“லண்டனில் சிலுவைராஜ்“ – பயணக் கட்டுரை
பயணக்கட்டுரை என்பதாலோ என்னவோ , வழக்கமான நடையில் அங்க போனேன்... அதப் பாத்தேன்.. இங்க போனேன். இதப் பாத்தேன்னு நிறைய வரலாறும் கொஞ்சம் சொந்த அனுபவமும் இருக்கு. தமிழ்நாட்டுலருந்து தன் மகள் மருமகனைப் பார்க்கப்போகும் தம்பதிகள்.. தந்தையான சிலுவைராஜின் பார்வையிலிருந்து லண்டன் மாநகரத்தைப் பற்றி வரையறுக்கும் புத்தகம் இது. ஆங்காங்கே நம் கலாச்சாரம் , மக்கள் , உணவு போன்றவற்றுடன் லண்டனை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார்கள். எந்தப் புத்தகத்தையும் வரிவிடாம படிச்சிடுவேன். ஆனா இதுல , பாதி வரைக்கும் படிச்சேன். முழுசாப் படிக்க மனசும் பொறுமையும் வரமாட்டீங்குது. கடைசி இரண்டு பக்கத்துக்கு தாவிட்டேன். அதாவது ஐம்பது நாள் லண்டனில் கழித்துவிட்டு , மறுபடியும் நம்ம ஊருக்கு வந்து “ அப்பாடா “ னு ஐக்கியமாகுற முடிவு எப்படியிருக்கும்னு படிச்சுட்டு , மூடி வச்சுட்டேன். புத்தகம் முழுக்க லண்டன் பற்றிய வர்ணிப்பும் அங்கலாய்ப்பும் நிறைந்திருக்கிறது. ஒரு சில நாம் அறியாத புதிய தகவல்களும் உள்ளடங்கியிருக்கு. சில இடங்கள்ல அவங்களை உயர்த்தி நம்மளை மட்டம் தட்டுறார். சில இடங்களில் தலைகீழாய்..! ஒருவேளை , நான் லண்டன் போகவேண