பண்டிகை நாட்களில் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் தேவையா..??
இந்த தலைப்புல தான் இன்னும் டிவில பட்டிமன்றம் வரலைனு நெனைக்கிறேன். அதை தவிர மற்ற எல்லா தலைப்புலயும் ஒரு பட்டிமன்றம் வச்சிட்றாங்க. “நடுவர் அவர்களே“.....னு ஆரம்பிச்சு ஒரு மணிநேரம் மாறி மாறிப் பேசுவாங்க.. ஆனா என்ன பேசுறாங்க? எதுக்கு பேசுறாங்கனு தான் தெரில. சன் டிவி“னா சாலமன் பாப்பையா டீம், கலைஞர் டிவினா (இப்ப) லியோனி டீம், ஜெயா டிவினா திருஞானசம்பந்தம் அப்புறம் சுகிசிவம்.. இப்டி கான்ட்ராக்ட் போட்டு நிகழ்ச்சி நடத்துறாங்க.. இதுல என்ன வேடிக்கைனா, பட்டிமன்றங்களோ விவாதங்களோ காரசாரமான வாக்குவாதங்கள் நடக்குறதே இல்ல. நகைச்சுவைங்குற பேர்ல ஏதேதோ மொக்கை போட்றது ஃபேஷனாப் போய்டுச்சு. விஜய் டிவி“ல கொஞ்ச நாள் “நீயா நானா“ நல்லா போய்கிட்டு இருந்துச்சு. இப்ப அதுலயும் மொக்கை டாபிக் பேச ஆரம்பிச்சுட்டாங்க. (ஒரு தடவை கல்யாண மாலை நிகழ்ச்சில கவனிச்சேன்.. நடிகர் பாண்டியராஜன் நடுவரா வந்து பட்டிமன்றம் நடத்தினார்.... கொடுமைடா..) எங்க வீட்ல சாலமன் பாப்பையா பட்டிமன்றம்னா மிஸ் பண்ணாம பாப்பாங்க. (அவரு ஏய்.. ஏய்“னு மாடு விரட்டுற ஸ்டைலே தனி தான்..). அதுலயும் ராஜாவோட பேச்சு டாப்“புனு ...