Posts

Showing posts from October, 2010

சந்தோசமா சரக்கடிங்க..

Image
” டேய் மாமா.. மனசே சரியில்லடா.. சரக்கடிக்கலாம் வறியா?? ” பெரும்பாலும் ஆண்கள் குழுமியுள்ள வட்டங்களில் கேட்கப்படும் வசனம் இது. ஏதோ டீ குடிக்கலாம் வா“னு சொல்வது போல தண்ணியடிக்கலாம் வா“னு கூப்பிட்றது இப்போ ஃபேசனாகிப் போய்டுச்சு. என்ன??? முறைக்கிறீங்களா??? ஏதோ அட்வைஸ் பண்ணப்போறேனு முகத்தை சுழிக்காதீங்க.. நான் அதெல்லாம் பண்ணல. அப்படியே பண்ணினாலும் அத யாரும் படிக்கப்போறதுமில்ல.. ஏன்னா உலகத்துலயே சுலபமான விசயம் அட்வைஸ் பண்றதுனும் கஷ்டமான விசயம் அந்த அட்வைஸ கேட்டு நடக்குறதும்னும் எனக்குத் தெரியும். எந்த விசயத்தப் பத்தி பேசுறதுக்கும் ஒரு அனுபவம் வேணும்னு சொல்வாங்க. ஆனா அது எல்லாத்துக்கும் பொருந்தாது. பத்தாவது மாடியில இருந்து குதிச்சா என்ன ஆகும்கு சொல்றதுக்கு, அப்டி குதிச்ச அனுபவம் இருக்கணும்னு அவசியம் இல்ல. என்ன நா சொல்றது?? சரி இப்ப என்ன சொல்ல வறேனு கேக்குறீங்களா?? ” சரக்கடிக்கிறவங்க எல்லாரும் சந்தோசமா சரக்கடிங்க.. ” அட ஆமாங்க.. எல்லாருக்குமே குடிக்கிறதுக்கு நிச்சயமா ஒரு காரணம் இருக்கும். நண்பர்கள் ட்ரீட், பார்ட்டி காதல் தோல்வி, குடும்ப பாரம், மன அழுத்

யாரோ க்ளிக்கியது..

Image
மின்னஞ்சலில் எனக்கு வந்த சில புகைப்படங்கள் இவை . உங்களுக்கு எந்த போட்டோ புடிச்சிருந்தது?? (கடைசி போட்டோனு சொல்வீங்களே..) .

"அந்த ஆளு ஒண்ணுக்குப் போயிட்டாரு.."

Image
அன்புள்ள ஹேமாவுக்கு, எப்படி எழுதுவேன்? முதன் முறையாக ஒரு கடிதம் எழுதுகையில் என் கைகள் நடுங்குகின்றன. இந்த வேதனையைத் தாங்கிக் கொள்ள என் இதயத்திற்கு வலுவில்லை. சமூகத்தில் ஒரு தனிமனிதனின் பலவீனத்தை இப்போதுதான் ஆழமாய் உணர்கிறேன். . ஒருசில நாட்களே பழகிய ஒருவர் வீட்டுத் திருமணத்திற்கு, விருப்பமாய்ப் போய் விருந்து சாப்பிட்டு “மொய்“ எழுதிய போதெல்லாம் பக்கத்திலிருந்த நீ, ஒரு குழந்தையின் அழுகையைத் துடைக்க வேண்டிய நேரத்தில் தூரத்திலிருக்கிறாய். . அம்புஜத்தின் மகள் கண்ணம்மாக் குட்டியைப் பற்றி சென்ற கடிதத்தில் விசாரித்திருந்தாய். கடிதத்தில் நீ காட்டிய கரிசனம், கண்களில் கண்ணீர்த்துளிகளாய் தளும்புகிறது. . ஒரு முறை சமையலறையில் உன் சேலை முனையில் தீப்பிடித்துக்கொள்ள, ஓடிப்போய் செம்புத் தண்ணீரை ஊற்றி அணைத்தாளே.. நம் பையன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது, லாரி ஒன்று விரைந்து வர, ஒரே பாய்ச்சலில் குழந்தையை தூக்கி வந்தாளே.. என்ன சாதுர்யம் என்று எத்தனையோ நாட்கள் ஆச்சர்யப்பட்டுப் பேசியிருக்கிறோம். . அவளுக்கு நேர்ந்ததை எழுதினால் ஒரு குறை அழுதாலும் அழுதுவிடுவாய். அவள் அம்மாவின் முகத்தில் சுரத்தே இல்லாமல் போய்

இதெப்படி இருக்கு???

Image
ரெண்டு நாளைக்கு முன்னாடி என் சொந்தக்காரர் ஒருத்தர் வீட்டு கிரஹப்பிரவேசத்துக்குப் (அதாங்க.. புது வீடு பால் காய்ச்சினதுக்கு) போயிருந்தேன். அங்க நிறைய பேர் வந்திருந்தாங்க. பால் காய்ச்சி சாமி எல்லாம் கும்புட்டுட்டாங்க. என்னென்னவோ சாஸ்த்திரமெல்லாம் பண்ணினாங்க. வீட்டுக்கு சொந்தக்காரர் தன்னோட புது வீட்டப் பத்தி வந்திருந்த எல்லார்கிட்டயும் ரொம்பப் பெருமையா பேசிகிட்டு இருந்தாரு. மார்பில்ஸ் போட்டதிலருந்து கதவு, ஜன்னல் செஞ்சது வரைக்கும் எல்லாமே மாடர்னா பண்ணிருக்குறதா சொல்லிகிட்டு இருந்தாரு. வெளிநாட்டு ஸ்டைல்ல ப்ளான் பண்ணி கட்டினதா பேசிகிட்டு இருந்தாரு. கொஞ்ச நேரம் கழிச்சு எல்லாருக்கும் பந்தி போட்டாங்க, நாங்களும் சாப்பிட்டோம். (அதுக்கு தான வந்ததே..) அப்புறம் மொய் எழுதினோம். (எம்புட்டுனு கேக்காதீங்க.) திடீருனு அங்க இருந்த ஒரு பெரியவர், வீட்டு உரிமையாளர் கிட்ட போயி ”எனக்கு வவுத்த கலக்குதுப்பா, பாத்ரூம் எங்க இருக்கு”னு கேட்டாரு. அவரும் பாத்ரூமுக்கு கூட்டிட்டு போனார். வெஸ்டர்ன் டைப்னால எனென்ன பண்ணனும்னும் சொல்லி அனுப்பிட்டு வந்து, மறுபடியும் பெருமை பேச ஆரம்பிச்சாரு. ”பாத்ரூம்ல ரொம்பவே காஸ்ட்லியான டைல்