உருவம் ≠ உள்ளம்
அறிஞர் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு நாள் விருந்து ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அதிகமான வேலைப்பளு காரணமாக அழுக்கான உடைகளோடே அந்த விருந்துக்கு அவர் செல்லும் நிர்பந்தம் உண்டானது. அவரைப் பார்த்த வாசல் காவலாலிகளோ அவரை யாரோவென நினைத்து, உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. எவ்வளவு சொல்லியும் யாரும் அவரை உள்ளே விடவில்லை. சர்ச்சில் உடனே தமது இல்லத்திற்குச் சென்று நாகரிகமான சுத்தமான ஆடைகளை உடுத்திக்கொண்டு வர, அவருக்கு ராஜ உபச்சாரம் செய்யப்பட்டு உள்வர அனுமதிக்கப்பட்டார்.
விருந்தில் உணவுகள் பரிமாறப்பட அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர். ஆனால் சர்ச்சிலோ அந்த உணவுகளை சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தமது கோட் பைகளில் போட்டுக்கொண்டிருந்தார். அனைவரும் காரணம் கேட்கவே, ”இந்த விருந்து எனக்காகப் படைக்கப்படவில்லை, நான் அணிந்திருக்கும் உடைகளுக்குப் படைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் இவைகளை என் உடைகளே சாப்பிடட்டும்” என்று கூறி தொடர்ந்து உணவுகளை சட்டைக்குள் கொட்டிக் கொண்டார்.
ஆம்.. ஒரு மனிதன் எப்படிப்பட்டவனென தீர்மானிப்பது அவனுடைய குணங்களேயன்றி, உடைகளோ உருவமோ அல்ல. ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாகரிகமாக உடுத்தாதவனையும் தோரணையான உருவமில்லாதவனையும் இந்த சமூகம் சற்றே ஒதுக்கிவைத்துப் பார்க்கிறது.
இவர் என் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர். கொஞ்சம் ஒடிசலான தேகம், சோடா கண்ணாடி, கலர் காமினேஷன் இல்லாத சட்டை பேண்ட், லேசான தெற்றுப்பல், ஹவாய் செருப்பு – இவை தான் அவரின் அடையாளங்கள். எத்தனை கூட்டமாக இருந்தாலும் அவரை மற்றவர் பார்க்கும் பார்வையே வித்தியாசமானதாக இருக்கும். நன்றாகப் படித்தவர், பொறுப்பான வேலையிலிருப்பவர், கைநிறைய சம்பாதிப்பவர்.. ஆனாலும் தனது உருவத்தினால் மற்றவரை விட்டு எப்போதும் தனித்தே வைக்கப்படுவார்.
அலுவலகப் பேருந்திலும் கூட அவர் அருகில் உட்கார யாரும் முன்வருவதில்லை. அவர் வராத நாட்களில் சக ஊழியர்கள், ”என்ன.. டூம் பல்லி இன்னைக்கு வரலயா?” என்று கேலியாக கேட்பார்கள். டூம் பல்லி என்பது அவருக்கு சூட்டப்பட்ட பட்டைப்பெயராம். இருக்கைகளில்லாத போது வேறு ஊழியர்களுக்கு அருகே அவர் அமர நேர்கையில் அருகிருப்போர் முகம் சுளித்துக்கொள்வா்.
தன்னருகே அவர் நிற்பது தங்களுக்கு ஏதோ கௌரவக் குறைச்சல் என்பதாக இவர்கள் கருதுகின்றனர். அவரில்லாதபோது அவரை இமிடேட் செய்து நடந்து, பேசிக்காட்டுவதில் மற்றவர்களுக்கு அலாதி சந்தோசம்.
இன்று உருவத்தில் சளைத்த பலருக்கு இந்த நிலை தான் சமூகத்தில் கிடைக்கிறது. வெள்ளைத்தோலுக்கும் அயர்ன் பண்ணிய சட்டைக்கும் ஷூவுக்கும் கிடைக்கும் ஒரு மரியாதையும் அந்தஸ்தும் மெலிந்த தேகத்துக்கும் ஹவாய் செருப்புக்கும் கசங்கிய சட்டைக்கும் கிடைப்பதில்லை. அவர்களது கருத்துக்களும் சிந்தனைகளும் அறிவாற்றலும் என்னதான் உயர்ந்திருந்தாலும் அவர்களின் உடையும் உருவமும் தான் மற்றவர்களின் பார்வைக்கு முதலில் சென்றடைகிறது. சமுதாயத்தின் மனக்கண்களில் இவரென்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற தீர்மானங்கள் முடிவெடுக்கப்படுகின்றன. தோரணையாக, கம்பீரமாக, ஸ்டைலாகக் காட்சியளிப்பவர்களை மதிக்குமளவிற்கு சாதாரணமான தோற்றமுள்ளவர்கள் மதிக்கப்படுவதில்லை. அவர்களை அப்பாவிகள், ஏமாளிகள், அறிவில்லாதவர்கள், கோமாளிகள், காமெடி பீஸ்கள் என்ற பார்வையிலேயே இந்த சமூகம் முத்திரை குத்திப் பார்க்கிறது.
பல கோணங்களில் மனிதனின் கண்ணோட்டங்கள் நாகரிமாக மாறியிருக்கலாம், முன்னேறிக்கொண்டிருக்கலாம். ஆனாலும் இது போன்ற சில அடிப்படை விஷயங்களில், சக மனிதனை நடத்துவதில் தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொண்டிருக்கிறான் என்பது தான் பட்டவர்த்தனமான உண்மை.
.
Comments
உண்மைதான்... உடையே அவனின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது...
வாழ்த்துக்கள் சகோ
விஜய்
ஆனால் இந்த தோற்றமா மகாத்மா அவர்களையும் , அன்னை தெரேசா அவர்களையும் நம் மனதில் இடம்பெற செய்தது...?!
உங்கள் பதிவில் உங்கள் ஆதங்கம் தெரிகிற்து.
ஆள் பாதி ஆடை பாதியாச்சே.இருக்கப்பட்டவர்னா ஏன் தன்னை பரிதாபமா காட்டிக்கனும்? ஆனா அந்த ஒரு காரணத்துக்காக அவளை ஒதுக்கி,கிண்டலும் கேலியும் செய்யிறவங்க மாக்கள் தான்.
ஆள்பாதி ஆடைபாதி என்பதன் மறு உருவம் இது தானோ?
உடையும் உருவமும் மனிதனின் தரத்தை, நிலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாக...
உருவம் அழகு இல்லாத பணக்காரர்கள் தன் உடையின் மூலம் மதிப்பை பெறக்கூடும்...
இரண்டும் இல்லாதவர்கள் என்ன செய்யக்கூடும்?
சிந்திப்போம் செயல்படுவோம்...
தீண்டாமை என்பது இதுபோல் இன்றும் நம்மிடையே....
உங்க பதிவில சொன்ன விஷயம் நன்று. ஆனா என்ன, இதுபோன்ற நிலைமை எனக்கு தெரிந்து எல்லா இடத்திலும் இருக்கிறது. இத பேசி யாரும் மாற போறதில்ல.
உண்மைதான். இந்த எதிர்பார்ப்புகள் சில நேரங்களில் ஏமாற்றங்களாகவும் முடியலாம். ஆனாலும் தீர்மானங்கள் மாற்றிக் கொள்ளப் படுவதில்லை.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
முற்றிலும் உண்மையான கருத்து
தெளிவாகவும் சிறப்பாகவும் பதிவு செய்துள்ளீர்கள் அருமை
தொடரட்டும் உங்கள் பணி
பகிர்வுக்கு நன்றி
நல்ல கருத்துள்ள பதிவு
Avanal mudiyathathu manithanaga nadanthu kolvathu mattume..
Dr. A.P.J..sonnathunga..
சரியா சொன்னீங்க.
எனக்கு இந்த அனுபவம் நிறைய இருக்கு.
கூடிய விரைவில் ஒரு பதிவும் வரலாம்.
நரிகள் உண்மை பேசும்
உண்மையான நாடு!
பசுக்கள் முட்டினால்
உண்மைதான்
பீ திங்குமா ?
ஏற்றதுடன் தங்கம் விலை
இறங்கு முகமாக அன்பின் விலை
எடுத்து சொல்ல
அறிவாளி இல்லை !!
ஏதோ ஆதங்கம்
சாரிங்க இந்த வரிகளை ஒரு மாற்றமா (காதல் கவிதை தவிர்த்து )என் ப்ளாக் ல போட்டுக்குறேன்
......வேதனையான விஷயமும் கூட.
no no
வடை எனக்குத்தான்..
:(((
அதற்காகவே “ஆள் பாதி, ஆடை பாதி”ன்னு சொல்லி வச்சு இருக்காங்க...
நன்றாக ஆடையணிந்த எவ்வளவோ போலிகள் இந்த நாளில் பெரும் மரியாதை பெற்று பவனி வருவதை நாம் கண்கூடாக காண்கிறோம்....
//ச.இலங்கேஸ்வரன் //
//விஜய் //
//☀நான் ஆதவன்☀ //
//Kousalya //
//தஞ்சை.வாசன் //
//Arun Prasath //
//karthikkumar //
//VELU.G//
//sakthi //
//வெட்டிப்பேச்சு //
//மாணவன்//
நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அட.. யாருப்பா அது?? கோபி சாரா?
வாழ்க்கைப் பயணத்துல எழுதுனவரா???
எங்க சார் போய்ட்டீங்க???
ஆளையே காணோம்?
இன்னிக்கு வடை எனக்குத்தான்..--
no no
வடை எனக்குத்தான்..//
வந்ததே லேட்டு..
இதுல வடை வேற கேக்குறீங்களே சிவா???
//அன்பரசன்//
//வேங்கை //
//Chitra //
நன்றி நன்றி நன்றி
என சொல்றதுன்னு தெரியலை
:(((//
இப்டி சொல்லி தப்பிச்சுக்குறீங்களா???
ஒழுங்கா ஏதாவது சொல்லிட்டுப் போங்க ரமேஷ்..
//R.Gopi //
கருத்துக்கு நன்றி
எங்க சார் போய்ட்டீங்க???
ஆளையே காணோம்?
//
avaery thaan ivaru....inga thaan iruken :)... varuvom varuvom seekirama :P... eppadi irukeenga indhu.
//avaery thaan ivaru....inga thaan iruken :)... varuvom varuvom seekirama :P... eppadi irukeenga indhu.//
நலம் கோபி சார்..
மறுபடியும் உங்க மொக்கை பதிவுகள் எப்ப தொடரும்???
சீக்கிரம் ஆரம்பிங்க சார்..
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என சொல்றதுன்னு தெரியலை
:(((//
இப்டி சொல்லி தப்பிச்சுக்குறீங்களா???
ஒழுங்கா ஏதாவது சொல்லிட்டுப் போங்க ரமேஷ்..
///
intha postla kumma venaamnu pathen
உண்மை...!
யதார்த்தம்...!
இன்றைய நிலை...!
நீங்க சொன்னதாலே... சிலபேர் திருந்தினா சரி...!
நல்ல பதிவு...
வாழ்த்துக்கள்... நண்பி...!
agreed. (guess i'm too doom palli to a certain extent. but i never mind :)
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4
கிறுக்கலே இப்படி என்றால் எழுதினால் எப்படி இருக்கும் ...நால்லாம் பக்கத்திலே நிக்க முடியாது போலிருக்கே//
ஏங்க.. அவ்வளவு மோசமாவா இருக்கேன்???
பயப்படாம நில்லுங்க..