குட்டிக் குட்டிக் கவிதைகள்..


எல்லா இடத்திலும்

பொய் சொல்ல வேண்டியிருக்கிறது..

கண்ணாடியில் சிரிக்கும்பொழுது கூட.

.......................

பேசாதே

வாழ்க்கையின் துயரம் பற்றி..

பேசு

வாழுதலின் துயரம்.

.......................

இன்றைக்கில்லையெனில்

நாளை

நாளையில்லையெனில்

இன்னுமொரு நாள்

இப்படித்தான் தெரியும்

வாழ்வை

நினைவு தெரிந்த நாளிலிருந்து.

.......................

விரைவில் நைந்து

கிழிந்தே போகக்கூடும்..

நான் புரட்டிக் கொண்டேயிருக்கும்

உன் ஞாபகங்கள்.

.......................

எளிதாயிருக்கிறது..

தெரியும் என்கிறதைவிட

தெரியாதிருப்பதாகக்

காட்டிக்கொள்வது.

.......................

சுயமான தேர்வுகளோ

நம்பிக்கையுடனான நிராகரிப்புகளோ

இயலாத பட்சத்தில்

நிகழும் காரியங்களைவிடக்

கனவுகள் போதுமானதாகயிருக்கின்றன.

....................... சல்மா

(ஒரு மாலையும் இன்னொரு மாலையும் புத்தகத்திலிருந்து)

.

Comments

வடை போச்சே...

இயல்பான வாழ்வின், யதார்த்தமான நிகழ்வுகள்...

நல்லா இருக்கு தோழி அனைத்தும்...
ஜீ... said…
//சுயமான தேர்வுகளோ
நம்பிக்கையுடனான நிராகரிப்புகளோ
இயலாத பட்சத்தில்
நிகழும் காரியங்களைவிடக்
கனவுகள் போதுமானதாகயிருக்கின்றன//
SSSSuppperrrr!!! :-)
//எல்லா இடத்திலும் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது..//

இதெல்லாம் என்னை மாதிரி எப்போதாவது பொய் சொல்றவங்க கவலைப்படணும். உங்களுக்கு என்ன கவலை?
மனசை வருடுறமாதிரி இதமா இருக்குது கவிதைகள்.

நல்லா இருக்குங்க.
////விரைவில் நைந்து

கிழிந்தே போகக்கூடும்..

நான் புரட்டிக் கொண்டேயிருக்கும்

உன் ஞாபகங்கள்////

அருமையாக உள்ளது..

கடவுளின் வரமல்லவா..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.
//இன்றைக்கில்லையெனில்

நாளை

நாளையில்லையெனில்

இன்னுமொரு நாள்///

அதுவும் இல்லைன்னா அதுக்கு அடுத்த நாள்
அதுவும் இல்லைன்னா அதுக்கு அடுத்த நாள்
அதுவும் இல்லைன்னா அதுக்கு அடுத்த நாள்
அதுவும் இல்லைன்னா அதுக்கு அடுத்த நாள்
அதுவும் இல்லைன்னா அதுக்கு அடுத்த நாள்
அதுவும் இல்லைன்னா அதுக்கு அடுத்த நாள்
அதுவும் இல்லைன்னா அதுக்கு அடுத்த நாள்
/பேசாதே

வாழ்க்கையின் துயரம் பற்றி..//

ஏன் வாழ்க்கை சீரியல் முடிஞ்சுபோச்சா? அப்டின்னா தங்கம், தென்றல் துயரம் பத்தி பேசலாமா?
R.Gopi said…
படு சூப்பர் கவிதைகள்... படித்ததும் சட்டென பிடித்தது இதோ :

//எளிதாயிருக்கிறது..

தெரியும் என்கிறதைவிட

தெரியாதிருப்பதாகக்

காட்டிக்கொள்வது//
Arun Prasath said…
புரிஞ்சிருச்சா? என்ன நானே கேட்டேன்....
மறுபடியும் படிக்கணும் :-?
ஆனா நல்லா இருக்கு
(எப்டி இருந்தாலும் கமெண்ட் போடுவோர் சங்கம், அட தலைவர் போலீஸ் இருக்காரு)
Balaji saravana said…
இந்திரா, எல்லாக் கவிதைகளிலும் பரவிக் கிடக்கிறது வாழ்வின் துயரம், விரக்தி!
//வாழுதலின் துயரம்
மற்றொரு நாள்
கனவுகள் //
மிக அழுத்தம்!

குளுகுளு மேகம் வேண்டாம் பாதச் சூடு குறைக்க ஒற்றை நிழல் கொடு போதும், பராபரமே!
karthikkumar said…
:)) வேற என்ன கமென்ட் போட....
விரைவில் நைந்து

கிழிந்தே போகக்கூடும்..

நான் புரட்டிக் கொண்டேயிருக்கும்

உன் ஞாபகங்கள்///

oh அவ்வளவு பழைய டைரியா....
எல்லா இடத்திலும்

பொய் சொல்ல வேண்டியிருக்கிறது..

கண்ணாடியில் சிரிக்கும்பொழுது கூட///

இது உண்மையா இல்லை இதுவும் பொய்யா
//எல்லா இடத்திலும்

பொய் சொல்ல வேண்டியிருக்கிறது..

கண்ணாடியில் சிரிக்கும்பொழுது கூட.//

ஆமாங்க நம்மை நாமே பார்க்கும் போது கண்ணாடியின் முன் அனைவரும் அழகே..
//விரைவில் நைந்து

கிழிந்தே போகக்கூடும்..

நான் புரட்டிக் கொண்டேயிருக்கும்

உன் ஞாபகங்கள்//

Super... Super...

Ellaam arumai.
அரசன் said…
சின்னதா இருந்தாலும் சும்மா நச்னு இருக்குங்க
வைகை said…
எல்லா இடத்திலும்

பொய் சொல்ல வேண்டியிருக்கிறது..

கண்ணாடியில் சிரிக்கும்பொழுது கூட.

.......................//////////


வழக்கமா கண்ணாடிதானே பொய் சொல்லும்! அழகா இருக்க மாதிரி!
அத்தனையும் அழகு ஏதோ ஒரு எதார்த்ததை உணர்ந்ததாய் சொல்கிறது மனது இந்திரா...
நல்லாயிருக்குங்க .
அத்தனையும் அருமை.. (வேற என்ன கமெண்ட் போடுறதுன்னு தெரியல) எல்லாம் நல்லாயிருக்கு...
ஏன் இப்படி கிளம்பிட்டிங்க ?????
என்னைக் கவர்ந்தது..

”எளிதாயிருக்கிறது..
தெரியும் என்கிறதைவிட
தெரியாதிருப்பதாகக்
காட்டிக்கொள்வது”

வாழ்த்துக்கள் இந்திரா :)
Travis Bickle said…
விரைவில் நைந்து

கிழிந்தே போகக்கூடும்..

நான் புரட்டிக் கொண்டேயிருக்கும்

உன் ஞாபகங்கள்

simply great
சந்ரு said…
நல்ல வரிகள் இரசித்தேன்..
கவிதைகள் அருமை (மண்டபத்துல இப்பிடித்தான் சொல்லச் சொன்னாங்க)

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்