காதல் எனும் மாயை..


போன வாரம் டிவியில் மாயாண்டி குடும்பத்தார்னு ஒரு படம் பாத்தேன். அதுல ஹீரோ ஒரு சீன்ல ப்ளஸ்டூ படிக்கிற பையனா வருவார். அந்த ஹீரோவுக்கு எப்படியும் ஒரு 40 வயசு இருக்கும். கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாம எப்படித்தான் ஸ்கூல் பையனா நடிச்சாரோ தெரியல.. மீசைய எடுத்துட்டா வயசு கொறஞ்ச மாதிரி தெரியும்னு அவரு நெனச்சுட்டாரு போல.. இந்தக் கொடுமை பத்தாதுன்னு அவருக்கு ஸ்கூல் படிக்கும்போதே லவ் பண்ற மாதிரி காட்சி வேற.. ஹீரோயின பாத்து ரொமான்டிக்கா லுக்கு விட்றேங்குற பேர்ல, அஷ்டகோணல்ல அவரு முகம் மாறும்போது, பாக்குற நமக்கு வாந்தி தான் வருது.





இப்ப வற தமிழ் சினிமாவுல ஸ்கூல்லயே லவ் பண்ற மாதரி கதைகள் வருது. உதாரணமா களவாணி, வல்லவன், காதல், இப்டி நெறைய சொல்லிகிட்டே போகலாம். நிஜ வாழ்க்கைல அப்டி நடந்துகிட்டு தான் இருக்குனு சப்பைக்கட்டு கட்டினாலும், இது மாதிரி படங்கள் மாணவர்களிடம் இன்னும் தைரியத்தை வரவழைக்கிறது என்பதை மறுக்க முடியாது. பள்ளிக்காதல் தானே தவறு.. கல்லூரிக் காதலை காட்டுகிறோம் பேர்வழினு படம் எடுக்குறாங்க.. அதிலும் இதே கண்றாவி தான். அப்பதான் ப்ளஸ்டூ முடிச்சிட்டு காலேஜ் முதல் நாள் தொடங்கும். ஹீரோயின் அவன தாண்டி போவா.. பாத்தவுடனே காதல் வந்திடுதாம். அது எப்டினு கேட்டா.. லவ் வித் ஃபர்ஸட் சைட்-அப்டிங்கிறாங்க. போன ஜென்மத்து விட்ட குறை தொட்ட குறையாம்.. அது இந்த ஜென்மத்துல கன்டினியூ ஆகுதாம். என்ன கொடுமை சார் இது?

18.. இல்ல இல்ல 15 வயசு வந்துட்டா போதும்.. காதல் பண்ற தகுதி வந்துடுதுனு இவங்களோட எண்ணம்போல. படிக்கிறத காட்றாங்களோ இல்லையோ.. இவங்களோட காதல் சடுகுடு விளையாட்ட நல்லாவே படமெடுக்குறாங்க. 

 
படிக்கும் காலகட்டத்தில், ஏதோ தனக்குப் பிடித்தவர்கள் மீது வரும் ஒருவித ஈர்ப்பினை, காதல் என்று பேர்சூட்டிக் கொள்கின்றனர். நண்பர்கள் மத்தியில் தனக்கோரு காதல் இருப்பதை கௌரவமாக எண்ணி, அதனை விளம்பரப்படுத்துகின்றனர். ஆனால் பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி.. ஒருத்தரோட உண்மையான குணங்கள் வெளிவரும் வாய்ப்புகள் குறைவு. காசு பணத்தைப் பார்த்து காதல் வராது, காரணமே இல்லாமல் வருவதற்குப் பெயர் தான் காதல்னு டயலாக் விடலாம். ஆனாலும் சுய சம்பாத்தியம் இல்லாது, வெளி உலக அனுபவம் எதுவுமேயின்றி வளரும் சூழ்நிலையில், ஒருவருடைய கேரக்டர் அப்டினு எதுவுமே வெளிப்படாது. அடிப்படையில், படிக்கும் காலகட்டத்தில் எல்லோருமே நல்லவர்கள் தான். அந்த மாதிரியான வயதில் காதல் அப்டிங்கிறது, எதை வைத்து நிர்ணயமாகிறதென்று அவர்களுக்குப் புரிவது கிடையாது. 

படிப்பிற்குப் பிறகு, தனக்கான ஒரு வழியினை அல்லது வாழ்க்கையினைத் தேர்ந்தெடுக்க அடி எடுத்துவைக்கையில், சமுதாயத்தில் அவன் போராடும்போது தான் அவனுடைய உண்மையான குணங்கள் என்ன என்பது அவனாலேயே தீர்மானிக்கப்படும். வேறுபாடான சூழல்களை அவன் கையாண்டு எடுக்கும் முடிவுகளில் தான் அவனுக்கிருப்பது நற்குணங்களா தீய குணங்களா அதாவது அவன் நல்லவனா கெட்டவனா என்பது அறியப்படும். இந்நிலையில் வெறும் ஈர்ப்பை மட்டுமே வைத்து முன்வைக்கப்படும் டீன்-ஏஜ் காதல் என்பது ஒரு மாயை என்பதைப் பலரும் அறிவதில்லை. அதனாலேயே பெரும்பாலான இதுபோன்ற காதல்கள், உடல் உணர்ச்சிகளை மையப்படுத்தியே அமைகின்றன. சிறு பிரச்சனைகளைக் கூட எதிர்கொள்ளத் திணறி, அவசரமான பக்குவப்படாத திருமண வாழ்வுக்கு வழிவகை செய்கின்றன.

அப்படியெனில் காதல் என்பதே பொய்யானதா என்ற எதிர்மறையான விவாதங்களும் எழலாம். நான் இங்கு வைத்திருக்கும் வாதம், படிக்கும் வயதில் வரப்படும், குணங்களறியாத, வெறும் ஈர்ப்பினால், உடல் உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் சினிமாத்தனமான காதல் பற்றியது தான்.

.
.

Comments

வாழ்த்துக்கள். அருமையா சொல்லி இருக்கீங்க. அந்த வயதில் வருவது வெறும் எதிர் பால் மேல் உள்ள இனக் கவர்ச்சியே ..
ம்ம் பொறுப்பான பதிவு.
//படிப்பிற்குப் பிறகு, தனக்கான ஒரு வழியினை அல்லது வாழ்க்கையினைத் தேர்ந்தெடுக்க அடி எடுத்துவைக்கையில், சமுதாயத்தில் அவன் போராடும்போது தான் அவனுடைய உண்மையான குணங்கள் என்ன என்பது அவனாலேயே தீர்மானிக்கப்படும். வேறுபாடான சூழல்களை அவன் கையாண்டு எடுக்கும் முடிவுகளில் தான் அவனுக்கிருப்பது நற்குணங்களா தீய குணங்களா அதாவது அவன் நல்லவனா கெட்டவனா என்பது அறியப்படும். இந்நிலையில் வெறும் ஈர்ப்பை மட்டுமே வைத்து முன்வைக்கப்படும் டீன்-ஏஜ் காதல் என்பது ஒரு மாயை என்பதைப் பலரும் அறிவதில்லை//

அற்புதம்.. வாழ்த்துக்கள்.
R.Gopi said…
//ஹீரோ ஒரு சீன்ல ப்ளஸ்டூ படிக்கிற பையனா வருவார். அந்த ஹீரோவுக்கு எப்படியும் ஒரு 40 வயசு இருக்கும். கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாம எப்படித்தான் ஸ்கூல் பையனா நடிச்சாரோ தெரியல.. மீசைய எடுத்துட்டா வயசு கொறஞ்ச மாதிரி தெரியும்னு அவரு நெனச்சுட்டாரு போல.. இந்தக் கொடுமை பத்தாதுன்னு அவருக்கு ஸ்கூல் படிக்கும்போதே லவ் பண்ற மாதிரி காட்சி வேற.. ஹீரோயின பாத்து ரொமான்டிக்கா லுக்கு விட்றேங்குற பேர்ல, அஷ்டகோணல்ல அவரு முகம் மாறும்போது, பாக்குற நமக்கு வாந்தி தான் வருது.//

******

ஹா...ஹா...ஹா...ஸ்டார்டிங்லயே ஜெட் வேகத்துல சூடு பறக்குதே பதிவு.....

//18.. இல்ல இல்ல 15 வயசு வந்துட்டா போதும்.. காதல் பண்ற தகுதி வந்துடுதுனு இவங்களோட எண்ணம்போல. படிக்கிறத காட்றாங்களோ இல்லையோ.. இவங்களோட காதல் சடுகுடு விளையாட்ட நல்லாவே படமெடுக்குறாங்க.//

இதுக்கெல்லாம் முன்னோடி “பாரதிராஜா”ன்னு ஒரு டைரடக்கரு இருந்தாரே.... அவர்தானே??

//படிப்பிற்குப் பிறகு, தனக்கான ஒரு வழியினை அல்லது வாழ்க்கையினைத் தேர்ந்தெடுக்க அடி எடுத்துவைக்கையில், சமுதாயத்தில் அவன் போராடும்போது தான் அவனுடைய உண்மையான குணங்கள் என்ன என்பது அவனாலேயே தீர்மானிக்கப்படும். வேறுபாடான சூழல்களை அவன் கையாண்டு எடுக்கும் முடிவுகளில் தான் அவனுக்கிருப்பது நற்குணங்களா தீய குணங்களா அதாவது அவன் நல்லவனா கெட்டவனா என்பது அறியப்படும். இந்நிலையில் வெறும் ஈர்ப்பை மட்டுமே வைத்து முன்வைக்கப்படும் டீன்-ஏஜ் காதல் என்பது ஒரு மாயை என்பதைப் பலரும் அறிவதில்லை. அதனாலேயே பெரும்பாலான இதுபோன்ற காதல்கள், உடல் உணர்ச்சிகளை மையப்படுத்தியே அமைகின்றன. சிறு பிரச்சனைகளைக் கூட எதிர்கொள்ளத் திணறி, அவசரமான பக்குவப்படாத திருமண வாழ்வுக்கு வழிவகை செய்கின்றன//

அட்டகாசமான வரிகள்... மீண்டும் மீண்டும் படித்து, அனைவரும் உள்வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க...
THOPPITHOPPI said…
Nice post.


♫wishes♫
உண்மைங்க..

அந்த வயசுல காதலிச்சு ஓடி கல்யாணம் செய்து நல்லா வாழ்ந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்...
தேவையான பதிவு
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க, சரியான கருத்துக்கள். நீஙகள் சொல்லியிருப்பதுதான் என் கருத்தும்!
//LK//
//வெட்டிப்பேச்சு//
//☀நான் ஆதவன்☀//

கருத்துக்கு நன்றி
//R.Gopi//

//THOPPITHOPPI//

//சங்கவி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..
ஹரிஸ் said…
நல்ல பதிவு..
//மனசாட்சியே இல்லாம எப்படித்தான் ஸ்கூல் பையனா நடிச்சாரோ தெரியல//
-ரைட்டு
//அருண் பிரசாத்//

நன்றி அருண்..

//பன்னிக்குட்டி ராம்சாமி//

வாங்க பன்னி சார்.
இப்ப தான் வழி தெரிஞ்சதா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கருத்துகள் அருமை. நான் இப்பதான் ஸ்கூல் படிப்பதால் எனக்கு இதை பத்தி எதுவும் தெரியாது. எனக்கு 18 வயசு முடியட்டும்...
கருத்துகள் அருமை.
//நான் இங்கு வைத்திருக்கும் வாதம், படிக்கும் வயதில் வரப்படும், குணங்களறியாத, வெறும் ஈர்ப்பினால், உடல் உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் சினிமாத்தனமான காதல் பற்றியது தான்.//

சரிதாங்க.

அருமையான ஒரு பகிர்வு.
Chitra said…
சினிமாவை - டிவியை பார்த்து உணர்வுகளை கற்று கொள்ளும் அளவுக்கு - வேறு எந்த proper guidance ம் இல்லாததால் வரும் பிரச்சனையோ?
அன்னு said…
வர வர உங்க பதிவெல்லாம் காதலை சுத்தியே இருக்கே...ஹ்ம்ம்...ஒன்னும் பிடிபடலை போங்க.. :)
ரொம்ப சரியான கருத்து! ஸ்கூல் படிக்கிறப்ப காதலிங்க ஆனா ஓடி போயி கல்யாணம் பண்ணாதீங்க/..... ஹி ஹி ஹி ஹி ;-)
அன்பு நண்பருக்கு... சமீபத்தில் வெளிவந்த எந்திரன் பார்த்தீர்களா? பார்க்கவில்லை என்றால் பார்த்துவிட்டு மீதியை எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்...
61 வயது ரஜினி, 37 வயதான ஐஸ்வர்யா ராயோட டூயட் பாடுவது, காதலிப்பது இந்த காமெடியையும் சொல்லுங்க. எல்லா மக்களுக்கும் தெரியட்டும்.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் இப்பதான் ஸ்கூல் படிப்பதால் எனக்கு இதை பத்தி எதுவும் தெரியாது. எனக்கு 18 வயசு முடியட்டும்...//

இந்த அநியாயத்தை தட்டிக் கேக்க யாருமே இல்லையா???
டெரர், பன்னி சார், மங்குனி.. இவங்க எங்கிருந்தாலும் உடனே வரவும்..
//சிவா said...

ரொம்ப சரியான கருத்து! ஸ்கூல் படிக்கிறப்ப காதலிங்க ஆனா ஓடி போயி கல்யாணம் பண்ணாதீங்க//

சரி சரி..
சிவா ஸ்கூல் படிக்கும்போதே லவ் பண்ணிருக்காருனு நாங்க தெரிஞ்சுகிட்டோம்.
R.Gopi said…
ஆசையே மாயை
மாயையே ஆசை....

யச்சச்ச கச்சச்ச
கச்சச்ச யச்சச்ச
என்ன நடக்குது இங்கே?
//விடுத‌லைவீரா said...

அன்பு நண்பருக்கு... சமீபத்தில் வெளிவந்த எந்திரன் பார்த்தீர்களா? பார்க்கவில்லை என்றால் பார்த்துவிட்டு மீதியை எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்...
61 வயது ரஜினி, 37 வயதான ஐஸ்வர்யா ராயோட டூயட் பாடுவது, காதலிப்பது இந்த காமெடியையும் சொல்லுங்க. எல்லா மக்களுக்கும் தெரியட்டும்.//

சினிமாவில் நடக்கும் அபத்தங்கள் பற்றி எழுதவேண்டுமானால் அதற்கு ஒரு பதிவு போதாதே.. படிக்கும் வயதிலான காதலை(!!) தான் இங்கு விமர்சித்திருக்கிறேன்.

அதெல்லாம் இருக்கட்டும்..
இந்திரா“னு தெளிவா தலைப்பு இருக்கும்போது “நண்பர்”னு அழைத்தால் எப்படி? “தோழி“னு சொல்லுங்க சார்.
///இந்திரா said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் இப்பதான் ஸ்கூல் படிப்பதால் எனக்கு இதை பத்தி எதுவும் தெரியாது. எனக்கு 18 வயசு முடியட்டும்...//

இந்த அநியாயத்தை தட்டிக் கேக்க யாருமே இல்லையா???
டெரர், பன்னி சார், மங்குனி.. இவங்க எங்கிருந்தாலும் உடனே வரவும்..///

ஆமாங்க சிரிப்பு போலீஸ்கார் இன்னும் ஸ்கூல்தான் படிக்கறார். SSLC யவே 66 வருசமா டுட்டோரியல் காலேஜ்ல படிச்சுக்கி்ட்டு இருக்காரு. அப்படின்னா இன்னும் ஸ்கூல் படிச்சி முடிக்கலைனனுதானே அர்த்தம்?

வயசு 81 ன்னுன்னு போட வேண்டியது கை ரொம்ப ஆடுறதுனால தவறிப்போயி 18ன்னு டைப் அடிச்சிட்டாருன்னு நெனக்ககிறேன், மன்னிச்சி விட்ருங்க!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன நடக்குது இங்கே?//

வாங்க சார்.. நீங்களே கேளுங்க..
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமாங்க சிரிப்பு போலீஸ்கார் இன்னும் ஸ்கூல்தான் படிக்கறார். SSLC யவே 66 வருசமா டுட்டோரியல் காலேஜ்ல படிச்சுக்கி்ட்டு இருக்காரு. அப்படின்னா இன்னும் ஸ்கூல் படிச்சி முடிக்கலைனனுதானே அர்த்தம்?
வயசு 81 ன்னுன்னு போட வேண்டியது கை ரொம்ப ஆடுறதுனால தவறிப்போயி 18ன்னு டைப் அடிச்சிட்டாருன்னு நெனக்ககிறேன், மன்னிச்சி விட்ருங்க!//

ஓ.. அப்படியா???
சரி விடுங்க மன்னிச்சிடலாம்.
நம் ஒட்டுமொத்த சமுதாயச் சீர்கேட்டின் ஆரம்பமே....
"நம் சினிமா"தான்....

அது...

அன்று... "ஹரிதாஸ்"ல் கன்னிப்பெண்களை.. குதிரைமீது விரட்டிய தியாகராஜ பாகவதர் காலம் முதல்...

இன்று... நீங்கள் சொன்ன திரையில் பார்க்கவே சகிக்காத கதாநாயன் வரை...

இது ஓர் தொடர் கதை....
காரணம்...

நாம்..... நடப்பதோ தரையில்...!
நம் எண்ணங்களோ பறப்பது விண்ணைத்தாண்டி....!

நல்ல பதிவு...
நண்பி....

நட்புடன்...
காஞ்சி முரளி....
//காஞ்சி முரளி...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளி.
//அன்னு said...
வர வர உங்க பதிவெல்லாம் காதலை சுத்தியே இருக்கே..//

ஷ்ஷ் இது நமக்குள்ளயே இருக்கட்டும்.
எனக்கு பப்ளிகுட்டி பிடிக்காதுங்க.
//ஹரிஸ்//
//வெறும்பய//
//அன்பரசன்//
//Chitra //

நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றி


//R.Gopi said...

ஆசையே மாயை
மாயையே ஆசை....
யச்சச்ச கச்சச்ச
கச்சச்ச யச்சச்ச//


அதே தான் கோபி..
அருமையா சொல்லி இருக்கீங்க.
அருமையான வாதம்..
ஒரு சின்ன கவிதை சொல்ல ஆசைப்படுகிறேன்..

காதல் எப்பவும்
பொய்யானது இல்லை..
சில காதலர்கள்தான்
//சே.குமார் said...

அருமையா சொல்லி இருக்கீங்க.//

நன்றி குமார்

//கவிதை காதலன் said...


காதல் எப்பவும்
பொய்யானது இல்லை..
சில காதலர்கள்தான்//

நன்றி நண்பரே..
பதிவுகளில் தான் கவிதை சொல்லி அசத்துறீங்கனா பின்னூட்டத்துலயும் பிண்றீங்க..
//18.. இல்ல இல்ல 15 வயசு வந்துட்டா போதும்.. காதல் பண்ற தகுதி வந்துடுதுனு இவங்களோட எண்ணம்போல.//

உடலியல் பத்தி நீங்க யோசிக்கவேயில்லையா?

உயிரினங்களில் முக்கிய தேவையா இனப்பெருக்கம் இருக்குது, பருவம் அடைந்தவுடன் உடல் அதற்கு தூண்டுது, நியாயமா அப்ப காதல் வந்து தான் ஆகனும்!, தேர்ந்தெடுத்தலில் இருக்கும் தவறுகள் எதிர்காலம் குறித்தான வாழ்கை பற்றியது, மனிதனை தவிர வேறு எந்த உயிரினனும் மற்றவர்களை சார்ந்து இருப்பதில்லை!
நல்லா சம்பாரிச்சிட்டு தான் காதல் பண்ணனுங்களா மேடம்!
HariShankar said…
ம்ம்ம்ம் நீங்க சொல்றது 100% சரியே.. ஆனா ஸ்கூல்(12த அப்புரேம்) கல்லூரி 2/3 வருஷம் படிக்கும்போது ஏதோ ஒரு உணர்வு இருக்கும் அதே வெளிபடுதாம, மனசுலே வச்சுக்கிட்டு கொஞ்சம் வேலை சம்பாத்தியம் நு வந்ததுக்கு அப்புறம் திறம்பி யோசிச்சு அப்பாவும் புடிசிருந்து , சேரி சொல்லலாம்னு போய் பார்த்த. அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிருக்கும்.. அப்புறம் பேசாமே நொந்து வாழனும் ... இதுவும் இருக்குங்க ... :(

எங்கே மாமா பொண்ணு தான்.. ஆனா நான் வேளைக்கு வந்து செட்டில் ஆனதுக்கு அப்புறம் போறேன் அவளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு.. அப்புறம் என்ன என்னை நானே திட்டிகிட்டு இது பத்தி மூச்சே விடமே இருந்தேன்.. இன்னைக்கு உங்க பதிவு பார்த்ததும் பொங்கிருச்சு.. :'( :(

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..