Posts

Showing posts from December, 2012

ஓடும் பேருந்தில் வன்புணர்வு – இந்தியா ஒளிர்கிறது..!!

Image
காலையில் ஒரு கப் டீயோடு சாவகாசமாய் பேப்பரை மேய்ந்துகொண்டிருக்கும்போது கண்ணில் பட்டிருக்கலாம் இந்தச் செய்தி. ஓடும் பஸ்ஸில் மாணவி பலாத்காரம்...! டெல்லியில் பயங்கரம்! லோக்சபா, ராஜ்யசபாவில் இதுகுறித்து அமளி..! மருத்துவமனை சென்று பாதிக்கப்பட்டவரை பார்த்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர்..! குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அறிவிப்பு..! கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 572 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்றும்,   மும்பையில் 239 பெண்களுக்கு இதே கொடுமை நேர்ந்துள்ளது என்றும் தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது..! படித்துவிட்டு எந்தவிதப் பதட்டமுமின்றி செய்தித்தாளை மடித்துவைத்துவிட்டு, வழக்கமான வேலைகளில் ஈடுபடச் சென்றுவிடலாம். நியாயம்தானே.. நமக்கேன் இதுபற்றியெல்லாம் கவலை?? நண்பர்களுடன் பேசும்போது, கசாப் தூக்கிலப்பட்டதைப் பற்றியும் பெட்ரோல் விலையேற்றம் பற்றியும் முடித்துவிட்டு, அவர்களில் யாரேனும் இதுபற்றிப் பேச்சையெடுத்தால் ” ஆமா.. நா கூட காலேல படிச்சேன். ரொம்பக் கொடுமையான செய்தி தான். இவனுகளையெல்லாம் சுட்டுக்கொ

மனிதனும் சுய விருப்பமும்..!

வாழ்க்கை.. லட்சியம்.. என்பதைத் தாண்டி, அபத்தமான ஆசைகளும் மனிதனின் அடிமனதில் இருக்கக்கூடும். பொது இடங்களில் காதலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் செய்யும் சில்மிஷங்கள் போல...! தனக்குப் பயன்படுகிறதோ இல்லையோ.. சில பொருட்களை எடுத்துவைத்துக்கொள்ளுதல் ( Kleptomania ) போல.. ஆசைகள் மற்றும் அதனை நிறைவேற்றிக்கொள்ள மனிதனின் முயற்சிகளைப் பற்றியும் சமீபத்தில் நண்பருடன் வாதம் நடந்தது. இயலும் எனில், தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள ஒருவனுக்கு சுதந்திரம் உண்டு. அது அல்பத்தனமான ஆசையாக இருப்பினும்.. என்று அவர் கூறினார். எதிலுமே சுய கட்டுப்பாடு வேண்டும். முடியும் என்பதற்காக முட்டாள்தனமானதையும் முயன்று பார்க்கக்கூடாது. ஒரு முறை தற்கொலை செய்துபார்த்தால் என்ன? என்று கூட ஆசை ஏற்படலாம். தன்னால் இயலும் என்பதற்காக அதை முயற்சித்துப் பார்ப்பது மடத்தனம் என்று நான் கூறினேன். அவனுடைய ஆசை அதுவெனில் விளைவுகளையும் அவன் தான் அனுபவிக்க வேண்டும். இது முட்டாள்தனம் அல்ல. இது ஒருவகையான “அறிந்துகொள்ளும் தன்மை“. ஒரு சிலருக்கு சில விஷயங்களில் ஒருவகை ஈர்ப்பு அல்லது த்ரில் தேவைப்படுகிறது. அதன்காரணமாக முயற்சி செய்கிறார்கள்

நட்போ..! காதலோ..!

Image
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள , எல்லைகள் கடந்து எதிர்த்துப்பேச , சலுகையில்லாது சண்டைகள் போட , விருப்பம் குறித்து வாதம் செய்ய , குறையிருப்பின் சுட்டிக்காட்ட , நிறையிருப்பின் தட்டிக்கொடுக்க , தளர்ந்துபோயின் தேற்றிவிட , கேள்விகளுக்கான பதில்சொல்ல , பதிலுக்குமோர் கேள்வியெழுப்ப , தேடலின்போது துணையாய் நிற்க.. என எப்போதும் எதிர்பார்க்கப்படுகிறது.. முகமூடியணியாத ஓர் நட்பு..! நம்மிடமோ.. நம்மால் பிறரிடமோ..!! . காமம் பிரதானமில்லை எனும்போது நட்போ..! காதலோ..! எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். என் உலகம் உனக்கானதுடன் பொருந்திப்போகிறது என்பதே எனக்குப் போதுமானது..! . .