ஏண்டா இப்படி மானத்தை வாங்குறீங்க??
காலேல அலுவலகத்துல வேலை பார்த்துகிட்டு இருந்தேன். திடீருனு என்னோட சீனியர் ஒருத்தர், போன் பேசிகிட்டே என் பக்கத்து நாற்காலில உக்காந்து, நெட்“ல கூகுள் இமேஜஸ் எடுங்கனு சொன்னாரு. நானும் சரினு எடுத்தேன். அதுல “National Flag of India “னு தேட சொன்னாரு. நானும் எதுக்கோ கேக்குறாரு“னு நெனச்சு புகைப்படத்த எடுத்தேன். அவர் அத பாத்துட்டு, போன்ல “சிகப்பு வெள்ளை பச்சை தான்“னு சொன்னாரு. சொல்லிட்டு என்னைப் பார்த்து “தேங்க்ஸ்“னு சொல்லி எழுந்தாரு. நா புரியாம “என்ன விஷயம் சார்“னு கேட்டேன். அவரோட பொண்ணு ஒன்றாம் வகுப்பு படிக்குதாம். அவங்க மிஸ் தேசியகொடி வரைய சொன்னாங்களாம். கொடியோட வண்ணம் என்னானு கேட்டுச்சாம். “மூணு கலர் என்னென்னனு தெரியும்.. ஆனா அதோட வரிசை மறந்துடுச்சு. பச்சை வெள்ளை சிகப்பா?? இல்ல சிகப்பு வெள்ளை பச்சையா“னு குழப்பமாய்டுச்சு. அதான் நெட்ல பாத்து சொன்னேன்“னு சொன்னாரு. என்ன சார், இதையெல்லாம் மறக்கலாமா“னு கேட்டா.. “நல்லா தெரிஞ்ச விஷயமே திடீருனு கேட்கும்போது மறந்துடுது.. என்ன செய்ய“னு கேனத்தனமா ஒரு சமாளிப்பு வேற.. இந்த மாதிரி ஆளுங்கள என்ன சொல்றதுனு தெரியல. கிரிக்கெட