அபிப்ராயங்கள் ≠ அனுபவங்கள்..
நம்ம ஊர்ல ஒரு கெட்ட பழக்கம் உண்டு. ஏதாவது அறிவுரையோ அபிப்ராயத்தையோ சொல்ல ஆரம்பிச்சவுடனே, “உனக்கு இதப் பத்தி என்ன தெரியும்? அனுபவமில்லாம பேசாத“னு சொல்லி வாய அடச்சிடுவாங்க. வாஸ்தவம் தான்.. ஆனா இது எல்லா விஷயத்துக்கும் பொருந்தாது. உதாரணத்துக்கு, பத்தாவது மாடிலருந்து கீழ குதிச்சா என்ன ஆகும்னு சொல்றதுக்கு, அப்படி குதிச்சுப் பார்த்த அனுபவம் இருக்கணும்னு அவசியம் இல்லையே.. சரி தானே? நா எழுதுன “ சந்தோசமா சரக்கடிங்க “ பதிவுலயும் இந்தக் கேள்வி வந்துச்சு.. குடிப்பழக்கத்துல இருக்குற கெடுதல்கள்பத்தி சொல்றதுக்கு குடிச்சுப் பார்த்திருக்கணும்னும், குடும்பக் கட்டுப்பாட்டு அலுவலகத்துல வேலை பார்க்குறதுக்கு குழந்தை பெத்திருக்கணும்னும் அவசியம் இல்லையே.. அனுபவப்பூர்வமா அறிவுரை சொல்றதுல நிறைய உபயோகம் இருக்கலாம். அதே மாதிரி ஒட்டுமொத்தமா அனுபவம் இருந்தா மட்டும்தான் ஒரு விஷயம் பற்றி பேசணும்னும் சொல்லிட முடியாது. கேள்வி ஞானம் மட்டுமே வச்சு சொல்லப்படுற அபிப்ராயங்களுக்கும் மதிப்பு இருக்கத்தான் செய்யும். “நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்“னு விளம்பரம் பண்ற மாதிரி ஒருசிலர் வெட்டியா, கடனேனு கருத்து சொல்வாங்க