நீ அழையாத என் கைபேசி..





வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்
காதலில்லாத என் கைபேசியை..
.
எழுத்துப் பலகைகள்
தேயப்பெற்ற காலம்போய்
எப்போதும் உறங்குகிறது..
நீ அழையாத என் பேசி.
.
எடுத்தெடுத்துப் பார்க்கிறேன்
நம் பழைய குறுஞ்செய்திகளை..
.
கவிதைகள் இல்லையெனினும்
காதலின் அடையாளங்கள் அழகாய்..
.
வினாடிகளையும் தோற்கடிக்கும்
நம் அடுத்தடுத்த பதில் பறிமாற்றங்கள்..
ஒவ்வொரு நாளின்
தொடக்கமும் முடிவும்
முடிவில்லாமல்..
.
நினைத்துப் பார்க்கிறேன்..
நேரமறியாத நள்ளிரவுகளில்
காதுமடல் சுட்டதையும்
கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும்
பொருட்படுத்தாது நீண்டுபோன
நமக்கான உரையாடல்களை..
.
சொல்ல மறந்துவிட்டேனென..
சொன்னது கேட்கவில்லையென..
இப்போதுதான் நடந்ததென..
யாரோ சொன்னதென..
எத்தனை எத்தனையோ சாக்குகள்.
நம் குரல் கேட்க ப்ரயோகித்தோம்..
.
காத்திருப்பு ஒலியிருப்பின்..
ஒருவருக்கொருவர்
செல்லமாய்க் கோபித்து
சிரிக்காமல் சீண்டுவோம்..
சிணுங்கியபின் சிக்கிடுவோம்..
சமாதானம் எனும் சிறையில்..
.
பேசிக்கொண்டே ஓர்முறை
நானுறங்கிப்போக..
துண்டிக்க மனமில்லையென
தொடர்ந்து கொஞ்சினாய்
என் மௌனத்தை..
.
உனக்குத் தெரியுமா..
உறங்கும் நடிப்பில் நீயறியாது
உன் கொஞ்சல்களை
இன்றும் சேமித்து வைத்திருக்கிறேன்
என் அலைபேசியின் பதிவுகளில்..
.
புரட்டிப்போட்டதோ..
புரண்டுவிட்டதோ..
காரணம் அறியாத
கேள்விக் குறியாய்..
.
ஆயுள் முழுவதுக்குமான
ஒட்டுமொத்தக் காதலையும்
ஒருசேரத் தீர்த்துவிட்டோமோ???
அவசரமாய் முடிந்துவிட்டது
அணுவணுவாய் ரசித்த அனைத்தும்.
.
செல்லக் கொஞ்சல் வேண்டாம்
சின்னச் சிணுங்கலாவது போதும்.
வாசல் திறக்க வேண்டாம்
ஜன்னல் மட்டுமாவது போதும்.
காதல் பார்வை வேண்டாம்..
ஓரப்பார்வையாவது போதும்..
பார்த்துப் பழக வேண்டாம்..
பாதிப் பேச்சுக்களாவது போதும்..
.
முணுமுணுத்தபடி மூழ்கிப்போகிறேன்
உன்மீதான நினைவுகளில்..
மூச்சுத்திணறுகிறது..
ஆனாலும் மீள மனமில்லை..
.
விழிநீர் துடைத்து
வெறுமையை சுமந்து
வெற்றிடமாய் நான்..
விரும்பிய நாட்கள்
திரும்பாதா எனும் ஏக்கத்தில்..
.
காத்திருப்பு சுகம் தான் காதலில்..
காயமில்லாதிருப்பின்.
கனப்பதில்லை எப்போதும் மனது..
வலியில்லாதிருப்பின்.
.
இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
உன் அழைப்பிற்கு ஏங்கும்
நீ அழையா என் பேசியை..
.
.

Comments

கவிதை சூப்பர் இந்திரா
//பேசிக்கொண்டே ஓர்முறை

நானுறங்கிப்போக..

துண்டிக்க மனமில்லையென

தொடர்ந்து கொஞ்சினாய்

என் மௌனத்தை..//

Rasiththean...

கவிதை சூப்பர்.
Arun Prasath said…
.

இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

உன் அழைப்பிற்கு ஏங்கும்

நீ அழையா என் பேசியை..//


வரும் வரும்... கவலைபடாதீங்க... :) நல்லா தான் இருக்கு
//இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

உன் அழைப்பிற்கு ஏங்கும்

நீ அழையா என் பேசியை..//

உண்மையான, அழகான வரிகள்...

எப்பங்க கவிதாயினியா மாறுனீங்க...
Balajisaravana said…
படித்து முடிச்சதும் பிரிவின் வலி மனதில சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கு இந்திரா! பின்னூட்டம் கொஞ்சம் பெருசாயிடுச்சு.. மன்னிக்க!



//எடுத்தெடுத்துப் பார்க்கிறேன்

நம் பழைய குறுஞ்செய்திகளை.//

இப்போதும் நான்!



//காதலின் அடையாளங்கள் அழகாய்//

காதலில் தானே வலியும் வடுவும் அழகு :(



//ஒவ்வொரு நாளின்

தொடக்கமும் முடிவும்

முடிவில்லாமல்..//

என்ன சொல்ல? காலை வணக்கம் சொல்லாமல் என் சூரியன் உதிக்காது அப்போது..



//நினைத்துப் பார்க்கிறேன்..

நேரமறியாத நள்ளிரவுகளில்//

மணிகள் பறக்கும் காதலின் பேச்சுக்களில்..



கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும்

பொருட்படுத்தாது //

மறுநாள் விடியல் எப்போதும் கண்ணெரிச்சளோடு தான்.. ஆனாலும் இன்பம் :)



//சிரிக்காமல் சீண்டுவோம்..

சிணுங்கியபின் சிக்கிடுவோம் //

:)



//தொடர்ந்து கொஞ்சினாய்

என் மௌனத்தை.//

கொஞ்சலிலும் வழிந்தது காதல்!



//இன்றும் சேமித்து வைத்திருக்கிறேன்

என் அலைபேசியின் பதிவுகளில்.//

பரண்களிலும் மனதின் ஓரத்திலும் தூங்கும் நினைவுகள் போல..



//காரணம் அறியாத

கேள்விக் குறியாய்//

காரணம் தெரிந்தும் சூழ்நிலைக் கைதியாய் :)



//அவசரமாய் முடிந்துவிட்டது

அணுவணுவாய் ரசித்த அனைத்தும்.//

கண்ணீர் சிந்தும் படத்தை நினைவில் கொள்க!



//பார்த்துப் பழக வேண்டாம்..

பாதிப் பேச்சுக்களாவது போதும்//

பாதிப் பேச்சும் நினைவை கீறி ரணம் ஊற்றிடுமா?



//மூச்சுத்திணறுகிறது..

ஆனாலும் மீள மனமில்லை.//

என்ன செய்ய நிர்பந்தச் சுழலில் சிக்கும் பொம்மையாய்..



//விரும்பிய நாட்கள்

திரும்பாதா எனும் ஏக்கத்தில்//

தனிமை ஏக்கத்தில்..



..கனப்பதில்லை எப்போதும் மனது..

வலியில்லாதிருப்பின்.//

ம்.. உண்மை..



//இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

உன் அழைப்பிற்கு ஏங்கும்

நீ அழையா என் பேசியை.//

"_____________________"
Mathi said…
//நினைத்துப் பார்க்கிறேன்..

நேரமறியாத நள்ளிரவுகளில்

காதுமடல் சுட்டதையும்

கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும்

பொருட்படுத்தாது நீண்டுபோன

நமக்கான உரையாடல்களை..//

very natural ....natural feel ellame !!!

.
ஆமாம்... நண்பர் பாலாவின் கருத்தை போல் பின்னூட்டத்தை தங்களின் கவிதை போன்று அழகாக இடலாம்... வாழ்கையின் நடைமுறை செயல்களை அழகாக வார்த்தையில் கோர்த்து கவிதையாக வடித்துள்ளீர்கள்...

இதுபோன்ற வேதனை அடைந்த நெஞ்சங்களில் இதனை படிக்கும் சமயம் என்கண்ணில் வரும் கண்ணீர் போல் வரக்கூடும்..

எதிர்பார்க்கும் அழைப்பு வந்து ஒலிக்காத அலைபேசி கடல் அலைபோல் மீண்டும் ஒலிக்கட்டும்...
//LK said...

கவிதை சூப்பர் இந்திரா//

நன்றி LK
//சே.குமார் said...

Rasiththean...

கவிதை சூப்பர்.//

உங்கள் ரசனைக்கும் வருகைக்கும் நன்றி குமார்.
//Arun Prasath said...//

நன்றி அருண்


//சங்கவி said...

உண்மையான, அழகான வரிகள்...

எப்பங்க கவிதாயினியா மாறுனீங்க...//

பாராட்டுக்கு நன்றிங்க.
கவிதாயினியா???? அந்தளவுக்கெல்லாம் இல்லங்க.
ஒவ்வொரு வரிகளும் காதலை சொல்கின்றன.. காதல், ஏக்கம், பிரிவு, வலி என எல்லாம் கலந்திருக்கிறது கவிதையில்..

அருமை..
வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்

காதலில்லாத என் கைபேசியை..


//


என்னாச்சு காசில்லையோ..
//Mathi said...

very natural ....natural feel ellame !!!//

நன்றி மதி
//Balajisaravana said...//

காதல் என்பதே வலி நிறைந்தது தானே..

பெரிய்ய்ய்ய்ய்ய பின்னூட்டமிட்டதுக்கு நன்றி பாலாஜி.
எடுத்தெடுத்துப் பார்க்கிறேன்
நம் பழைய குறுஞ்செய்திகளை..

//

எவ்வளவும் படிச்சும் புரியலையா/...
//தஞ்சை.வாசன் said...

ஆமாம்... நண்பர் பாலாவின் கருத்தை போல் பின்னூட்டத்தை தங்களின் கவிதை போன்று அழகாக இடலாம்... வாழ்கையின் நடைமுறை செயல்களை அழகாக வார்த்தையில் கோர்த்து கவிதையாக வடித்துள்ளீர்கள்...

இதுபோன்ற வேதனை அடைந்த நெஞ்சங்களில் இதனை படிக்கும் சமயம் என்கண்ணில் வரும் கண்ணீர் போல் வரக்கூடும்..

எதிர்பார்க்கும் அழைப்பு வந்து ஒலிக்காத அலைபேசி கடல் அலைபோல் மீண்டும் ஒலிக்கட்டும்...//

நன்றி வாசன்.
வருகைக்கும் கருத்துக்கும்.
எழுத்துப் பலகைகள்

தேயப்பெற்ற காலம்போய்

எப்போதும் உறங்குகிறது..
நீ அழையாத என் பேசி.

//

ஒரு வேளை சார்ஜ் இல்லாம இருந்திருக்கும்...
எழுத்துப் பலகைகள்

தேயப்பெற்ற காலம்போய்

எப்போதும் உறங்குகிறது..
நீ அழையாத என் பேசி.

//

ஒரு வேளை சார்ஜ் இல்லாம இருந்திருக்கும்...
//உறங்கும் நடிப்பில் நீயறியாது

உன் கொஞ்சல்களை

இன்றும் சேமித்து வைத்திருக்கிறேன்

என் அலைபேசியின் பதிவுகளில்
//
காத்திருப்பு சுகம் தான் காதலில்..

காயமில்லாதிருப்பின்.

கனப்பதில்லை எப்போதும் மனது..

வலியில்லாதிருப்பின்//


உங்கள் காதலில்லா கைபேசி கண்ணீர் வரவைக்கிறது..உணர்வுகளைத் தெளிவாக தெளித்திருக்கிறீர்கள்..

வாழ்த்துக்கள்.
//வெறும்பய said...

ஒவ்வொரு வரிகளும் காதலை சொல்கின்றன.. காதல், ஏக்கம், பிரிவு, வலி என எல்லாம் கலந்திருக்கிறது கவிதையில்..

அருமை..//

நன்றி நண்பரே..

//என்னாச்சு காசில்லையோ..//
//ஒரு வேளை சார்ஜ் இல்லாம இருந்திருக்கும்..//


அதான பாத்தேன்.. என்னடா வெறும்பயலோட கிண்டல காணோமேனு..
நினைத்துப் பார்க்கிறேன்..

நேரமறியாத நள்ளிரவுகளில்

காதுமடல் சுட்டதையும்

கண்கள் உறக்கத்திற்கு சொருகியதையும்

பொருட்படுத்தாது நீண்டுபோன
நமக்கான உரையாடல்களை..

//

500 ரூபா மொபைல் வச்சிருந்தா சுட தான் செய்யும்...
வினாடிகளையும் தோற்கடிக்கும்

நம் அடுத்தடுத்த பதில் பறிமாற்றங்கள்..

ஒவ்வொரு நாளின்

தொடக்கமும் முடிவும்
முடிவில்லாமல்..

//

எல்லாம் இந்த 10 காசு ஸ்கீமால வந்தது..
கவிதைகள் இல்லையெனினும்
காதலின் அடையாளங்கள் அழகாய்..

//

ஏதாவது ஸ்டிக்கர் ஒட்டி வச்சிருந்தீங்களா..
சொல்ல மறந்துவிட்டேனென..

சொன்னது கேட்கவில்லையென..

இப்போதுதான் நடந்ததென..

யாரோ சொன்னதென..

எத்தனை எத்தனையோ சாக்குகள்.
நம் குரல் கேட்க ப்ரயோகித்தோம்..

//

எந்த வேலைக்கும் போகாம வீட்டிலையே உக்காந்திருந்தா இப்படி தான்..
//வெட்டிப்பேச்சு..

உங்கள் காதலில்லா கைபேசி கண்ணீர் வரவைக்கிறது..உணர்வுகளைத் தெளிவாக தெளித்திருக்கிறீர்கள்..

வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பரே..
karthikkumar said…
பேசிக்கொண்டே ஓர்முறை

நானுறங்கிப்போக..

துண்டிக்க மனமில்லையென

தொடர்ந்து கொஞ்சினாய்

என் மௌனத்தை///

இது சூப்பருங்க.

படிக்குபோதே லவ் feel வருது.
//karthikkumar said...

இது சூப்பருங்க.

படிக்குபோதே லவ் feel வருது.//

நன்றி கார்த்திக்.
நல்லா ஃபீல் பண்ணுங்க..
சூப்பர். ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.
சூப்பர். ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.
Chitra said…
கவிதைகள் இல்லையெனினும்

காதலின் அடையாளங்கள் அழகாய்..


......அழகான கவிதை. காதலியின் தவிப்பு - அருமையாக வெளிப்படுத்தப் பட்டு இருக்கிறது.
//☀நான் ஆதவன்☀ said...

சூப்பர். ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.//

நன்றி ஆதவன்
//வார்த்தை said...

class//

நன்றி நண்பரே..
அடிக்கடி வாங்க..
//Chitra said...


......அழகான கவிதை. காதலியின் தவிப்பு - அருமையாக வெளிப்படுத்தப் பட்டு இருக்கிறது.//

நன்றி சித்ரா..
வைகை said…
காதலிப்பவர்களுக்கு காத்திருக்கும் அனுபவம் இது! காதலித்தவர்களுக்கு கடந்து போன அனுபவம் இது! ஆக மொத்தம் அனைவரும் அனுபவிக்க வேண்டிய அனுபவம்!!!
//இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

உன் அழைப்பிற்கு ஏங்கும்

நீ அழையா என் பேசியை..//

டச்சிங்... அருமை

கவிதை சூப்பர் உணர்வுகளை அழகாக பதிவு செய்துள்ளீர்கள்

தொடரட்டும் உங்கள் பணி...
கவிதை சூப்பர்
logu.. said…
\\காத்திருப்பு சுகம் தான் காதலில்..

காயமில்லாதிருப்பின்.

கனப்பதில்லை எப்போதும் மனது..

வலியில்லாதிருப்பின்.\\

Romba rasithen varigalai..
Fentastic..
logu.. said…
\\விழிநீர் துடைத்து

வெறுமையை சுமந்து

வெற்றிடமாய் நான்..

விரும்பிய நாட்கள்

திரும்பாதா எனும் ஏக்கத்தில்..\\

mm... solla varthaiye illainga..
//எடுத்தெடுத்துப் பார்க்கிறேன்

நம் பழைய குறுஞ்செய்திகளை.//

இப்போதும் நான்! //

அன்பின் வலியை உணர முடிகிறது..
எதை தொடுவது...
எதை விடுவது... நண்பி...!

ஒட்டுமொத்த உணர்வுகளும்...
ஒருமித்து...
ஒலிக்கும்...
மனவலைகளின்
ஒலியோசை...!

உணர்வுக்கிடங்கில்
உறங்கிக்கொண்டிருந்த... தங்கள்
உணர்வலைகளின்
உணர்வோசை...
எங்கள்
மனதையும்...
கண்களையும்...
கலங்கவைத்தன என்பதே உண்மை...!

Super...!
ரொம்ப நல்லா இருக்குங்க

கவிதையாய் ஒரு அழகான காதல் கதை

கவிதையோடு காதலை ரசித்தேன்
வலியை உணர்ந்தேன் அருமையான வரிகள்

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
siva said…
வரிகள் வாசிக்கும்போது
வலிகள் புரிகிறது
உணர்வை சொல்ல
உங்கள் கவிதை விட
வேறு வார்த்தைகள்
இல்லை
மிக ரசித்த சராசரிகளில் நானும் ஒருவனாய்
வாழ்த்துக்கள்
vinu said…
கவிதைகள் இல்லையெனினும்

காதலின் அடையாளங்கள் அழகாய்..




miga அழகாய்.............
vinu said…
yaarunga unga manasai kollai adichcha antha machakkaararrrrrrrrrrrrrrrrrrrrrrrr
vinu said…
47.............
vinu said…
46 loading........
vinu said…
apaadi yaarume illaatha kadaila vanthu aataiyay poda vendiyathaa pocheeeee
vinu said…
me the 50thuuuuuuuuuuuu
//எடுத்தெடுத்துப் பார்க்கிறேன்

நம் பழைய குறுஞ்செய்திகளை..//

அப்படியும் புரியலையோ?
/எழுத்துப் பலகைகள்

தேயப்பெற்ற காலம்போய்

எப்போதும் உறங்குகிறது..

நீ அழையாத என் பேசி. ///

ரீசார்ஜ் பண்ணலைன்னா அப்படிதான் உறங்கும்.
//வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்

காதலில்லாத என் கைபேசியை..//


அவ்ளோ நேரம் பாத்த பிறகுதான் அது கைபேசின்னு தெரிஞ்சதோ. பாவம். கண் டாக்டர பாருங்க
காதலின் ஏக்கம் அருமை.
R.Gopi said…
பதிவு (கவிதை) வழக்கம் போலவே அசத்தல்....

//ஆயுள் முழுவதுக்குமான

ஒட்டுமொத்தக் காதலையும்

ஒருசேரத் தீர்த்துவிட்டோமோ???

அவசரமாய் முடிந்துவிட்டது

அணுவணுவாய் ரசித்த அனைத்தும்.//


கவிதை முழுதுமாய் பிடித்திருந்தாலும் இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது
//காஞ்சி முரளி //

தொடர்ச்சியான உற்சாகமளிக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி முரளி.
//வைகை//

//மாணவன்//

//அருண் பிரசாத்//

//logu.. //

//பாரத்... பாரதி... //


நண்பர்களுக்கு நன்றி
//வேங்கை said...

ரொம்ப நல்லா இருக்குங்க

கவிதையாய் ஒரு அழகான காதல் கதை

கவிதையோடு காதலை ரசித்தேன்
வலியை உணர்ந்தேன் அருமையான வரிகள்

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்//


கருத்துக்களுக்கு நன்றி

//siva said...

வரிகள் வாசிக்கும்போது
வலிகள் புரிகிறது
உணர்வை சொல்ல
உங்கள் கவிதை விட
வேறு வார்த்தைகள்
இல்லை
மிக ரசித்த சராசரிகளில் நானும் ஒருவனாய்
வாழ்த்துக்கள்//

நன்றி சிவா...
என்ன அடிக்கடி காணாமப் போய்ட்றீங்க???? ரொம்ம்ம்ப வேலையா???
//காத்திருப்பு ஒலியிருப்பின்..

ஒருவருக்கொருவர்

செல்லமாய்க் கோபித்து

சிரிக்காமல் சீண்டுவோம்..

சிணுங்கியபின் சிக்கிடுவோம்..

சமாதானம் எனும் சிறையில்..

சூப்பருங்க..
அனுபவிச்சு எழுதிருக்கீங்க..
ஹரிஸ் said…
//எடுத்தெடுத்துப் பார்க்கிறேன்

நம் பழைய குறுஞ்செய்திகளை.//

//இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

உன் அழைப்பிற்கு ஏங்கும்

நீ அழையா என் பேசியை..//

ஸேம் பிளட்...
sakthi said…
SUPERB LINES AWESOME ::)))
kalai said…
சொல்ல மறந்துவிட்டேனென..

சொன்னது கேட்கவில்லையென..

இப்போதுதான் நடந்ததென..

யாரோ சொன்னதென..

எத்தனை எத்தனையோ சாக்குகள்.

நம் குரல் கேட்க ப்ரயோகித்தோம் supera eruku bt same time touchinga manasu kastapadura mari eruku முணுமுணுத்தபடி மூழ்கிப்போகிறேன்

உன்மீதான நினைவுகளில்..

மூச்சுத்திணறுகிறது..

ஆனாலும் மீள மனமில்லை..

.

விழிநீர் துடைத்து

வெறுமையை சுமந்து

வெற்றிடமாய் நான்..

விரும்பிய நாட்கள்

திரும்பாதா எனும் ஏக்கத்தில்..

.entha oru oru line m romba touchinga eruku neenga romba talent oru lovers imagineku vanthutanga nice
//காத்திருப்பு சுகம் தான் காதலில்..

காயமில்லாதிருப்பின்.

கனப்பதில்லை எப்போதும் மனது..

வலியில்லாதிருப்பின்.//

வலி வாங்கிச் செல்கின்றேன் இந்திரா செத்தழிந்த பின் வாங்கிய புதிய தொலைபேசியை இதே ஏக்கத்தோடு பார்த்தபடி....
மதி said…
///பேசிக்கொண்டே ஓர்முறை

நானுறங்கிப்போக..

துண்டிக்க மனமில்லையென

தொடர்ந்து கொஞ்சினாய்

என் மௌனத்தை..///

///ஆயுள் முழுவதுக்குமான

ஒட்டுமொத்தக் காதலையும்

ஒருசேரத் தீர்த்துவிட்டோமோ???///

ரொம்பக் காதலான வரிகளும் ரொம்ப உண்மையான வரிகளும் ஒண்ணா இந்தக் கவிதையில இருக்கு. முக்கியமா இந்த உண்மை இன்னைக்குப் பல காதல்களில் உள்ள சுவாரசியத்தை அழிச்சுட்டிருக்குன்னு தோணுது. நமக்கு முந்தின தலைமுறை ஆற அமர வெட்கப்பட்டு, கஷ்டப்பட்டு, காதலிச்சதாலதான் அவங்களால ரொம்ப நாள் நீட்டிக்க முடிஞ்சுதோ? நம்ம தலைமுறை காதலையும் அவசரத்திலும் 24 மணி நேர இலவச உரையாடல்களிலும் தொலைத்து விடுகிறதோ ?
ஹேமா said…
எத்தனையோ காதல் உள்ளங்களின் குரலாய் இந்தக் கவிதை.
வலி ஆனாலும் அழகு இந்திரா !
Jaichandran said…
Hai Indirama...

Some how I have landed in your blog. (Is this what is called as an accident?) I must have obeyed the warning title"Padikkaadhinga" and surfed out from your Blog. But for God's sake I did read this "Kavidhai Madhiri" out of curious.

Is that a punishable mistake. Why do you harm your innocent reader by pouring a great emotional pain through your EMOTIONALLY IMPRESSIVE KAVIDHAI'S.

That's what I have to ask you after reading this "நீ அழையாத என் கைபேசி.."

The Kavidhai is Simple yet a great symbolization of Love and Anticipation.

Great. Superb. Keep it up.


mmmm.... Now Let's come out of the Kavidhai and think about the reality expressed in the Kavidhai. Too painful isn't it?

What's your opinion Indirama... to the people in the real world who is suffering this kind of love pain...? How to overcome this emotional pain and live a normal life?

Hope you could understand my question and may I expect your pain-killer answer.

And that answer is what many lovers are searching for currently. (But is not available through any search engine) At least may you give a proper antidote...


(I have not added any similey out of fear of "Thousand Rupees fine"...Hope you don't have any "fine" schemes for commenting in English)

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..