உப்புமா.. (04.10.2012)
ரொம்ப நாளைக்கப்புறம் போன மாதம் தான் ஒன்பது பதிவு எழுதியிருக்கேன். 2010ல வலைப்பூ ஆரம்பிச்சு, இடையில ஹேக் ஆகி மறுபடியும் பேக்-அப் எடுத்து புது வலைப்பூ தொடங்கி பதிவுகள் எழுதி..னு நல்லாத்தான் போய்கிட்டு இருந்துச்சு. நடுவுல கொஞ்ச நாள் பதிவுகளோட எண்ணிக்கை குறைஞ்சிடுச்சு. எழுதுற ஆர்வம் குறைஞ்சதும், முகநூல்பக்கம் ஒதுங்குனதும் முக்கியமான காரணம்னு சொல்லணும். ஜூலை மாசத்துல நாலே நாலு பதிவு தான் எழுதியிருந்தேன். அப்புறம் ஒருவழியா திரும்பவும் ஓரளவு வேகம்பிடிச்சு, செப்டம்பர்ல ஒன்பது பதிவு தேத்தியாச்சு. (ஒருநாளைக்கு நாலு பதிவு போடுறவங்களுக்கு இது சாதாரணமா தெரியலாம். ஆனா எனக்கு இது பெரிய விஷயமுங்க..) எழுதுற ஆர்வம் இருந்தாலும் இந்திரா“ங்குற அங்கீகாரமும் அடையாளமும் கிடைச்சது வலைப்பூவுல தான். நடுவுல கொஞ்சம் டல்லானாலும் மறுபடியும் பழைய சுறுசுறுப்போட பதிவுகள் தொடரச் செய்யணும். :-) ---------------------------------------------------- இந்த மாசத்தோட நான் அலுவலகத்துல சேர்ந்து அஞ்சு வருஷமாகுது. நிரந்தரப் பணியாளராகுற தகுதியை அடைஞ்சுட்டேன். ஆனா நிரந்தரமாக்குறது தான் நிலுவைல இருக்கு. அதுக்கு இன்னும் வ