Posts

Showing posts with the label குழந்தைகள்

செல்வம்..

Image
“மதியத்துக்கு பாயாசம் கொஞ்சம் சேத்து வச்சுவிடும்மா“ நண்பர்களுக்காக கேட்கிறேனென அம்மாவும் கொடுத்தனுப்பினாள். அவளுக்குத் தெரியாது. இது செல்வத்திற்காக என்று. சொன்னால் திட்டுவாள். உனக்கெதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று. புரிந்துகொள்ளாதவளிடம் நடித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். செல்வம் என்றதும் என் காதலன் என்று நினைப்பவர்களுக்கு தலையில் ஒரு குட்டு. செல்வம் என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிறுவன். “அக்கா அக்கா“ என்று வாய் நிறைய அழைக்கும் பாலகன் அவன். படிக்க ஆர்வமிருந்தும் ஏழைகளுக்கே உரிய சாபக்கேடாய் இங்கு வந்து எடுபிடி வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். அவனைப் பார்க்கும்போதெல்லாம் படிக்கும் வயதில் கஷ்டப்படுகிறானே என்று வருத்தம் தோன்றும். அவனைப் படிக்க வைக்கும் வசதி என்னிடம் இல்லாததால் வெறுமனே ஆதங்கம் மட்டும் பட்டுக்கொண்டிருந்தேன். அலுவலகம் சென்றதுமே அவனைத்தான் தேடினேன். மேலாளரின் இருக்கையை சுத்தம் செய்து கொண்டிருந்தவனை அருகில் அழைத்து பாயாசத்தை நீட்டினேன். “என்னக்கா விஷேசம்?“ என்று கேட்டு, பதிலுக்குக் காத்திராமல் கடகடவெனக் குடித்தான். மெல்லிய சிரிப்புடன் அவனைப் பார்த்துக்கொண

நான்.. பெயரற்றவள்!!

Image
“சனியனே.. நேரமாகுது எழுந்திரிடீ“ அம்மாவின் சுப்ரபாதத்தை ஏந்தியபடி சோம்பலாய் கண்திறந்து, சாம்பலும் பற்களுமாய் ஆரம்பித்தேன் என் நாளை! சில்லென்ற நீரிலொரு காக்கா குளியலிட்டு, ஒட்டுப்போட்ட பாவாடை சட்டையுமாய் தேநீரென்ற பெயரில் குடித்தேன் ஒரு திரவத்தை..! அவசரமாய்   தலைவாரிப் பொட்டு வைத்து, பழைய கஞ்சியை டப்பாவிலும் வாயிலும் அடைத்தபடி, ஓட்டமும் நடையுமாய் இடம்பெயர்ந்தேன் தொழிற்சாலைக்கு. மேனேஜருக்கு வணக்கத்தையும் மேற்பார்வையாளனுக்கு சல்யூட்டையும் காணிக்கையாக்கி பெருமூச்சுடன் ஆரம்பித்தேன் எனக்கான கடமையை.. கட்டளையிடாத குறையாய் கைகள் பரபரக்க, நக இடுக்கில் கூட புகையிலைகளாய்..!! ஒவ்வொன்றாய் நெம்பி, நிரப்பி, அடக்கி அடுக்கி கட்டுக்களாக்கி நிமிர்ந்தபோது மணியடிக்கவே, ஆளுக்கொரு பக்கமாய் அவரவர் கஞ்சியை எடுத்துக்கிளம்பினர்.. அறைகுறையாய் கைகழுவி, முதற்கவளைக்கு வாய்திறந்தேன்.. உச்சந்தலையில் “நங்“கென்றொரு கொட்டு விழுகவே அலறியடித்துக்கொண்டு எழுந்தேன்... கட்டுக்களின் அளவுகள் மாறுபடுகிறதென அறை விழுந்தது! ஏதேதோ கெட்ட வார்த்தைகள் எனைப்பார்த்துச் சிதறவிட்டு எல்லோரும் வேடிக்கை பார்க்க எட்டிமிதித

”The Day My God Died“ - குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பாலியல் தொழில் - ஒரு ஷாக் ரிப்போர்ட்

Image
அவன்.. உங்களுக்கு நன்கு பரிச்சயப்பட்டவனாக இருக்கலாம். உங்கள் நம்பிக்கைக்குரியவனாக, நவநாகரீகமானவனாகவும் இருக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு பொம்மைகளும், சாக்லேட்களும் அடிக்கடி வாங்கிக்கொடுத்து நன்கு விளையாடிக்கொண்டிருக்கலாம். யாருக்குத் தெரியும்... அவனே கூட, ஒரு அசிங்கமான செயலை உங்கள் குழந்தைகளிடம் நிகழ்த்தும் தருணத்திற்காக காத்துக்கொண்டிருக்கலாம். ‘The Day My God Died ’ – இது பாலியல் தொடர்பான ஒரு டாக்குமென்டரி ரிப்போர்ட் (NDTV- ல் ஒளிபரப்பப்பட்டது). மும்பை பகுதிகளில் பாலியல் தொழில் நடக்கும் இடங்களுக்கு, Spy Camera கொண்டுசெல்லப்பட்டு படமெடுத்து காட்சியாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோப்பின்படி, பாலியல் தொழிலில் அதிகம் சிறுமிகள் தான் ஈடுபடுத்தப்படுகின்றனர், குறிப்பாக ஏழு முதல் பதின்மூன்று வயதுள்ளவர்கள் என்ற அதிர்ச்சியான தகவல் சொல்லப்படுகிறது. ஏற்கனவே இதுபற்றிய செய்திகள் நம் காதுகளை எட்டியிருப்பினும், சம்மந்தப்பட்ட காட்சிகளை நேரடியாகப் பார்க்கும்போது வேதனையளிக்கிறது. (ஒரு சிறுமியை எருமைமாடு மாதிரி ஒருவன் தூக்கி அணைத்து முத்தமிடும் காட்சி, சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஒப்பனை செய்து அங்குமிங்

ஆண் குழந்தை மோகம்..

Image
போன வாரம் தான் ராசிப்பொண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்துச்சு. தாயும் சேயும் நலமாக இருக்குறாங்க. அவளுக்கு நல்லபடியா பிரசவமாகணும் வாழ்த்துன நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். சரி பதிவுக்கு வரேன். ராசிப்பொண்ணு பிரசவமாகும்போது அறைக்கு வெளில நாங்க வெய்ட் பண்ணிகிட்டு இருந்தோம். அப்போ, அவளோட மாமியார் ஆண் குழந்தை தான் பிறக்கணும்னு பிரார்த்தனை பண்ணிகிட்டே இருந்தாங்க. நானும் என் அம்மாவும் “என்ன குழந்தையா இருந்தா என்ன? ஆரோக்யமா பிறக்கணும்னு நெனைங்க..“னு அவரை சத்தம்போட்டோம். அப்புறம் குழந்தை பிறந்து அழுகுற சத்தம் கேட்டுச்சு. பக்கத்துல நின்னுகிட்டிருந்த உறவினர், அழுகும் சத்தத்தைக் கேட்டா பொம்பளைக் குழந்தை மாதிரிதான் தெரியுதுனு சொன்னார். உடனே அந்த அம்மா அவரிடம் சண்டைக்குப் போயிட்டாங்க. குழந்தை ஆண் ’ னு தெரிஞ்சதும் தான் நிம்மதியானாங்க. ‘ சிங்கக்குட்டி பிறந்துருக்கு.. எங்க வாரிசு பிறந்துருச்சு.. ’ அப்படி இப்படினு குதிச்சு கும்மாளம் போட்டுட்டாங்க. எனக்கு இதெல்லாம் பார்க்கும்போது கடுப்பா இருந்துச்சு. வயித்துல இருக்குற குழந்தை ஆரோக்கியமா எந்தப் பிரச்சனையுமில்லாம பிறக்கணும்னு நினைக்குறது தான் நியாய

குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க சில ஆலோசனைகள்..

Image
1.        உயரமான நாற்காலிகளைப் பயன்படுத்தாமல் தாழ்வான மேசை நாற்காலிகளையே குழந்தை உள்ள இடத்தில் பயன்படுத்துங்கள். 2.        குழந்தைக்கு உணவூட்டும்போது உயரமான நாற்காலிகளைப் பயன்படுத்தினால் அத்தகைய நாற்காலி கவிழாவண்ணம் அதன் அடிப்பாகம் அகலமானதாக அமையட்டும். அல்லது சுவர் அருகில் இருக்கும்படியாக அமைத்துக் கொள்ளுங்கள். அல்லது அதிலிருந்து விழுந்துவிடாமல் அதை ஒரு பெல்ட்டால் இணைத்து விடுங்கள. 3.        தள்ளு வண்டியைப் பயன்படுத்துகிறீர்களா? குழந்தை எழுந்து நிற்க முயற்சிக்கலாம். கீழே விழுந்து விடாமலிருக்க அதை வண்டியுடன் சேர்த்து பெல்ட்டால் இணைத்து விடுங்கள். 4.        குழந்தை மாடிப்படியிலோ, தெருவாயிற்படியிலோ ஏறி இறங்கிப் பழகும் வரையில் அவைகளின் முகப்பில் சிறிய கதவுகள் அமைத்து அவைகளை மூடி வையுங்கள். 5.        சன்னல்களில் கம்பிகள் இல்லை என்றால் அடிக் கதவுகளை எப்போதுமே மூடி வைப்பது நல்லது. 6.        சமையல் செய்யுமிடத்திலோ, உணவு பரிமாறும் போதோ குழந்தை தவழவோ, நடக்கவோ விட்டுவிடாதீர்கள். ஏனென்றால் உங்கள் குழந்தையின் மேல் இடறி விழுந்துவிட நேரிடும். சூடான உணவுப் பொரு