பெண் மனசு - தொடர்பதிவு

" பெண் மனசு" என்ற தலைப்பில் பெண் மனதை பெண்ணின் குரலில் வெளிப்டுத்தும் பாடல் பற்றி எழுத அழைத்த வெறும்பயலுக்கு நன்றி. தமிழில் பல்வேறு பாடல்கள் இந்த வகையைச் சார்ந்திருப்பினும் யோசித்த மறுநொடியே மனதில் எழுந்த இரண்டு பாடல்களை இங்கு கொணர்ந்துள்ளேன். முதல் பாடல் பிடித்ததற்கான காரணம் : காதலின் வலியையும் அதன் இழப்பையும் அழகாய்ச் சொல்லும் பாடல். படம் : ஆயிரத்தில் ஒருவன் பாடல் : மாலை நேரம் மழை தூறும் காலம் என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன் நீயும் நானும் ஒரு போர்வைக்குள்ளே சிறு மேகம் போலே மிதக்கிறேன் ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே இது தான் வாழ்க்கையா ஒரு துணை தான் தேவையா மனம் ஏனோ என்னையே கேட்கிறதே ஓஹோ காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ஒன்று முடிந்தது தேடும் போதே தொலைந்ததே - அன்பே இது சோகம் ஆனால் ஒரு சுகம் நெஞ்சின் உள்ளே பரவிடும் நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே இதம் தருமே .. உன் கரம் கோற்கையில் நினைவு ஓர் ஆயிரம் பின் இரு கரம் பிரிகையில் நினைவு நூறாயிரம் காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது கனவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது ஒரு காலையில் ந...