Posts

Showing posts with the label சோதனை

வந்துட்டேன்.. வந்துட்டேன்...

Image
ஒரு வழியா நெட் பிரச்சனை சரியாகி திரும்ப வந்துட்டேன். நானும் எத்தனை தடவை தான் திரும்ப வந்துட்டேன்.. திரும்ப வந்துட்டேன்“னு சொல்றது??? நல்லா பதிவெழுதுறேன்னு திருஷ்டி படுது போல... (அட... காரி துப்புறத நிறுத்துங்க பாஸூ...) முதல்ல என் பழைய ப்ளாக் தொலைஞ்சு போய் புது ப்ளாக் ஆரம்பிச்சப்ப “ நா திரும்ப வந்துட்டேன் “னு சொன்னேன். அப்புறம் கொஞ்சம் உடம்பு சரியில்லாம போய் பதிவெழுதுறதுல இடைவெளி விட்டுட்டேன். அப்ப மறுபடியும் “ திரும்ப வந்துட்டேன்“ னு சொன்னேன். அதுக்கப்புறம் இப்ப இன்னொரு தடவை சொல்லிக்கிறேன்.. (ஆமா.. உனக்கு வேற வேலையில்ல...“னு நீங்க முனங்குறது தெரியுது..) ஒரு பிரபல.. (ஐய்யயோ.... வேணாம் வேணாம்..) நல்ல பதிவர்“னு பேர் எடுக்குறதுக்கு (ம்கும்..) எத்தன சோதனைய கடக்க வேண்டியதாயிருக்கு.. சரி சரி கடுப்பாகாதீங்க.. இதுனால நா சொல்ல வர்றது என்னனா... இனி மொக்கை பதிவுகள் வழக்கம்போல தொடரும்.. நீங்க கதறிக் கதறி அழுதாலும் பதிவுகள படிச்சுட்டு தான் போகணும் சொல்லிட்டேன். இனி வழக்கம்போல தொடரப் போகும் (மொக்கை) பதிவுகள்ல சந்திக்கிறேங்க.. . .