Posts

Showing posts from July, 2012

ஆண் குழந்தை மோகம்..

Image
போன வாரம் தான் ராசிப்பொண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்துச்சு. தாயும் சேயும் நலமாக இருக்குறாங்க. அவளுக்கு நல்லபடியா பிரசவமாகணும் வாழ்த்துன நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். சரி பதிவுக்கு வரேன். ராசிப்பொண்ணு பிரசவமாகும்போது அறைக்கு வெளில நாங்க வெய்ட் பண்ணிகிட்டு இருந்தோம். அப்போ, அவளோட மாமியார் ஆண் குழந்தை தான் பிறக்கணும்னு பிரார்த்தனை பண்ணிகிட்டே இருந்தாங்க. நானும் என் அம்மாவும் “என்ன குழந்தையா இருந்தா என்ன? ஆரோக்யமா பிறக்கணும்னு நெனைங்க..“னு அவரை சத்தம்போட்டோம். அப்புறம் குழந்தை பிறந்து அழுகுற சத்தம் கேட்டுச்சு. பக்கத்துல நின்னுகிட்டிருந்த உறவினர், அழுகும் சத்தத்தைக் கேட்டா பொம்பளைக் குழந்தை மாதிரிதான் தெரியுதுனு சொன்னார். உடனே அந்த அம்மா அவரிடம் சண்டைக்குப் போயிட்டாங்க. குழந்தை ஆண் ’ னு தெரிஞ்சதும் தான் நிம்மதியானாங்க. ‘ சிங்கக்குட்டி பிறந்துருக்கு.. எங்க வாரிசு பிறந்துருச்சு.. ’ அப்படி இப்படினு குதிச்சு கும்மாளம் போட்டுட்டாங்க. எனக்கு இதெல்லாம் பார்க்கும்போது கடுப்பா இருந்துச்சு. வயித்துல இருக்குற குழந்தை ஆரோக்கியமா எந்தப் பிரச்சனையுமில்லாம பிறக்கணும்னு நினைக்குறது தான் நியாய

உன் தற்கொலைக்கு என் வாழ்த்துக்கள்..

Image
கயிற்றால் கழுத்தை நெரித்துக்கொள்.. நாக்கும் கண்களும் வெளித்தள்ள எலும்புகள் உடைத்திடு வலுக்கட்டாயமாய்.. விஷத்தால் உயிரைப் போக்கிக்கொள்.. சுவாசம் தடைபட்டு இதயத்தை நிறுத்திடு சுதந்திரமாய்.. கத்தியால் நரம்பை அறுத்துக்கொள்.. இரத்தத்துடன் உயிரையும் வெளியேற்று சாவகாசமாய்.. மாத்திரைகளால் நித்திரைக்குள் புதைந்துகொள்.. மீளாத கனவுகளில் மூழ்கிப்போ நிதானமாய்.. ஓடும் வாகனம் முன் பாய்ந்துகொள்.. அடித்துநொருக்கிடு உறுப்புக்களை அதிரடியாய்.. மாடியேறி தரைதளம் குதித்துக்கொள்.. சிறகில்லா பறவையாய் சின்னாபின்னமாகிப்போ சுலபமாய்.. எப்படி வேண்டுமானாலும் நிகழலாம் உன் தற்கொலை.. உன் விருப்பமாக எதுவேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும்.. கத்தியோ கயறோ.. மாத்திரையோ வாகனமோ.. உன் மரண நொடியை நீயே முடிவு செய்யலாம்.. ஆனாலும் அதே நொடியில் ஏதோ ஒரு எலி ஒரு பூனையிடமிருந்து உயிருக்காக ஓடிக்கொண்டிருக்கலாம்.. ஏதோ ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு யாரோ ஒருவர் இரத்தம் கொடுத்துக்கொண்டிருக்கலாம்.. ஏதோ ஒரு தாய், தன் சுகப்பிரசவத்திற்காக பிரார்த்தனை செய்துகொண்டிருக்கலாம்.. ஏதோ ஒரு உயிர், உலகின் எங்கோ ஒரு மூலையில் தன்

உப்புமா.. (03.07.2012)

Image
நூலகத்தில் புத்தகங்களை எடுக்கும் ஒருசிலர், தங்களுடைய சுயபுராணங்களை எல்லாம் அதுல எழுதி வைக்குறாங்க. அப்புறம் அவங்களுக்குப் பிடிச்ச வரிகளை கோடிட்டு காட்டுறது.. பக்கத்துலயே “சூப்பர்“ “இது என்னோட கதை“ “நானும் இந்தக் கொடுமைய அனுபவிச்சேன்“னு எல்லாம் எழுதி வைக்குறாங்க. அடுத்துப் படிக்குறவங்களுக்கு இதப் பார்க்கும்போது பரிதாபத்துக்கு பதிலா எரிச்சல் தான் வருது. அதுவுமில்லாம, படிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இவங்களோட அபிப்ராயங்கள் கண்ல பட்டுத் தொலைக்கிறதுனால, அந்த கண்ணோட்டத்துலயே படிக்கிற மாதிரி இருக்கு. அப்புறம் ஒரு சில புத்தகங்கள்ல நடுவுல இருக்குற பக்கங்களை கிழிச்சிடுவாங்க. “மன்னிச்சிடுங்க.. இது எனக்குப் பிடிச்ச பக்கம்“னு எழுதி வேற வச்சிருவாங்க. பிடிச்ச கருத்துக்களை அவங்கவங்க டைரியில எழுதி வைக்கணும். அத விட்டுட்டு, இப்படி பண்றதுனால அடுத்துப் படிக்கிறவங்களுக்கு கஷ்டமா இருக்குது. ***************************************** நேத்து அலுவலகத்துல வேலை (!!) பார்த்துகிட்டு இருந்தேன். ரொம்பவும் தலைவலி.. அதுனால பியூன் கிட்ட மாத்திரை இருக்கானு கேட்டுகிட்டு இருந்தேன். அப்ப என்கூட வேலை பார்க்குற நண்பர் வந