நீதானே என் பொன்வசந்தம் – இளைத்த(!!) ராஜா..
1980களில் இசையில் மகத்தான ஆதிக்கம் செலுத்தியவர் இசைஞானி இளையராஜா. இவருடைய ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு சிறப்பைப் பெற்றிருக்கும். நம்முடைய பிடித்த பாடல்களின் பட்டியலில் பெரும்பாலான இடங்களை இவருடைய பாடல்கள் பிடித்திருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதெல்லாம் சரிதான்.. ரொம்ப நாளைக்குப்பிறகு இவருடைய இசையில் வெளிவரும் பாடல்களாச்சேனு ரொம்ம்ம்ப எதிர்பார்ப்புடன் நேத்து கேட்டேன். ம்ஹூம்.. ஏமாத்திட்டீங்க ராஜா சார். “I AM BACK’ னு காலரைத் தூக்கிவிட்டுக்குற மாதிரி ஒரு பாடல் கூட உங்களோட சாயல்ல இல்ல. ஓவரா எதிர்பார்த்துகிட்டு இருக்குறதுனாலயே சொதப்பிடுறாங்களோ என்னவோ!! “சாய்ந்து சாய்ந்து“ பாட்டு முதல் தடவை கேட்கும்போது ஏதோ மாதிரியிருந்தாலும் அடுத்தடுத்து கேட்கும்போது பிடிச்சமாதிரியிருக்கு. “பெண்கள் என்றால் பொய்யா“ பாட்டு ரொம்ம்பவே சுமாராயிருக்கு. (பொண்ணுங்களை குறை சொல்றதுனால) பசங்களுக்குப் பிடிக்கலாம். ஏன் யுவன்சங்கர் எந்தவொரு பாட்டையும் (ஒரேமாதிரி) எந்த உணர்ச்சியுமில்லாம மண்ணு மாதிரி பாடுறாருனுதான் தெரியல. “முதல்முறை பார்த்த ஞாபகம்“ பாட்டுபாடின பொண்ணுக்கு நல்லா வாய்ப்பாடு ஒப்பிக்கத்...