எங்க ஆபீசர் அறிவாளியாக்கும்ம்ம்..
அலுவலகத்துல நிரந்தரப்பணியாளர்களோட அடிப்படை சம்பளம், இன்க்ரிமென்ட், DA, HRA எல்லாத்தையும் விவரமா டைப் பண்ணி, சமீபத்துல இன்க்ரிமெண்ட் வாங்கின தொகையையும் சேர்த்து, ரிப்போர்ட் அனுப்பசொல்லியிருந்தாங்க. Word ல டைப் பண்ணினா கால்குலேசன் பண்றதுக்கு கஷ்டமாயிருக்கும்னு நா அதையெல்லாம் Excel ல டைப் பண்ணேன். கூட்டல் மற்றும் சதவிகிதக் கணக்கையெல்லாம் ஃபார்முலா உபயோகிச்சு ஒரு மணிநேரத்துல முடிச்சுட்டு ஆபீசர்கிட்ட சொன்னேன். சரிபார்க்குறேன்னு வாங்கிப்பார்த்தவர், கால்குலேட்டரை எடுத்து ஒவ்வொண்ணா கணக்குப்போட ஆரம்பிச்சாரு. அப்பவே எனக்குத் தெரிஞ்சுபோச்சு, இன்னைக்குப் பொழுது இதுக்கே சரியாய்டும்னு. Excel ல தான் போட்ருக்கேன் சார். ஃபார்முலா உபயோகிச்சுத் தான் பண்ணேன்னு சொன்னாலும் அவரு கேக்கல. கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள்.. ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா சதவிகிதம், கூட்டல் தொகைனு கணக்குப்போட்டு மொத்தம் பார்த்தா, என்னோட ரிப்போட்டுக்கும் கால்குலேட்டர்ல வந்த பதிலுக்கும் வித்தியாசம் வந்துச்சு. ஆபீசர் என்னைய முறைச்சுப்பார்த்துட்டு, ஏதோ தப்பாயிருக்கு இந்திரா.. சரி பண்ணிட்டு வாங்கனு சொன்னார்.