Posts

Showing posts with the label ஆண்கள்

பெண்ணுரிமை வாழ்க..! ஆண்கள் ஒழிக..!!

Image
பெண்ணுரிமையைப் பாதுகாப்போம். பெண்களுக்கு உரிமை கிடைக்கப் போராடுவோம். வாருங்கள் பெண்களே.. நமக்கு முதல் எதிரி ஆண்கள் தான். ஆண்களை எதிர்த்துப் போராடுவோம். பெண்ணுரிமை வாழ்க! ஆண்கள் ஒழிக! ஆண்கள் ஒழிக!! இன்னைக்கு இதுதான் பெண்ணுரிமைக்காக போராடும் பெரும்பாலான இயக்கங்களின் கோஷமா இருக்குது. பெண்ணுரிமைனாலே அது ஆண்களுக்கு எதிரானதுங்குற விளக்கம் தான் கொடுக்கப்படுது. இந்தவகையான தவறான புரிதல் தான் ஆணுக்கும் பெண்ணுக்குமான கருத்துவேறுபாட்டையும் அதிகார மனப்பான்மையையும் அதிகரிக்குது. அதாவது சமுதாயத்துல பெண்களின் உரிமைகளுக்காக போராடனுமேயொழிய, ஆண்களை எதிரியா நெனச்சுப் போராடுறதுல தான் அடிப்படைத் தவறே இருக்கு. ஆண்களுக்கு சாதகமா பேசுறதுக்காக சொல்லவரல.. எனக்குத் தெரிஞ்சவரைக்கும் பெண்களை சக மனுஷியா நடத்துற, அவர்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்குற ஆண்களும் இருக்கத்தான் செய்யுறாங்க. அதே சமயம் பொண்ணுங்கனாலே தாழ்ந்துதான் இருக்கணும்னு சொல்லிச் சொல்லியே அவங்கள அடிமைப்படுத்துற பெண்களும் சமூகத்துல இருக்குறாங்க. இங்க பெண்ணுரிமைப் போராட்டம்குறது யாரை எதிர்த்துங்குறதுல இல்ல. எந்த அடிப்படைலங்குறதுல தான் இருக...

பெண்களிடம் ஆண்கள் கேட்க நினைக்கும் (கேட்கக்கூடாத) கேள்விகள்..

Image
1.        அடிப்படைல லோக்கலா இருந்தாலும், எங்கள பார்க்கும்போது, கடந்துபோகும்போது மட்டும் என்னவோ ஃபாரின்ல இருந்து அப்பதான் Flight ல வந்து இறங்கின மாதிரி அலட்டல் பண்றீங்களே.. அதெப்படி உங்களால முடியுது?? 2.        வெளியிடங்களுக்குப் போனா நாங்களே தான் செலவு பண்ணனுமா?? நீங்க மட்டும் ஏன் பர்ஸை திறக்கவே மாட்டேன்குறீங்க? 3.        எப்பவும் நாங்க தான் உங்களுக்கு ரீசார்ஜ் பண்ணி விட்றோம். இருந்தாலும் ஏன் மிஸ்டு கால் குடுத்தே உயிர வாங்குறீங்க? 4.        நாங்க சைட் அடிச்சா எங்கள உண்டு இல்லைனு ஆக்கிட்றீங்க.. நீங்க சைட் அடிச்சா ” ஜஸ்ட் லுக்கிங்“னு சொல்றீங்க. இது என்ன நியாயம்? 5.        நீங்க கேள்வி கேட்டா பொசசிவ்“னு சொல்றீங்க.. நாங்க கேள்வி கேட்டா மட்டும் சந்தேகப்பட்றோம்னு கத்துறீங்க.. அது ஏன்? 6.        சண்டை வந்துட்டா நாங்களே தான் இறங்கி வந்து சமாதானப் படுத்தணுமா?? ஒரு தடவையாவது நீங்க...

ச்சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள் - ஒரு அலசல்..

Image
இன்னைக்கு இணைய நட்புங்குற விஷயம் நடைமுறைல சகஜமாய்டுச்சு. ஆண் பெண் பேதமில்லாம, இணையம் மூலமாவே, (முகம் பார்க்காம கூட) மாசக் கணக்கா பேசி ஒருத்தருக்கொருத்தர் நட்ப வளத்துகிட்டு வறாங்க. இதுல நல்ல விஷயங்கள விட, எதிர்மறையான விஷயங்கள் நிறையவே இருக்குனு சொல்லலாம். இன்னைக்கு சூழ்நிலைல, இணைய நட்புங்குறத தாண்டி, காதல், காமம்னு அடுத்தடுத்த பரிணாமத்துக்கு கொண்டுவந்துடுச்சு. இதுல பகுத்தறிவோட, பிரிச்சுப்பாக்குற பக்குவம் இருக்குறவங்க தப்பிச்சுக்குறாங்க. பல ஆர்வக்கோளாறுகள் இதுலயே மூழ்கி வாழ்க்கைய கெடுத்துக்குறாங்க. பேஸ்புக், ஆர்குட், ட்விட்டர்னு நெறைய நெறைய இணையதளங்கள் மூலமா நமக்குப் புதுப் புது நட்புகள் கிடைக்குது. தற்செயலா, எந்த உள்நோக்கமும் இல்லாம, நட்பின் அடிப்படைல மட்டும் பழகுறவங்க சிலர் இருந்தாலும், தங்களுடைய வக்கிர புத்திக்காக, ஆண்கள் / பெண்கள் யாராவது சிக்க மாட்டாங்களானு வலை விரிக்கிறவங்களும் இருக்காங்க. அப்படி புதுசா அறிமுகமாகுற ஆண் பெண் மத்தியில நடக்குற ச்சாட்டிங்குல, சம்மந்தப்பட்ட ஆண் எப்படியெல்லாம் சாமர்த்தியமா பேச...