Posts

Showing posts with the label கதை என்ற பேரில்..

ஒரு பயணம்.. ஒவ்வொரு அனுபவம்..

Image
வெகு நேரக் காத்திருத்தலுக்குப் பின் ஒரு வழியாகப் பேருந்து வந்தது. தோளில் மாட்டியிருந்த பை, பழங்கள் வாங்கி அடைத்திருந்ததால் சற்று கனக்கவே, ஒரு கையால் வாகாகத் தாங்கிப் பிடித்துக்கொண்டு பேருந்தில் ஏற எட்டு வைத்தேன். என்னைப் போலவே கால்கடுக்கக் காத்திருந்தவர்களின் எண்ணிக்கையை அப்போதுதான் பார்க்க முடிந்தது. படியை நோக்கி சர சரவெனக் கூட்டம் மொய்க்க, ஒருவாராக உள்சென்றுவிட்டேன். அந்தக் கூட்டத்தில் உட்கார இடம் தேடுவது மடத்தனமெனத் தோன்றவே, நிற்பதற்கு ஏதுவான இடம் தேடி, நகர்ந்து நகர்ந்து, பிடித்து நிற்க வசதியான இடத்தில் கால்களை ஊன்றி நின்றுகொண்டதும் பெருமூச்சொன்று வந்துபோனது. இரண்டு நிறுத்தங்கள் தாண்டி எனக்கருகே அமர்ந்திருந்த ஒரு பெண்மணி, இறங்க வேண்டி எழுந்திரிக்க, “அப்பாடா“ என்ற நிம்மதி என் முகத்தில்.. காலியான இருக்கையில் அமர போட்டி போட்டவர்கள் மத்தியில், இருக்கைக்கு வெகு அருகே நின்றிருந்த நான் வெற்றி பெற்றேன். வெகுநேரம்   பேருந்துக்கு காத்திருந்த சலிப்பும் தோள்பையின் கணமும் கொஞ்சம் குறையத்தொடங்கிய நேரம், என்னருகே ஒரு பெண்மணி நின்றிருந்தாள். நான் நின்ற அதே இடத்தில் ஒரு குழந்தையை கையில் வைத்...

துப்புங்க எசமான் துப்புங்க..

Image
கார்த்திக்.. சிவந்த நிறம், நல்ல உயரம். ஏதோ ஒரு சினிமா ஹீரோவின் சாயலை ஒத்த தோற்றம். தினமும் உடற்பயிற்சி செய்பவன் என்பதை அவனது ஃபிட்டான உடற்கட்டே சொல்லியது. ஏற்றி சீவப்பட்ட கேசம் அவ்வப்போது நெற்றியில் தவழ்ந்து அழகூட்டியது. தனியார் நிறுவனம் ஒன்றில் பொறுப்பான வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதிப்பவன். வீட்டிற்கு ஒரே பிள்ளை. அன்று ஞாயிற்றுக் கிழமை, எனினும் சீக்கிரமாக வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தான். கூடுதலான அவனது உற்சாகமே கூறியது, தனது காதலியைப் பார்க்கப் போகிறானென்று. அவர்கள் வழக்கமாக சந்திக்கும் காஃபி ஷாப்புக்கு அவளை 10 மணிக்கு வரச் சொல்லியிருந்தான். சரியாக 9.45க்கு தனது கருப்பு நிற பல்சரைக் கிளப்பிப் பாய்ந்தான். காஃபி ஷாப்புக்குள் நுழையும்போது அவனது வாட்ச் மணி 10ஐ காட்டியது. திருப்தி அடைந்தவனாய் உள்ளே நுழைந்து பார்வையை சுழற்றினான். அவள் இன்னும் வரவில்லை. ஏனோ அன்றைக்கு ஆட்கள் அதிகமாக ஷாப்புக்குள் அமர்ந்திருந்தனர். யோசனையாய் ஒரு டேபிளில் அமர்ந்த கார்த்திக், தனக்கு ஒரு காஃபியை ஆர்டர் செய்துவிட்டு தனது காதலியின் வருகைக்கு காத்திருக்க ஆரம்பித்தான். ................................. அனிதா.....