Posts

Showing posts with the label தண்ணிபாட்டில்

தலைப்புகளில்லா கட்டுரைகள்..!

Image
“என்ன கட்டுரை யோசிச்சு வச்சிருக்க?“ கேட்ட சத்யாவிடம் வெறுமையாய் உதடு பிதுக்கினேன். “எவ்வளவு யோசிச்சாலும் தலைப்பே கிடைக்க மாட்டீங்குது“ கவலையாய் பதில் சொன்னேன். “வீட்லயே உக்காந்திருந்தா சரிவராது. கொஞ்சம் நடந்துட்டு வரலாம் வா“ என்றாள். எனக்கும் சரியெனப்படவே கிளம்பினோம். விடிந்தால் கட்டுரைப்போட்டி. பரிசு வாங்கவில்லையெனினும் நல்ல கட்டுரையென்று தோழமைக்குள் பேர் வாங்குமளவுக்காவது எழுதி விடுவதுண்டு. இம்முறை அதுவுமில்லை. இரவுக்குள் கட்டாயம் யோசித்திட வேண்டும். இல்லையெனில் மானம் போய்விடும். இருவருமாய் ஏதேதோ பேசிக்கொண்டு நடந்தாலும் மனம் மட்டும் கட்டுரைக்கான தேடலையே சுற்றிச்சுற்றி வந்தது. “ஏய்.. என்ன யோசனை? எழுத முடியலனா விட்டுத்தள்ளு. அதுக்கு ஏன் பேய் பிடிச்சது மாதிரி நடந்து வர்ற?“ என்றவளிடம் “எழுதிடுவேன். பேசாம வா“ என்றேன். “குழந்தைத் தொழிலாளர்..“ “பாலியல்..“ “திருநங்கைகள்..“ “தலைமுறை இடைவெளி..“ மனதினுள் உருப்போட்டுக்கொண்டே வந்த சிந்தனையை சட்டென ஒரு குவியலுக்குள் நிறுத்தியது அக்காட்சி. பேருந்து நிலையத்திலிருந்து ஒரு பெண், இடுப்பில் குழந்தையுடன் கையில் பெரிய பையுடன் இறங...

ஷ்ஷ்ஷ்ப்பா..

Image
வாழ்நாள் சாதனையாக வித்தையேதும் செய்யத்தேவையில்லை. குறைந்தபட்சம்.. அவசரமாய் லிப்ட் கேட்பவர்களை வண்டியில் ஏற்றுங்கள். வாசல் நின்று தாகமாய் இருக்கிறதென்பவர்களுக்கு தண்ணீர் கொடுங்கள். வங்கியில் பேனா இல்லையென முழிப்பவர்களை முறைக்காது கொடுத்துதவுங்கள். நிறுத்தத்திலிருக்கும் படிப்பறிவில்லாதவர்களை அவர்களுக்கான பேருந்தில் ஏற்றிவிடுங்கள். புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். மழையில் ஒருமுறையேனும் நனையுங்கள். பொருள் தானமில்லையெனினும் உறுப்புதானமாவது உணருங்கள். (இவைபோன்ற) அறிவுரை வழங்க மாட்டேனென உறுதிகொள்ளுங்கள். அதுவே போதும். . .

பெண்ணுரிமை வாழ்க..! ஆண்கள் ஒழிக..!!

Image
பெண்ணுரிமையைப் பாதுகாப்போம். பெண்களுக்கு உரிமை கிடைக்கப் போராடுவோம். வாருங்கள் பெண்களே.. நமக்கு முதல் எதிரி ஆண்கள் தான். ஆண்களை எதிர்த்துப் போராடுவோம். பெண்ணுரிமை வாழ்க! ஆண்கள் ஒழிக! ஆண்கள் ஒழிக!! இன்னைக்கு இதுதான் பெண்ணுரிமைக்காக போராடும் பெரும்பாலான இயக்கங்களின் கோஷமா இருக்குது. பெண்ணுரிமைனாலே அது ஆண்களுக்கு எதிரானதுங்குற விளக்கம் தான் கொடுக்கப்படுது. இந்தவகையான தவறான புரிதல் தான் ஆணுக்கும் பெண்ணுக்குமான கருத்துவேறுபாட்டையும் அதிகார மனப்பான்மையையும் அதிகரிக்குது. அதாவது சமுதாயத்துல பெண்களின் உரிமைகளுக்காக போராடனுமேயொழிய, ஆண்களை எதிரியா நெனச்சுப் போராடுறதுல தான் அடிப்படைத் தவறே இருக்கு. ஆண்களுக்கு சாதகமா பேசுறதுக்காக சொல்லவரல.. எனக்குத் தெரிஞ்சவரைக்கும் பெண்களை சக மனுஷியா நடத்துற, அவர்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்குற ஆண்களும் இருக்கத்தான் செய்யுறாங்க. அதே சமயம் பொண்ணுங்கனாலே தாழ்ந்துதான் இருக்கணும்னு சொல்லிச் சொல்லியே அவங்கள அடிமைப்படுத்துற பெண்களும் சமூகத்துல இருக்குறாங்க. இங்க பெண்ணுரிமைப் போராட்டம்குறது யாரை எதிர்த்துங்குறதுல இல்ல. எந்த அடிப்படைலங்குறதுல தான் இருக...

ஈமு போனா என்ன.. பன்னி வரலாம்!! ஏமாற ரெடியா இருப்போம்.

Image
முதல்ல நிதி நிறுவனங்கள்ல பணத்தப் போட்டு ஏமாந்தாங்க.. அப்புறம் பாலிசி போடுறேன்னு தனியார் நிறுவனத்துல கட்டி ஏமாந்தாங்க.. அப்புறம் வெளிநாடு போறேன்னு பணத்தக்கட்டி ஏமாந்தாங்க.. வெளிநாடு போய் தான் சம்பாதிக்க முடியல.. வீட்டுலயே சுயதொழில் தொடங்கலாம்னு எங்கயாவது மூலதனத்தைக் கட்டி தெரியாத தொழில்ல இறங்கி, அப்புறம் அவன் ஏமாத்திட்டான்னு போட்டதை எடுக்க முடியாம ஏமாந்தாங்க.. சமீபத்துல அப்ரோ நிறுவனத்துல ஆரம்பிச்சு இப்ப லேட்டஸ்ட்டா ஈமுல வந்து நிக்குது.. குடும்ப கஷ்டம், வறுமை, பணத்துக்குப் பாதுகாப்பு, பணத்தேவைனு நிறைய காரணங்களை அடுக்கிக்கிட்டே போனாலும் இதுக்கெல்லாத்துக்கும் மூல காரணம்.. விக்ரமன் படத்துல ஒரே பாட்டுல முன்னுக்கு வர்ற மாதிரி சீக்கிரம் சம்பாதிக்கணும்.. நிறைய பணம் சேர்த்துடணும்குறது தான். மக்களைப் பெரும்பாலும் தன்பக்கம் ஈர்க்குறது, இலாப விகிதம் அதிகம்குற விளம்பரங்கள் தான். அரசாங்க வங்கிகள்ல போடுற பணத்துக்குண்டான வட்டியை விட, தனியார் நிதி நிறுவனங்கள்ல கொடுக்கப்படுற வட்டி அதிகம்னு சொல்றதை நம்பி பணத்தை அதில் போடலாம்னு முடிவெடுக்குறாங்க. இப்ப கூட ஈமு கோழி விளம்பரத்துல, மாசத்துக்கு பத்தாயிரத்து...

உன் தற்கொலைக்கு என் வாழ்த்துக்கள்..

Image
கயிற்றால் கழுத்தை நெரித்துக்கொள்.. நாக்கும் கண்களும் வெளித்தள்ள எலும்புகள் உடைத்திடு வலுக்கட்டாயமாய்.. விஷத்தால் உயிரைப் போக்கிக்கொள்.. சுவாசம் தடைபட்டு இதயத்தை நிறுத்திடு சுதந்திரமாய்.. கத்தியால் நரம்பை அறுத்துக்கொள்.. இரத்தத்துடன் உயிரையும் வெளியேற்று சாவகாசமாய்.. மாத்திரைகளால் நித்திரைக்குள் புதைந்துகொள்.. மீளாத கனவுகளில் மூழ்கிப்போ நிதானமாய்.. ஓடும் வாகனம் முன் பாய்ந்துகொள்.. அடித்துநொருக்கிடு உறுப்புக்களை அதிரடியாய்.. மாடியேறி தரைதளம் குதித்துக்கொள்.. சிறகில்லா பறவையாய் சின்னாபின்னமாகிப்போ சுலபமாய்.. எப்படி வேண்டுமானாலும் நிகழலாம் உன் தற்கொலை.. உன் விருப்பமாக எதுவேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும்.. கத்தியோ கயறோ.. மாத்திரையோ வாகனமோ.. உன் மரண நொடியை நீயே முடிவு செய்யலாம்.. ஆனாலும் அதே நொடியில் ஏதோ ஒரு எலி ஒரு பூனையிடமிருந்து உயிருக்காக ஓடிக்கொண்டிருக்கலாம்.. ஏதோ ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு யாரோ ஒருவர் இரத்தம் கொடுத்துக்கொண்டிருக்கலாம்.. ஏதோ ஒரு தாய், தன் சுகப்பிரசவத்திற்காக பிரார்த்தனை செய்துகொண்டிருக்கலாம்.. ஏதோ ஒரு உயிர், உலகின் எங்கோ ஒரு மூலையில் தன் ...

அபிப்ராயங்கள் ≠ அனுபவங்கள்..

Image
நம்ம ஊர்ல ஒரு கெட்ட பழக்கம் உண்டு. ஏதாவது அறிவுரையோ அபிப்ராயத்தையோ சொல்ல ஆரம்பிச்சவுடனே, “உனக்கு இதப் பத்தி என்ன தெரியும்? அனுபவமில்லாம பேசாத“னு சொல்லி வாய அடச்சிடுவாங்க.   வாஸ்தவம் தான்.. ஆனா இது எல்லா விஷயத்துக்கும் பொருந்தாது. உதாரணத்துக்கு, பத்தாவது மாடிலருந்து கீழ குதிச்சா என்ன ஆகும்னு சொல்றதுக்கு, அப்படி குதிச்சுப் பார்த்த அனுபவம் இருக்கணும்னு அவசியம் இல்லையே.. சரி தானே? நா எழுதுன “ சந்தோசமா சரக்கடிங்க “ பதிவுலயும் இந்தக் கேள்வி வந்துச்சு.. குடிப்பழக்கத்துல இருக்குற கெடுதல்கள்பத்தி சொல்றதுக்கு குடிச்சுப் பார்த்திருக்கணும்னும், குடும்பக் கட்டுப்பாட்டு அலுவலகத்துல வேலை பார்க்குறதுக்கு குழந்தை பெத்திருக்கணும்னும் அவசியம் இல்லையே.. அனுபவப்பூர்வமா அறிவுரை சொல்றதுல நிறைய உபயோகம் இருக்கலாம். அதே மாதிரி ஒட்டுமொத்தமா அனுபவம் இருந்தா மட்டும்தான் ஒரு விஷயம் பற்றி பேசணும்னும் சொல்லிட முடியாது. கேள்வி ஞானம் மட்டுமே வச்சு சொல்லப்படுற அபிப்ராயங்களுக்கும் மதிப்பு இருக்கத்தான் செய்யும். “நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்“னு விளம்பரம் பண்ற மாதிரி ஒருசிலர் வெட்டியா, கடனேனு கருத்து சொல்வ...