைவரும் நண்பர்களே..
//மாய உலகம் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்//


வாழ்த்துக்கு நன்றி நண்பரே..
//siva said...

ஆஹா, அருமை... தொடரவும்....
repeatu..


//இது பற்றி நானும் பல தடவைகள் யோசித்ததுண்டு//

romba yosikathenga boss..apram neengalum eppdi oru post potruveenga..just cool.//


கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சிவா
//நாராயணன் said...

நீங்க சொல்வது சரிதான். சும்மா பேருக்கு பின்னோட்டம் இடுறது வேஸ்ட். உண்மைலேயே பதிவை படிச்சிட்டு தங்கள் கருத்துகளை சொல்வது தான் பல பதிவர்கள் எதிர்பார்கிறார்கள்.//


சரியாகச் சொன்னீங்க..
கருத்துக்கு நன்றி நாராயணன்.
//வெட்டிப்பேச்சு said...

பின்னூட்டம் இல்லைன்னு வருத்தப்படப்போய் இப்போ ஒவ்வொரு பின்னூட்டமும் ஒரு பதிவாப்போச்சு..//


எவ்ளோ நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது????
//வெட்டிப்பேச்சு said...


//கருத்து சொல்றதுனாலும் காரி துப்புறதுனாலும் உங்க இஷ்டமுங்க..
//

இப்படிச் சொல்லிட்டு பின்னூட்டமே இல்லைன்னு வருத்தப்படரீங்களே..

கொஞ்சம் சாக்கிரதையா இருங்க ..//


ஹிஹிஹி
கருத்துக்கு நன்றிங்க.
மொக்கைக்கு ஒரு தனித் திறமை வேணுங்கறது நிரூபனமாயிடுச்சு..

// இந்தப் பின்னூட்டங்கள் ப்ரதிபலிக்கும் கருத்தான “பதிவுகளுக்கு சரியான புரிதல்களோ, மதிப்புகளோ கிடைக்கப்படவில்லை“ என்பதை விட, பதிவுகள் படிக்கப்படாமல் இருக்கின்றன என்ற நிலை எவ்வளவோ பரவாயில்லையே.//

அருமை... //நான் போட்ட மொக்கை பின்னூட்டம் மொக்கையாத் தெரியலையா..?

ம்... lacking talents.
ஜீ... said…
சரி சரி விடுங்கக்கா! டெம்ப்ளேட் கமெண்டை விடுங்க! ஆனா ஒரு சீரியசான பதிவுபற்றி எதுவுமே சொல்லாம பிட் நோட்டீஸ் விளம்பரம் கொடுக்கும்போது கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கும்! ஆனா நான் எதுவும் சீரியஸா எழுதிறதில்ல ..அது வேற :-)
மற்றபடி கூல்!!!!!! :-)
//முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...

ஸலாம் சகோ.இந்திரா...
உங்கள் வலைப்பூவிற்கு ஏற்கனவே நான் ஒரு முறை வந்துட்டு எதுவுமே படிக்காமே திரும்பிட்டேன்.
இன்னிக்கு மட்டும் முழுதாக படித்ததற்கு காரணம் ஏற்கனவே ஐம்பது பேர் படிச்சு இருக்காங்களே என்ற தைரியத்தில் படிக்க ஆரம்பித்தேன்.
//படிக்காதீங்க....//
---இப்படி ஒரு வலைப்பூ தலைப்பு வச்சிட்டு அப்புறம் மாங்கு மாங்குன்னு எழுதி யாரும் படிக்கலைன்னு அங்கலாய்க்கிறது பொருத்தமா இல்லையே சகோ..!


//நான் இந்திரா இம்சிக்கிறேன்..//
---இதுக்கு மேலையும் யாரும் நீங்க எழுதினதை படிப்பாங்க என்று எப்படி நினைக்கிறீர்கள்..?
முதலில் அவற்றை மாற்றுங்கள் சகோ...!//


வருகைக்கு நன்றி நண்பரே..
தளத்திற்கு இப்படி பெயர் வைத்ததற்கு காரணம்.. நம்மாளுங்க எதை செய்யாதீங்கனு சொல்றோமோ அதை தான் முதலில் செய்வாங்க.. சரிதானே???
//சேட்டைக்காரன் said...

எழுதுகிறவர்களை உற்சாகப்படுத்துகிற எண்ணத்தோடு பின்னூட்டம் இட்டால், அது டெம்பிளேட் பின்னூட்டமாக இருந்தாலும் பெரிய தவறில்லை – இது எனது கருத்து!
மற்றபடி ‘வடை,சுடுசோறு,’ என்பதெல்லாம் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள்ளேயே உபயோகிக்கப்படுகின்றது. இவற்றைப் பெரிது படுத்த வேண்டியதில்லை!
இறுக்கமான வரைமுறைகளை வைத்துக் கொள்வதோ, இது சரியில்லை, அது சரியில்லை என்று ஆதங்கப்படுவதோ, வந்து வாசிக்கிறவர்களை இன்னும் தயங்க வைக்கலாம்.//


உங்கள் தரப்பும் சரியே.. ஆனால் இங்கு வரைமுறைகள் என்று எதுவுமில்லை நண்பரே.
அவரவர் கருத்துக்களை, பதிவர்களிடம் பகிரும்போது கூடுதல் ஊக்கம் அளிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.
தாம் பதிவுகளை எழுதும்போதும் இதைத் தானே எதிர்பார்க்கிறார்கள்.
விமர்சனங்களும் கருத்துக்களும் விரிவாகும்போது எழுதப்படும் பதிவுகளும் தரமானதாக அமையுமல்லவா..

வருகைக்கு நன்றி.. சேட்டையின் வருகை தொடரட்டும்.
//koodal bala said...

ஒண்ணு வேணும்ன்னா பண்ணலாம் ....சில குறிப்பிட்ட வார்த்தைகள் கமெண்ட்ல பப்ளிஷ் பண்ண முடியாதபடி பிளாக்ல ஏதாவது செட்டிங்க்ஸ் பண்ண முடியுமான்னு நம்ம பிரபல தொழில் நுட்ப பதிவர்கள்கிட்ட ஆலோசனை கேட்டு பாக்கலாம் ........//

நல்லா சொன்னீங்க போங்க.. அப்படி செஞ்சுட்டா மொத்தத்துக்கு பின்னூட்டமே வராது.. அதுனால அந்த யோசனைய கைவிட்டுடலாம்.
//வெட்டிப்பேச்சு said...

மொக்கைக்கு ஒரு தனித் திறமை வேணுங்கறது நிரூபனமாயிடுச்சு..

நான் போட்ட மொக்கை பின்னூட்டம் மொக்கையாத் தெரியலையா..?

ம்... lacking talents.//


மொக்கை போட்றதுக்கெல்லாம் தனித்திறமையா???? அப்டியெல்லாம் ஒண்ணுமில்லீங்க.
நம்மாளுக தான் எதை செய்யாதீங்கனு சொன்னாலும் உடனே அதை செய்வாங்களே.. இதுல நீங்க விதிவிலக்கா??
இருந்தாலும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
//ஜீ... said...

சரி சரி விடுங்கக்கா! டெம்ப்ளேட் கமெண்டை விடுங்க! ஆனா ஒரு சீரியசான பதிவுபற்றி எதுவுமே சொல்லாம பிட் நோட்டீஸ் விளம்பரம் கொடுக்கும்போது கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கும்! ஆனா நான் எதுவும் சீரியஸா எழுதிறதில்ல ..அது வேற :-)
மற்றபடி கூல்!!!!!! :-)//


கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க.
நாம என்னதான் மாங்கு மாங்குனு பதிவுகள எழுதினாலும், படுபாவிங்க ஒரே ஒரு ஸ்மைலி போட்டுட்டு ஓடிட்றாங்க..///

ஷர்புதீன் உன்னையா தாய்யா சொல்றாங்க நான் ஏற்கனவே இப்படி படிக்காம கமெண்ட் போடாதே சொன்னேன் ல இப்போ பார்...!!!
இப்படி ஸ்மைலி போடும் பொழுதும் நல்ல பதிவு என்று போடும் பொழுதும் அவர்கள் படித்து விட்டே கமெண்ட் போட்டாலும் மனதிற்கு அது.... படிக்காமல் பின்னூட்டம் போட்டு இருப்பார்கள் என்று தோன்றுகிறது...


இதில் இவர் யாரையும் குறிபிட்டு கூறவில்லை... இது அனைவருக்கும் உள்ள ஆதங்கம் தான்...
//இதையெல்லாம் விட “இருங்க படிச்சிட்டு வரேன்“னு ஒரு கமெண்ட் வரும் பாருங்க.. பதிவெழுதி, பப்ளிஷ் பண்ணின அடுத்த நொடி இந்த கமெண்ட் வந்திடும். ஆனா பாவம் அவங்களுக்கு என்ன வேலையோ என்னவோ, திரும்பி வரவே மாட்டாங்க. (அந்த அளவுக்கு உங்க பதிவுகள் இருக்குனு சொல்றீங்களா??? இது என் பதிவுகள மட்டும் சொல்லலங்க.. பொதுவா சொல்றேன்//
“இருங்க படிச்சிட்டு வரேன்“
”// இந்தப் பின்னூட்டங்கள் ப்ரதிபலிக்கும் கருத்தான “பதிவுகளுக்கு சரியான புரிதல்களோ, மதிப்புகளோ கிடைக்கப்படவில்லை“ என்பதை விட, பதிவுகள் படிக்கப்படாமல் இருக்கின்றன என்ற நிலை எவ்வளவோ பரவாயில்லையே.//
அருமை“ ---------- அப்டினு ஒரே வரில கமெண்ட் போடுவாங்க..
ஹூம்ம்.. என்னத்த சொல்ல..
//கருத்து சொல்றதுனாலும் காரி துப்புறதுனாலும் உங்க இஷ்டமுங்க//

கருத்துக்கே கருத்து சொல்லும் கந்தசாமிகள் (பல) இருக்கும் பொழுது நாம கருத்து கருப்புசாமியாவே (இருட்டுல தெரியாம) இருக்கிறது நல்லது தானே (ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்து விட்டது தான் நிதர்சனம்)
gonzalez said…
emma indra evalo commenttu

REGARDS,
GONZALEZ

http://funny-indian-pics.blogspot.com
Katz said…
நிறைய கமெண்ட்ஸ் மற்றும் non டெம்ப்ளட் கமெண்ட்ஸ் வர்றதுக்கு நீங்க அதிக பாலோயர்ஸ் வச்சு இருக்கனும். அல்லது பிரச்சனைக்குரிய தலைப்பை எடுத்து விவாதிக்கணும்.

படிச்ச நிறைய பேருக்கு ப்ளாக் அப்படின்னு ஒன்னு இருக்கிறதே தெரிய மாட்டிங்குது.

ப்ளாகா? அப்படியா? ன்னு கேட்கிறாங்க.

ஆனா இருக்கிற ப்ளாகர்ஸ் எண்ணிகையும் அதிகம் ஆகிவிட்டது. தமிழ் மனதிலோ இன்ட்லியுலோ பாருங்கள் தினம் எத்தனை போஸ்ட். அதுல நம்ம பதிவ பொறுக்கி எடுத்து படித்து கமெண்டு போட்டு
ரொம்ப கஷ்டம்.

நானும் கமெண்ட்ஸ் வரதில்லைன்னு ரொம்ப நாள் கவலைப் பட்டுகிட்டு இருந்தேன். ஆனா இப்போ நிறைய பேர் படிச்சாவே போதும் அப்படின்னு தோணுது.

அது தான் கரெக்ட். என்னங்க நான் சொல்றது.
suryajeeva said…
படிக்காதீங்க அப்படின்ற உங்க வலைப்பூ தலைப்பை மாத்தினாலே உங்க கஷ்டம் தீர்ந்துடும்னு நினைக்கிறேன்... நீங்களே படிக்காதீங்கண்ணு சொல்லுவீங்களாம், நாங்க படிக்கலேன்ன வருத்தப் பட்டு வேறு புலம்புவீன்கலாம்.. என்ன கொடுமை சார் இது..
ஹேமா said…
இந்திரா...ரொம்ப நாள் ஆதங்கமோ.கொட்டித் தீர்த்திட்டீங்கப்பா.பாருங்க இனி எல்லாரும் சரியா ஒழுங்கா பின்னூட்டம் போடுவாங்க.

அட..நானும்தான் !
Ravi said…
U should be feeling good that ppl atleast comment on ur blog... PPL like me wrting for long time and still no comments...

Concentrate on what u write and equally read others too.. Happy blogging..
vinu said…
clapps clapps clapps


note:i read the whole post! and all comments too.... even the "உள்நாட்டு சதியால என் பழைய ப்ளாக்கு தொலைஞ்சு போய்டுச்சு.. அதுனால இந்த புது ப்ளாக்கோட ஃபாலோயர்ஸ் பட்டியல்ல பழைய நண்பர்கள் மீண்டும் இணைய கேட்டுக்குறேன்.. இணையாதவங்களுக்கு செய்வினை வைக்கப்படும்.. சொல்லிப்புட்டேன்..

கருத்து சொல்றதுனாலும் காரி துப்புறதுனாலும் உங்க இஷ்டமுங்க.."


this also so don't worry sis.....

u just do wt's gives happines to U! and v coming to ur blog and chat wit friends of us to make u feel happy only sistr.... so don't worry! "do your duty...don't look for result - geethai"
வலைதளத்திற்கு நான் புதியவன், அதனால இதெல்லாம் எனக்கு பெரிய விஷயமா தெரியல.ஆனா நான் இந்த பதிவ முழுமையா படிச்சிட்டுதான் எழுதுகிறேன்.உங்க கஷ்டம் புரிகிறது. என்னுடைய பின்னோட்டம் சரியான விமர்சனமாக மட்டுமே இருக்கும்
M.R said…
தோழி இந்திராவிற்கு


நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
அட்டகாசம்,அருமை, சூப்பரப்பு ,,,,,, மூணு வார்த்தையா சொல்லிட்டேன் போதுமா
ஏனுங்க, இதுக்கு மேல என்ன கமென்ட் வேணுமுங்க?
//சௌந்தர் said...

நாம என்னதான் மாங்கு மாங்குனு பதிவுகள எழுதினாலும், படுபாவிங்க ஒரே ஒரு ஸ்மைலி போட்டுட்டு ஓடிட்றாங்க..///

ஷர்புதீன் உன்னையா தாய்யா சொல்றாங்க நான் ஏற்கனவே இப்படி படிக்காம கமெண்ட் போடாதே சொன்னேன் ல இப்போ பார்...!!!//


டேய் மாயாண்டி.. முனியாண்டி... புடிங்கடா அந்த ஷர்புதீனை...
//சௌந்தர் said...

இப்படி ஸ்மைலி போடும் பொழுதும் நல்ல பதிவு என்று போடும் பொழுதும் அவர்கள் படித்து விட்டே கமெண்ட் போட்டாலும் மனதிற்கு அது.... படிக்காமல் பின்னூட்டம் போட்டு இருப்பார்கள் என்று தோன்றுகிறது...


இதில் இவர் யாரையும் குறிபிட்டு கூறவில்லை... இது அனைவருக்கும் உள்ள ஆதங்கம் தான்...//


வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி சௌந்தர்..
//ஆகாயமனிதன்.. said...


கருத்துக்கே கருத்து சொல்லும் கந்தசாமிகள் (பல) இருக்கும் பொழுது நாம கருத்து கருப்புசாமியாவே (இருட்டுல தெரியாம) இருக்கிறது நல்லது தானே (ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்து விட்டது தான் நிதர்சனம்)//


நல்லா “எஸ்“ ஆகுறீங்க.. இருக்கட்டும் இருக்கட்டும்..
//gonzalez said...

emma indra evalo commenttu

REGARDS,
GONZALEZ//


மொத்தமா எண்ணி சொல்றேன்.
நன்றி நண்பரே..
//Katz said...

நிறைய கமெண்ட்ஸ் மற்றும் non டெம்ப்ளட் கமெண்ட்ஸ் வர்றதுக்கு நீங்க அதிக பாலோயர்ஸ் வச்சு இருக்கனும். அல்லது பிரச்சனைக்குரிய தலைப்பை எடுத்து விவாதிக்கணும்.
படிச்ச நிறைய பேருக்கு ப்ளாக் அப்படின்னு ஒன்னு இருக்கிறதே தெரிய மாட்டிங்குது.
ப்ளாகா? அப்படியா? ன்னு கேட்கிறாங்க.
ஆனா இருக்கிற ப்ளாகர்ஸ் எண்ணிகையும் அதிகம் ஆகிவிட்டது. தமிழ் மனதிலோ இன்ட்லியுலோ பாருங்கள் தினம் எத்தனை போஸ்ட். அதுல நம்ம பதிவ பொறுக்கி எடுத்து படித்து கமெண்டு போட்டு
ரொம்ப கஷ்டம்.
நானும் கமெண்ட்ஸ் வரதில்லைன்னு ரொம்ப நாள் கவலைப் பட்டுகிட்டு இருந்தேன். ஆனா இப்போ நிறைய பேர் படிச்சாவே போதும் அப்படின்னு தோணுது.
அது தான் கரெக்ட். என்னங்க நான் சொல்றது.//


நீங்க சொல்றதும் சரிதான். ஆனா நிறைய பேர் படிக்கிறதில்லைனு நான் வாதம் பண்ணலையே. படிக்கிறவங்க கிட்ட இருந்து வரும் பின்னூட்டங்கள் சரியான முறையில் அமைவதில்லை என்று தான் ஆதங்கப்படுகிறேன். அது நியாயம் தானே.. முந்தைய பின்னூட்டத்தில் ஒரு நண்பர் சொன்னது போல், 100 பேர் வந்து “அருமை“னு ஒரே வரில சொல்லிட்டு போறதுக்கும், 10 பேர் வந்து பதிவு பற்றி விரிவாக விமர்சனம் செய்து பின்னூட்டம் போடுவதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா??
//suryajeeva said...

படிக்காதீங்க அப்படின்ற உங்க வலைப்பூ தலைப்பை மாத்தினாலே உங்க கஷ்டம் தீர்ந்துடும்னு நினைக்கிறேன்... நீங்களே படிக்காதீங்கண்ணு சொல்லுவீங்களாம், நாங்க படிக்கலேன்ன வருத்தப் பட்டு வேறு புலம்புவீன்கலாம்.. என்ன கொடுமை சார் இது..//


அட.. படிக்கலேனு யாருங்க புலம்பினது??? படிச்சவங்க சரியா பின்னூட்டம் போடலேனு தான் ஆதங்கப்பட்டேன்.

அப்புறம்... நம்ம நண்பர்கள் எத செய்யாதீங்கனு சொல்றோமோ அத தெளிவா செய்வாங்க.. அதுனால தான் இப்படி தலைப்பு வச்சேன்.
என்ன நா சொல்றது????
//ஹேமா said...

இந்திரா...ரொம்ப நாள் ஆதங்கமோ.கொட்டித் தீர்த்திட்டீங்கப்பா.பாருங்க இனி எல்லாரும் சரியா ஒழுங்கா பின்னூட்டம் போடுவாங்க.

அட..நானும்தான் !//


அப்படி நடந்தா சந்தோசம் தான் ஹேமா.
வருகைக்கு நன்றி தோழி.
//Ravi said...

U should be feeling good that ppl atleast comment on ur blog... PPL like me wrting for long time and still no comments...

Concentrate on what u write and equally read others too.. Happy blogging..//


சில பின்னூட்டங்களாவது வருகிறதே என்று நம்மை நாமே சமாதானித்துக்கொள்வது, ஏமாற்றிக்கொள்வதற்கு சமம் நண்பரே.
என்னுடைய பதிவுகள் பற்றி மட்டும் நான் குறிப்பிடவில்லை, பல பதிவகளின் வருத்தமும் இதுவே. நம் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.
தவறில்லையே..
//vinu said...

clapps clapps clapps


note:i read the whole post! and all comments too.... even the "உள்நாட்டு சதியால என் பழைய ப்ளாக்கு தொலைஞ்சு போய்டுச்சு.. அதுனால இந்த புது ப்ளாக்கோட ஃபாலோயர்ஸ் பட்டியல்ல பழைய நண்பர்கள் மீண்டும் இணைய கேட்டுக்குறேன்.. இணையாதவங்களுக்கு செய்வினை வைக்கப்படும்.. சொல்லிப்புட்டேன்..

கருத்து சொல்றதுனாலும் காரி துப்புறதுனாலும் உங்க இஷ்டமுங்க.."


this also so don't worry sis.....

u just do wt's gives happines to U! and v coming to ur blog and chat wit friends of us to make u feel happy only sistr.... so don't worry! "do your duty...don't look for result - geethai"//


தாங்க்ஸ்ங்க..
கருத்துக்கு நன்றி வினு.
//புஷ்பராஜ் said...

வலைதளத்திற்கு நான் புதியவன், அதனால இதெல்லாம் எனக்கு பெரிய விஷயமா தெரியல.ஆனா நான் இந்த பதிவ முழுமையா படிச்சிட்டுதான் எழுதுகிறேன்.உங்க கஷ்டம் புரிகிறது. என்னுடைய பின்னோட்டம் சரியான விமர்சனமாக மட்டுமே இருக்கும்//


வருகைக்கு நன்றி புஷ்பராஜ்
//M.R said...

தோழி இந்திராவிற்கு


நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//


நன்றி நண்பரே..
ரெண்டு நாளா இந்தப் பக்கம் வரமுடியல.
அதுனால லேட்டா சொல்லிக்கிறேன்.
உங்களுக்கும் மற்ற தோழர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
//! ஸ்பார்க் கார்த்தி @ said...

அட்டகாசம்,அருமை, சூப்பரப்பு ,,,,,, மூணு வார்த்தையா சொல்லிட்டேன் போதுமா//


நன்றி நன்றி நன்றி
//DrPKandaswamyPhD said...

ஏனுங்க, இதுக்கு மேல என்ன கமென்ட் வேணுமுங்க?//


இப்டி சொல்லியே ஒரு கமெண்ட் தேத்திட்டீங்க.. நன்றிங்க.
Mr.Rain said…
உங்க பதிவு மட்டுமல்ல பின்னூட்டம் கூட அருமை.....

( ஒன்னரை லைன்ல பின்னுட்டம் போட்டா தப்பில்லையே..? )
ஓரிரு வரியில் கமென்ட் தெரிவிக்கிறவர்கள் எல்லோரும் பதிவை முழுமையாக படிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை.
\\அதுலயும் சிலர், பதிவுகளுக்கு பின்னூட்டம் போடாம தங்களோட ப்ளாக்குக்கு விளம்பரம் குடுத்துட்டுப் போவாங்க.\\

வலைதலத்தில் பெறும்பாலான கமென்ட் கள் இந்த Catagory தான்.

//இதையெல்லாம் விட “இருங்க படிச்சிட்டு வரேன்“னு ஒரு கமெண்ட் வரும் பாருங்க..//
பதிவை படிக்காமல் கமென்ட் கொடுக்கும் நன்பர்கள்.இந்த பதிவை படித்து(படித்து??) திருந்தட்டும்
பயங்கர ஆராய்ச்சி பண்ணிருக்கீங்க
Anonymous said…
மிக மிக தெளிவா உங்க வருத்தத்தை பதிவு செய்திருக்கீங்க....


மாற்றம் உண்டாகட்டும்!
சூப்பர்...அட உண்மையிலேயே முழு பதிவையும் படிசுட்டுதாங்க இந்த கமென்ட்.

அதுமட்டுமில்லை. இப்போலாம் த. ம. 15 இல்லை 16 அவங்க தமிழ்மணத்துல வோட்டு போட்டதையே அவங்க கமெண்டா போடுறாங்க...ஆரம்பத்துல இதை பார்த்து எனக்கு ஒன்னுமே புரியல. அப்புறம் தான் தெரிஞ்சது த. ம.என்றால் தமிழ்மணம் என்று.
தொலைந்துபோனவன்
தொடர்கிறேன்....!

தங்கள்

துவக்க கால பதிவுகளில்
பின்னூட்டமிட்டவர்களில் இந்த "காஞ்சி முரளி"யை
நினைவிருக்கும் என
நினைக்கிறேன்...!

(தொலைந்துபோனவன் நான் இல்லை...! இடையில் சில மாதங்கள் தாங்கள் பதிவிடவில்லை என்றாலும் பரவாயில்லை. "இந்திராவின் கிறுக்கல்கள்" பதிவுக்கு வந்தால் "மன்னிக்கவும்... இந்த பதிவை மூடிவிட்டார்... வலைபதிவு நிர்வாகி" அப்படீன்னு வந்தது...! இப்ப ஓர் பதிவில் படித்துகொண்டிருந்தபோது எதேச்சையாய் பார்க்கிறேன்... என் நண்பியின் "இந்திராவின் கிறுக்கல்கள்"...

உடன் பிப்ரவரி மாதத்திலிருந்து பார்த்துக்கொண்டே... படித்துக்கொண்டே வந்தேன்...!

என் நினைவில் கடைசியாய்... அந்த பதிவின் தலைப்பு மறந்துபோனேன்...

ஓர் பின்னூட்டாருக்கும் உங்களுக்கும் நடந்த நீண்ட உரையாடலில் நான் பின்னூட்டமிட்டது நினைவிருக்கு...

அதன்பின் எந்த பதிவு என்பது நினைவுக்கு தென்படமட்டேனுகிறது...!)

சரி...
இப்போது இந்த பதிவுக்கு வருகிறேன்....!

/////பின்னூட்டங்கள்ங்குறது பதிவெழுதுறவங்கள ஊக்கப்படுத்தி, அடுத்தடுத்து எழுதத் தூண்டுற விதமா அமையணும். ஆனா இப்ப வலையுலகத்துல அந்த நிலைமை இல்லவேயில்லைனு சத்தியம் கூட பண்ணலாம்.////

இப்பதிவில் தாங்கள் குற்றச்சாட்டை இப்படி பொத்தம் பொதுவாய் சொல்வது தவறு நண்பி...! காரணம்...
நான் தங்கள் துவக்க காலத்திலிருந்தே.. தங்கள் பல கவிதைகளையும்.... சில கட்டுரைகளையும்... வாழ்த்தி... அடுத்து எழுத தூண்டுமளவுக்கு ஊக்கப்படுத்தி வந்திருக்கிறேன்...(அப்படீன்னு நினைக்கிறேன்) அதோடு தங்கள் பதிவில் தவறு என்றால் சுட்டிக்காட்டி இருக்கிறேன்... இதனை தங்கள் நன்கு அறிவீர்கள்... "கும்மி" பதிவுகளுக்கு என் கருத்து அநேகமாய் இருக்காது இதயும் தங்கள் அறிவீர்கள் நண்பி...!

இப்படியிருக்க தாங்கள் பொத்தம்போதுவாய் இப்படி ஓர் குற்றச்சாட்டை சுமத்துவது தவறு...

அதைப்போலவே....!

////நமக்கு யார் தொடர்ந்து பின்னூட்டம் போட்றாங்களோ அவங்களோட ப்ளாக்குக்கு மட்டும் தான் போகணும்னு சில பதிவர்கள் சபதம் எடுத்துக்குறாங்க. அப்டி போட்ற பின்னூட்டம் உருப்படியா இருந்தா கூட பரவாயில்ல.. ஏதோ கடமைக்கு நானும் பின்னூட்டம் போட்றேன்னு போடுவாங்க. பதிவ படிச்சாங்களா இல்லையானு அந்த கமெண்ட பாத்தாலே தெரியும்.////

எனக்கு தனிப்பட்ட பதிவு (ப்ளாக்கர்) ஏதுமில்லை...!

நான் எல்லோர் பதிவுக்கும் செல்வதுமில்லை...

எனக்கு பிடித்த... சில பதிவர்களின் (குறிப்பாய்... "நீரோடை". "ஜெய்லானி", "இந்திராவின் கிறுக்கல்கள்") பதிவுக்கு மட்டுமே நான் சென்று பின்னூட்டம் போடுவது வழக்கம்...

அதோடு...

தங்கள் பதிவை முழுதும் படித்துவிட்டுத்தான்.. பின்னூட்டம் போடுவேன்...!

இந்த ஏனோதானோ கதையெல்லாம் என்னிடம் கிடையாது....!

இப்படி இருக்கும்போது... பொத்தம்போதுவாய் தங்கள் குற்றம் சாட்டுவது... என்னையும் சேர்த்துதான் என்பதால்தான் இந்த நீண்ண்ண்ண்ண்ட விளக்கம்...!

வேறொன்றுமில்லை... இந்திரா...!

நட்புடன்...
காஞ்சி முரளி...
//காஞ்சி முரளி //

நண்பருக்கு வணக்கம். தாங்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் வந்தது மிக்க மகிழ்ச்சி.
இடையில் நான் பலமுறை உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் தங்கள் மெயில் ஐடி எனக்குத் தென்படிவில்லை. நிறைய முறை, தாங்கள் ப்ளாக் ஏதும் ஆரம்பித்துள்ளீர்களா என்று அவ்வப்போது சோதித்துக்கொள்வதுண்டு.
இப்போது உங்கள் பின்னூட்டம் கண்டு நிம்மதியடைந்தேன்.
என்ன நண்பரே.. நலமா???
சரி விஷயத்துக்கு வரேன்..
//காஞ்சி முரளி //


என் பழைய ப்ளாக்குக்கு ஏதோ பிரச்சனை வந்துவிட்டது..
பின் பழைய பதிவுகளையெல்லாம் மீட்டுக்கொண்டுவந்து (சில நட்பின் இழப்புகளுக்குப்பின்) இந்த வலைதளத்தை ஆரம்பித்தேன். முரளி சார்.

http://chellakirukkalgal.blogspot.com/2011/06/blog-post_16.html
//காஞ்சி முரளி //

சரி இப்ப பதிவுக்கு வருவோம்.

பதிவில் நான் குறிப்பிட்டது, டெம்ப்ளேட் கமெண்ட் போடுபவர்களைத் தான்.
“எழுதப்படும் பதிவுகள் பற்றிய சரமாரியான விமர்சனங்கள், சண்டைகள் ஏற்படுத்துற உற்சாகமும் ஊக்கமும், இந்த மாதிரியான டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்ல அடிபட்டுப்போகுது“
என்று பதிவில் நான் ஆதங்கப்பட்டிருக்கிறேன்..
தாங்கள் எப்போதும் எனக்கு அந்த வகையில் பின்னூட்டமிட்டதில்லை. இதை நான் வெளிப்படையாக உங்களிடமே மகிழ்வாக தெரிவித்திருக்கிறேன்.
எனவோ தங்களை என் பதிவின் மூலம் வருத்தப்பட வைத்திருந்தால் மன்னித்துக்கொள்ளவும்.
நன்றி..
தொடரட்டும் உங்கள் ஊக்கப்படுத்தும் பின்னூட்டங்கள்..
///ஓர் பின்னூட்டாருக்கும் உங்களுக்கும் நடந்த நீண்ட உரையாடலில் நான் பின்னூட்டமிட்டது நினைவிருக்கு...

அதன்பின் எந்த பதிவு என்பது நினைவுக்கு தென்படமட்டேனுகிறது...!)////

மண்டையப்போட்டு குழப்பி...
கண்டுபுடிசிட்டேன்...!

அது...!
இது..........!
///http://chellakirukkalgal.blogspot.com/2011/01/blog-post_10.html////

இவர்...!
காணாமல் போனவரா...?
தொலைந்து போனவரா...?