Posts

Showing posts with the label புத்தகம்

'மசால் தோசை 38 ரூபாய்' - வா.மணிகண்டன்

Image
எழுத்துக்கள் பற்றியோ , எழுதியவர் பற்றியோ எந்தவித முன் அபிப்ராயங்களும் இல்லாமல் ஒரு படைப்பை கையாளுவது நன்றாகத்தான் இருக்கிறது.   ‘ மசால் தோசை 38 ரூபாய் ’ பற்றிச் சொல்வதற்கு முன் ‘ லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் ’ பற்றி ஒரு நிகழ்வைச் சொல்லியாக வேண்டும். 2015 மதுரை புத்தகக் கண்காட்சியில் கையில் எடுத்துவைத்துக் கொண்டு பணத்தை கொடுப்பதற்குள் “ மேடம் “ என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன். தான் தேனியிலிருந்து வருவதாகவும் லிண்ட்சே லோஹன் பிரதிகள் தீர்ந்துவிட்டதாகவும் இந்தப் புத்தகத்தைத் தனக்கு கொடுக்க முடியுமாவென்றும் கேட்டபடி ஒருவர் நின்றுகொண்டிருந்தார். நிறைய வாசிப்பவர் போலும். மறுப்பின்றி கொடுத்துவிட்டாயிற்று. அதன்பிறகு மாரியப்பனின் மனைவிக்கு ஹாய் சொல்லும் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை. ஒரு புத்தகத்திற்காக ‘ ப்ளீஸ் ’ என்றதை அன்றைக்கு தான் கேட்டேன். மசால் தோசை 38 ரூபாய் - தொகுத்திருக்கும் விடயங்கள்.. எழுத்து நடை.. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமாய் என்னைக் கவர்ந்தது கடைசியில் குறிப்புகளுக்கென விடப்பட்டிருக்கும் கோடிட்ட மூன்று வெற்றுத்தாள்கள் தான். வாசிப்பாளனுக்குத் தரப்படும் அடிப்...

லாக்கப் – சாமான்யனின் குறிப்புகள்..

Image
சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையத்திற்கு இழுத்துச்செல்லப்பட்ட நான்குபேர், காவல் நிலையத்தில் என்னென்ன கொடுமைகளை அனுபவித்தார்களென எழுத்தாளர் மு.சந்திரகுமாரின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட உண்மைச் சம்பவங்கள் அடங்கிய புத்தகம் இது. சில புத்தகங்கள், வாங்கிவிட்ட காரணத்துக்காகவே வேறுவழியின்றி படிக்கப்படும். சில, பாதி கூட தாண்டாது. ‘ லாக்கப் ’ படிக்கும்போதே, பிடிபட்ட நால்வருடன் நம் பயணமும் ஆரம்பித்துவிடுகிறது. ஒவ்வொருமுறை சிறையின் கதவுகள் திறப்பதாய் படிக்கும் வினாடிகளில், அடி வாங்கப்போகிறார்களே என இதயத்துடிப்பு கணிசமாய் கூடுவதை என்னால் உணரமுடிந்தது. 1983ல் குண்டூரில் ஒரு காவல் நிலையத்தில் ஆரம்பிக்கிறது கதை. எங்கோ நடந்த கடைத் திருட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் பிடிக்கப்பட்ட ரவி, மொய்தீன், நெல்சன் மற்றும் குமார் (சந்திரகுமார்) ஆகியோரை சிறையில் அடைத்து, தவறை ஒத்துக்கொள்ளும்படி அடித்து சித்திரவதைப்படுத்துவது தான் முழுக்கதையும். மொழி தெரியாத ஊரில், போதுமான தண்ணீரோ சாப்பாடோ கிடைக்காமல், மலம் கழிக்க இயலாமல், லட்டியால் விளாசும் அடிகளை வாங்கி அலறும்போதெல்லாம்.. ஒவ்வொரு முறை சிறைக்கதவு தி...