Posts

Showing posts from February, 2013

விநோதினி, வித்யா, நான், நீ..

Image
புதிய தலைமுறையில் நேற்று வித்யா சம்பவம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதில் ஆசிட் அமிலத்தை ஒரு கடையில் எவ்வளவு எளிதாக வாங்கிடலாம் என்ற கோப்புக் காட்சியும் ரகசியமாக படம் பிடித்துக் காட்டப்பட்டது. மனுஷ்யபுத்திரனின் கூற்றுப்படி, இக்காட்சியானது இரண்டுவிதமாகப் பார்க்கப்படும். எளிதாகக் கிடைக்கும் இவ்வகை அமிலத்தை தடை செய்யக்கூறும் கண்ணோட்டம் முதலாவது. மற்றொன்று, “இவ்வளவு எளிதாகக் கிடைக்குமா.. நாமும் இதையே உபயோகித்துவிட வேண்டியதுதான்“ என்ற மனநோயாளியின் கண்ணோட்டம். ஒரு சகமனுஷியை, தனக்கு கிடைக்காத ஒரு பொருளாய், அதன் மீது வன்மம் கொண்டு பழிதீர்த்துக்கொள்ளும் மனிதநேயமிக்க செயலை, ஆணாதிக்கம் என்றும் மிருகத்தனம் என்றும் ஆளாளுக்கு வசைபாடி புகழாரம் சூட்டிவிட்டு, அவரவர்தம் பணிகளில் ஆழ்ந்துவிடுவது, காலங்காலமாக நடந்தேறிக்கொண்டிருப்பது தான். ஆண் குழந்தை புத்தகம் படிப்பது போலவும், பெண் குழந்தை காய் நறுக்குவது போலவுமான படங்கள் இன்றளவும் பாடப்புத்தகத்தில் இடம்பெறத்தான் செய்கின்றன. எவ்வளவுதான் உயரவே பறந்தாலும் பெண் என்பவளுக்கான வரையறைக் கோடுகள் ஒரு வட்டத்திற்குள்ளேயே அடங்கிவிடுகின்றன.. அல்லது அடங்கவேண்

விஸ்வரூபம் – என் பார்வையில்..

Image
படம் முழுக்க கமல்.. கமல்.. என கமல்ஹாசனின் ஆக்கிரமிப்புகள் தான். பல இடங்களில் அமைதியாக, நடிப்பில் அசத்துகிறார். ஆரம்பக்காட்சிகளில் கதக் மாஸ்டராக வரும் கமல் தான் மனதில் நிற்கிறார். குறிப்பாக நடனப்பயிற்சி முடிந்ததும் வரும் தொலைபேசியை எடுக்க, மெலிதான ஓட்டத்துடன் வரும் காட்சி.. ஸ்பெஷல் அப்ளாஸ் கமல் ஜி. கைகளைக் கட்டிப்போட்டபடி உண்மைகளை கூறுமாறு கேட்கும் தீவிரவாதியிடம், பெண்மை கலந்த கண்சிமிட்டலுடன் பதில் சொல்வது கதாப்பாத்திரத்திற்கே உரிய யதார்த்தம். இந்தப் படத்துல ஆண்ட்ரியா எதுக்குனே தெரியல. அவ்வப்போது வந்து போவது தவிர நடித்ததாய் தெரியவில்லை. பாடல்கள் சுமார் ரகம் தான். காதல் ரோஜாவே படத்துல வந்த பூஜா குமார் தானே இது? வயசே தெரியல. அவருக்கு அபிராமியின் டப்பிங் குரல் கணகச்சிதம். இருந்தாலும் தசாவதாரம் ஹீரோயினின் வாயாடித்தனம் வந்துபோகுது. வெளிநாட்டுல நடக்குற கதைங்குறதால நிறைய வேற்று மொழிகள் உலவுது. இருந்தாலும் சாமான்யனுக்கு சத்தியமா புரியுறது கஷ்டம். இத்துனூண்டா தமிழ்ல எழுத்துக்கள் போட்டாலும் தேடிப் படிக்கிறதுக்குள்ள அடுத்த காட்சி போய்டுது. அதென்னப்பா... தமிழ் சினிமாவுல வர்ற FBI மட்ட