Posts

Showing posts from September, 2011

புகைப்படம் பார்த்து பதில் சொல்லுங்க..

Image
கீழ இருக்குற படத்த சொடுக்கி பெருசு பண்ணி, வெள்ளை கலர் டிரெஸ் போட்டிருக்குற பொண்ணோட சட்டைல எத்தனை ப்ளூ கலர் புள்ளிகள் இருக்குனு கண்டுபிடிச்சு சொல்லுங்க பாக்கலாம்.. நல்லா உத்த்த்த்துப் பாக்கணும் சொல்லிட்டேன்..

மீசைக்காரன் வாங்குன பல்பு..

Image
எப்ப பாத்தாலும் நா தான் பல்பு வாங்குறேன்னு நெனச்சுகிட்டு இருந்தேன். ஆனா நேத்து மீசைக்காரன் செம பல்பு வாங்குனான்.. இப்ப தான் எனக்கு ஆறுதலா இருக்கு. அவ, தனியார் கம்பெனில அக்கவுண்டன்ட்டா வேலை பாத்துகிட்டிருக்குறா. ஆனாலும் புது வேலைக்காக, ஒரு பெரிய கம்பெனில வேலைக்கு அப்ளிகேஷன் போட்டிருந்தா. நேத்து சாயந்திரம் அந்த கம்பெனில இருந்து அவளுக்கு போன் பண்ணாங்க. அவளப் பத்தின தகவலெல்லாம் கேட்டுகிட்டு இருந்தாங்க. அவளும் பொறுமையா பதில் சொல்லிகிட்டு இருந்தா. நமக்கொரு பழக்கம் இருக்கும். என்ன தான் நாம வாய் பேசினாலும், ஒரு மதிக்கத்தக்க இடத்துலயோ இல்ல வெளி நபர்கிட்டயோ ரொம்ம்ம்பவே டீசன்டா பேசுவோம். அதாவது நா ஒரு எச்சக்கல.. ஸாரி எஜூகேட்டட்“னு அடுத்தவங்க நெனைக்கனும்னு சீன் போடுவோம். அது மாதிரி தான் அவளும், நேத்து அவங்ககிட்ட போன்ல பேசும்போது, எஸ் சார்.. ஓகே சார், ஸ்யூர் சார்“னு ரொம்ம்ம்பவே தன்மையா பேசினா.. (கொய்யாலே.. ஃபார்வர்ட் மெசேஜ்க்கு அர்த்தம் கேக்கும்போது வச்சுக்குறேன்டி..) இவ போட்ட சீன், அவங்களுக்கு இவ மேல ஒரு மரியாதைய ஏற்படுத்திடுச்சு போல.. “நாளைக்கு நேர்ல வாங்க

தூக்கத்தில் குழந்தைகள் உச்சா போவதைத் தடுக்க – சில ஆலோசனைகள்..

Image
இரவில் தூங்கும்போது குழந்தை படுக்கையை நனைத்துவிடும் பழக்கத்தை Nocturnal enuresis என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகள் பெரும்பாலும் படுக்கையில் சிறுநீர் கழிக்க மூன்று காரணங்களைச் சொல்லலாம். 1.        சிறுநீர்ப் பையின் கொள்ளளவு குறைவாக இருந்தால் சிறுநீரை அடக்க முடியாமல் போகலாம். (ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது அடக்க முடியாது நனைத்து விடலாம்). 2.        இரவு படுக்கைக்குச் செல்லும்முன் நிறைய தண்ணீர் குடித்துவிட்டுத் தூங்கச் செல்வதாலும் இருக்கலாம். 3.        மனரீதியான பிரச்சனைகளாலும் இருக்கலாம். அடிப்படைக் காரணம் : பொதுவாகவே குழந்தையின் மூளை முதிர்ச்சியடைய சுமார் ஐந்தாண்டுகள் ஆகும். எனவே 5-6 வயது வரை படுக்கையை நனைத்தால் அது இயற்கைதான். அதற்குமேல் இருந்தால் சிறுநீர் உறுப்புகளில் கோளாறு இருந்தாலோ, நரம்புத் தளர்ச்சி இருந்தாலோ அல்லது மனரீதியாகப் பாதிப்பு இருந்தாலோ படுக்கையை நனைக்க வாய்ப்புண்டு. தடுக்க எளிய முறைகள் : 1.        பகல் நேரத்தில் சிறுநீர் கழிக்க விரும்பும்போது சிறிது நேரம் அடக்கப் பயிற்சி கொடுத்தால் சிறுநீர்ப் பையின் கொள்ளளவு பெரிதாகும்.

தடுக்கி விழும்போது தாங்கிப் பிடிச்சா லவ் வருதுடோய்... எப்ப தான் இவனுக திருந்துவாய்ங்களோ..

Image
நேத்து 8.30 மணிக்கு விஜய் டிவில ‘ சரவணன் மீனாட்சி ’ தொடர் பாத்தேன். பொதுவா எனக்கு சீரியல் பாக்குற பழக்கம் இல்லீங்க... ஏற்கனவே ட்ரெய்லர் பார்த்துருக்கேன். புது தொடர், லவ் ஸ்டோரி,  அதுனால ஒரு ஆர்வத்துல பாத்தேன். சீரியல் என்னவோ அரைமணி நேரம்னு சொன்னாங்க. அதுல பத்து நிமிஷம் விளம்பரம் போட்டுட்டாங்க. மீதியிருந்த இருவது நிமிஷத்துல ஹீரோவும் ஹீரோயினும் லுக் விடவே சரியாப் போய்டுச்சு. பேக்ரவுண்ட்“ல பழைய காதல் பாட்ட ஓட விட்டுட்டு மாறி மாறி ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டேயிருக்காங்க. ஒரு சீன்ல, ஆட்டோவுல பக்கத்து பக்கத்துல உக்காந்து போகுற மாதிரி காட்டினாங்க. ஆட்டோ குலுங்கும்போதெல்லாம் ரெண்டுபேரும் உரசிக்கும்போது ரொமாண்டிக்கா லுக் விட்டுக்குவாங்க. அப்புறம், சாப்பிட்றதுக்கு ஹோட்டல் போவாங்க. முதல்ல எதிரெதிர்ல உக்காருவாங்க. கொஞ்சநேரம் கழிச்சு கூட்டமாயிருக்குனு பக்கத்து பக்கத்துல உக்கார வேண்டிய சூழ்நிலை வரும்.. உடனே ரொமாண்டிக் லுக்கு தான். அப்புறம் ஒரு சீன்ல கோவிலுக்கு போவாங்க. அங்க ரெண்டு பேரோட செருப்பையும் ஒண்ணா கழட்டி வைப்பாங்க.. உடனே வெக்கப்பட்டுகிட்டே லுக் விட்டுக்

100 பேர் பிரியாணி ஆயிட்டாங்க.. (சும்மா ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்ம...)

Image
ஒரு வழியா என் மொக்கை ப்ளாக்ல நூறு பேர் இணைஞ்சிருக்காங்க. (பழைய ப்ளாக்ல 248 பேர் இருந்தாங்க.. ம்ம்ம்.. இட்ஸ் ஆல் இன் த கேம் யா..). இன்னும் தொடரப்போகும் என்னோட மொக்கை பதிவுகள நிறைய பேர் படிச்சு ஒரு வழியாகணும்னு கேட்டுக்குறேன்... (பழைய ப்ளாக்ல இப்படித்தான் 100 ஃபாலோயர்ஸ் வந்துட்டாங்கனு பதிவு போட்டேன். போட்ட அஞ்சாவது நிமிசம் அது 99 ஆய்டுச்சு. அந்த நல்ல புள்ளை யாருனு தெரில.. அவ்வ்வ்வ்வ்...) இதுவரைக்கும் என்னோட தளத்துல பிரியாணி ஆனவங்களுக்கு நன்றி.. இனிமேல் ஆகப்போறவங்களுக்கு என் (அனுதாப) வாழ்த்துக்கள். சரி சரி.. வழக்கம்போல அடுத்த (மொக்கை) பதிவுல சந்திக்கலாமுங்க.. . .

எனக்கொரு டவுட்டு..

Image
பாடல் ஒன்றை டவுன்லோட் செய்வதற்காக இணைத்தில் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது தரவிறக்கம் செய்யும் லிங்க்கை சொடுக்கியவுடன் கீழுள்ள விபரம் கேட்கப்பட்டது. ஏன் இப்படி கேக்குறாங்கனு புரியல. Code நம்பர டைப் பண்ண சொன்னா பத்தாதா? Please verify that you are human ’ னு வருது.. காலக்கொடுமை டா.. . .

கடுப்பேத்துறதுக்குனே கல்யாணம் பண்ணிக்கிறாய்ங்க...

Image
போன வாரம், ராசிப்பொண்ணு க்கு விருந்து குடுத்தோம். மீசைக்காரனு ம் நானும் தான் சமையல். மட்டன், சிக்கன், மீன்“னு எல்லாமே சமைச்சிருந்தோம். (நம்புங்க.. நா நல்லா சமைப்பேன்..). அரட்டை அடிச்சுகிட்டே சமைச்சதுனால, சமையல் முடிய மதியம் 3.30 ஆய்டுச்சு. எல்லாருக்கும் நல்ல பசி. ஒரு வழியா சாப்பிட உக்காந்தாங்க. சமைச்சதை எல்லாம் டைனிங் டேபிள்ல எடுத்துவச்சுகிட்டு இருந்தோம். கடைசியா மீன் குழம்ப வேற பாத்திரத்துல மாத்திகட்டு இருந்தேன். பாத்திரம் வெயிட்டா இருந்ததால, குழம்புல இருந்த மீனை எல்லாம் முதல்ல கரண்டில எடுத்து மாத்திட்டு, அப்புறம் குழம்ப அதுல ஊத்திகிட்டு இருந்தேன். பசி தாங்க முடியாம உள்ள வந்த ராசிப்பொண்ணு அத பாத்துட்டு “என்னடி பண்ற?“னு கேட்டா. உடனே நா ரெண்டு பாத்திரங்களையும் காட்டி “இது மீனு, இது புளி குழம்பு, ரெண்டையும் ஒண்ணா ஊத்துனா மீன் குழம்பாயிடும்“னு சொன்னேன். “ஓ அப்படியா? சரி சீக்கிரம் கொண்டு வா, எனக்குப் பசிக்குது“னு சொல்லிட்டு எந்த ரியாக்சனும் குடுக்காம போயிட்டா. (உருப்ட்ட மாதிரி தான்..) ******************************************* என் மொபைல்ல சார்ஜ் சுத்தமா

சில க்ளிக்ஸ்...

Image
. . .

இந்தப் பதிவுக்கு நீங்களே ஒரு தலைப்பு சொல்லுங்க..

இது திமிரா? கொழுப்பா? ஆர்வக்கோளாறா? எப்படி சொல்றதுனு தெரில. இணைக்கப்பட்டிருக்குற வீடியோ காட்சிய பாத்துட்டு அதற்கேற்ற தலைப்ப நீங்களே சொல்லுங்க.. மேலும் விபரம் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.  . .

விண்வெளி - பொதுஅறிவுத் தகவல்கள்

Image
நமது அறிவிற்கு அப்பாற்பட்ட பல ஆச்சர்யங்கள் நிறைந்தது தான் விண்வெளி. என்னதான் விஞ்ஞானம் மூலம் ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டாலும் இன்னும் புதிய புதிய தகவல்கள் கிடைத்துக்கொண்டே தான் இருக்கின்றன. சூரியன், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் எனப் பல புதுமைகள் இந்தப் பால்வீதியில் நிறைந்துள்ளன. அவற்றைப் பற்றிய எனக்குத் தெரிந்த சில தகவல்கள் இங்கே.. 1. சூரியனில் ஆண்டுக்கு ஏழு முறை கிரகணம் தோன்றுகிறது. 2. ஒருவரின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சூரியனில் அவரது எடை 2000 கிலோ. 3. அண்டார்டிகாவில் செப்டம்பர் 21-ஆம் தேதி மட்டும் சூரியன் உதயமாகும். 4. விண்வெளியில் பயணம் செய்த முதல் மிருகம் லைக்கா ( Laika) என்ற நாய். 5. விண்வெளி வீர்ர்களுக்கு உணவாகப் பயன்படுவது பாசி குளோரெல்லா . 6. சூரியனின் வெப்பக்கதிர்கள் 930 இலட்சம் மைல்கள் பயணித்து, பூமிக்கு வர சுமார் எட்டு நிமிடங்கள் ஆகின்றன. நாம் பார்க்கும் ஒளி, எட்டு நிமிடங்களுக்கு முந்தையது. மிக வேகமான ஒரு ஜெட் விமானம் இந்த தூரத்தைக் கடக்க 18 ஆண்டுகள் ஆகும். 7. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 23 மணிநேரமும் 56