தடுக்கி விழும்போது தாங்கிப் பிடிச்சா லவ் வருதுடோய்... எப்ப தான் இவனுக திருந்துவாய்ங்களோ..
நேத்து 8.30 மணிக்கு விஜய் டிவில ‘சரவணன் மீனாட்சி’ தொடர் பாத்தேன். பொதுவா எனக்கு சீரியல் பாக்குற பழக்கம் இல்லீங்க... ஏற்கனவே ட்ரெய்லர் பார்த்துருக்கேன். புது தொடர், லவ் ஸ்டோரி, அதுனால ஒரு ஆர்வத்துல பாத்தேன்.
சீரியல் என்னவோ அரைமணி நேரம்னு சொன்னாங்க. அதுல பத்து நிமிஷம் விளம்பரம் போட்டுட்டாங்க. மீதியிருந்த இருவது நிமிஷத்துல ஹீரோவும் ஹீரோயினும் லுக் விடவே சரியாப் போய்டுச்சு. பேக்ரவுண்ட்“ல பழைய காதல் பாட்ட ஓட விட்டுட்டு மாறி மாறி ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டேயிருக்காங்க.
ஒரு சீன்ல, ஆட்டோவுல பக்கத்து பக்கத்துல உக்காந்து போகுற மாதிரி காட்டினாங்க. ஆட்டோ குலுங்கும்போதெல்லாம் ரெண்டுபேரும் உரசிக்கும்போது ரொமாண்டிக்கா லுக் விட்டுக்குவாங்க. அப்புறம், சாப்பிட்றதுக்கு ஹோட்டல் போவாங்க. முதல்ல எதிரெதிர்ல உக்காருவாங்க. கொஞ்சநேரம் கழிச்சு கூட்டமாயிருக்குனு பக்கத்து பக்கத்துல உக்கார வேண்டிய சூழ்நிலை வரும்.. உடனே ரொமாண்டிக் லுக்கு தான்.
அப்புறம் ஒரு சீன்ல கோவிலுக்கு போவாங்க. அங்க ரெண்டு பேரோட செருப்பையும் ஒண்ணா கழட்டி வைப்பாங்க.. உடனே வெக்கப்பட்டுகிட்டே லுக் விட்டுக்குவாங்க. குளத்துல கால் நெனச்சுட்டு கோவிலுக்குள்ள போகணும்னு சொல்லி ரெண்டு பேரும் இறங்குவாங்க. அப்ப பாத்து ஹீரோவுக்கு கால் வழுக்கிடும். உடனே ஹீரோயின், அவனோட கைய தாங்கிப் பிடிப்பா.. உடனே ஒரு லுக்கு விடுவாங்க பாருங்க.. அட அட... காதல் காட்சில பிண்றாங்களாம்.
எப்ப தான் இவனுக திருந்துவாய்ங்களோ தெரியல. தமிழ் சினிமால காலங்காலமா இப்படித்தான் காதல் காட்சி இருந்துச்சு. இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா மாறிகிட்டு வராங்க. அது இப்ப சீரியல்ல ஆரம்பிச்சிடுச்சு.
நா தெரியாமத் தான் கேக்குறேன்.. அதெப்டிங்க??? பக்கத்துல உக்காந்தா லவ் வருது??? தடுக்கி விழுறவங்கள தாங்கினா லவ் வருது??? ஒரே புத்தகத்த ரெண்டு பேரும் எடுத்தா லவ் வருது??? கீழ விழுந்த பேனாவ எடுத்து குடுத்தா லவ் வருது??? போன்ல ஹலோ சொன்னா லவ் வருது??? பஸ்ல பேக்“க வாங்கினா லவ் வருது??? கக்கூஸ்“க்கு எதிரெதிர் க்யூவுல நின்னா கூட லவ் வரும் போல..
என்னடானு கேட்டா.. போன ஜென்மத்து விட்ட குறை தொட்ட குறையாம்.. மண்ணாங்கட்டி.
இந்த மாதிரி சினிமாத்தனமான காட்சிகள்ல, லவ் வர்ற சந்தர்ப்பங்கள் தான் இப்படினா, லவ் வந்த்துக்கப்புறம் நடக்குற காட்சிகள்னு போடுவாங்க பாருங்க... அந்தக் கொடுமைய தாங்க முடியாது.
பேதி மாத்திரைய முழுங்கின மாதிரி, எந்நேரமும் நெழுஞ்சுகிட்டு உக்கார்ரதும்.. (வெக்கப்பட்றாங்களாமாம்..), லேசா விரல் பட்டுட்டா கூட கண்ணையும் உதட்டையும் தனித்தனியா ஜூம் போட்டு காட்றதும்.., தடுக்கி விழுறதும் தாங்கிப் பிடிக்கிறதும்.. கனவுக்காட்சினு ஏதேதோ பிணாத்துறதும்.. ஷ்ஷ்ஷ்ப்ப்பா.. ம்ம்ம்முடியல..
யதார்த்தமா, நண்பர்கள் மாதிரி, எந்த வித தயக்கமோ சலனமோ இல்லாம, சராசரியா பழகுற காதலர்களும் இருக்கத்தானே செய்றாங்க...??? அதையெல்லாம் விட்டுட்டு, பெரும்பாலான சினிமாக்கள்லயும் சீரியல்லயும் ஏன் இன்னும் ஆதிகாலத்து குண்டுச்சட்டியவே படமாக்குறாங்க?? இந்த மாதிரி எடுக்கப்படும் காட்சிகள்ல, உணர்வுகளை விட உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தர்றாங்க.
இந்த மாதிரியான மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள், நிஜ வாழ்க்கைலயும் நடக்குதா??? அப்படியே நடந்தாலும் அந்த காதல் நிலைக்குதா??? அனுபவப்பட்டவங்க யாராவது தெளிவுபடுத்துங்கப்பா..
.
.
Comments
சரியான தகராறு மணமா இருக்கு..
காலக் கொடும தான்...
திருந்தவே மாட்டாங்க!!
எதற்காக்,
ஏன்,
யாருக்கு,
யார் மேலே,
எப்போ,
எப்படி
ஏற்படும்னே
சொல்ல முடியாத ஒரு
சுகானுபவம்
தாங்க
காதல்
என்பது.
போன ஜன்மத்துலே விட்டகுறை தொட்டகுறையோ, மண்ணாங்கட்டியோ,
அதில் உள்ள ஜோரே தனிதானுங்கன்னு
சொல்றாங்க, எல்லோரும்.
ஆனாக்க எனக்கு அதெல்லாம் ஒண்ணுமே தெரியாதுங்க.
vgk
போன ஜென்மத்து விட்ட குறை தொட்ட குறையாம்.. மண்ணாங்கட்டி.//
ஆமாங்க..
தமிழ்மணம் இணைச்சு ஓட்டும் போட்டாச்சு சகோதரி...//
மிக்க நன்றிங்க..
சகோ உண்மைகள் எடுக்க சுவாரஸ்யம் இருக்காது என்பது அவர்களின் நினைப்போ என்னவோ!//
அப்படியும் இருக்கலாம். ஆனா இந்த மாதிரி மிகைப்படுத்தினாலும் கடுப்பா வருதே..
என்னாத்த சொல்ல
காலக் கொடும தான்...//
மாற வேணும்ங்க..
//எப்ப தான் இவனுக திருந்துவாய்ங்களோ தெரியல.//
திருந்தவே மாட்டாங்க!!//
ம்ம்ம்..
யாரோ ஒரு புண்ணியவான் ஆரம்பிச்சு வெச்சதை இன்னும் பாலோ பண்றாய்ங்க... இந்த மாதிரி க்ளிஷேக்களுக்கு முடிவே இல்லக்கா...//
இப்ப கொஞ்சம் குறைஞ்சிருக்கு. ஆனாலும் இன்னும் மாறணும்.
எங்கே,
எதற்காக்,
ஏன்,
யாருக்கு,
யார் மேலே,
எப்போ,
எப்படி
ஏற்படும்னே
சொல்ல முடியாத ஒரு
சுகானுபவம்
தாங்க
காதல்
என்பது.
போன ஜன்மத்துலே விட்டகுறை தொட்டகுறையோ, மண்ணாங்கட்டியோ,
அதில் உள்ள ஜோரே தனிதானுங்கன்னு
சொல்றாங்க, எல்லோரும்.
ஆனாக்க எனக்கு அதெல்லாம் ஒண்ணுமே தெரியாதுங்க.
vgk//
சொல்றதெல்லாம் சொல்லிட்டு ஒண்ணும் தெரியாதுனு சொல்றீங்க... எஸ்கேப்பா??? இருக்கட்டும் இருக்கட்டும்.
ஏங்க.. இவ்ளோ டென்ஷன் ஆகறீங்க? லவ்ன்னாலே பைத்தியக்காரத்தனம்தானே.. ஒரு வேளை உங்களுக்கு வயசாயிடுச்சோ? (ஹி..ஹி. சும்மா ஒரு பேச்சுக்குத்தான்)//
அட... காதலைப் பத்தி விமர்சிக்கிறதுக்கு வயசாகணும்னு அவசியமில்லீங்களே..
(என்ன மணி சார்.. ஓவர் கிண்டலா இருக்கே.. ம்ம்ம்ம்
நண்பா.. கவிதை இன்னும் வரல..)
///இந்த மாதிரியான மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள், நிஜ வாழ்க்கைலயும் நடக்குதா??? அப்படியே நடந்தாலும் அந்த காதல் நிலைக்குதா??? அனுபவப்பட்டவங்க யாராவது தெளிவுபடுத்துங்கப்பா..///
ponga indira ulagam puriyaama irrukeenga unmaiyileye ippudi nadakkuthunga.... he he he he he
nambunga nambikkaithaan vaalkainga he he he he
http://gopu1949.blogspot.com/2011/06/2-of-4_19.html
http://gopu1949.blogspot.com/2011/06/3-of-4_19.html
http://gopu1949.blogspot.com/2011/06/4-of-4_19.html
”மறக்க மனம் கூடுதில்லையே”
என்ற என் சிறுகதை வெளியீடு படித்துப்பார்த்தீர்களா?
காதலைப்பற்றி ஏதோ கொஞ்சம் எனக்குத் தெரிந்தவரை அந்தக்கதையில் எழுதியிருக்கிறேன்.
தங்கள் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன். vgk
எங்கே,
எதற்காக்,
ஏன்,
யாருக்கு,
யார் மேலே,
எப்போ,
எப்படி
ஏற்படும்னே
சொல்ல முடியாத ஒரு
சுகானுபவம்
தாங்க
காதல்
என்பது.
போன ஜன்மத்துலே விட்டகுறை தொட்டகுறையோ, மண்ணாங்கட்டியோ,
அதில் உள்ள ஜோரே தனிதானுங்கன்னு
சொல்றாங்க, எல்லோரும்.//
ஆஹா.... இருங்க எல்லா கமேண்ட்சும் படிச்சுட்டு வாரேன்
ஏங்க.. இவ்ளோ டென்ஷன் ஆகறீங்க? லவ்ன்னாலே பைத்தியக்காரத்தனம்தானே.. ஒரு வேளை உங்களுக்கு வயசாயிடுச்சோ? (ஹி..ஹி. சும்மா ஒரு பேச்சுக்குத்தான்)//
ஹா ஹா கோவிச்சுக்காதிங்க என் மனசுல நினைச்சுத இவரும் சொல்லிருக்காரு...
முயற்சி பண்ணி ரிசல்ட் வந்தப்புறம்
சொல்றேங்க ///
வேற என்னங்க பண்றது.. அவங்க சட்டில இருக்கற மேட்டர் அவ்வளவுதான்..
எங்கேயும் எப்போதும் பாருங்கள்.
அதில் வரும் காதல் நிஜத்துக்கு மிக அருகில் உள்ளது.
அரைத்த மாவினை மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கும் சினிமா பற்றிய ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.
நிஜ வாழ்க்கையில் இவ்வாறான சம்பவங்கள் குறைவு...
இப்படி ஏதாவது சம்பங்கள் சினிமாவிற்கு வெளியே நடந்தால், சினிமாவின் தாக்கத்தினால் தான் நிகழ்கின்றது என்று அர்த்தம்,
அப்புறம் அந்தப் பொண்ணு ரொமாண்டிக்காதானே லுக் விடுது..நானும் பாத்தேன்..
காதல் மேல ரொம்ப கோவம் போல..
இதேல்லாம் ஒரு குறிப்பிட்ட காலமே வரும் ஒரு வானவில்.. பார்த்தோமா அனுபவிச்சோமான்னு இருக்கனும். சும்மா விளக்கம் கேக்கப்படாது. புரியுதோ...
மிகவும் யோசிக்க வேண்டிய கேள்விகள்
ஏங்க அந்த தீமே மியூசிக் நல்லா இருக்கே..
ஒரே ஒரு போஸ்டுல பிரபலம் எல்லாம் ஆகிடறாங்க
அதுபோல இதையும் ...accept panithan aaganum..tamil natila VIJAY TV AND SUN TV vitta vera t.v erukka??
பொற(aa)மை......:)
அப்படிதாங்க இருக்கும்...
இதுக்கே இப்படி சொல்லிட்ட எப்படி..?
தோழி
he he he he he
ponga indira ulagam puriyaama irrukeenga unmaiyileye ippudi nadakkuthunga.... he he he he he
nambunga nambikkaithaan vaalkainga he he he he//
இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்கே...
ஹய்யோ ஹய்யோ முடியல...//
எது??? மொக்கையா???
காதல் எல்லாம் வயசுக்கோளாறாலே வர்றதுதான். ஒரு மாசம் ரெண்டு டைம் டைஜீன் சாப்பிட்டா சரியாப்போயிரும்!//
என்னவோ நீங்க சொல்றீங்க..
வந்ததுக்கு நன்றிங்க.
காமத்தின் தொடக்க புள்ளி காதல், காமம் தணிந்த பின் காதல் தொடர்கிறது... ஆனால் மிகைபடுத்தப் பட்ட காதல் ஒரு வேலை ஒரு தலை காதலில் கனவாக வரலாம், நனவாவதில்லை... ஆனாலும் எனக்கு ரொம்ப நாளா இருக்கிற சந்தேகம் இந்த பீச் வெயில்ல எப்படி உக்காந்து காதலிக்கிறாங்கன்னு? அதுக்கு உங்க கிட்ட பதில் இருக்கா?//
சாரிங்க.. எனக்கு இதுல அனுபவமில்ல. அனுபவப்பட்டவங்கள கேட்டு சொல்றேன்.
நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் இயல்பான காதல் உணர்வுகளைக் காட்டவேண்டும் என்றால் ஏதாவது ஒரு படத்தில் அல்லது ஒரேயொரு சீரியலில்தான் காட்டமுடியும். ஒவ்வொரு படத்திலும் அல்லது ஒவ்வொரு சீரியலிலும் காதல் காட்சிகளை வைப்பது என்றால் அது இப்படி செயற்கையானதாகத்தானேங்க இருக்கும்.....//
ம்ம் எல்லாமே கமர்ஷியலான வியாபார ரீதியாய்டுச்சுன்னு சொல்றீங்க..
வருகைக்கு மிக்க நன்றி சார்.
கட்டாயம் படிக்கிறேன்.
ஹா ஹா கோவிச்சுக்காதிங்க என் மனசுல நினைச்சுத இவரும் சொல்லிருக்காரு...//
அட என்னாங்க இது வம்பாப் போச்சு..
காதல்ங்குற பேர்ல வர்ற மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள தான் பிடிக்கலைனு சொன்னேன்..
வயசானவங்க தான் அதப் பத்தி விமர்சிக்கனும்னா... ஆமாங்க.. எனக்கு வயசாய்டுச்சு.
(போதுமா?? சந்தோசமா???)
யாரும் திருந்த மாட்டாங்க//
:))
காதல்ங்குற உணர்வு வந்துட்டாலே எதார்த்தம் மீறிடுங்க... கிட்ட தட்ட மறைமுக பைத்தியகாரங்க தான்.... ஒரு வகையில் ஹார்மோன் செய்யும் வேலை தான்.... இதுவும் ஒரு தலையில் ரொம்ப உக்கிர பைத்தியத்துல நடந்துப்பாங்க... ஆனா நீங்க சொல்ற மாதிரி சினிமாவுலயும், சீரியல்லயும் பாத்ததே திரும்ப திரும்ப காமிக்கிறதுனால வெறுப்ப ஏற்படுத்தறது உண்மை தான்.. இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டுருக்கு.... நீங்க எதார்த்தவாதியா இருக்குறீங்க வாழ்கையில சீக்கிரம் ஜெயிச்சுடுவீங்க... ஏன்னா இதெல்லாம் பிடிக்காதப்பவே உங்களுக்கு மைண்ட் டிஸ்டர்ப் வர்றதுக்கு வாய்ப்பில்லை... வாழ்த்துக்கள் சகோதரி//
வாழ்க்கைல காதல் வந்தா மைண்ட் டிஸ்டர்ப் ஆகுமா??
all voted//
நன்றிங்க..
தெரியலீங்க !!!
முயற்சி பண்ணி ரிசல்ட் வந்தப்புறம்
சொல்றேங்க /////
கட்டாயம் சொல்லுங்க..
வேற என்னங்க பண்றது.. அவங்க சட்டில இருக்கற மேட்டர் அவ்வளவுதான்..//
ம்ம்ம் அதுவும் சரிதான்.
வருகைக்கு நன்றிங்க.
நமக்கு சீரியல் பாக்கற பழக்கம் இல்லைங்கோ...//
எனக்கும் இல்லைங்க.. எப்பவாவது தான் பார்ப்பேன். தலையும் புரியாது வாலும் புரியாது.
அந்த ஸ்டில் சூப்பர்... பதிவுக்கேத்த ஸ்டில்.. மரத்த சுத்தி டூயட் பாடறது... ஹா ஹா//
நன்றிங்க..
but mareka matanga,,
ஹா ஹா ஹா... செமையா சிரிச்சேன் உங்க போஸ்ட் படிச்சு... சூப்பர்... சினிமாவில் நெறைய அபத்தம் தான்... ஆனா சிலது ரசிக்கும் படியும் உண்டு...:)//
நன்றிங்க.. கருத்துக்கும் சிரிச்சதுக்கும்.
தமிழ் சினிமாவில் உள்ள குப்பைகளை சீரியல் தத்தெடுத்து உள்ளது.
எங்கேயும் எப்போதும் பாருங்கள்.
அதில் வரும் காதல் நிஜத்துக்கு மிக அருகில் உள்ளது//
படம் இன்னும் பார்க்கவில்லை. கட்டாயம் பார்க்கிறேன்.
கருத்துக்கு நன்றிங்க.
வணக்கம் அக்காச்சி,
அரைத்த மாவினை மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கும் சினிமா பற்றிய ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.
நிஜ வாழ்க்கையில் இவ்வாறான சம்பவங்கள் குறைவு...
இப்படி ஏதாவது சம்பங்கள் சினிமாவிற்கு வெளியே நடந்தால், சினிமாவின் தாக்கத்தினால் தான் நிகழ்கின்றது என்று அர்த்தம்,//
கருத்துக்கு நன்றி அண்ணாச்சி..
காதலைப் பற்றி அந்த தொலைக்காட்சித் தொடர் போன்றவைகளைப் பார்ப்பதை விடுத்து,என் போன்றவர்கள் எடுத்து விட்டிருக்கும் இதமான எண்ணங்களை எனது வூட்டுக்கு வந்து வாசித்துப் பாருங்கோ,உங்களுக்கும் காதல் ஏற்பட வாய்ப்பிருக்கலாம்.//
ஏனுங்க.. பதிவைப் படிச்சா காதல் வருமா??? காமெடி பண்ணாதீங்க..
ஏற்கனவே இந்த டி.வி. சீரியல் படுத்தற பாட்டை எழுதியிருக்கீங்கன்னு நெனைக்கறேன்.
அப்புறம் அந்தப் பொண்ணு ரொமாண்டிக்காதானே லுக் விடுது..நானும் பாத்தேன்..
காதல் மேல ரொம்ப கோவம் போல..
இதேல்லாம் ஒரு குறிப்பிட்ட காலமே வரும் ஒரு வானவில்.. பார்த்தோமா அனுபவிச்சோமான்னு இருக்கனும். சும்மா விளக்கம் கேக்கப்படாது. புரியுதோ...//
காதல் மேல கோவம் இல்லங்க.. மிகைப்படுத்துறது தான் கடுப்பா வருது..
ரொம்ப நொந்துருக்கீங்க போல.. இந்தமாதிரியெல்லாம் எடுக்கக்கூடாதுன்ன நம்ம ஊர்ல பாதி பேரு படமே எடுக்க முடியாது!//
உண்மை தான். ஆனாலும் தற்போது இது யதார்த்த நிலைக்கு மாறிக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஷ்ஷ்ஷ்ப்ப்பா.. ம்ம்ம்முடியல.
ஹஹஹா
மிகவும் யோசிக்க வேண்டிய கேள்விகள்
ஏங்க அந்த தீமே மியூசிக் நல்லா இருக்கே..
ஒரே ஒரு போஸ்டுல பிரபலம் எல்லாம் ஆகிடறாங்க
அதுபோல இதையும் ...accept panithan aaganum..tamil natila VIJAY TV AND SUN TV vitta vera t.v erukka??//
இதுல ஏதோ உள்குத்து இருக்கே..
பொற(aa)மை......:)//
ம்கும்.. ஓவரா மிகைப்படுத்துற காதல் காட்சிகளப் பாத்து பொறாமை வேற படனுமாக்கும்??? கடுப்பு தான் வருது..
நடிக்குற காதல்
அப்படிதாங்க இருக்கும்...
இதுக்கே இப்படி சொல்லிட்ட எப்படி..?
தோழி//
என்னங்க பண்றது??? கோவமா வருதே..
kandipaa indha vaaram oru post ungalukkaaagavey special episode..//
தாங்க்ஸ்ங்க.. சீக்கிரம் கும்மியடிக்க வரேன்.
அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி//
தகவலுக்கு நன்றிங்க.. Copy & Paste பண்றீங்க.. கொஞ்சம் சகோதரனா சகோதரியானு பார்த்து பேஸ்ட் பண்ணுங்க..
வருகைக்கு நன்றிங்க..
என்ன அக்கா பண்றது இன்றைய கால கட்டத்துல காதல் மேல போட்டா எல்லாமே ஜெயக்கும்னு நம்புறாங்க,அதையும் நம்ம ஆளுங்க பாக்குறாங்களே.என்ன சொல்றது...//
அதுவே தொடர்ந்தா, போர் அடிக்க ஆரம்பிச்சுடுதே..
ஆஹா...அருமை...//
நன்றிங்க..
eallam konjanaal than aprem maridovanga,,, ,,
but mareka matanga,,//
காலம் எல்லாத்தையும் மறக்கச் செஞ்சிடும் நண்பரே..
நீங்க நிகழ்காலத்ததான் சொல்றீங்க,
நான் வருங்காலத்தப் பத்தி ஓசிக்கிறேன்.